*பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்*
கூடுதல் தொகையை கொடுக்க மறுப்போம்!
கூட்டுக் கொள்ளையை கூடித் தடுப்போம்!!
*சமையல் கேஸ் உபயோகிப்பாளர்களின் மேலான கவனத்திற்கு!*
*பாரத் கேஸ், எச்.பி. கேஸ் மற்றும் இண்டேன் கேஸ்* ஆகியவற்றை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் பில்லில் குறிப்பிட்ட தொகையை விட *₹ 50* கூடுதலாக வசூலிப்பது வழக்கமாகி விட்டது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு கூடுதல் தொகை தர மறுத்தால், *கேஸ் சிலிண்டர் தர மாட்டோம்; நேரடியாக நீங்கள் கேஸ் ஏஜென்சியிடம் போய் தான் எடுக்க வேண்டி வரும்; வீடு பூட்டியிருந்தது என்று சொல்லி கேஸை விநியோகிக்காமல் சென்று விடுவோம்* என்று பலவாறு மிரட்டுகின்றனர்.
இம்மிரட்டல்களுக்கு அஞ்ச தேவையில்லை...! கேஸ் சிலிண்டரை விநியோகிக்காமல் செல்ல அவர்களுக்கு அதிகாரம் இல்லை !!
நமதூரில் பல வீடுகளில் ₹ 50 கூடுதல் தொகை கொடுக்க முடியாது எனக்கூறி விட்டனர். இருந்தும், அவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது! ஆகையால், கவலை வேண்டாம்!!
கூடுதலாக பணம் கேட்பவர்களிடம், நாம் அனைவரும் ஒரே மாதிரியாக *- ஊர் ஜமாஅத்தில் கொடுக்கக்கூடாது -* என தீர்மானித்துள்ளனர் எனக்கூறினால் முற்றிலுமாக இந்த கொள்ளையை ஒழித்து விடலாம்.
நமதூரில் மட்டும் சுமார் 150 சிலிண்டர்கள் தினசரி விநியோகிக்கப்படுகின்றன. 150 x ₹ 50 = ₹ 7,500 தினமும் கொள்ளை போகின்றது; மாதத்திற்கு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் (₹ 2,25,000) கொள்ளை; நாம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இரத்தத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணம் அநியாயமாக கொள்ளை போக அனுமதிக்க வேண்டாம்.
நாம் நேரடியாக மூன்று கேஸ் கம்பெனிகளுக்கும் பொதுவான இலவச தொலைபேசி எண்ணை toll free ( *18002333555* ) தொடர்பு கொண்டு தமிழிலேயே புகார் செய்யலாம்.
18002333555 ->
தமிழுக்கு எண் 5 ->
இண்டேனுக்கு எண் 1; எச்.பி.க்கு எண் 2; பாரத்-க்கு எண் 3; ->
புகார்களுக்கு எண் 1
நமது ஜமாஅத் சார்பாக ஏற்கனவே கூடுதலாக வசூலித்த கேஸ் விநியோக வாகனத்தை நிறுத்தி கூடுதல் பணத்தை வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது; காவல் நிலையத்திலும் முறையான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது; சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் தான், இக்கூட்டுக் கொள்ளையை முழுமையாக தவிர்க்க இயலும்.
மேலும் உதவிகள் - தொடர்புகளுக்கு:
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*
*ஆவணியாபுரம் கிளை - xxxxxxxxxx*
*ஆடுதுறை கிளை - xxxxxxxxxx*
*தஞ்சை வடக்கு மாவட்டம்*
No comments:
Post a Comment