Tuesday, August 28, 2018

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனப்பதிவு எண்
ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

வாகனப்பதிவு எண்
மோட்டார் வாகனச் சட்டத்தில் செக்ஷன் 4(6)ன் படி ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைப் பதிவு எண்ணில் முதலில் குறிப்பிட வேண்டும். அதாவது, தமிழ்நாட்டுக்கு TN, ஆந்திராவுக்கு AP,  அதே போல, மாநில அரசு ஒவ்வொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் (ஆர்.டி.ஓ.) ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட கோட் நம்பரையும் குறிப்பிட வேண்டும் (எ.கா: சென்னை அயனாவரம் - 01, திருநெல்வேலி - 72 மதுரை - 58, கிருஷ்ணகிரி - 24 நாகர்கோவில்– 74). அதற்கு அடுத்தாற்போல, நான்கு எண்களுக்கு மிகாமல் எண்கள் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆர்டிஒ அலுவலகத்திலும் 1 முதல் 9999 வரையான எண்களைக் கொடுக்க வேண்டும். 9999 என்ற எண் முடிந்தவுடன் அடுத்த சீரிஸ் ஆங்கில எழுத்து குறிப்பிடப்பட்டு 1 முதல் 9999 வரை பதிவு எண்களாகக் குறிப்பிடலாம்.

ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

சென்னை தவிர, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஒ. அலுவலகங்களில் எந்த வரிசை ஆரம்பித்தாலும் 1 முதல் 9999 எண்களுக்கு குறிப்பிட்ட 97 பேன்சி எண்களை அரசே தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும். இந்த எண்கள் எல்லாமே ஃபேன்னறி எண்கள். இந்த எண்களை முதலில் யாருக்கும் கம்ப்யூட்டர் ஒதுக்காதபடி வரிசையிலிருந்து தடுத்து நிறுத்திவிடுவார்கள். இந்த எண்களைப் பெற வேண்டுமெனில், நாம் சென்னையில் தமிழக அரசின் ஹோம் டிபார்ட்மென்ட் - டிரான்ஸ்போர்ட் செக்ஷனில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆர்.டி.ஒ. பணத்தைச் செலுத்தி இந்த ஃபேன்ஸி எண்களைப் பெற வேண்டும். மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற முடியாது.

விண்ணப்பிக்கும் முறை

குறிப்பிட்ட நாளில் கடைசியாக எந்த எண் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து 1000 எண்களுக்குள் (அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு எண்களைத் தவிர்த்து) ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணை நாம் தேர்வு செய்து மனு கொடுத்தால், அதை ஒதுக்கித் தரும். அதிகாரம் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலக அதிகாரிக்கு உண்டு. இதற்கு நம் வாகனத்தை உடனடியாக ஆர்டிஓ. அலுவலகத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

வாகனம் வாங்காமலே ஆயிரம் எண்ணுக்குள் ஏதாவது ஓர் எண்ணை, விண்ணப்பித்து ரிசர்வ் செய்து கொள்ளலாம். நாம் ரிசர்வ் செய்த எண், ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில் வருவதற்குள் நாம் வாகனத்தைப் பதிவு செய்து அந்த எண்னைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் ரிசர்வ் செய்துள்ள எண்ணுக்கு முந்தைய எண் ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில்  ஒதுக்கப்பட்டவுடன், ஆர்.டி.ஒ. அலுவலகத்திலிருந்து நமக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 30 நாட்களுக்குள் நாம் சென்று புதிய வாகனத்தையும் பதிவுக்கான சான்றுகளையும் சமர்ப்பிக்காவிட்டால் நாம் ரிசர்வ் செய்த எண் நமக்கு கிடையாது. ரிசர்வ் செய்வதற்காக நாம் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காது.

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 1000 எண்களுக்கு உள்ள எண்ணை ரிசர்வ் செய்ய 50 சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கு ரூ.1000, 50 சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான (ஆட்டோ ரிக்ஷாவும் சேர்த்து) கட்டணம் ரூ.2000, நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலை உள்ள வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரிசர்வ் செய்ய கட்டணம் ரூ.8000 மற்ற வாகனங்களுக்கு ரூ. 5000 ஆகும்.

இந்த கட்டணத்தைச் செலுத்திய பின், எந்த எண்ணை ரிசர்வ் செய்கிறார்களோ அந்த நபரின் பெயரில் வாங்கும் வாகனத்துக்குதான் இந்த எண் கொடுக்கப்படும். ஒரே எண்ணை இரண்டு பேர் கேட்டால். ஒரே எண் ரிசர்வ் செய்ய வேண்டும் என்று இரண்டு நபர்கள் ஒரே நாளில் மனு செய்தால், அதில் அரசுக்கு அதிக வரி கட்டும் வாகனத்துக்கு முன்னுரிமை தரப்படும். எடுத்துக்காட்டாக, ஒர் எண்ணை ஒருவர் தனது பைக்குக்கு வேண்டும் என்றும், அதே நாளில் வேறு நபர் தனது காருக்கு வேண்டும் என்றும் மனு செய்தால், கார் உரிமையாளர் அதிக வரி செலுத்துவதால், அவருக்கே முன்னுரிமை தரப்படும். ஒரே எண்ணைக் கேட்கும் நபர்கள் ஒரே மாதிரியான வாகனத்துக்கு வேண்டுமென்று செய்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

1 comment:

  1. It determines where you are in your checkbook and how much you actually spent vs how much you have in the bank by balancing it.

    Inventory Software in Qatar

    ReplyDelete