Tuesday, May 15, 2018

பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?
எந்த பிரிவில் சேரலாம் ?

பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்ப படிப்பாக பொறியியல் (Engineering) படிப்புகள் இருப்பதற்க்கு காரணம் இதில் கிடைக்கும் அதிக ஊதியம், வெளி நாட்டில் வேலை , கைநிறைய  சம்பளம் என மாணவர்களை கவரும் பெரும்பாலான அம்சங்கள் உள்ளதால்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்ப தேர்வாக பொறியியல் படிப்புகள் உள்ளன.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்க்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை தமிழகத்தில் உயரவில்லை. எனவே வேலை வாய்ப்பை பொருத்தவரை போட்டி கடுமையாக இருக்கும். வெறும் பொறியியல் படிப்பதால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது, அதற்க்கு கீழ் கானும் திறன்கள் இருக்க வேண்டும் அல்லது வளர்த்துகொள்ள வேண்டும்.

பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பகுப்பாய்வு (Analytical skill)  போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால் நல்ல ஆங்கில மொழி திறமை (English Language skill), தொடர்பு திறன் (communication skill), தொழில் நுட்ப அறிவு (Technical knowledge or subject knowledge) ஆகிய திறன்கள் இருக்க வேண்டும்  அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேரலாமா ?

வெரும் டிகிரி வாங்குவதற்க்காக படிப்பவர்கள் கண்டிப்பாக பொறியியல் சேர வேண்டாம். தற்போது போட்டி மிக கடுமையாக உள்ளது. பொறியியல் படிப்பது தான் வாழ்வின் குறிக்கோள் என ஆர்வம்  உள்ள மாணவர்கள் மட்டும் சேரலாம். பொறியியல் படிப்பிற்க்கு எதிர்காலம் இல்லை என்பதெல்லாம் பொய்யான வாதம் தான், திறனுள்ள மாணவர்களுக்கு என்றைக்கும் வேலைவாய்ப்பு காத்துகொண்டு இருகின்றது என்பதுதான் உண்மை.

பொறியியலில் எந்த பாட பிரிவில் சேரலாம் ?

தகவல் தொழில் நுட்பம் , Automation, Machine learning, Artificial Intelligence போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே Electronics and communication (ECE), Computer science, Electronics and Electricals (EEE) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
பெரிய அளவில் வளராவிட்டாலும் தொய்வடையாத துறைகளான Mechanical, Civil, Production, Automobile போன்ற துறைகளையும் தேர்தெடுத்து படிக்கலாம். மேற்கண்ட பாடபிரிவுகளை படித்தாலும் மட்டும் போதாது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொண்டு இந்த பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால்  எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பொறியிலில் சிறப்பு பிரிவுகள் :

பொறியியல் படிப்பில் Aeronautical Engineering, Nano Science and Technology, Bio-Technology, Petroleum Engineering and Technology, Bio Medical Engineering, Food Technology, Textile Technology போன்ற சிறப்பு பிரிவுகள் பயிற்று விக்கப்படுகின்றன. சிறப்பு படிப்புகள் படிக்க ஆர்வம் இருந்தால் நல்ல மதிப்பெண் (above 190 cut off) எடுத்து அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லுரிகள், PSG போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கலாம், நன்றாக படித்தால் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது  அல்லாமல் சாதாரண கல்லூரிகளில்  சிறப்பு பிரிவுகளை எடுத்து படித்தால் பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைக்காது.

உடனடி வேலைவாய்ப்பை மைய்யபடுத்தாமல்  தொழில் நுட்பத்தை  அறிந்து கொள்வதற்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிப்பதற்க்கும் இவை ஏற்ற படிப்புகள்.  மேற்படிப்பிற்க்கு பிறகு ஆய்வு துறைகளில் அல்லது படித்தற்க்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே சிறப்பு பாட பிரிவு எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும், உடனடி வேலை வாய்ப்புதான் விருப்பம் என்றால் சிறப்பு பிரிவுகளை எடுக்க வேண்டாம். மேற்படிப்பு படிக்க விருப்பமும், கூடுதல் பொருளாதாரம் செலவு செய்ய வசதியும் இருந்தால் இப்படி பட்ட சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம், இல்லை என்றால் இவற்றை தவிப்பதே நல்லது.

எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

நல்ல கல்லூரிகள்  என்பது  சிறந்த பயிற்றுவிக்கும் முறை, தகுதிமிக்க ஆசிரியர்கள், கேம்ப்பஸ் இன்டெட்வியூ ஆகிய அம்சங்களை கொண்ட தாகும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன் கல்லூரிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட அம்சங்கள் சிறந்த முறையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ளலாம்.

பொதுவாக அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள். ஆனால் இங்கெல்லாம் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக கட்ஆஃப் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் கல்லூரியை நாம் தேர்வு செய்வதில்லை, நாம் எடுக்கும் மதிப்பெண்ணே தேர்வு செய்கின்றது.  எனவே கூடுதல் மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள், அல்லது நாம் எடுக்கும் மதிப்பெண்ணிற்க்கு ஏற்ற கல்லூரியில் சேர்ந்து நன்றாக படியுங்கள். 

பொறியியல் (Engineering) படிக்க ஆகும் செலவு :

அரசு கல்லூரிகளை தவிர்த்து தனியார் கல்லூரிகளில் படிக்க வருடத்திற்க்கு ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை செலவாகும், ஹாஸ்டலில் தங்கிபடிப்பதாக இருந்தால் கூடுதலாக ஆண்டிற்க்கு ரூ.50,000 வரை  ஆகும். எனவே பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோற்கள் இந்த பொருளாதார செலவையும் கணக்கில் கொள்ளவேண்டும். அரசு கவுன்சிலின் மூலமே கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், தனியார் கல்லூரிகளில் நன்கொடை (donation) கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சேர்வதை தவிர்க்கலாம்.

மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் பொறியியல் படிக்கலாமா ?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது குறைவான மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது கல்லூரியில் ECE பிரிவே கிடைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என்ற உறுதியும், ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறனை (communication skill) வளர்த்து கொள்ள ஆர்வமும் இருந்தால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம், நான் சுமாராகத்தான் படிப்பேன் வருங்காலத்திம் இப்படிதான் இருப்பேன் என  நினைக்கும்  மாணவர்கள் பொறியியல் படிப்பை தவிற்க்கலாம்.

வேறு என்ன வழிகளில் பொறியியல் படிக்க முடியும் ?

+ 2 முடித்த பிறகு , B.Sc கணிதம் (Mathematics), B.Sc  இயற்பியல் (Physics), B.Sc வேதியியல் (Chemistry)  3 வருடம் படித்து , அதன் பிறகு M.Sc கணிதம் (Mathematics), M.Sc  இயற்பியல் (Physics), M.Sc வேதியியல் (Chemistry)  2 வருடம் படித்து GATE அல்லது  TANCET தேர்வு எழுதி தேர்சி பெற்று முதுகலை பொறியியல் படிப்பான M.E / M.Tech படிக்கலாம். அதன் பிறகு பொறியியல் துறையில் வேலைக்கு சேரலாம். இந்த முறையில் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் தான் செலவாகும். ஆனால் கால அளவு அதிகமாக இருக்கும். B.Sc, M.Sc பிறகு M.E/M.Tech படித்து முடிக்க மொத்தம் 7 வருடம் ஆகும்.

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள 10-ஆம் வகுப்பு , 11-ஆம் வகுப்பு மாணவர்களே !

பொறியியல் படிக்க ஆர்வம் இருந்தால் முதலில் JEE எனப்படும் மத்திய அரசு நடத்தும் பொறியியல் நுழைவு தேர்வுவை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து IISc/IIT/NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்ததாக +2 -ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பாடத்தில் 190 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க முயற்ச்சி செய்யுங்கள், நேரத்தை வீணாக்காமல் இப்போதே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

No comments:

Post a Comment