இந்திய மருத்துவ படிப்புகளுக்கு NEET தேர்வு தேவை இல்லை, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
சித்தா ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் 6 அரசு கல்லூரிகள் மற்றும் பல தனியார் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் சேர்வதற்க்கு தமிழக அரசு +2 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்துகின்றது.
இந்த ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சிலிங் NEET தேர்வின் அடிப்படையில் இருக்குமா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருந்த நிலையில் NEET தேர்வு இல்லை என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நீண்ட கால மருத்துவத்திற்க்கு ஆங்கில மருத்துவத்தைவிட இந்திய மருத்துவ முறைகளே பெரும்பாலோரின் தேர்வாக இருகின்றது . பின்விளைவு (Side Effect) இல்லாத மருத்துவ முறை என மக்களால் அறியப்பட்ட இந்திய மருத்துவ படிப்புகளை பற்றி பார்ப்போம்
படிப்பு விபரம் :
கீழ் கானும் இந்திய மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றது
1.B.S.M.S-Bachelor of Siddha Medicine and Surgery (சித்தா)
2.B.U.M.S-Bachelor of Unani Medicine and Surgery (யுனானி)
3.B.A.M.S-Bachelor of Ayurveda Medicine and Surgery (ஆயுர்வேதா)
4.B.H.M.S-Bachelor of Homeopathy Medicine and Surgery (ஹோமியோபதி)
5.B.N.Y.S-Bachelor of Naturopathy and Yogic Science (நேச்சுரோபதி)
சேர்க்கை தகுதிகள் :
+2 ல் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) படித்து இருக்க வேண்டும். கூடுதல் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சித்தா : தமிழ் வழி கல்வி அல்லது தமிழை ஒரு பாடமாக +2 வரை படித்திருக்க வேண்டும்.
யுனானி : உருது வழி கல்வி அல்லது உருது மொழியை ஒரு பாடமாக +2 வரை படித்திருக்க வேண்டும்.
ஆயுர்வேதா : ஹிந்தி தெரிந்திருப்பது நல்லது.
ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி : தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி.
கால அளவு மற்றும் கல்வி கட்டணம் :
4 1/2 ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு பயிற்சி மொத்தம் 5 1/2 (ஐந்தரை) ஆண்டுகள். அரசு கல்லூரிகளில் படித்தால் வருட கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும், தனியார் கல்லூரிகளில் படித்தால் கல்லூரிகள் தரத்திற்க்கு ஏற்றவாறு வருட கட்டணம் ரூ.50,000 வரை இருக்கும்
கட் ஆஃப் மதிப்பெண் :
+ 2 - ல் இயற்பியல், வேதியியல் , உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவுகளில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே கட் ஆஃப் மதிப்பெண் கணிக்கிடப்படும்.
சேர்கை முறை :
இன்னும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை, இன்னும் சில நாள்களில் விண்ணப்பபடிவங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம் (இன்ஷா அல்லாஹ்). சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா, யுனானி கல்லூரியில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500
மேற்சொன்ன வகையில் கட் ஆஃப் கணக்கிடபட்டு தர வரிசை படியல் (Rank List ) தயாரிக்கப்படும். 160 - க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்கள் http://www.tnhealth.org/imh/imedu.htm இந்த இணையதளத்தில் கிடைக்கும்.
No comments:
Post a Comment