மாப்ள ஏதோ #இரயில்வேத்துறை ல #DIPLOMA_ENGINEERING_BCA_PGDCA_Bsc(phy n che) படித்தவர்களா ஆள் எடுக்கிறாங்கலாமே டா?
அட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா...?
இல்ல மாப்ள விண்ணப்பம் எங்க வாங்கனும், தபாலில் அனுப்பனுமா..?
இரயில்வேக்கும் #TNPSC மாதிரிதான் ONLINE லதான் விண்ணப்பிக்க முடியும்.
எந்த தளத்துல மாப்ள விண்ணப்பிக்குறது...?
www.rrbchennai.gov.in இது மட்டுமே அதிகாரப்பூர்வமான இணைய பக்கம்.
சரி எவ்ளோ நாள் வரைக்கும் மாப்ள விண்ணப்பிக்கலாம்...?
(CEN 03/2018) ஜனவரி 31-01-2019 வரை விண்ணப்பிக்கலாம்.
நல்லது மாப்ள விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் செலுத்தனும் ...?
பொதுவானவர்கள், OBC வகுப்பினருக்கு--500ரூ, #பெண்கள்_மற்றும் SC/ST, வகுப்பினருக்கு --250ரூ.
சரி மாப்ள விண்ணப்பிக்க என்னென்ன #சான்றிதழ்கள் தேவை?
எந்த சான்றிதழும் #தேவை_இல்ல மச்சா( SC/ST தவிர), நாம தேர்வுல வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது மட்டுமே சான்றிதழ்கள் தேவை.
அட அப்ப விண்ணப்பிக்கிறது ரொம்ப சுலபமா போச்சு மாப்ள.இன்னொரு சந்தேகம் இருக்கு நான் MBC, மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கனும்னா #OBC சான்றிதழ் தேவைனு சொல்லுறாங்களே...?
மச்சா MBC/BC/DNC எந்த வகுப்பினரா இருந்தாலும் மத்திய அரசு பொறுத்த வரையில் எல்லோருமே #OBC தான். அந்த வகையில் OBC சான்றிதழ் வேனும்தான் மச்சா, ஆனா #விண்ணப்பிக்கும்போது_தேவை_இல்ல தேர்வு லாம் முடிந்து நீ வெற்றி பெற்று கடைசியா சான்றிதழ் சரிபார்ப்பு சமயத்துல நீ கண்டிப்பாக கொண்டு போனா போதும்.
அட நீ இப்படி சொல்ற மாப்ள ஆனா இணையத்துல விண்ணப்பிக்கும்போது OBCல CREAMY LAYERஆ/ NON CREAMY LAYER ஆ னு கேக்குதே?
நல்ல கேள்வி கேட்ட மச்சா, நாமெல்லாம் #NON_CREAMY_LAYER தான், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் அதிக உள்ளவங்க Group A, B பதவியில் உள்ளவர்கள் தான் CREAMY LAYER. இங்கே நீ கவனமா விண்ணப்பிக்கனும் தவறுதலாக நீ CREAMY LAYER னு குடுத்தீன்னா உனக்கு #OBC_சலுகைகள்_வயதுவரம்புசலுகைகள் கிடைக்காது.
நல்ல வேளை நீ சொன்னீயே மாப்ள. சரி எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..?
பொதுவானவர்கள் 18 -- 33 வயது வரையும் OBC பிரிவினர் 36 வயது வரையும் , SC/ST வகுப்பினர் 38 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சரி மாப்ள நான் தேர்வுல பாஸ் பன்னுனதற்கு பிறகு என்ன தூக்கி #டெல்லி___பீகார் பக்கம் போட்றுவாங்களா....?
இப்படிலாம் உனக்கு யாரு மச்சான் சொன்னான். இந்திய இரயில்வே வை #17_மண்டலங்கலா பிரிச்சிருக்காங்க, நம்ம தமிழகம் தெற்கு இரயில்வே (SR) வில் வருகிறது.நீ விண்ணப்பிக்கும் போதே SOUTHERN RAILWAY #RRB_CHENNAI க்கு விண்ணப்பிச்சீனா, உனக்கு #வேலையும் கண்டிப்பாக தமிழகத்தில் தான் கிடைக்கும்.
முக்கியமான கேள்வி மாப்ள, எனக்கு #ஹிந்தி_இங்கிலீஷ் லாம் தெரியாது, தேர்வ எப்புடி எழுதுறது?
மச்சான் நம்ம #தாய்மொழி_தமிழ் ல தேர்வு எழுதலாம் டா, இது மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டம்.
அப்ப சூப்பர் மாப்ள நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்.என்ன படிக்கனும்..?? எத்தனை கேள்விகள் வரும் னு ??மட்டும் சொல்லிடு..நான் படிக்க துவங்கிடுறேன்.
First stage தேர்வுக்கு #பொதுஅறிவு___கணிதம் மட்டும் பார்த்தா போதும், #100கேள்விகள் வரும் #90நிமிடங்கள் கால அவகாசம். இரண்டாம் கட்ட (Second stage) தேர்வுக்கு 150 வினாக்கள் 120 நிமிட கால அவகாசம், இதில் 100 வினாக்கள் தாங்கள் படித்த ENGINEERING துறையின் கேள்வியாக இருக்கும்.
நல்ல தகவல்லாம் சொன்ன நன்றி மாப்ள.நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்..
சரி மச்சான், தேர்வில் வெற்றி கிட்டட்டும்..விண்ணப்பிக்க போகும்போது உன் #புகைப்படும் மட்டும் 20-50KB அப்றம் உனது #கையோப்பமிட்டு 10-40 KB க்குள்ள #ஸ்கேன் பன்னிட்டு போ, வேற எந்த ஆவணங்களோ கையெழுத்தோ ஸ்கேன் செய்ய #தேவையில்லை.
-- By shajahan RLY
No comments:
Post a Comment