குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA , M.Arch படிக்க TANCET நுழைவு தேர்வு
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடன் உயர் கல்வி கற்ற விருப்பபடுவார்கள். இதற்க்கு கல்வி கட்டணம் லட்ச கணக்கில் இருக்கும். குறைந்த செலவில் உயர்கல்வி கற்ற தமிழக அரசு TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழகங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் இந்த TANCET தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம். கல்லூரிக்கு ஏற்றார் போல் வருடத்திற்க்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கல்வி கட்டணம் இருக்கும்
TANCET தேர்வை பற்றிய விபரங்கள்:
இது 2 மணி நேரம் நடக்கும் தேர்வு , இந்த தேர்வு 3 பகுதிகளை கொண்டது, முதல் பகுதி கணிதம், இரண்டாம் பகுதி அடிப்படை பொறியில் மற்றும் அறிவியல், மூன்றாம் பகுதி இளநிலை படிப்பில் மாணவர் தேர்ந்தெடுத்த சிறப்பு பாட பிரிவு
M.E/M.Tech படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc….) படித்தவர்கள். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MBA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு (any degree) படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MCA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 – ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தற்போது அண்ணா பல்கலை கழகத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/tancet2018/index.html TANCET தேர்விற்க்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 23-ஆம் தேதி ஆகும், விண்ணப்ப கட்டணம் ரூ.500.
தேர்வுகள் கீழ் காணும் தேதிகளில் நடைபெறும்
MCA Admission : மே 19-ஆம் தேதி (காலை)
MBA Admission : மே 19-ஆம் தேதி (மாலை)
M.E/M.Tech/.Arch/M.Plan Admission : மே 20-ஆம் தேதி (காலை)
TANCET தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.
No comments:
Post a Comment