பாஸ்போர்ட் எடுப்பது எப்படி ? என்ன என்ன ஆவணங்கள் தேவைபடும் ?
இந்திய குடியுரிமையை உறுதி செய்ய பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) மற்றும் பாஸ்போர்ட் (passport) உதவியாக இருக்கும் என்பதை பார்த்தோம். அதில் பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிது, முதலில் அதன் விபரங்களை பார்ப்போம்
தேவையான ஆவணங்கள் :
இரண்டு விதமான ஆவணங்கள் பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்
1. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Date of Birth)
2. தற்போது வசிக்கும் முகவரியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Address)
I. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணங்கள்:
கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்
1. பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
2. பள்ளிகளில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் (mark sheet) அல்லது மாற்று சான்றிதழ் (TC)
இந்த இரண்டு ஆவணங்களில் ஒன்று கூட உங்களிடம் இல்லை என்றால், கீழ்காணும் ஆவணங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
3. ஆதார் கார்ட்
4. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
5. ஓட்டுனர் உரிமம் (Driving License)
6. பான் கார்ட் (PAN Card)
II. முகவரியை நிருபிக்கும் ஆவணங்கள் :
கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் முகவரியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்
1. ஆதார் கார்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
3. வங்கி கணக்கு புத்தகம் (Bank passbook)
4. கேஸ் இணைப்பு புத்தகம் (Gas Connection)
5. குடிநீர் வரி ரசீது (Water bill)
6. மின் கட்டண ரசீது (Electricity bill)
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க :
1. பெற்றோர்களின் பாஸ்போர்ட் நகல் (Copy of parents passport)
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
3. ஆதார் கார்ட் (அவசியமில்லை, கேட்டால் கொடுக்கவும், இல்லை என்றாலும் பரவாயில்லை)
4. படிவம் (Annexure D), இது ஒன்றும் இல்லை, ஆன்லைனில் Annexure D படிவத்தை டவுன்லோடு செய்து, பெயர்கள், முகவரி எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.
கணவன், மனைவி பெயர்கள் பாஸ்போர்டில் இடம் பெற :
திருமண சான்றிதழ் இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை
புதிய பாஸ்போர்ட் விதிகளின் படி திருமண சான்றிதழ் கட்டாயம் இல்லை
https://mea.gov.in/Images/attach/Announcement_tamil.pdf
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :
1. நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் , முகவரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், மாறி இருந்தால் பாஸ்போர்ட் விண்ணபிக்கும் முன் அணைத்து ஆவணங்களில் உள்ள விபரங்கள் ஒரே மாதிரி இருக்கும் படி சரி செய்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் இந்தியாவில் தான் பிறந்துள்ளீர்கள் என்பதை நிருபிக்கும், பிறந்த இடம் (Place of Birth) என்ற இடத்தில் நீங்கள் பிறந்த மாவட்டத்தை குறிப்பிடுங்கள், உங்களை ஊரை குறிப்பிட வேண்டாம், உதாரணத்திற்க்கு சென்னை, மதுரை, சிவகங்கை என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடுங்கள்.
3. பிறந்த தேதிக்கும், முகவரிக்கும் ஒரே ஒரு ஆவணத்தை சான்றாக கொடுக்க முடியாது, அதாவது ஆதார் காட்டை பிறந்த தேதி மற்றும் முகவரிக்கும் சான்றாக கொடுக்க முடியாது. ஆதார் காட்டை முகவரிக்கு சான்றாக பயன்படுத்தினால், பிறந்த தேதிக்கு வேறு ஆவணம் கொடுக்க வேண்டும்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை :
பாஸ்போர்ட் https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
1. https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் e-mail முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்
2. பதிவு செய்த user name , password மூலம் பாஸ்போர்ட் இணையதளத்தில் Log in செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தயாராகுங்கள்
3. தொடர்ந்து பல பக்கங்களில் உங்களின் விபரங்களை கொடுக்க வேண்டும்
4. கூடுதலாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, உங்கள் தாய், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி
5. உங்கள் தெருவில் உள்ள இரண்டு நபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்
6. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்ப கட்டணம் ரூ.1500 ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்
7. பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாய்ன்ட்மென்ட் (Appointment) தேதி, நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
8. குறிப்பிட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூன்று கட்ட நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்
9. பாஸ்போர்ட் அலுவலகத்தின் முதல் பிரிவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு புகைபடம் எடுக்கப்படும்
10. இரண்டாம் பிரிவில் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்
11. மூன்றாம் பிரிவில் உள்ள அரசு அதிகாரி சில கேள்விகள் கேட்பார், ஏன் பாஸ்போர்ட் எடுகின்றீர்கள் ? என்று கேட்டால், வெளிநாட்டில் வேலை, அல்லது வெளிநாட்டில் உள்ள உறவினரை சந்திக்க அல்லது ஹஜ், உம்ரா என ஏதாவது ஒரு தகுந்த காரணங்களை சொல்லவும்
12. இதன் பின்னர் சில நாள்களில் காவல்துறையினர் வீட்டிற்க்கு வந்து விசாரிப்பார்கள் (police verification)
13. அதன் பின்னர் தபாலில் (Post) பாஸ்போர்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்
அனைத்தும் சரியாக இருந்தால் மொத்தமாக 3 அல்லது 5 வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கூடுதல் விளக்கம் தேவைபட்டாலோ, விண்ணப்பிப்பதில் பிரச்சனைகள் இருந்தாலோ எனது பேஸ்புக் பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிகின்றேன்
https://www.facebook.com/siddique.mtech/posts/1147988965402382
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
No comments:
Post a Comment