அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
டிகிரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி - ஆண்டுக்கு ₹ 10,000 கல்வி உதவித்தொகை
நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறது அதில் குறிப்பாக கல்வி பணியாக தேர்வுக்கு முன் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?, தேர்வுக்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?, கல்லூரி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி, மற்றும் சிறுபாண்மை இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யும் முகாம் போன்ற கல்வி பணி தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றியமையாத பணி.
இந்த கல்வி உதவித்தொகை சற்று மாறுபட்டு இந்திய அளவில் அனைத்து சமுதாய மாணவ மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் அமைந்துள்ளது.
மாணவ மாணவிர்கள் பொருளாதாரா சூழ்நிலை காரணமாக கல்வி தடைபடகூடாது என அரசாங்கம் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது அதுபோல இந்த மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு ஒரு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுக படித்தியுள்ளது
பட்டபடிப்பு படிக்கும் அணைத்து சமுதாய மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவில் 82,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது அதில் தமிழத்திற்க்கு 4883 நபர்களும் புதுச்சேரிக்கு 78 நபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ஒரு நபருக்கு ருபாய் ₹10,000 தரப்படுகிறது. இதில் 50% சதவீதம் மாணவிகளுக்கு வழப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
1) +2வில் 80% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
2) தொலைதூரமோ அல்லது தனித்தேர்வு அல்லாமல் பள்ளியில் +2 படித்து இருக்க வேண்டும்
3) யுஜிசி அங்கிகாரம் பெற்ற கல்லூரியில் பட்டபடிப்பு படிக்க வேண்டும்
4) முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்க வேண்டும்
5) குடும்பத்தின் வருமானம் ₹8,00,000 மிகாமல் இருக்க வேண்டும்
யார் அப்ளை செய்ய முடியாது :
1) டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
2) தொலைதூர கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
3) 80% த்துக்கும் குறைவாக மதிப்பெண் அடுத்த மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
4) பள்ளி கல்லூரிகளில் குற்ற பின்னணி உள்ள மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1) +2 மதிப்பெண் சான்றிதழ்
2) பள்ளி மாற்று சான்றிதழ்
3) கல்லூரியில் படித்துகொண்டு இருப்பதற்க்கான சான்றிதழ்
4) மாணவரின் ஆதார் கார்டு
5) மாணவரின் பேங்க பாஸ்புக்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.10.2019.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் - www.scholarships.gov.in
கல்வி உதவித்தொகை புதுப்பிக்க தகுதிகள்
1) 60% சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்
2) 75% வருகை பதிவேடு இருக்க வேண்டும்
3) ராக்கிங் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டிருக்க கூடாது
விண்ணப்பிப்பது தொடர்பான உதவிக்கு - 0120- 6619540
என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்
(அல்லது)
மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் - helpdesk@nsp.gov.in
#scholorship
#கல்வி_உதவி_தொகை
#மாநில_மாணவரணி
#TNTJSW
No comments:
Post a Comment