Sunday, August 23, 2015

அவசரத் தன்மை - Emergent Petition



உரிமையியல் வழக்குகளில் (Civil Cases) எந்த வழக்காக இருந்தாலும், எந்த மனுவாக இருந்தாலும் அதனை அவசரத் தன்மையுடன் தாக்கல் செய்யலாம். மனுவை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்வதற்கு அவசரத்தனை மனு (Emergent Petition) மற்றும் உண்மை உறுதிமொழி ஆவணத்தை (Affidavit) தாக்கல் செய்வது அவசியமாகும். 

வழக்கு அல்லது மனு அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப் படும் போது, அது சரியான முறையில் இருக்கும் நிலையில் அன்றைய தினமே எண் கொடுக்கப்பட்டு, கோப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவசரத்தன்மை மனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தில் (Affidavit) வாதி/மனுதாரரின் கையொப்பத்தைப் பெற்று, வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து சான்றொப்பம் (Attestation) பெறுதல் வேண்டும். வழக்கை நடத்தும் வழக்கறிஞரே தமது கட்சிக்காரரின் கையொப்பத்தை உறுதி செய்வதாக சான்றொப்பம் இடக்கூடாது.

உண்மை உறுதிமொழி (Affidavit) ஆவணத்தில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை (Court fee Stamp) ஒட்டுதல் கூடாது.
மனு மற்றும் அதனுடன் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தின் நகல் எதையும் எதிர்வாதி மற்றும் மனுதாரருக்கு அளிக்க வேண்டியதில்லை. மேலும் அது குறித்து எதிர்வாதி/எதிர்மனுதாரருக்கு அறிவிப்பும் கொடுக்க வேண்டியதில்லை.

No comments:

Post a Comment