
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியமும் வீடுகளைக் கட்டி விற்பனைசெய்து வருகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகமும் வீடுகளைக் கட்டி விற்பனைசெய்து வருகிறது. இந்த மாதிரியான அரசு விற்பனை செய்யும் வீடுகளை எப்படி வாங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழுலலாம். இதோ அதன் வழிமுறை.
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் (TNHB)
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் புறநகரில் பல குடியிருப்புகளைக் கட்டிவருகிறது. கே.கே.நகர் குடியிருப்புத் திட்டமும் பட்டினம்பாக்கம் குடியிருப்புத் திட்டமும் அவற்றில் சில. குறைந்த, நடுத்தர, உயர் வருமானம் கொண்ட பிரிவினருக்கான வீடுகள் இதில் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த இரு குடியிருப்புத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்துக்கான தொகையை Executive Engineer என்ற பெயரில் வரைவோலையாக எடுக்க வேண்டும். உரிய தேதிக்குள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 2 லட்சம் கட்ட வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முதல் தேர்வு என்ற அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும். வீட்டைத் தேர்வுசெய்யாதவர்களுக்கு விண்ணப்பத்துடன் கட்டிய தொகையான ரூ. 2 லட்சம் முழுவதும் திருப்பியளிக்கப்படும்.
பணம் செலுத்துதல்
தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுக்குமாடி வீட்டின் விலையில் 10 சதவீதத்தைக் கட்ட வேண்டும். முதலில் கட்டிய பணமான ரூ. 2 லட்சம் அதில் கழித்துக் கொள்ளப்படும். மீதி 85 சதவீதத் தொகையை வீடு ஒதுக்கிய ஆணை வந்த 21 தினங்களுக்குள் வாரியத்தில் கட்ட வேண்டும்.
கடைசி 5 சதவீதத் தொகையை வீட்டை ஒப்படைத்த பிறகு வாரியம் மனுதாரரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும். கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் மனுதாரர் வீட்டை வாங்க மறுத்தால், அவர் அளித்த தொகையில் குறைந்த அளவு பணம் பிடித்துக்கொள்ளப்பட்டு மீதித் தொகை அவருக்குத் தரப்படும்.
No comments:
Post a Comment