உங்கள் வீட்டின் தோற்றத்தைப் புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக மெனக் கெடலும், செலவும் இல்லாமல் எளிமையாக உங்கள் வீட்டின் தோற்றத்தை மாற்ற முடியும். புதுப்பொலிவுடன் வீட்டை மாற்றுவதற்கு இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள்.
பெக்போர்ட் வாங்கலாம்
வீட்டில் பொருட்களை எங்கே அடுக்கி வைப்பது என்று அல்லாடிக்கொண்டிருப்ப வர்களுக்கு பெக்போர்ட் பெரிய தீர்வாக இருக்கும். இந்தப் பெக்போர்ட்டில் புத்தகங்கள், கேட்ஜெட் என எந்தப் பொருளை வேண்டுமானாலும் அடுக்கிவைத்துக் கொள்ளலாம்.
பெக்போர்டை எந்த அறையில் வேண்டுமானாலும் மாட்டிப் பயன்படுத்திக்கொள்ளலாம். சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை என எந்தச் சுவரில் வேண்டுமானாலும் இதைப் பொருத்திக் கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் அலமாரிகள் குறைவாக இருந்தாலும் பெக்போர்டைப் பொருத்திச் சமாளித்துக்கொள்ளலாம். வீட்டை அழகுபடுத்துவதற்கும் பெக்போர்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணத்துக்கு, பெக்போர்டில் இரும்பாலான அலமாரியைப் பொருத்துவதுபோல், பூஞ்சாடிகள், படங்கள் என அலங்காரத்துக்கான பொருட்களையும் பொருத்திக்கொள்ளலாம்.
நவீன நாற்காலிகள்
உங்கள் வீட்டில் சாப்பாட்டு மேசை போடும் அளவுக்கு இடவசதி இல்லையென்றால், அதற்குப் பதிலாக நவீன நாற்காலிகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இந்த நாற்காலிகளின் விலையும் குறைவுதான். அத்துடன், இவற்றால் இடப் பிரச்சினையும் ஏற்படாது. எந்த மாதிரி மேசையாக இருந்தாலும் இந்த நாற்காலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நவீன நாற்காலிகள் மூலம் வீட்டுக்குப் புதுப்பொலிவை எளிமையாகக் கொடுக்கலாம்.
நவநாகரிகமான ஏணிகள்
வீட்டில் பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதற்கு இப்போது பெரும் பாலானவர்கள் ஏணிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஏணிகள் இப்போது நவீன வடிவமைப்பில் கிடைக் கின்றன. புத்தக அலமாரிகள், ஷோகேஸ்களுக்குப் பதிலாக இந்த ஏணிகளைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த ஏணியில் பால்கனியில் செடிகளும் வளர்க்கலாம். வீட்டின் தோற்றத்தை அழகாக மாற்று வதற்கு இந்த நவநாகரிகமான ஏணிகள் பெரிதும் உதவும். இதற்கான பொருட்செலவும் குறைவுதான்.
வீட்டுச் செடிகள் வாங்கலாம்
வீட்டுக்குள் வளரும் செடிகளை வாங்கி வைப்பதன் மூலம் உங்கள் வீட்டுக்குப் புத்துணர்ச்சியை எளிமையாக வரவழைக்க முடியும். இந்தச் செடிகள் வீட்டுக்குள் தூய்மையான காற்றைத் தக்கவைக்க உதவும்.
அத்துடன் வீட்டைப் பசுமையாக வைத்திருப்பதற்கு இந்தச் செடிகளை வளர்ப்பது ஒரு சிறந்த வழி. இவற்றை வளர்ப்பதற்கென்றே பிரத்யேகமான கண்ணாடிக் குடுவைகளும் கிடைக்கின்றன. இந்தக் குடுவைச் செடிகளை வீட்டின் வரவேற்பறையில் தொங்கவிடலாம். வீட்டைப் புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கு இதுவும் ஒரு எளிமையான வழி.
மஞ்சள் விளக்குகள்
வெளிச்சத்தை வைத்தும் வீட்டுக்குப் புதுப்பொலிவை முடியும். மென்மையான மஞ்சள் நிற விளக்குகளை வீட்டில் பொருத்துவதன் மூலம் வீட்டின் மொத்தத் தோற்றத்தையும் மாற்றலாம். இந்த மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம் எல்லாப் பொருட்களையும் அழகாக்கிக் காட்டும்.
கூரை விளக்குகளை மட்டும் பயன்படுத்தாமல் சுவர் விளக்குகள், தரை விளக்குள் எனப் பலவிதமான விளக்குகளைப் பயன்படுத்தலாம். அதே மாதிரி, இந்த மஞ்சள் நிறத்தையும் பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு அறையில் மென்மையான மஞ்சள் விளக்குகளைப் பொருத்தலாம். அதற்கு நேரெதிராக இருக்கும் அறையில் அடர் மஞ்சள் நிற விளக்குகளைப் பயன்படுத்தலாம். இது ஒருவிதமான புதுப்பொலிவை வீட்டுக்குக் கொடுக்கும்.