Sunday, September 15, 2019

Philately

I never thought About collecting a postcard from every country in the world, it was *NEVER*  my intention, but I have come really close to doing so, I swap the same card with many people from the same country to be able to share Trinidad and Tobago with the rest of the world, here's a look at all the countries on the planet, tell me, which one you never heard about 😳:

*For me, there are a few of them, I'll leave my feedback in the comment section.

Afghanistan
Akrotiri
Albania
Algeria
American Samoa
Andorra
Angola
Anguilla
Antarctica
Antigua and Barbuda
Argentina
Armenia
Aruba
Ashmore and Cartier Islands
Australia
Austria
Azerbaijan
Bahamas, The
Bahrain
Bangladesh
Barbados
Bassas da India
Belarus
Belgium
Belize
Benin
Bermuda
Bhutan
Bolivia
Bosnia and Herzegovina
Botswana
Bouvet Island
Brazil
British Indian Ocean Territory
British Virgin Islands
Brunei
Bulgaria
Burkina Faso
Burma
Burundi
Cambodia
Cameroon
Canada
Cape Verde
Cayman Islands
Central African Republic
Chad
Chile
China
Christmas Island
Clipperton Island
Cocos (Keeling) Islands
Colombia
Comoros
Congo, Democratic Republic of the
Congo, Republic of the
Cook Islands
Coral Sea Islands
Costa Rica
Cote d'Ivoire
Croatia
Cuba
Cyprus
Czech Republic
Denmark
Dhekelia
Djibouti
Dominica
Dominican Republic
Ecuador
Egypt
El Salvador
Equatorial Guinea
Eritrea
Estonia
Ethiopia
Europa Island
Falkland Islands (Islas Malvinas)
Faroe Islands
Fiji
Finland
France
French Guiana
French Polynesia
French Southern and Antarctic Lands
Gabon
Gambia, The
Gaza Strip
Georgia
Germany
Ghana
Gibraltar
Glorioso Islands
Greece
Greenland
Grenada
Guadeloupe
Guam
Guatemala
Guernsey
Guinea
Guinea-Bissau
Guyana
Haiti
Heard Island and McDonald Islands
Holy See (Vatican City)
Honduras
Hong Kong
Hungary
Iceland
India
Indonesia
Iran
Iraq
Ireland
Isle of Man
Israel
Italy
Jamaica
Jan Mayen
Japan
Jersey
Jordan
Juan de Nova Island
Kazakhstan
Kenya
Kiribati
Korea, North
Korea, South
Kuwait
Kyrgyzstan
Laos
Latvia
Lebanon
Lesotho
Liberia
Libya
Liechtenstein
Lithuania
Luxembourg
Macau
Macedonia
Madagascar
Malawi
Malaysia
Maldives
Mali
Malta
Marshall Islands
Martinique
Mauritania
Mauritius
Mayotte
Mexico
Micronesia, Federated States of
Moldova
Monaco
Mongolia
Montserrat
Morocco
Mozambique
Namibia
Nauru
Navassa Island
Nepal
Netherlands
Netherlands Antilles
New Caledonia
New Zealand
Nicaragua
Niger
Nigeria
Niue
Norfolk Island
Northern Mariana Islands
Norway
Oman
Pakistan
Palau
Panama
Papua New Guinea
Paracel Islands
Paraguay
Peru
Philippines
Pitcairn Islands
Poland
Portugal
Puerto Rico
Qatar
Reunion
Romania
Russia
Rwanda
Saint Helena
Saint Kitts and Nevis
Saint Lucia
Saint Pierre and Miquelon
Saint Vincent and the Grenadines
Samoa
San Marino
Sao Tome and Principe
Saudi Arabia
Senegal
Serbia and Montenegro
Seychelles
Sierra Leone
Singapore
Slovakia
Slovenia
Solomon Islands
Somalia
South Africa
South Georgia and the South Sandwich Islands
Spain
Spratly Islands
Sri Lanka
Sudan
Suriname
Svalbard
Swaziland
Sweden
Switzerland
Syria
Taiwan
Tajikistan
Tanzania
Thailand
Timor-Leste
Togo
Tokelau
Tonga
Trinidad and Tobago
Tromelin Island
Tunisia
Turkey
Turkmenistan
Turks and Caicos Islands
Tuvalu
Uganda
Ukraine
United Arab Emirates
United Kingdom
United States
Uruguay
Uzbekistan
Vanuatu
Venezuela
Vietnam
Virgin Islands
Wake Island
Wallis and Futuna
West Bank
Western Sahara
Yemen
Zambia
Zimbabwe

https://www.facebook.com/1022875330/posts/10218672493056478/

Wednesday, September 4, 2019

தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் மாணவர்கள் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்ல முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை மதிப்பிட பயன்படுத்தபடுகின்றது. இது சரியா தவறா என்ற விவாதத்திற்க்கு செல்லாமல், இது தான் இன்றைய எதார்த்த நிலை என்பதை மாணவர்கள் உணர்ந்து அதிகமாக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யயுங்கள்.
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :
அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும், நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகும். எனவே மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யயுங்கள்.
அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும் :
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், லட்சியங்கள் இருக்கும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நம்முடைய கனவு நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை :
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். நம்மால் 100/100 மதிப்பெண் எப்படி எடுக்க முடியும் ? என்ற எதிர்மறை சிந்தனை தான் (negative thoughts) உங்கள் வெற்றியை முதலில் தடுகின்றது. உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள், நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.
ஆர்வம் :
எந்த ஒன்றில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம், ஈடுபாடு இருக்க வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது, பொதுவாக ”கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். பொதுவாக இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது நினைவில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.
மறதியை போக்க : கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.
நாம் நமக்காக படிக்கின்றோம் : நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கையை சிரமமானதாக்கிவிடும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் அது உங்களுக்குத்தான் பயனுல்லதாக அமையும்.
சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை மேம்படுத்தி கொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டை விட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)
கடின உழைப்பு / கடும் முயற்சி :
1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் எளிதில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்.
2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது தான் முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.
3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள். அன்றாட பாடத்தை அன்றைக்கே படித்துவிடுங்கள்.
தேர்வு எழுதும் முன் :
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்
1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். இதில் நாம் 10 மணி நேரத்திற்க்கு தான் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிருத்த செலவலிக்க (Revise-பன்ன) வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.
3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check – பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.
4. தேர்விற்க்கு ஓரிரு வாரம் இருக்கும் போதே புதிதாக படிப்பதை நிருத்தி விடுங்கள், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிருத்துவதற்க்கு (revise பன்ன) முயற்சி செய்யுங்கள். எனவே நாம் திட்ட மிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு ஓரிரு வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்ட மிடவேண்டும்.
5. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதிவைத்துகொள்ளளுங்கள், பின்னர் நாம் பாடத்தை revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.
6. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க முயற்சி செய்யுங்கள்.
7. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ளளுங்கள். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லலுங்கள்.
தேர்வு எழுதும் போது :
தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
1. தேர்வறைக்கு நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
2. கேள்விதாள் வந்ததும் கேள்விகளை கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t lose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.
3. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுத முயற்சி செய்யுங்கள்.
4. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள், சமன்பாடுகளையும்.
5. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
6. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
7. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.
8. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.
9. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
10. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அலகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு :
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும் நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைபட்டாலும் திரும்பி அந்த தேர்வை எழுதமுடியாது, எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று அடுத்த தேர்விற்க்கு படிக்க தயாராகுங்கள்.
பெற்றோர்களே!
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம் பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
1. டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2. தேர்வு முடியும் வரை மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்திவதை கட்டுபடுத்தவும்.
3. வீண் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். கம்ப்யூட்டர் / செல்போனில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.
4. பிள்ளைகளுக்கு நல்ல சத்துள்ள உணவை கொடுக்கவும், பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்,
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
7. உங்கள்வீட்டு பொருளாதார சூழ் நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.
தேர்வு பற்றி சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலைhttps://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

IAS, IPS பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள்



IAS, IPS பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இப்போது UPSC-ன் Civil Service முதல் நிலை தேர்வுக்கு (Primary Exam) தற்போது விண்ணப்பிக்கலாம் 
விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 18 (18-03-2019)
இந்திய அரசு பணியில் மிக உயந்த பதவிகளாக கருதப்படுவது IAS, IPS, IFS, IRS உட்பட 25 அதிஉயர் பணிகள், இந்த பணிகளில் சேர மத்திய அரசின் UPSC வருட வருடம் Civil Service தேர்வுகளை நடத்துகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட பல அரசு உயர் பதவிகளில் சேர கனவு காணும் மாணவர்களின் விருப்ப தேர்வாக இந்த Civil Service தேர்வுகள் உள்ளன.
இந்த ஆண்டு 896 பணியிடங்களுக்கு இந்த தேர்வு வரும் ஜூன் 2 (02-06-2019) நடக்க விருக்கின்றது. அதன் விபரங்களை பார்ப்போம்.
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any Degree), இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு : பொது பிரிவு : 32, SC/ST : 37, OBC : 35
தேர்விற்க்கு விண்ணப்பிக்க :
https://upsconline.nic.in இணையதளத்தில் Online-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பக்கம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். தேர்வு கட்டணம் ரூ.100, விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 18 (18-03-2019), தேர்வுகள் தமிழகத்தில் சென்னை , மதுரை . கோவை, , வேலூர் மற்றும் பாண்டிசேரியில் நடைபெறும்
Civil Service முதல் நிலை தேர்வு (Primary Exam) பற்றிய விபரம் :
இந்த தேர்வு இரண்டு தாள்களை கொண்டது, இரண்டு தாள்களிலும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும்.
முதல் தாளில் 200 மதிபெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடக்கும். இதில் நடப்பு நிகழ்வுகள் (current affairs), இந்திய வரலாறு, பொருளாதாரம், சூழ்நிலையியல், பொது அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்படும்.
இரண்டாம் தாள் 200 மதிபெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடக்கும். இதில் பகுத்தறிவு (Logical Reasoning, Analytical ability, Mental Ability, Comprehension, Problem solving) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும்
இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படும்.
சேர்க்கை முறை :
இது 3 கட்டங்களாக நடைபெறும் . முதற் கட்ட தேர்வு (PRELIMINARY), இரண்டாம் நிலை (Main) தேர்வு, நேர்முக தேர்வு (Interview).
முதல் நிலை (PRELIMINARY) தேர்வில் தேர்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலை (Main) தேர்விற்க்கு அழைக்கபடுவார்கள். இரண்டாம் நிலை (Main) தேர்வு எழுத்து தேர்வாக இருக்கும். இரண்டாம் கட்ட (Main) தேர்வில் தேர்சி பெறுபவர்கள், நேர்முக தேர்வின் (Interview) மூலம் தேர்ந்தெடுக்க பட்டு பயிற்ச்சிக்கு பிறகு அரசு பணிகளில் நியமிக்க படுவார்கள்.
Civil Service முதல் நிலை தேர்வு (Primary Exam) பற்றிய முழு விபரங்கள் இந்த https://upsc.gov.in/…/de…/files/Final_Notice_CSPE_2019_N.pdf லின்கில் உள்ளது.
கூடுதல் விபரம் தேவை படுபவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

CUCET EXAM

இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலை கழகங்களில் (Central Universities) B.A/B.Sc/M.A/M.Sc/PhD படிக்க CUCET தேர்வு
தமிழகத்தில் திருவாரூரில் உள்ள மத்திய அரசின் மத்திய பல்கலை கழகம் உட்பட இந்தியாவில் உள்ள 14 மத்திய பல்கலை கழகங்களில் B.A, B.Sc, B.Ed மற்றும் M.A, M.Sc, M.B.A, மற்றும் M.Phil, Phd படிக்க CUCET என்ற தேர்வு ஆண்டு தோறும் நடத்த படுகின்றது, அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13.
மருத்துவம் (Medicine) , பொறியியல் (Engineering) படிப்பில் சேர விருப்பம் இல்லாதவர்கள், இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் கலை அறிவியல் படிப்புகள் படிக்கலாம், சிறந்த மேற்படிப்புகளுக்கும், வேலை வாய்ப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு இது. கல்வி கட்டணமும் குறைவுதான், அரசு கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும்.
B.A, B.Sc படித்து வேலை தேடுபவர்கள், M.A, M.Sc படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் M.A, M.Sc படிப்புகள் படிக்கலாம், உங்களின் வேலைவாய்ப்பிற்க்கும் , ஆராய்ச்சி படிப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு.
கல்வி தகுதி :
+2 படித்தவர்கள், இந்த ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் B.A, B.Sc படிக்க விண்ணப்பிக்கலாம்.
M.A, M.Sc, M.B.A படிக்க B.A, B.Sc, B.B.A முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
M.Phil, Phd படிக்க M.A, M.Sc முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
தேர்விற்க்கு விண்ணப்பிக்க :
www.cucetexam.in என்ற இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வழிமுறை இந்த https://www.cucetexam.in/Document/How_to_Apply.pdf
லின்கில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, விண்ணப்ப கட்டணம் ரூ.800
தேர்வு வருகின்ற மே மாதம் 25,26 தேதிகளில் நடைபெறும், தேர்வு முடிவுகள் ஜூன் 21 அன்று வெளியிடப்படும்.
CUCET தேர்வை பற்றி :
இந்த தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. இந்த இரண்டு பகுதியிலும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும்.
பகுதி 1 : இதில் ஆங்கிலம், பகுத்தறிவு (English Language, general awareness, mathematical aptitude and analytical skills) பற்றிய கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 25 கேள்விகள்
பகுதி 2 : இதில் துறை சார்ந்த (Domain Knowledge) கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 75 கேள்விகள்.
மொத்தம் 100 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண், தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் கழித்து கொள்ளப்படும் (0.25 negative mark for wrong answer)
தேர்வின் பாடதிட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் கீழ் காணும் இணைய தளத்தில் மிக தெளிவாக உள்ளது.
https://cucetexam.in/CUCET2019/View/SearchProgram01.aspx
இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது
https://www.cucetexam.in/Docum…/General_Instruction_2019.pdf
கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

NATA EXAM - B.Arch ......



B.Arch (கட்டிட நிர்மான கலை) படிக்க NATA தேர்வு
பொறியியல் மருத்துவம் படிக்க விருப்பம் இல்லாத சில மாணவர்கள் Architecture (கட்டிட நிர்மான கலை) படிப்பை தேர்ந்தெடுகின்றனர், B.Arch படிக்க NATA தேர்வில் கட்டாயம் தேர்சி பெற்றிருக்க வேண்டும். +2-ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) படித்த மாணவர்கள் இந்த NATA தேர்வை எழுதலாம். மற்ற குரூப் மாணவர்கள் எழுத முடியாது.
தமிழகத்தில் B.Arch கல்லூரிகள் எண்ணிக்கை குறைவு , இடங்களும் குறைவு, பொருளாதாரமும் அதிகமாக செலவாகும். எனவே B.Arch படித்து அந்த துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுதவும்.
NATA தேர்வின் விபரங்களை பார்ப்போம்
தேர்வு நாள் : ஜூலை 7
தேர்வு நடை பெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர்
தேர்வு கட்டணம் : ரூ.1800
தேர்விற்க்கு விண்ணப்பிக்க : 
இந்த www.nata.in/ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வை பற்றி : 
இந்த தேர்வு 2 தாள்களை கொண்டது, மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கபடும்.
முதல் தாளில் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 120 மதிப்பெண், குறைந்தது 30 மதிப்பெண் எடுக்க வேண்டும்
முதல் தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதியில் கணிதம் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்படும். இரண்டாம் பகுதியில் பகுத்தறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்க்கப்படும்.
இரண்டாம் தாளில் வரைதல் (Drawing) சம்மந்தமாக 2 கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 80 மதிப்பெண். இரண்டாம் தாளில் குறைந்தது 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்
இரண்டு தாள்களும் சேர்த்து 200 மதிப்பெண்கள்
B.Arch கலந்தாய்வு (counseling) முறை :
+2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து B.Arch கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண் 200-க்கு மாற்றப்பட்டு, அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 75 % சதவீத மதிப்பெண் எடுத்து இருந்தால் +2 கட் ஆஃப் 150, NATA-தேர்வில் 80 மதிப்பெண் எடுத்து இருந்தால் மொத்த B.Arch கட் ஆஃப் 230 (150 + 80).
இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.
NATA தேர்வு பற்றிய விபரங்கள் www.nata.in/ இணையதளத்தில் உள்ளது
கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

5 ஆண்டு சட்ட படிப்பு (B.A.L.L.B)

டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம் +2 படித்த மாணவர்கள் மற்றும் பட்ட படிப்பு முடித்த மாணவர்கள் சட்ட படிப்பு படிக்க விண்ணப்பங்களை வரவேற்கின்றது. அதன் விபரங்களை பார்ப்போம்
+2 தேர்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 11 அரசு சட்ட கல்லூரியிலும், ஒரு தனியார் சட்ட கல்லூரியிலும் 5 ஆண்டு சட்ட படிப்பு (B.A.L.L.B) படிக்க மே 16 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31.
ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any degree) படித்த மாணவர்கள் 3 ஆண்டு சட்ட படிப்பிற்க்கு (L.L.B) ஜூன் 28 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 26
மாணவர்கள் குறைந்தபட்சம் 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். (SC/ST மாணவர்களுக்கு 40 %). விண்ணப்ப கட்டணம் ரூ.500 (SC/ST மாணவர்களுக்கு ரூ.250)
சென்னை பெருங்குடியில் உள்ள School of Excellence in Law சட்ட பள்ளியில் சிறப்பு சட்ட படிப்பான B.A.LL.B.(Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B.(Hons.), B.C.A.LL.B.(Hons.) படிக்கவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்க்கு +2 படித்த மாணவர்கள் 70 % மதிப்பெண்ணும் (SC/ST மாணவர்கள் 65 %) பட்ட படிப்பு படித்தவர்கள் 60 % மதிப்பெண்ணும் (SC/ST மாணவர்கள் 55 %) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1000 (SC/ST மாணவர்களுக்கு ரூ.500)
விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள சட்ட பல்கலை கழகம் மற்றும் அனைத்து சட்ட கல்லூரிகளிலும் கிடைக்கும்
மேலும் விபரங்கள் சட்ட பலகலை கழக இணையத்தில் http://tndalu.ac.in/ உள்ளது.
சட்ட படிப்பு சம்மந்தமாக கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் எந்த படிப்பை படிப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். கல்வி நிறுவனங்களோ "உயர்தர கல்வி, உடனடி வேலைவாய்ப்பு" என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு விளம்பரங்கள் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.
என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கான எளிதான விடை, எந்த படிப்பையும் எங்கு படித்தாலும் கவனமாக, சிறப்பாக படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். படிப்பில் கவனமில்லாமல் படித்தால் வேலைவாய்ப்பு என்பது சிரமமே.
படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதோடு நிறுத்திகொள்ளாமல், அந்த படிப்பிற்க்கான திறனையும் வளர்த்து கொண்டால், நிச்சயம் வேலை கிடைக்கும். கல்வி அறிவை வளர்ப்பதற்க்கும், சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்க்கும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் படிக்கும் படிப்பு மட்டுமோ, அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமோ நமக்கு வேலை வாங்கி தருவதில்லை, மாணவரின் திறமை , அறிவு, ஆற்றல், ஆங்கில மொழி அறிவு, தொடர்பு திறன் ஆகியவைதான் வேலை வாய்ப்பை பெறுவதற்க்கான பிரதான காரணிகளாக இருகின்றன.
அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டி (Competition) அதிகமாக இருக்கும், போட்டி (Competition) குறைவாக இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாக இருகும். எனவே எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்க்கான தீர்வு எளிதானது, எந்த படிப்பதாக இருந்தாலும் சிறப்பாக படிப்பதே வெற்றிக்கு வழி.
என்ன படிக்கலாம் ?
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது எல்லோரும் சொல்லும் அறிவுறை இதற்க்கான காரணம் என்ன வென்றால் விருப்பமில்லாத படிப்பை படிக்க மாணவர்களை நிர்பந்தித்தால் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் கல்வியில் பின்தங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
விரும்பிய படிப்பை படிகும்போது ஆர்வம் இருக்கும், கவனம் இருக்கும், மாணவர்கள் பெற்றோர்கள் மீது பழி போட முடியாது, அவசியம் ஏற்படும் போது மாணவர்களே கடினமாக உழைத்து படிப்பார்கள்.
மிக முக்கியமாக மாணவர்களுக்கு ஆர்வமிருக்கின்றது என்பதற்க்காக பயனற்ற படிப்பை படிக்க அனுமதிக்ககூடாது. சில மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், விளையாட்டு சம்மந்தமாக நிறைய படிப்புகள் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு உதவாது. எனவே விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதில் பயனளிக்கும் படிப்புகளாக தேர்வு செய்து படிக்கலாம்.
எப்படி படித்தால் வேலை கிடைக்கும் என்ற விளக்க வீடியோ இந்த https://www.facebook.com/wisdomkalvi/posts/793321307707788லின்கில் உள்ளது அதையும் பார்த்து பயன்பெறுங்கள்
எங்கு படிக்கலாம் ?
உங்கள் மதிப்பெண்ணிற்க்கு எங்கு படிக்க இடம் கிடைக்குமோ அங்கு சேர்ந்து படியுங்கள், பல்லாயிரக்கணக்கான , பல லட்ச கணக்கான ரூபாய்களை கொடுத்து தேடி சென்று எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது, நாம் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் குறைந்த செலவில் படிக்க இடம் கிடைக்கும், மதிப்பெண் குறைவாக எடுத்தால் தரமில்லாத கல்லூரியில் இடம் கிடைக்கும். எவ்வளவு மோசமான கல்வி நிறுவனத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், கடினமாக உழைக்க தயாராக இருந்தால் நல்ல கல்வியை பெற முடியும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.
குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்தாலும் குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள் பற்றிய விளக்க வீடியோ இந்த https://www.youtube.com/watch?v=4zbaXWu5-kw&t=6s லின்கில் உள்ளது அதையும் பார்த்து பயன்பெறுங்கள்
பெற்றோர்களுக்கு : லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கேட்கும் கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ சக்திக்கு மீறி சிரமபட வேண்டாம். வருடத்திற்க்கு 15 ஆயிரம் செலவு செய்து படிக்கும் எவ்வளவோ சிறந்த படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. இப்படிபட்ட படிப்புகளை படித்து மாதம் பல்லாயிரகணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் எண்ணற்ற இளைஞர்கள் இருக்கின்றார்கள். அதிகமான பொருளாதாரம் இருந்தால் லட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கலாம். பொருளாதாரம் குறைவாக இருந்தால் வசதிக்கு ஏற்றவாறு படிக்க வையுங்கள்.
படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை :
1. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை தேர்ந்தெடுங்கள், அல்லது மாணவர்களுக்கு சிறந்த படிப்பை பற்றி ஆர்வமூட்டுங்கள்.
2. இஸ்லாம் தடை செய்த படிப்புகளையும், பயனற்ற படிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள்.
3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த கல்வி கட்டணம் உள்ள படிப்பை தேர்ந்தெடுங்கள்.
4. எந்த நோக்கத்திற்க்காக படிக்கின்றோம் என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள். கல்வி அறிவை வளர்த்து கொள்ள, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற, அல்லது மத்திய, மாநில அரசு பணியில் சேர, அல்லது வெளி நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க, அல்லது மார்க்கம் மற்றும் சமூக பணியாற்ற என நமது இலக்கை தீர்மானித்து அதற்க்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுங்கள்.
5. எந்த கல்வி நிறுவனதில் சேர முடிவு செய்துள்ளீர்களோ அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் சீனியர் மாணவர்களிடம் கல்வி நிறுவனத்தை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
படிப்பை எவ்வாறு தேர்வு செய்வது என்பதற்க்கான ளக்க வீடியோ இந்த https://www.facebook.com/wisdomkalvi/posts/795793997460519 லின்கில் உள்ளது அதையும் பார்த்து பயன்பெறுங்கள்
இறுதியாக மாணவர்களுக்கு : நாம் சில படிப்பை படிக்க விருப்பபடலாம், அல்லது குறிபிட்ட கல்லூரியில் படிக்க வேண்டும் என விரும்பலாம், நமது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது நாம் எடுத்த மதிப்பெண் காரணமாகவோ அது இயலாமல் போகலாம். அதற்க்காக கவலைபட்டு நமக்கு கிடைத்த படிப்பை சரியான முறையில் படிக்காமல் விட்டுவிட கூடாது, நமக்கு எந்த படிப்பு, எந்த கல்லூரியில் கிடைததோ அதையே இறைவன் நமக்கு நாடியுள்ளான் என்பதை உணர்ந்து, கிடைத்த படிப்பை சிறந்து படித்தால் நிச்சியம் வாழ்கையில் சிறந்த நிலை அடையலாம்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலைhttps://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.
#Wisdom_Kalvi

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)
I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
மேல் நிலை படிப்பில் சேரும் முன் மாணவர்கள் அவர்களின் இலக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள். வருங்காலத்தில் என்ன பட்ட படிப்பு படிக்க வேண்டும், எந்த துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்க்கு ஏற்ற பிரிவை தேர்ந்தெடுங்கள். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் அறிவியல் (pure science) பிரிவில் சேர்ந்தால் +2 விற்க்கு பிறகு பொறியியல் படிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் படிக்க நினைக்கும் துறையை தீர்மானித்துவிட்டு அதற்க்கு ஏற்றார் போல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவுகள் வாரியான துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு (PCM Biology) : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு இது. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…), சட்டம் (Law), ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேற்படிப்பு படிக்கலாம். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தால் First Group எடுக்கலாம், ஏனெனில் பெரும்பாலான படிப்புகளுக்கு தகுதியாக இந்த பிரிவு இருக்கும், நீங்கள் விரும்பும் பட்ட படிப்பு படிக்க இந்த பிரிவு உதவியாக இருக்கும்.
அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவு, எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த பிரிவு கிடைக்காவிட்டால், இந்த பிரிவு கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு (PCM Computer science) : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவுகளில் இதுவும் ஒன்று.
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : Pure Science என சொல்லப்படும் இந்த பிரிவு மூலம் மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு.
4. வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரவியல் (Commerce, Accountancy, Economics) பிரிவு : B.Com, CA (Charted accountant), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, பொருளாதார, கணக்கியல் துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கான படிப்புகள் படிக்க ஏற்ற பிரிவு.
5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A, சட்ட படிப்பு, மேலாண்மை படிப்பு போன்ற படிப்புகள் படிக்கலாம். பொருளாதார துறையில் வேலை வாய்ப்பு, மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்க்கான தேர்வுகள் எழுதி வெற்றி பெற ஆர்வம் இருந்தால் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில மொழி திறனை வளர்த்துகொண்டால் அலுவலக வேலை வாய்ப்பு பெற முடியும்.
6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர படிப்புகள் அடங்கிய பிரிவு, Vocational குரூபில் உள்ள குறிபிட்ட சில பிரிவுகள் மூலம் பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதை விருப்ப பிரிவாக எடுத்துகொள்ளாதீர்கள், வேறு பிரிவு கிடைக்கவில்லை என்றால் இதில் சேருங்கள்.
II. பட்டய படிப்பு (Diploma) :
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன.
தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil, plastic engineering etc… போன்ற துறைகள் பல்வேறு துறைகள் உள்ளன. டிப்ளோமா படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable). 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் (B.E) படிக்கவும், 10- ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்க வேண்டாம்.
டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்து கொண்டு பகுதி நேர படிப்பாக பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.
பெரும்பாலான மருத்துவ துறை டிப்ளோமா படிப்புகள் +2 விற்க்கு பிறகே படிக்க இயலும். +2 விற்க்கு பிறகு டிப்ளோமா படிப்பு 2 ஆண்டுகள்.
III. சான்றிதழ் படிப்பு (Certificate courses):
மாணவர்களை பட்ட படிப்புவரை படிக்கவைய்யுங்கள். இது போன்ற சான்றிதழ் படிப்புகளில் சேர்த்து அவர்களின் படிப்பை நிருத்திவிடாதீர்கள். ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். இது ஓராண்டு படிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ITI-களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
சில தொழில் நுட்ப படிப்புகள் : Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker, Machine Operator (Plastics Recycling), Jewellery And Precious Metal Worker, Fitter, Turner, Machinist, Electrician, Welder etc…
இன்னும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு :
(கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. குறுகிய கால தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழக அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை வாய்ப்பு
3. இரயில்வேயில் வேலை வாய்ப்பு
4. தமிழக அரசு துறையில் வேலை வாய்ப்பு
5. Date Entry வேலைகள்
6. சமுதாய கல்லூரிகள் (Society College) மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.
மேல்படிப்பு சம்மந்தமாக கூடுதல் விளக்கம் பெற விரும்பும் மாணவர்கள் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.