Wednesday, October 31, 2018

Encumbrance Certificate

வில்லங்கச் சான்றிதழில்  EC (Encumbrance Certificate) என்றால் என்ன? அதில் புரியாதவை கவனிக்க வேண்டிய விஷயம்  என்னென்ன இருக்கின்றன?

              நாம்  வீடு, நிலம் வாங்கும்போது அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நம்பிக்கையின் அடிப்படையிலும் முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையிலும் பலர் சொத்துகளை வாங்கிவிடுகிறார்கள். அந்தச் சொத்துகள் மீதுள்ள பிரச்சினை பிறகுதான் நமக்குத் தெரியவரும். அப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்போம். முறையான ஆவணங்கள் இல்லாமல் நாம் புகார்கூடக் கொடுக்க முடியாது.

இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே சட்ட ரீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.

வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

நாம் கண்டுபிடிக்க முடியாதவை?????

ஆனால் 2009ஆம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகியது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.

பவர் ஆஃப் அட்டர்னி

பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்தப் பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால் இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டானியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

வில்லங்கச் சான்றிதழ் பெறும் முறை

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.

இந்தச் சேவை எந்த ஊர்களுக்கு இருக்கிறது என்ற விவரமும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்.இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் like &share செய்யுங்கள் நண்பர்களே மற்றவர்களும் அறியட்டும் நன்றி சட்டபுத்தக நிறுவனர்  C.பிரகதீஷ் BA.LLB


Monday, October 22, 2018

ஆன்லைனில் வில்லங்க சான்று

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..
.
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.

அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.

இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.

ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.

சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.

அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும்.

இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

பா.வெ.

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
www.tnreginet.net

மின்நுகர்வோரின் சந்தேகங்களுக்க

மின்நுகர்வோரின்  சந்தேகங்களுக்கு   தீர்வு காண

1. நான் ஒரு புதிய இணைப்பு பெறுவது எப்படி?
தங்களின் வயரிங்குகளை ஒரு அரசு மின் உரிமம் பெற்ற உரிமையாளர் மூலம் செய்து முடிக்கவும்.பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவி பொறியாளர்/இயக்குதல் & பராமரிப்பு, தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மின்வாரிய இணைய தளத்தில் உள்ளது.மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும்.

2. ஒருமுனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற நான் செய்ய வேண்டியது என்ன?
தங்களிடம் உள்ள அனைத்து "இணைக்கப்பட்ட மின் திறன்களை" மும்முனை இணைப்புகளுக்கு சமமாக பகிர்தளிக்கும் வகையில் (அதன் கூட்டு மின்திறன் 4KW மற்றும் அதற்கும் மேலாக இருக்கும்படி) வயரிங்கை தக்கவாறு செய்து கொள்ள வேண்டும், பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும்.

3. மின்தடை நேரத்தில் நான் யாரிடம் புகார் செய்யவேண்டும்?
தங்களுடைய புகாரை தங்கள் பகுதியில் உள்ள மின்தடை நீக்கும்மையத்திலோ (FOC) (அ) தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் இடத்தில் பதிவு செய்யலாம். அல்லது கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும்மையம் தொலைபேசி எண் 155333 மூலமாகவும் பதிவு செய்யலாம்.

4. மின் இணைப்புக்குரிய பெயர் மாற்றம் செய்ய வேண்டிய முறைகள் என்ன?
மாற்றப்படும் உரிமத்திற்கு உரிய தேவையான ஆவணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி எடுத்துக் கொண்டு தங்களின் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் அவர்களை மற்ற விவரங்களுக்கு அணுகவும்.

5. மின் அளவி (Meter) பதிவில் முரண்பாடு இருப்பின் நான் செய்ய வேண்டியது என்ன?
தாங்கள் சந்தேகிக்கும் வகையில் மீட்டர் பதிவில் அதிகப்டியாகவோ (அ) குறைந்த படியாகவோ நிகழ்வு ஏற்பட்டால், தங்கள் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களிடம் எழுத்து மூலம் முறையிடவும். மேலும் மற்ற விவரங்களுக்கு மேற்சொன்ன அலுவலரை அணுகவும்,அதுபோல்,தங்கள் மீட்டரில் எந்த நுகர்தலின் பதிவு நிகழவில்லையென்றாலும் உடனடியாக அலுவலரிடம் தெரிவிக்கவும்.

6. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

7. எனது மின் மீட்டர் எரிந்து விட்டால் உடனடியாக நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் பாதுகாப்பு விதிகளின்படி தீயை அணைத்துவிட்டு தங்கள் பகுதி உட்பட்ட மின் உதவி பொறியாளரிடம் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து மீட்டருக்கு உண்டான பணத்தை செலுத்தி புதிய மின் மீட்டரை பெறலாம்.

8. நான் மின் கட்டணத்தை முன் பணமாக செலுத்தலாமா? கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

9. வீதப்பட்டி மாற்றம் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?
தங்கள் பகுதியின் பிரிவு அலுவலரை சந்தித்து வீதப்பட்டி மாற்றம் செய்வதற்கான காரணத்தை விண்ணப்பமாக கொடுத்து, அதற்கு உண்டான பணத்தை செலுத்தி, வீதப்பட்டியல் மாற்றம் செய்யலாம்.

10, தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்?
தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும்,

11. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்?
முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்