Tuesday, August 28, 2018

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனப்பதிவு எண்
ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

வாகனப்பதிவு எண்
மோட்டார் வாகனச் சட்டத்தில் செக்ஷன் 4(6)ன் படி ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைப் பதிவு எண்ணில் முதலில் குறிப்பிட வேண்டும். அதாவது, தமிழ்நாட்டுக்கு TN, ஆந்திராவுக்கு AP,  அதே போல, மாநில அரசு ஒவ்வொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் (ஆர்.டி.ஓ.) ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட கோட் நம்பரையும் குறிப்பிட வேண்டும் (எ.கா: சென்னை அயனாவரம் - 01, திருநெல்வேலி - 72 மதுரை - 58, கிருஷ்ணகிரி - 24 நாகர்கோவில்– 74). அதற்கு அடுத்தாற்போல, நான்கு எண்களுக்கு மிகாமல் எண்கள் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆர்டிஒ அலுவலகத்திலும் 1 முதல் 9999 வரையான எண்களைக் கொடுக்க வேண்டும். 9999 என்ற எண் முடிந்தவுடன் அடுத்த சீரிஸ் ஆங்கில எழுத்து குறிப்பிடப்பட்டு 1 முதல் 9999 வரை பதிவு எண்களாகக் குறிப்பிடலாம்.

ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

சென்னை தவிர, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஒ. அலுவலகங்களில் எந்த வரிசை ஆரம்பித்தாலும் 1 முதல் 9999 எண்களுக்கு குறிப்பிட்ட 97 பேன்சி எண்களை அரசே தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும். இந்த எண்கள் எல்லாமே ஃபேன்னறி எண்கள். இந்த எண்களை முதலில் யாருக்கும் கம்ப்யூட்டர் ஒதுக்காதபடி வரிசையிலிருந்து தடுத்து நிறுத்திவிடுவார்கள். இந்த எண்களைப் பெற வேண்டுமெனில், நாம் சென்னையில் தமிழக அரசின் ஹோம் டிபார்ட்மென்ட் - டிரான்ஸ்போர்ட் செக்ஷனில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆர்.டி.ஒ. பணத்தைச் செலுத்தி இந்த ஃபேன்ஸி எண்களைப் பெற வேண்டும். மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற முடியாது.

விண்ணப்பிக்கும் முறை

குறிப்பிட்ட நாளில் கடைசியாக எந்த எண் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து 1000 எண்களுக்குள் (அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு எண்களைத் தவிர்த்து) ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணை நாம் தேர்வு செய்து மனு கொடுத்தால், அதை ஒதுக்கித் தரும். அதிகாரம் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலக அதிகாரிக்கு உண்டு. இதற்கு நம் வாகனத்தை உடனடியாக ஆர்டிஓ. அலுவலகத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

வாகனம் வாங்காமலே ஆயிரம் எண்ணுக்குள் ஏதாவது ஓர் எண்ணை, விண்ணப்பித்து ரிசர்வ் செய்து கொள்ளலாம். நாம் ரிசர்வ் செய்த எண், ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில் வருவதற்குள் நாம் வாகனத்தைப் பதிவு செய்து அந்த எண்னைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் ரிசர்வ் செய்துள்ள எண்ணுக்கு முந்தைய எண் ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில்  ஒதுக்கப்பட்டவுடன், ஆர்.டி.ஒ. அலுவலகத்திலிருந்து நமக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 30 நாட்களுக்குள் நாம் சென்று புதிய வாகனத்தையும் பதிவுக்கான சான்றுகளையும் சமர்ப்பிக்காவிட்டால் நாம் ரிசர்வ் செய்த எண் நமக்கு கிடையாது. ரிசர்வ் செய்வதற்காக நாம் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காது.

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 1000 எண்களுக்கு உள்ள எண்ணை ரிசர்வ் செய்ய 50 சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கு ரூ.1000, 50 சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான (ஆட்டோ ரிக்ஷாவும் சேர்த்து) கட்டணம் ரூ.2000, நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலை உள்ள வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரிசர்வ் செய்ய கட்டணம் ரூ.8000 மற்ற வாகனங்களுக்கு ரூ. 5000 ஆகும்.

இந்த கட்டணத்தைச் செலுத்திய பின், எந்த எண்ணை ரிசர்வ் செய்கிறார்களோ அந்த நபரின் பெயரில் வாங்கும் வாகனத்துக்குதான் இந்த எண் கொடுக்கப்படும். ஒரே எண்ணை இரண்டு பேர் கேட்டால். ஒரே எண் ரிசர்வ் செய்ய வேண்டும் என்று இரண்டு நபர்கள் ஒரே நாளில் மனு செய்தால், அதில் அரசுக்கு அதிக வரி கட்டும் வாகனத்துக்கு முன்னுரிமை தரப்படும். எடுத்துக்காட்டாக, ஒர் எண்ணை ஒருவர் தனது பைக்குக்கு வேண்டும் என்றும், அதே நாளில் வேறு நபர் தனது காருக்கு வேண்டும் என்றும் மனு செய்தால், கார் உரிமையாளர் அதிக வரி செலுத்துவதால், அவருக்கே முன்னுரிமை தரப்படும். ஒரே எண்ணைக் கேட்கும் நபர்கள் ஒரே மாதிரியான வாகனத்துக்கு வேண்டுமென்று செய்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

Thursday, August 16, 2018

TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ?

அரசு வேலையில் சேர நடத்தப்படும் TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? மற்றும் தேர்வின் விபரங்கள்

தமிழக அரசு வேலையில் சேர்வதற்க்கு பல்வேறு தேர்வுகளை TNPSC நடத்துகின்றது, தற்போது 1199 பணி இடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வை வரும் நவம்பர் மாதம் நடத்த உள்ளது.  துணை பதிவாளர் (Sub Registrar, Grade-II), நகராட்சி ஆணையர் (Municipal Commissioner), தணிக்கை ஆய்வாளர் (Audit Inspector), உட்பட பல்வேறு அரசு பணிக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. அதிக படசமாக மாதம் ரூ.1,17,600 வரை சம்பளம் தரக்கூடிய இந்த தேர்வை பற்றிய விபரங்களை முதலில் பார்த்துவிட்டு, தேர்விற்க்கு தயாராவது எப்படி என்பதை பார்ப்போம்.

TNPSC குரூப் 2 தேர்வு விபரம் :

கல்வி தகுதி : பட்ட படிப்பு முடித்தவர்கள் (கலை, அறிவியல், பொறியியல் உட்பட ஏதாவது ஒரு டிகிரி படிப்பு படித்து இருக்க வேண்டும்)

வயது : குறைந்த பட்சம் 18, பிற்படுத்தபட்ட (BC, MBC, BC-Muslim), SC/ST வகுப்பினருக்கு அதிக பட்ச வயது இல்லை, பொது பிரிவினருக்கு அதிக பட்சம் 30, சில பணியிடங்களுக்கு 40.

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 9 (09/09/2018)

தேர்வு கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.250 (100 + 150 )

முதல் கட்ட தேர்வு நடைபெறும் தேதி : நவம்பர் 11  (11/11/2018) , காலை 10 மணி

மாத சம்பளம் : பணி இடங்களுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்,. குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் அதிக பட்சமாக ரூ.1,17,600 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

http://www.tnpscexams.in/upage.html இந்த இணையதளத்திற்க்கு சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்த https://tnpscexams.in/piigrplive18/tfrmlogin.aspx லின்கில்,  பதிவு செய்யப்பட்ட user name, password மூலம் log-in செய்து கேட்கப்படும் விபரங்களை அளிக்க வேண்டும், உங்கள் புகைபடம் மற்றும் கையெளுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

தேர்வு முறை :

இது மூன்று கட்டங்களாக நடைபெறும், முதல் கட்ட தேர்வு (Preliminary Examination), இரண்டாம்  கட்ட தேர்வு (Main written examination), நேர்முக தேர்வு (Interview, oral).

முதல் கட்ட தேர்வு (Preliminary Examination) :

Objective type அதாவது சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் வினாக்கள் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு  கேள்விகள் கேட்கப்படும்,  குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்வு மற்றும் நேர்முக தேர்வு :

முதல் கட்ட தேர்வில் தேர்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம், இது எழுத்து தேர்வு , 3 மணி நேரம் நடைபெறும். 300 மதிப்பெண்ணிற்க்கு கேள்விகள் கேட்க்கப்படும். நேர்முக தேர்வு 40 மதிப்பெண்ணிற்க்கு இருக்கும், மொத்தம் 340 மதிப்பெண், குறைந்தது 102 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

தேர்வை பற்றி மேலும் விபரங்கள் தேவை பட்டால் கமென்டில் கேளுங்கள் விடை அளிக்கின்றேன்  தேர்வை பற்றிய முழுவிபரங்களும் இந்த http://www.tnpsc.gov.in/notifications/2018_15_group_ii_services.pdf லின்கில் உள்ளது.

தேர்விற்க்கு தயாராவது எப்படி ?

முதல் நிலை தேர்வில் பொது பாடம் (General Studies), நடப்பு  நிகழ்வுகள் (Current Events), தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது பாடத்தில் (General Studies) இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடத்திலும், நடப்பு  நிகழ்வுகள் (Current Events) பிரிவில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியில் (political science) பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும். இந்த தேர்விற்க்கான மொத்த பாட திட்டமும் (syllabus) இந்த https://tnpsc.news/tnpsc-group-2-syllabus/ லின்கில் உள்ளது.

பட்ட படிப்புதான் இந்த தேர்விற்க்கு தகுதியாக இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படும். எனவே இந்த தேர்விற்க்கு தயாராக விரும்பும் மாணவர்கள் தமிழக அரசு பாட நூல கழகம் வெளியிட்டு அரசு பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

முதலில் பாடதிட்டத்தை (syllabus) படித்து அதில் குறிபிடுள்ள பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. புத்தங்கள் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும், இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ இந்த லின்கில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளாம்.

இந்த தேர்வு அவ்வபோது நடக்கும் தேர்வாகும், எனவே கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை ஒரு முறை வாங்கிபடித்து பாருங்கள். இந்த மூலம் உங்களுக்கு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும், அதற்க்கு ஏற்றார் போல் உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளின் தொகுப்பு, மற்றும் அதற்க்கான விடைகள் அடங்கிய புத்தங்கள் கடைகளில் கிடைக்கும். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம்.  தமிழகத்தின் சென்னை உட்பட பல் வேறு பகுதிகளில் சிறந்த பயிற்சி நிறுவங்கள் உள்ளன.  தேர்வு எழுதுவதற்க்கு முன் மாதிரி தேர்வு (mock exam) எழுதி பயிற்சி எடுத்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் அறிவு திறன் உங்களுக்கு தெரியும், குறைந்த மதிப்பெண் எடுத்த பாடங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து படித்து மீண்டும் மாதிரி தேர்வு (mock exam) எழுதுங்கள்.

அரசு வேலை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும், எனவே நமக்கு எங்கே வேலை கிடைக்க போகின்றது என்ற அவ நம்பிக்கையில் தேர்வு எழுதாமல் விட்டு விடாதீர்கள், முதலில் தேர்வில் வெற்று பெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள், அதிகமான நேரங்களை தேர்விற்க்கு தயாராவதற்க்கு செலவிடுங்கள், படிக்கும் போது கவனமாக படியுங்கள். படித்ததை எழுதி பாருங்கள். குறைந்த பட்ச மதிபெண் 90 என்றாலும் கூடுதல் மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

Friday, August 10, 2018

வாகன காப்பீடு முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்.
*************************************
சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது. வாகன காப்பீடு, அதன் அவசியம், பயன்கள் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மேலும், வாகனக் காப்பீட்டில் இருக்கும் சில முக்கிய தகவல்கள் மற்றும் இழப்பீடு கோருவதற்கான முறைகளையும் பார்க்கலாம்.
மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் என்றால் என்ன?
********************************  சாலைகளில் இயக்கப்படும் கார், லாரி, மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் அவசர காலத்தில் பணப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வாகனத்தில் ஏற்படும் திடீர் பாதிப்புகள், விபத்துக்களின் போது ஏற்படும் சேதங்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு வாகன காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும். விபத்தினால் மட்டுமின்றி வாகனங்கள் திருடு போகும்போதும் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்புகளையும் வாகன காப்பீட்டு திட்டங்கள் கொண்டுள்ளன.
வாகன காப்பீட்டின் அவசியம் என்ன?
*********************************** விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், திருட்டு போன்ற எதிர்பாராத தருணங்களில் அதிக விலை மதிப்பு கொண்ட வாகனங்களில் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு பணப் பாதுகாப்பை வாகன காப்பீடு வழங்குகின்றன. மேலும், எதிரில் வரும் வாகனங்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் நம்மால் ஏற்படும் இழப்புகளுக்கு இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுத் தர முடியும். இதற்கு மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் அவசியமாகிறது.
வாகன காப்பீட்டு திட்டத்தின் கால அளவு?
********************************* பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
வாகன காப்பீட்டு திட்டத்தின் வகைகள் என்ன?
************************************* இரண்டு வகையான வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், இரண்டாவது, ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம். இதில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் அவசியமானது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமானது ஒட்டுமொத்த இழப்பீடுகளை பெற வழி வகை உள்ளதால் அவசர சமயங்களில் மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
பிரிமியம் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்?
********************************* எஞ்சினின் சிசி எனப்படும் கியூபிக் திறன்

வாகனத்தின் வயது

பகுதி

வாகன மாடல்

ஐடிவி எனப்படும் காப்புத் தொகை மதிப்பிடு
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
************************************** வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு எனப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும். உங்களது வாகனத்தால் ஏற்படும் எதிரில் வருபவர்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு கோர முடியும். ஆனால், பாலிசிதாரரின் வாகனத்திற்கும், அவருக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரையிலும், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலும் இழப்பீடு கோர முடியும்.

ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டம்
மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தைவிட கூடுதல் பயனளிக்கும் திட்டம் இது. மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் பணப் பாதுகாப்பையும் சேர்த்து உங்களது வாகனத்திற்கு விபத்து, தீ விபத்து, வெள்ளம், நில நடுக்கம், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படும் திடீர் பாதிப்புகளுக்கு இந்த ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணப் பாதுகாப்பை பெற முடியும். இதுதவிர, காரின் மியூசிக் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களுக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். இதற்காக, கூடுதல் பிரிமியம் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
வாகன காப்பீடு திட்டம் - ஒரு பார்வை
நோ கிளெய்ம் போனஸின்(NCB) பயன்கள் என்ன?
********************************** பாலிசியின் ஓர் ஆண்டு காலத்தில் இழப்பீடு கோரவில்லையெனில், புதுப்பிக்கும்போது வழங்கப்படும் தள்ளுபடிதான் நோ கிளெய்ம் போனஸ் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பாலிசி புதுப்பித்துக் கொண்டே வரும்போது அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நோ கிளெய்ம் போனஸ் எனப்படும் தள்ளுபடியை ஒரு பாலிசியில் பெறலாம். அதன் விபரத்தை கீழே காணலாம்.
நோ கிளெய்ம் போனஸ் தள்ளுபடி விபரம்
முதல் ஆண்டு பாலிசியில் இழப்பீடு கோராதபட்சத்தில் புதுப்பிக்கும்போது 20 சதவீத தள்ளுபடி

தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 25 சதவீதம் தள்ளுபடி

தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 35 சதவீத தள்ளுபடி

தொடர்ந்து நான்காண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 45 சதவீத தள்ளுபடி

தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு கோராதபட்சத்தில் 50 சதவீத தள்ளுபடி
வாகன பழுது காப்பீட்டு திட்டம்
விபத்து, இயற்கை சீற்றங்களை தவிர்த்து வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித் தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் இது. இதில், வாகனத்தில் ஏற்படும் திடீர் பழுது மற்றும் தேய்மான பாகங்களுக்கான காப்பீட்டு ஆகியவற்றை தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அனைத்து பழுது மற்றும தேய்மான பாகங்களுக்கான இழப்பீட்டை இந்த திட்டங்கள் மூலம் பெறலாம்.
இழப்பீடு கோரும் முறைகள்
வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு கோரும்போது முறையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். காப்பீட்டு ஆவணம், வாகனத்தின் பதிவு சான்று, விபத்தின்போது ஓட்டியவரின் ஓட்டுனர் உரிமம், பாதிப்புகளின் விபரம் குறித்து சர்வீஸ் மையத்திலிருந்து எவ்வளவு செலவாகும் என்று அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பீட்டாளர் ஆய்வு
**********************              ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர் வாகனம் மற்றும் இதர பாதிப்புகள், சேதாரங்களை மதிப்பீடு செய்வார். சர்வீஸ் மையத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீடுக்கான தொகை சரியாக உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிப்பார். அதன்பிறகே, வாகனத்தை சரி செய்ய முடியும். வாகனத்தை சரிசெய்த பின்னர் சர்வீஸ் மையத்திலிருந்து வழங்கப்படும் ஒரிஜினல் ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். காரை டெலிவிரி எடுக்கும்போது மீண்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் இழப்பீடு கோரிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்.
திருடு போனால்...
******************                                       கார் திருடுபோகும் பட்சத்தில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, காப்பீட்டு நிறுவனத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கார் திருடுபோகும்போது அதற்கான இழப்பீட்டை உடனடியாக பெற இயலாது. காரை கண்டுபிடித்து தருவதற்கு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்பார்கள். அந்த கால அளவை தாண்டிய பின்னரே காரை கண்டுபிடித்து தர முடியவில்லை என்று சான்று வழங்குவார்கள். அந்த சான்றையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஒரு சான்றையும் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..... நன்றிகள் பல.. Moorthy Financial services


தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம

தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம்,

1. எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாக அனுப்புங்கள். நகல், தபால் மூலம் அனுப்பிய இரசீது ஒப்புகை அட்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அல்லது நேரில் கொடுத்தால் ஒப்புகை வாங்குங்கள்.
3. மாநில அரசு துறைகளுக்கு விண்ணப்பத்துடன் ரூ10/ - நீதிமன்ற ஒட்டுவில்லை ( COURT FEE STAMP -நீதிமன்ற வளாகங்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு பக்கத்தில் பெட்டிக்கடைகளில். முத்திரைத் தாள் விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது). மத்திய அரசுக்கு ரூ10/- க்கு கேட்பு வரைவோலையாக செலுத்தப்படவேண்டும். ஸ்டேட் பேங்க் கடன் அட்டைகள் மூலமாக இணையத்திலும் செலுத்தலாம்.
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் அளிக்கவிட்டால் அல்லது விண்ணப்பம் வேறு ஏதாவது காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால் தமிழ்நாட்டினை பொருத்த வரை முதுநிலை பொதுத் தகவல் அலுவலரிடம் முதல் மேல்முறையீடும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடும் செய்யப்படவேண்டும். தனி மனித சுதந்திரம் மற்றும் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளில் 48 மணி நேரத்தில் தகவல் தர வேண்டும். காவல் துறை ஒரு நப்ரினை கைது செய்தால் அந்த நபர் மேல் உள்ள வழக்கு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 48 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்.

காவல் துறையைப் பொருத்த வரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளர்கள் பொதுத் தகவல் அலுவலர்களாக உள்ளனர்.

மாவட்டத்தில் வருவாய் துறையைப் பொருத்த வரை மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), பொதுத் தகவல் அலுவலராகவும் மாவட்ட வருவாய் அலுவலர் முதல் மேல் முறையீட்டு நீதிமன்றமாகவும் தமிழ்நாடு தகவல் ஆணையம் இரண்டாவது மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இருக்கும்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்,

1. ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம். பக்கதிற்கு இரண்டு ரூபாய் அல்லது உண்மையாக ஆகின்ற செலவு
3. சான்றிட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில் உள்ள ஆவணங்களை நீங்கள் அதே வடிவில் நகல் பெறலாம். அதாவது சி.டிப் பதிவுகள் போன்றவற்றின் நகல்களைப் பெறலாம்.
பொது மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கின்றது. தமிழ்நாடு மாநில அரசு பலதுறைகளின் பொதுத் தகவல் அலுவலர்கள் மேல்முறியீட்டு அலுவலர்கள் பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அனேகமாக குடிநீர்,சாக்கடை தெருவிளக்கு போன்றவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு துறைகள் தங்களது அலுவலர்களின் அதிகாரங்கள், கடமைகள் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அதாவது துறை பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அறியும் படி தெரிவிக்க வேண்டும் . மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கோப்புகள் அட்டவனைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கடமையை செய்தாலே பாதி விண்ணப்பங்கள் குறைந்து விடும்.
தமிழ்நாடு அரசு இணையத்தில் தமிழில் வெளியிட்டுள்ள கையேடு:
http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf
மத்திய அரசு இணைய தளத்தில் நீங்கள் தகவல் உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்கலாம்
www.rtionline.gov.in
மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டக் கையேடு ஆங்கில பி.டி.எப் கோப்பு வடிவில்
http://rti.gov.in/RTICorner/Guide_2013-issue.pdf
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆங்கிலத்தில் பி.டி.எப் வடிவில்
http://rti.gov.in/rti-act.pdf