பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கடந்த கட்டுரையில் பார்த்தோம் (பார்க்க https://www.facebook.com/siddique.mtech/posts/1147988965402382/)
இப்போது பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது, புதுபித்தல் செய்வது, கிழிந்து போன, தொலைந்து போன பாஸ்போர்ட்டிற்க்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்
*** பெயர் திருத்தம் (Name Change) ***
கீழ் காணும் ஆவணங்களை கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட புது பாஸ்போர்ட்டை பெறலாம், ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது மேலே குறிபிட்ட கட்டுரையில் உள்ளது
1. உங்களின் புதிய பெயர் உள்ள இரண்டு ஆவணம் (ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள் என ஏதேனும் இரண்டு ஆவணங்கள்)
2. பெயர் மாற்றம் சம்மந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட விளம்பரம் (குறைந்தது இரண்டு விளம்பரம்). அல்லது அரசு கெஜெட்டில் பெயர் மாற்றம் சம்மந்தமான அறிவிப்பின் நகல்
*** தாய் , தந்தை பெயர் மாற்றம் (Father, Mother name change) ***
கீழ் காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து சரி செய்து கொள்ளலாம்
1. சரியான பெயர் உள்ள தந்தை , தாயின் பாஸ்போர்ட்
2. தாய் , தந்தையின் சரியான பெயர் உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள் போன்ற ஏதேனும் ஒரு அரசு ஆவணம் அல்லது வீட்டு பத்திரம்
3. பெற்றோர் இறந்து விட்டார்கள் என்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட மேற் சொன்ன ஆவணங்கள்
*** கணவன், மனைவியின் பெயர் சேர்ப்பு (Adding Spouse name) ***
திருமணத்தின் போது கணவன், மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க எந்த ஆவணமும் தேவை இல்லை , நேரடியாக, கணவன், மனைவி பெயர்களை பாஸ்போர்ட்டில் சேர்த்து புது பாஸ்போர்ட் பெறலாம்.
*** கணவன், மனைவியின் பெயர் திருத்தம் (Spouse name Change)***
விவாகரத்து ஏற்பட்டதால், மருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டில் கணவன் அல்லது மனைவியின் பெயரை மாற்ற விவாகரத்து சான்றிதழ் (Divorce Certificate) சமர்பிக்க வேண்டும்
கணவன் அல்லது மனைவி இறந்து விட்டதினால், மருமணம் செய்து கொண்டவர்கள் கணவன் அல்லது மனைவியின் இறப்பு சான்றிதழ் (Death Certificate) சமர்பிக்க வேண்டும்.
*** பிறந்த தேதி மாற்றம் (Date of birth Change) ***
முதல் பாஸ்போர்ட் பெற்ற 5 வருடத்திற்க்குள் தான் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியும். ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்தால் போதும்
பாஸ்போர்ட் எடுத்து 5 வருடம் கடந்து விட்டால் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியாது
*** முகவரி மாற்றம் (Address Change)***
தற்காலிகமாக உள்ள முகவரியில் ஏதேனும் ஒரு அரசு ஆவணம் எடுகுங்கள்,
கேஸ் பில், கரென்ட் பில், அல்லது வாடகை ஒப்பந்தம் மூலமாக ஓட்டர் ஐடி, அல்லது ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்
புது முகவரி உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்து பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை மாற்றி கொள்ளலாம்
*** பிறந்த இடத்தை மாற்ற (Place of Birth Change) ***
அதே மாநிலத்தில் வேறு பகுதியில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட்டில் பிறந்த இடத்தை (Place of Birth) மாற்றலாம்
1. பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை சான்றிதழ் (Birth Certificate or any proof)
2. மாற்றத்திற்க்கான நீதி மன்ற ஆணை (வழக்கறிஞர்களை கொண்டு முயற்சிக்கவும்) – civil court order
3. மாற்றத்திற்கான அஃபிடவிட் (Affidavit for “Reason of Chanage”)
வேறு மாநிலத்தில் அல்லது வேறு நாட்டில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு
அமைச்சகத்தில் (MHA) இருந்து கூடுதல் சான்றிதழ் பெற வேண்டும், இது மிக மிக கடினம்.
*** பாஸ்போர்ட் தொலைந்து விட்டால், புது பாஸ்போர்ட் பெற***
கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து புது பாஸ்போர்ட் பெறலாம்.
1. தொலைந்தற்க்கான காவல் நிலைய புகார் (Police Report)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)
4. முகவரிக்கான சான்று (Proof of address)
5. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)
*** பாஸ்போர்ட் கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ புது பாஸ்போர்ட் பெற (Damaged passport)***
பாஸ்போர்ட் எண் (passport number) மட்டும் தெரிந்தால் போதும், மற்ற விபரங்கள் கிழிந்தாலும், அழிந்தாலும் கீழ்காணும் ஆவணங்கள் மூலம் புது பாஸ்போர்ட் பெறலாம்
1. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)
*** ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்ற (Change from ERC to Non-ECR) ***
உங்கள் பாஸ்போர்டில் ERC (Emigration check Required) என்று இருந்தால் சில நாடுகளுக்கு செல்ல Emigration Clearance தேவைபடும். பத்தாம் வகுப்பு தேர்சி பெற்றிருந்தால் உங்களுக்கு Non-ECR பாஸ்போர்ட் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்பித்து உங்கள் பாஸ்போர்ட்டை ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்றலாம்
*** பாஸ்போர்ட் புதுபிக்க (passport renewal) ***
எந்த மாற்றமும் இல்லாமல் பாஸ்போர்ட் புதுபிக்க பழைய பாஸ்போர்டே போதும் கூடுதலாக எந்த ஆவணமும் தேவை இல்லை
மேலே குறிபிட்ட தகவலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, கூடுதல் விபரம் தேவை பட்டாலோ, அல்லது பாஸ்போர்ட் எடுப்பது சம்மந்தமாக வேறு ஏதெனும் தகவல் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கின்றேன்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
https://www.facebook.com/siddique.mtech/posts/1154589384742340/