Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

Sunday, July 12, 2020

அறிவியல் பெயர்கள்.

பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.

1. அகச்சுரப்பியியல் – Endocrinology
2. அடிசிலியல் – Aristology
3. அடையாளவியல் – Symbology
4. அண்டவியல் – Universology
5. அண்டவியல் – Cosmology
6. அணலியல் – Pogonology
7. அருங்காட்சியியல் – Museology
8. அருளரியல் – Hagiology
9. அளவீட்டியல் – Metrology
10. அற்புதவியல் – Aretalogy
11. ஆடவர் நோயியல் – Andrology
12. ஆய்வு வினையியல் – Sakanology
13. ஆவணவியல் – Anagraphy
14. ஆவியியல் – Spectrology
15. ஆறுகளியல் – Potamology
16. இசையியல் – Musicology
17. இந்தியவியல் – Indology
18. இயற்பியல் – Physics
19. இரைப்பையியல் – Gastrology
20. இலக்கிலி இயல் – Dysteleology
21. இறை எதிர் இயல் – Atheology
22. இறைமையியல் – Pistology
23. இறைமையியல் – Theology
24. இன உறுப்பியல் – Aedoeology
25. இன்ப துன்பவியல் – Algedonics
26. இனப் பண்பாட்டியல் – Ethnology
27. இனவியல் – Raciology
28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29. உடலியல் – Physiology
30. உடற் பண்டுவஇயல் – Phytogeography
31. உடற்பண்பியல் – Somatology
32. உடுவியக்கவியல் – Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் – electro biology
35. உயிர்ப்படிமவியல் – Paleontology
36. உயிர்ப்பொருளியல் – Physiology
37. உயிர்மியியல் – Cytology
38. உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் –
...................... .......................... Population Dynamics
40. உயிரிய இயற்பியல் – Biophysics

41. உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42. உயிரிய வேதியியல் – Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் – ..........................................Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45. உயிரியப் பொறியியல் – Bioengineering
46. உயிரியல் – Biology
47. உயிரினக் காலவியல் – Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் – Bioecology
49. உருவகவியல் – Tropology
50. உருள்புழுவியல் – Nematology
51. உரைவிளக்கியல் – Dittology
52. உளவியல் – Psychology
53. ஊட்டவியல் – Trophology
54. எகிப்தியல் – Egyptology
55. எண்கணியியல் – Numerology
56. எரிமலையியல் – Volconology
57. எலும்பியல் – Osteology
58. எலும்பு நோய் இயல் – Osteo pathology
59. எறும்பியல் – Myrmecology
60. ஒட்பவியல் – Pantology
61. ஒப்பனையியல் – Cosmetology
62. ஒலியியல் – Phonology
63. ஒவ்வாமை இயல் – Allergology
64. ஒழுக்கவியல் – Ethics
65. ஒளி அளவை இயல் – Photometry
66. ஒளி இயல் – Photology
67. ஒளி உயிரியல் – Photobiology
68. ஒளி விளைவியல் – Actinology
69. ஒளி வேதியியல் – Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71. ஓசையியல் – Acoustics
72. கசிவியல் – Eccrinology
73. கட்டடச்சூழலியல் – Arcology
74. கடப்பாட்டியல் – Deontology
75. கடல் உயிரியல் – Marine biology
76. கடற் பாசியியல் – Algology
77. கண்ணியல் – Opthalmology
78. கணிப்பியல் – Astrology
79. கதிர் மண்டிலவியல் – Astrogeology
80. கதிர் விளைவியல் – Actinobiology

81. கரிசியல் – Hamartiology
82. கரிம வேதியியல் – Organic Chemistry
83. கருத்தியல் – Ideology
84. கருதுகை விலங்கியல் – Cryptozoology
85. கருவியல் – Embryology
86. கருவியல் – Embryology
87. கல்வி உளவியல் – Educational Psychology
88. கலைச்சொல்லியல் – Terminology
89. கழிவியல் – Garbology
90. கனி வளர்ப்பியல் – Pomology
91. கனிம வேதியியல் – inorganic chemistry
92. கனியியல் – Carpology
93. கனியியல் – Pomology
94. காளானியல் – Mycology
95. காற்றழுத்தவியல் – Aerostatics
96. காற்றியக்கவியல் – Aerodynamics
97. காற்றியல் – Anemology
98. கிறித்துவியல் – Christology
99. குடல் புழுவியல் – Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் – Haematology / Hematology
102. குளுமையியல் – Cryology
103. குற்றவியல் – Criminology
104. குறிசொல்லியல் – Parapsychology
105. குறிப்பியல் – Cryptology
106. குறியீட்டியல் – Iconology
107. கெல்டிக் சடங்கியல் – Druidology
108. கேட்பியல் – Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / 
 .................... சைகையியல்) -Pasimology
110. கையெழுத்தியல் – Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் – Archology
113. கோளியல் – Uranology
114. சங்குஇயல் – Conchology
115. சமயவிழாவியல் – Heortology
116. சரி தவறு ஆய்வியல் – Alethiology
117. சாணவியல் – Scatology
118. சிலந்தி இயல் – Araneology
119. சிலந்தியியல் – Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology

121. சீனவியல் – Sinology
122. சுரப்பியியல் – Adenology
123. சூழ் வளர் பூவியல் – Anthoecology
124. சூழ்நிலையியல் – Ecology
125. செதுக்கியல் – Anaglyptics
126. செய்கை இயல் – Dactylology
127. செல்வ வியல் – Aphnology
128. செல்வவியல் – Plutology
129. செவ்வாயியல் – Areology
130. செவியியல் – Otology
131. சொல்லியல் – Lexicology
132. சொல்லியல் – Accidence
133. சொற்பொருளியல் – Semasiology
134. தசையியல் – Myology
135. தண்டனையியல் – Penology
136. தமிழியல் – Tamilology
137. தன்மையியல் – Axiology
138. தன்னியல் – Autology
139. தாவர உள்ளியல் – Phytotomy
140. தாவர நோய் இயல் – Phytopathology
141. தாவர வரைவியல் – Phytography
142. தாவரஊட்டவியல் – Agrobiology
143. தாவரவியல் – Botany
144. திணைத் தாவர இயல் – Floristics
145. திணையியல் – Geomorphology
146. திமிங்கில இயல் – Cetology
147. திருமறைக் குறியீட்டியல் – Typology
148. திருமனையியல் – Naology
149. திரைப்படவியல் – Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் – Particle physics
152. துகளியல் – Koniology
153. துதிப்பாவியல் – Hymnology
154. துயிலியல் – Hypnology
155. தூய இலக்கியல் – Heirology
156. தூள்மாழை இயல் – Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் – Angelology
159. தேவாலயவியல் – Ecclesiology
160. தேனீ இயல் – Apiology

161. தொடர்பிலியியல் – Phenomenology
162. தொண்டை இயல் – Pharyngology
163. தொல் அசீரியர் இயல் – Assyriology
164. தொல் உயிரியல் – Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166. தொல் பயிரியல் – Paleobotany
167. தொல் மாந்தவியல் – Paleoethnology
168. தொல் மீனியல் – Paleoichthylogy
169. தொல் விலங்கியல் – Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த –
மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171. தொல்லிசையியல் – Ethnomusicology
172. தொல்லியல் – Archaeology
173. தொல்லினவியல் – Paleethnology
174. தொல்லெச்சவியல் – Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176. தொழில் நுட்பவியல் – Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178. தொழு நோயியல் – Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180. தொன்மவியல் – Mythology
181. தோட்டுயிரியியல் – Astacology
182. தோல்நோயியல் – Dermatology
183. நச்சியியல் – Virology
184. நடத்தையியல் – Praxeology
185. நரம்பியல் – Neurology
186. நல்லுயிரியல் – Pneumatology
187. நலிவியல் – Astheniology
188. நன்னியல் – Agathology
189. நாடி இயல் – Arteriology
190. நாணயவியல் – Numismatology
191. நாளவியல் – Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் – Hydrogeology
194. நிலநடுக்கவியல் – Seismology
195. நிலாவியல் – Selenology
196. நிலை நீரியல் – Hydrostatics
197. நீத்தாரியல் – Martyrology
198. நீர் வளர்ப்பியல் – Hydroponics
199. நீர்நிலைகளியல் – Limnology
200. நீராடல் இயல் – Balneology

201. நுண் உயிரியல் – Microbiology
202. நுண் வேதியியல் – Microchemistry
203. நுண்பொருளியல் – Micrology
204. நுண்மி இயல் – Bacteriology
205. நுண்மின் அணுவியல் – Micro-electronics
206. நூல் வகை இயல் – Bibliology
207. நெஞ்சக வியல் – Cardiology
208. நெடுங்கணக்கியல் – Alphabetology
209. நெறிமுறையியல் – Aretaics
210. நொதி இயல் – Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212. நோய் இயல் – Pathology
213. நோய்க்காரணவியல் – Aetiology
214. நோய்க்குறியியல் – Symptomatology
215. நோய்த்தடுப்பியல் – Immunology
216. நோய்த்தீர்வியல் – acology
217. நோய்நீக்கியல் – Aceology
218. நோய்வகையியல் – Nosology
219. நோயாய்வியல் – Etiology
220. நோயியல் – Pathology
221. படஎழுத்தியல் – Hieroglyphology
222. படிகவியல் – crystallography
223. பணிச்சூழ் இயல் – Ergonomics
224. பத்தியவியல் – Sitology
225. பயிர் மண்ணியல் – Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் – Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229. பருவ இயல் – Phenology
230. பருவப் பெயர்வியல் – Phenology
231. பல்லியல் – Odontology
232. பழங்குடி வழக்கியல் – Agriology
233. பழம்பொருளியல் – Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235. பறவை நோக்கியல் – Ornithoscopy
236. பறவையியல் – Paleornithology
237. பனிப்பாளவியல் – Glaciology
238. பாசி இயல் – Phycology
239. பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240. பாம்பியல் – Ophiology

241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் – Mammalogy
243. பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244. பாறையியல் – Lithology
245. பாறை அமைவியல் – Petrology
246. பிசாசியல் – Diabology
247. பிளவையியல் – Oncology
248. புத்த இயல் – Buddhology
249. புத்தியற்பியல் – New physics
250. புதிரியல் – Enigmatology
251. புதைபடிவ இயல் – Ichnology
252. புல உளவியல் – Faculty Psychology
253. புல்லியல் – Agrostology
254. புவி இயற்பியல் – Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256. புவி வடிவ இயல் – Geodesy
257. புவி வளர் இயல் – Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் – Geography
260. புவிவெளியியல் – Meteorology
261. புள்ளியல் – Ornithology
262. புறமண்டிலவியல் – Exobiology
263. புற்று நோய் இயல் – Cancerology
264. பூச்சி பொட்டு இயல் – Acarology
265. பூச்சியியல் – Entomology
266. பூச்சியியல் – Entomology
267. பூச்சியியல் – Insectology
268. பெயர்வன இயல் – Acridology
269. பெரு வாழ்வியல் – macrobiotics
270. பேயியல் – Demonology
271. பொதுஅறிவு இயல் – Epistemology
272. பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273. போட்டியியல் – Agonistics
274. போதனையியல் – Patrology
275. மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் – Craniology
277. மண்ணியல் – Pedology
278. மண்புழையியல் – Aerology
279. மணி இயல் – Campanology
280. மணிவியல் – Gemolog

281. மதுவியல் – Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் – Photoxylography
283. மரபு இயைபியல் – Genecology
284. மரபு வழியியல் – Geneology
285. மரவரியியல் – Dendrochronology
286. மரவியல் – Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் – Posology
288. மருத்துவ நோயியல் – Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290. மருந்தாளுமியல் – Pharmacy
291. மருந்தியல் – Pharmacology
292. மருந்து வேதியியல் – Medicinal chemistry
293. மலையியல் – Orology
294. மழையியல் – Ombrology
295. மனக்காட்சியியல் – Noology
296. மனநடையியல் – Nomology
297. மன்பதை உளவியல் – Social Psychology
298. மன்பதையியல் – Sociology
299. மனைவளர்உயிரியல் – Thremmatology
300. மாந்த இனவியல் – Ethnology
301. மாவியல் – Morphology
302. மானிடவியல் – Anthropology
303. மின் ஒலியியல் – Electro-acoustics
304. மின்வேதியியல் – Electrochemistry
305. மின்னணுவியல் – Electronics
306. மீனியல் – Ichthyology.
307. முகிலியல் – Nephology
308. முட்டையியல் – Oology
309. முடியியல் – Trichology
310. முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் – Andragogy
312. முதுமையியல் – Gerontology
313. முரண் உயிரியல் – Teratology
314. முரணியல் – Heresiology
315. முறையியல் – Systomatology
316. முனைப்படு வரைவியல் – Polarography
317. மூக்கியல் – Rhinology
318. மூதுரையியல் – Gnomology
319. மூப்பியல் – Gerontology
320. மூலக் கூறு உயிரியல் – Molecular biology

321. மெய் அறிவியல் – Philosophy
322. மெய்ம்மி நோயியல் – Histopathology
323. மெய்ம்மியியல் – Histology
324. மேகநோயியல் – Syphilology
325. மொழியியல் – Philology
326. மோப்பவியல் – Olfactology
327. ரூனிக்கியல் – Runology
328. வகையியல் – Taxology
329. வண்ணவியல் – Chromatology
330. வழக்குப் பேச்சியல் – Dialectology
331. வழிபாட்டியல் – Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் – Aerobiology
334. வாந்தியியல் – Emetology
335. வாய்நோயியல் – Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் – Astrophysics
338. வானஞ்சலியல் 
...............(வானஞ்சல்தலையியல்) –Aerophilately
339. வானியல் – Astronomy
340. வானிலை இயல் – Neteorology/Astrometeorology
341. வானோடவியல் – Aerodonetics
342. விசை இயக்க இயல் – Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் – Astrobiology
345. விண்பொருளியல் – Astrogeology
346. விந்தையியல் – Thaumatology
347. விலங்கியல் – Zoology
348. விளைச்சலியல் 
........................(வேளாண் பொருளியல்) –Agronomics
349. வெளிற்றியல் – Agnoiology
350. வேதியியல் – Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் – Etymology

நன்றி: வேளாண்மை செய்திகள்.

Wednesday, February 12, 2020

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?
சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்  அமைந்து  உள்ளது.  இந்தத் துறையானது  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு  கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள்  இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த வரைபடத்தின் மூலமாக,  நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான  குளம்,  குட்டை, கால்வாய், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக  கண்டறியலாம். 
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ள “அ” பதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும்.

https://www.facebook.com/601997245/posts/10157996908937246/

Monday, January 20, 2020

உங்கள்_நிலம்_மற்றவர்களால்_ஆக்கிரமிக்கப்பட்டால்

*#உங்கள்_நிலம்_மற்றவர்களால்_ஆக்கிரமிக்கப்பட்டால்…*
*#முக்கியமாக_செய்ய_வேண்டிய_சில_காரியங்கள்*

உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். 
அதன் மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய், மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும் செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட வேண்டும்.

எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின் நகல்களை கைப்பற்றுதல் வேண்டும்.

எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து, எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும். 

நாம் பலவீனமாக ( கல்வி, அதிகாரம், உறவினர் இல்லாமல் ) இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். என்று ஆக்கிரமிக்கிறார்களா! அல்லது இடத்தை விற்பனை செய்ய (அ) கொஞ்சம் இடம் அவர்களுக்கு வழியாக தேவைப்பட ( DEMAND அடிப்படையில் ) ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்களா! அல்லது எதிர் தரப்பு நில மாபியா கும்பல் , அதாவது தொழில்முறை ஆக்கிரமிப்பாளர்களா! என்று கவனிக்க வேண்டும்.

மேற்படி பலவீனங்களை பயன்படுத்தி கொள்பவர், என்றால் நேரிடையாகவோ, தனியாகவோ, (அ) குடும்பத்துடனோ சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம், (அ) உங்கள் பகுதியில் நன்மதிப்பு உள்ளவர்களை அழைத்து செல்லலாம். இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஆளுமையும், எதிர்கொள்ளும் இணக்கமும், கண்ணியமாக பேசும் கலையும் தெரிந்து இருக்க வேண்டும்.

DEMAND அடிப்படையில் ( MOTIVE இருந்தால் ) இடத்தை கொடுக்க விருப்பமிருந்தால் நல்ல விலைக்கு கொடுக்கலாம். கொடுக்க விரும்பும் இல்லை என்றால் இந்த பேச்சுவார்த்தையில் உங்களை நாடுபவர்கள் நில தாரகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அல்லது அந்த பகுதியின் அரசியல் , உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருப்பார்கள் நிச்சயம் அவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது. நாசுக்காக அவர்களை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பலவீனங்களை எதிர் தரப்பினருக்கு கொண்டு சேர்க்கும் காரியத்தை செய்வர்.

இடத்தை அபகரிக்கும் நோக்கமும், நிலமாபியாகவும் அவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் காவல்துறைக்கு விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்.

எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள், பட்டாக்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்தால், தகவல்பெறும் உரிமை சட்டம் 2015ன் கீழ் மனு செய்து அவர்களை அம்பலப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும்.

நில ஆக்கிரமிப்பாளர்கள், பெரிய பிரமுகர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை விட பெரிய அதிகாரிகளை, அமைச்சர்களை சந்தித்து முறையிட வேண்டும். ஊடகங்களில் விஷயத்தை செய்தியாக்க வேண்டும்.

நில மாபியாக்களாக இருந்தால், எழுதப்படுகிற மனுக்கள் நமக்கு புரியும் படியும், எதிர்தரப்பினர் சட்ட மீறல்களை வரிசைப் படுத்தி நமக்கு துணையாக இருக்கும் ஆவணங்களை இணைத்து மனு தாயார் செய்ய வேண்டும்.

மேற்படி மனு, அந்த பகுதி காவல் துறை ஆய்வாளர் தேவைப்பட்டால் அந்த பகுதி Anti Land Grabbing Cell, மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்து ஏற்பு சீட்டு பெறுதல் வேண்டும்.

காவல் துறை எதிர் தரப்பிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இதனை கிரிமினல் வழக்காக விசாரிக்க மறுத்தால், சிவில் Dispute என்றே COMMUNITY SERVICE REGISTER “ C.S.R போட்டாவது எதிர் தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சொல்லலாம்.

காவல்துறை கிரிமினல் வழக்காக விசாரிக்க மனு செய்யும் போதே இதுபோல் வழக்குகளுக்கு ஏற்கனவே இருக்கின்ற JUDGEMENT – யை மனுவுடன் இணைத்தால் நிச்சயம் கிரிமினல் வழக்காக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

காவல் துறை கிரிமினல் வழக்காக பதிய மறுத்தால், நேரிடையாகவே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதியக்கோரி வழக்கு தொடுக்கலாம்.

மேற்சொன்ன எல்லா வழிமுறையும் செய்து நிலத்தை மீட்க முடியவில்லை என்றால், நீதி மன்றத்தில் சிவில் வழக்கு போடலாம். அதன் மூலம் தீர்வுகளை பெற்று கொள்ளலாம்.

*#உங்கள்_நிலம்_எந்தெந்த_காரணங்களால்_ஆக்கிரமிக்கப்படுகின்றன?*

நிலத்தை விட்டு நீங்கள் வெகுதூரம் இருக்கும் பொழுது, அதாவது வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டில் வாசிக்கும் பொழுது.

நிலத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்காக பாரமரிக்கமால் இருக்கும் பொழுது.
நிலங்களை அடிக்கடி பார்வையிடாமல் இருக்கும் பொழுது.

பத்திரங்களை தொலைத்தவர்களுடைய இடங்கள்.

ஒரே இடத்திற்கு டபுள் டாகுமென்ட் இருப்பவர்களுடைய இடங்கள்.

தவறான நபர்கள் இடங்களை பாரமரிக்க நியமிப்பதால்.

இடத்தில் வாடகைக்கு தரமற்றவர்களை குடிவைக்கும் பொழுது.

இடத்தின் விலை அதிகமாய் விட்ட பிறகு உங்களுடைய பத்திரத்தின் நகல்கள் ஊரெல்லாம் சுத்திவரும் போது.

எல்லைகள் சரியாக அளக்காமல் விட்ட நிலங்கள்.

கூட்டு பட்டாவில் இருக்கும் நிலங்கள், நீளம், அகலம், குறிப்பிடாமல் இருக்கும் கிரைய பத்திரங்கள் உள்ள நிலங்கள்.

காணிகல், “L” கட், பெண்சிங் போன்றவை செய்யப்படாமல் இருக்கும் நிலங்கள்.

Static Asset, களை Dynamic Asset ஆக மாற்றாமல் இருப்பது போன்ற காரணகளால் உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபடுகின்றன.

*#உங்கள்_நிலத்தை_பாதுகாக்க_நீங்கள்_செய்ய_வேண்டியது*

நிலத்தை வாங்கியதோடு நிலத்தினை சுற்றி சுவர் கட்டுங்கள், அல்லது வேலி அமையுங்கள்.

உங்கள் நிலத்தினை அடிக்கடி சென்று பாருங்கள்.
முக்கியமாக உங்களுக்கு தெரியாத இடங்களில் இடத்தை வாங்கதீர், நிலத்தினை பராமரிப்பு செய்யுங்கள்..
நீங்கள் இல்லாத நேரங்களில் வேறு எந்த நபர்களும் வந்து செல்கிறார்களா என்று கவனியுங்கள்..

Saturday, December 14, 2019

பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது,

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கடந்த கட்டுரையில் பார்த்தோம் (பார்க்க https://www.facebook.com/siddique.mtech/posts/1147988965402382/) 

இப்போது பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது, புதுபித்தல் செய்வது, கிழிந்து போன, தொலைந்து போன பாஸ்போர்ட்டிற்க்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம் 

*** பெயர் திருத்தம் (Name Change) ***

கீழ் காணும் ஆவணங்களை கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட புது பாஸ்போர்ட்டை பெறலாம், ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது மேலே குறிபிட்ட கட்டுரையில் உள்ளது

1. உங்களின் புதிய பெயர் உள்ள இரண்டு ஆவணம் (ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள்  என ஏதேனும் இரண்டு ஆவணங்கள்) 
2. பெயர் மாற்றம் சம்மந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட விளம்பரம் (குறைந்தது இரண்டு விளம்பரம்).  அல்லது அரசு கெஜெட்டில் பெயர் மாற்றம் சம்மந்தமான அறிவிப்பின் நகல் 

*** தாய் , தந்தை பெயர் மாற்றம் (Father, Mother name change) ***

கீழ் காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து சரி செய்து கொள்ளலாம்

1. சரியான பெயர் உள்ள தந்தை , தாயின் பாஸ்போர்ட் 
2. தாய் , தந்தையின் சரியான பெயர் உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள் போன்ற ஏதேனும் ஒரு அரசு ஆவணம் அல்லது வீட்டு பத்திரம்
3. பெற்றோர் இறந்து விட்டார்கள் என்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட மேற் சொன்ன ஆவணங்கள்

*** கணவன், மனைவியின் பெயர் சேர்ப்பு (Adding Spouse name) ***

திருமணத்தின் போது கணவன், மனைவியின்  பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க எந்த ஆவணமும் தேவை இல்லை , நேரடியாக, கணவன், மனைவி பெயர்களை பாஸ்போர்ட்டில் சேர்த்து புது பாஸ்போர்ட் பெறலாம்.

*** கணவன், மனைவியின் பெயர் திருத்தம் (Spouse name Change)***

விவாகரத்து ஏற்பட்டதால், மருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டில் கணவன் அல்லது  மனைவியின் பெயரை மாற்ற விவாகரத்து சான்றிதழ் (Divorce Certificate) சமர்பிக்க வேண்டும்

கணவன் அல்லது மனைவி இறந்து விட்டதினால், மருமணம் செய்து கொண்டவர்கள் கணவன் அல்லது  மனைவியின் இறப்பு சான்றிதழ் (Death Certificate) சமர்பிக்க வேண்டும்.

*** பிறந்த தேதி மாற்றம் (Date of birth Change) ***

முதல் பாஸ்போர்ட் பெற்ற 5 வருடத்திற்க்குள் தான் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியும். ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற  ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்தால் போதும்

பாஸ்போர்ட் எடுத்து 5 வருடம் கடந்து விட்டால் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியாது

*** முகவரி மாற்றம் (Address Change)***

தற்காலிகமாக உள்ள முகவரியில் ஏதேனும் ஒரு அரசு ஆவணம் எடுகுங்கள்,
கேஸ் பில், கரென்ட் பில், அல்லது வாடகை ஒப்பந்தம் மூலமாக ஓட்டர் ஐடி, அல்லது ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்

புது முகவரி உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற  ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்து பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை மாற்றி கொள்ளலாம்

*** பிறந்த இடத்தை மாற்ற (Place of Birth Change) ***

அதே மாநிலத்தில் வேறு பகுதியில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட்டில் பிறந்த இடத்தை (Place of Birth) மாற்றலாம்

1. பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை சான்றிதழ் (Birth Certificate or any proof)
2. மாற்றத்திற்க்கான நீதி மன்ற ஆணை (வழக்கறிஞர்களை கொண்டு முயற்சிக்கவும்) – civil court order 
3. மாற்றத்திற்கான அஃபிடவிட் (Affidavit for “Reason of Chanage”)

வேறு  மாநிலத்தில் அல்லது வேறு நாட்டில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு 
அமைச்சகத்தில் (MHA) இருந்து கூடுதல் சான்றிதழ் பெற வேண்டும், இது மிக மிக கடினம்.

*** பாஸ்போர்ட் தொலைந்து விட்டால், புது பாஸ்போர்ட் பெற***

கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து புது பாஸ்போர்ட் பெறலாம்.
1. தொலைந்தற்க்கான காவல் நிலைய புகார் (Police Report)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)
4. முகவரிக்கான சான்று (Proof of address)
5. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)

*** பாஸ்போர்ட் கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ புது பாஸ்போர்ட் பெற (Damaged passport)***

பாஸ்போர்ட் எண் (passport number) மட்டும் தெரிந்தால் போதும், மற்ற விபரங்கள் கிழிந்தாலும், அழிந்தாலும் கீழ்காணும் ஆவணங்கள் மூலம் புது பாஸ்போர்ட் பெறலாம்

1. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)

*** ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்ற (Change from ERC to Non-ECR) ***

உங்கள் பாஸ்போர்டில் ERC (Emigration check Required) என்று இருந்தால் சில நாடுகளுக்கு செல்ல Emigration Clearance  தேவைபடும். பத்தாம் வகுப்பு தேர்சி பெற்றிருந்தால் உங்களுக்கு Non-ECR  பாஸ்போர்ட் வழங்கப்படும்.  பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்பித்து உங்கள் பாஸ்போர்ட்டை  ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்றலாம்

*** பாஸ்போர்ட் புதுபிக்க (passport renewal) ***

எந்த மாற்றமும் இல்லாமல் பாஸ்போர்ட் புதுபிக்க பழைய பாஸ்போர்டே  போதும் கூடுதலாக எந்த ஆவணமும் தேவை இல்லை

மேலே குறிபிட்ட தகவலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, கூடுதல் விபரம் தேவை பட்டாலோ, அல்லது பாஸ்போர்ட் எடுப்பது சம்மந்தமாக வேறு ஏதெனும் தகவல் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கின்றேன்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech
https://www.facebook.com/siddique.mtech/posts/1154589384742340/

பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்

இந்திய குடியுரிமையை உறுதி செய்ய பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) மற்றும் பாஸ்போர்ட் (passport) உதவியாக இருக்கும் என்பதை பார்த்தோம். அதில் பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிது, முதலில் அதன் விபரங்களை பார்ப்போம்

தேவையான ஆவணங்கள் : 
இரண்டு விதமான ஆவணங்கள் பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்

1. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Date of Birth)
2. தற்போது வசிக்கும் முகவரியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Address)

I. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணங்கள்:

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
2. பள்ளிகளில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் (mark sheet) அல்லது மாற்று சான்றிதழ் (TC)

இந்த இரண்டு ஆவணங்களில் ஒன்று கூட உங்களிடம் இல்லை என்றால், கீழ்காணும் ஆவணங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

3. ஆதார் கார்ட்
4. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
5. ஓட்டுனர் உரிமம் (Driving License)
6. பான் கார்ட் (PAN Card)

II. முகவரியை நிருபிக்கும்  ஆவணங்கள் :

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் முகவரியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. ஆதார் கார்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
3. வங்கி கணக்கு புத்தகம் (Bank passbook)
4. கேஸ் இணைப்பு புத்தகம் (Gas Connection)
5. குடிநீர் வரி ரசீது (Water bill)
6. மின் கட்டண ரசீது (Electricity bill)

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க :

1. பெற்றோர்களின் பாஸ்போர்ட் நகல் (Copy of parents passport)
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
3. ஆதார் கார்ட் (அவசியமில்லை, கேட்டால் கொடுக்கவும், இல்லை என்றாலும் பரவாயில்லை)
4.  படிவம் (Annexure D), இது ஒன்றும் இல்லை, ஆன்லைனில் Annexure D படிவத்தை டவுன்லோடு செய்து, பெயர்கள், முகவரி எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி பெயர்கள் பாஸ்போர்டில் இடம் பெற :

திருமண சான்றிதழ் இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை
புதிய பாஸ்போர்ட் விதிகளின் படி திருமண சான்றிதழ் கட்டாயம் இல்லை
https://mea.gov.in/Images/attach/Announcement_tamil.pdf

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

1. நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் , முகவரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், மாறி இருந்தால் பாஸ்போர்ட் விண்ணபிக்கும் முன் அணைத்து ஆவணங்களில் உள்ள விபரங்கள் ஒரே மாதிரி இருக்கும் படி சரி செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் இந்தியாவில் தான் பிறந்துள்ளீர்கள் என்பதை நிருபிக்கும்,  பிறந்த இடம் (Place of Birth) என்ற இடத்தில் நீங்கள் பிறந்த மாவட்டத்தை குறிப்பிடுங்கள், உங்களை ஊரை குறிப்பிட வேண்டாம், உதாரணத்திற்க்கு சென்னை, மதுரை, சிவகங்கை என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடுங்கள்.

3. பிறந்த தேதிக்கும், முகவரிக்கும் ஒரே ஒரு ஆவணத்தை சான்றாக கொடுக்க முடியாது, அதாவது ஆதார் காட்டை பிறந்த தேதி மற்றும் முகவரிக்கும் சான்றாக கொடுக்க முடியாது. ஆதார் காட்டை முகவரிக்கு சான்றாக பயன்படுத்தினால், பிறந்த தேதிக்கு வேறு ஆவணம் கொடுக்க வேண்டும்

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை :

பாஸ்போர்ட் https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

1. https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் e-mail முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்
2. பதிவு செய்த user name , password மூலம் பாஸ்போர்ட் இணையதளத்தில்  Log in செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தயாராகுங்கள்
3. தொடர்ந்து பல பக்கங்களில் உங்களின் விபரங்களை கொடுக்க வேண்டும்
4. கூடுதலாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, உங்கள் தாய், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி
5. உங்கள் தெருவில் உள்ள இரண்டு நபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் 
6. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்ப கட்டணம் ரூ.1500 ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்
7. பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில்  அப்பாய்ன்ட்மென்ட் (Appointment) தேதி, நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
8. குறிப்பிட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூன்று கட்ட நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்
9. பாஸ்போர்ட் அலுவலகத்தின் முதல் பிரிவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு புகைபடம் எடுக்கப்படும்
10. இரண்டாம் பிரிவில் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்
11. மூன்றாம் பிரிவில் உள்ள அரசு அதிகாரி சில கேள்விகள் கேட்பார்,  ஏன் பாஸ்போர்ட் எடுகின்றீர்கள் ? என்று கேட்டால், வெளிநாட்டில் வேலை, அல்லது வெளிநாட்டில் உள்ள உறவினரை சந்திக்க அல்லது ஹஜ், உம்ரா என ஏதாவது ஒரு தகுந்த காரணங்களை சொல்லவும்
12. இதன் பின்னர் சில நாள்களில் காவல்துறையினர் வீட்டிற்க்கு வந்து விசாரிப்பார்கள் (police verification)
13. அதன் பின்னர் தபாலில் (Post) பாஸ்போர்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

அனைத்தும் சரியாக இருந்தால் மொத்தமாக 3 அல்லது 5 வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கூடுதல் விளக்கம் தேவைபட்டாலோ, விண்ணப்பிப்பதில் பிரச்சனைகள் இருந்தாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிகின்றேன்

பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது, புதுபித்தல் செய்வது, கிழிந்து போன, தொலைந்து போன பாஸ்போர்ட்டிற்க்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்ற விளக்கத்தை எனது https://www.facebook.com/siddique.mtech/posts/1154589384742340/ இந்த கட்டுரையில் பார்க்கவும்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech

Wednesday, November 6, 2019

சர்வே ! சர்வே !! சர்வே !!!

சர்வே ! சர்வே !! சர்வே !!! 
சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:
சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை
புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.
“அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.
மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை ,  நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள்  தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என  பிரிக்கப்படுகிறது.
1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.
ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து  போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல்  தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.
மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள்,  சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள  ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.
எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?
நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.
பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.
சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.
கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்
புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.
நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.
அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.
பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.
இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல்  போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று  கண்டுப் பிடிப்பர்.
மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல்  இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும்,  மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.
FMB
நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு  பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை  நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள்  பயன்படுத்தப்படுகின்றது.
பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம்  தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை  ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள்  இன்றும் நடைமுறையில் உள்ளன.
உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால்  வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன்  படுத்தி கொண்டு இருக்கின்றோம்.
இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.
கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.
நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.
ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
வேலி
• 1வேலி – 20 மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி
மா
• 1மா – 100 குழி
• 20மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 100 சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்
சதுமீட்டர்
• 10,000 சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 40.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 10.76391 சதுர அடி
• 0.0929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 100 சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• 0.8361 சதுர மீட்டர் – 1குழி
• 101.17 சதுர மீட்டர் – 121 குழி
செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 100 லிங்க்
• 100செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்
ஏக்கர்
• 1ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
• 1ஏக்கர் – 100சென்ட்
• 1ஏக்கர் – 160 square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 10 Square Chains
• 1ஏக்கர் – 160 Perches
• 1ஏக்கர் – 160 Poles
• 1ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 0. 40469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 640ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – 0. 404694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 40.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 640 ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்
கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – 0.9144 மீட்டர்
• 1.093613 – 1மீட்டர்
ஏர்ஸ்
• 10 ஏர்ஸ் – 02471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1076 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 100 ச.மீ
• 100 ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• 0. 405 ஏர்ஸ் – 1 சென்ட்
ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 10,000 ச.மீ
• 1ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
• 0040 ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 107637.8 சதுர அடிகள்
• 0. 405 ஹெக்டேர் – 1ஏக்கர்
சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 40.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 4840 சதுர குழி
• 1 சென்ட் – 0040 ஹெக்டேர்
• 1 சென்ட் – 0. 405 ஏர்ஸ்
• 1சென்ட் – 40. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1000 சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – 0.004047 ஹெக்டேர்
• 10 சென்ட் – 0.04047 ஹெக்டேர்
• 0.02471சென்ட் – 1 ஏர்ஸ்
• 0.02471சென்ட் – 10 ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 2400 சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.06சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• 0.7 சென்ட் – 1 குழி – 300 சதுர அடி ( மதுரை)
• 0.7. சென்ட் – 300 சதுர அடிகள் ( மதுரை )
சென்ட்
• 11.0 சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.0 சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,0000 சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1076 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்
கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்
மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 1610 மீட்டர் – 1 மைல்
• 1000 மீட்டர் – 1கி.மீ
• 1000 மீட்டர் – 0.62 மைல்
• 0.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 201.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.093613 கெஜம்
• 0.3048 – 1அடி
• 10 மீட்டர் – 32. 8084 அடிகள்
அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 2400 சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,600 சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 30. 48 செ. மீ
• 5280 அடி 1 மைல்
• 3280 அடி 1கி. மீ
• 1076 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 10.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி 0.0929 சதுர மீட்டர்
• 2400 சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,560 சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1089 சதுர அடிகள் 33 அடி
• 107637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 660 அடி 1 பர்லாங்கு
• 660 அடி 220 கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 100 லிங்க்
• 0.66 அடி 1 லிங்க்
• 0.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1076 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.093613 கெஜம்
• 1 அடி 0.3048 மீட்டர்
• 3.28084 அடி 1 மீட்டர்
• 32. 8084 10 மீட்டர்
• 1 சதுர அடி 0.09290 சதுர மீட்டர்
• 10 சதுர அடிகள் 0.9290 சதுர மீட்டர்
• 100 சதுர அடிகள் 9.290 சதுர மீட்டர்
• 200 சதுர அடிகள் 18.580 சதுர மீட்டர்
• 500 சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 107.6939 சதுர அடிகள் 10 ச. மீ
• 215.278 20 சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 100 சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 10 சென்ட்
• 4800 சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 400 சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
 சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
 தொடர்புக்கு:9841665836

Thursday, October 31, 2019

டிகிரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

டிகிரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி - ஆண்டுக்கு ₹ 10,000 கல்வி உதவித்தொகை

நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறது அதில் குறிப்பாக கல்வி பணியாக தேர்வுக்கு முன் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?, தேர்வுக்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?, கல்லூரி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி, மற்றும் சிறுபாண்மை இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யும் முகாம் போன்ற கல்வி பணி தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றியமையாத பணி.
இந்த கல்வி உதவித்தொகை சற்று மாறுபட்டு இந்திய அளவில் அனைத்து சமுதாய மாணவ மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் அமைந்துள்ளது.

மாணவ மாணவிர்கள் பொருளாதாரா சூழ்நிலை காரணமாக கல்வி தடைபடகூடாது என அரசாங்கம் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது அதுபோல இந்த மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு ஒரு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுக படித்தியுள்ளது 

பட்டபடிப்பு படிக்கும் அணைத்து சமுதாய மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவில் 82,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது அதில் தமிழத்திற்க்கு 4883 நபர்களும்‌‌ புதுச்சேரிக்கு 78 நபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ஒரு நபருக்கு ருபாய் ₹10,000 தரப்படுகிறது. இதில் 50% சதவீதம் மாணவிகளுக்கு வழப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை‌‌ பின்பற்றப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க  தேவையான தகுதிகள் :

1) +2வில் 80% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
2) தொலைதூரமோ அல்லது தனித்தேர்வு அல்லாமல் பள்ளியில் +2 படித்து இருக்க வேண்டும்
3) யுஜிசி அங்கிகாரம் பெற்ற கல்லூரியில் பட்டபடிப்பு படிக்க வேண்டும்
4) முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்க வேண்டும்
5)‌ குடும்பத்தின் வருமானம் ₹8,00,000 மிகாமல் இருக்க வேண்டும்

யார் அப்ளை செய்ய முடியாது :

1) டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
2) தொலைதூர கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
3) 80% த்துக்கும் குறைவாக மதிப்பெண் அடுத்த மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
4) பள்ளி கல்லூரிகளில் குற்ற பின்னணி உள்ள மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

1) +2 மதிப்பெண் சான்றிதழ்
2) பள்ளி மாற்று சான்றிதழ்
3) கல்லூரியில் படித்துகொண்டு இருப்பதற்க்கான சான்றிதழ்
4) மாணவரின்‌ ஆதார் கார்டு
5) மாணவரின் பேங்க பாஸ்புக்

விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.10.2019.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் - www.scholarships.gov.in 

கல்வி உதவித்தொகை புதுப்பிக்க தகுதிகள்

1) 60% சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்
2) 75% வருகை பதிவேடு இருக்க வேண்டும்
3) ராக்கிங் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டிருக்க கூடாது

விண்ணப்பிப்பது தொடர்பான உதவிக்கு - 0120- 6619540
என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் 

(அல்லது)

மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் - helpdesk@nsp.gov.in

#scholorship 
#கல்வி_உதவி_தொகை
#மாநில_மாணவரணி
#TNTJSW

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டம் (Prime Minister Awas Yojana Scheme - PMAY)

நகர்புற ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளின் வீட்டு வசதி தேவைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரமற்ற சூழலில் வாழக்கூடிய குடிசைவாசிகள், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் (Economically Weaker Section) மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group) ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியானவர்களாவர்.

விதவைப் பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் நான்கு வகைகளை கொண்டதாக இருக்கிறது. அதனடிப்படையில் மாநில அரசுகள் பயனாளிகளை தேர்வு செய்து உதவி வழங்கும்.

• சேரிகளை தனியார் பங்கேற்புடன் மறுமேம்பாடு செய்தல்

• மானியம் மூலம் நலிவுற்ற பிரிவினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.6,00,000/- முதல் 12,00,000/- வரை கடன் வழங்குதல் - இத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி செய்யப்படும்

 (குறிப்பு:- நலிவுற்ற அடிப்படையில் வழங்கக்கூடிய கடனுக்கு வட்டியின் அடிப்படையில் இருப்பதால்  முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ளவும்)

• மலிவு விலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும். குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

• நிலம் வைத்திருப்போர் தனி வீடு கட்டுவதற்கான மானியம் அளித்தல். இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.

*தகுதிகள்*
• ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

• திருமணமானவராக இருத்தல் வேண்டும்.

• இந்தியாவில் எங்கும் விண்ணப்பிப்பவர் மற்றும் அவர் குடும்ப அங்கத்தவர்கள் பெயரில் சொந்த வீடு இருத்தல் கூடாது (குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் மணமாகாத பிள்ளைகளை குறிக்கும்).

• தனி வீடு கட்ட உதவி கோரும் பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.

*தேவையான ஆவணங்கள்*

• வருமான சான்றிதழ் (சுயசான்றிதழ் - Self Affidavit)

• ஆதார் அட்டை

• நில உரிமை பத்திரம் அல்லது பட்டா

• வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை

• வங்கி கணக்கு புத்தகம்.

*விண்ணப்பிக்கும் முறை*

இத்திட்டத்திற்கு *www.pmaymis.gov.in* என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இறைவன் நாடினால், எவ்வாறு விண்ணப்பிப்பது வீடியோ பதிவாக ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.

பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?!

பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

ஒவ்வொருவருக்கும் "பிறப்பு சான்றிதழ்" என்பது மிக முக்கியமானதாகும். இந்த சான்றிதழ் ஆனது பள்ளியில் சேரவும் , பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, திருமணத்துக்கு உரிய வயதை நிரூபிக்க , வாக்குரிமை பெற , ஓட்டுநர் உரிமம் , மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு "பிறப்பு சான்றிதழ்" மிக அவசியமாகும். பொது சுகாதாரம் , மருத்துவம் சமந்தமான தேசிய திட்டங்களை வகுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை கட்டாயம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை மாநில அரசும் தேவையான எளிமையான முறையை கையாண்டு வருகிறது.
 

*birth and death certificate பிறப்பு , இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?*

பிறப்பு , இறப்பு பதிவுகள் சட்டம் 1969 யின் படி ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பை 21 நாட்களுக்குள் பதிவு செய்தல் மிகவும் கட்டாயம். எங்கு சென்று பதிவு செய்வது ? பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வோரின் பகுதியை பொருத்து அமைந்தது. இதன் படி மாநகராட்சியாக இருந்தால் இந்த அலுவலகத்தை நாட வேண்டும். கிராமமாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் , நகராட்சியாக இருந்தால் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இறப்பு , பிறப்பு பதிவுகளை அலுவலர்களின் உதவியோடு பதிவு செய்ய வேண்டும். இதற்கென அலுவலர்களை அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமித்துள்ளனர். ஒவ்வொரு அலுவலருக்கும் பகுதிகளின் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளே மாநகராட்சி மற்றும் நகராட்சி , கிராம பஞ்சாயத்து ஒப்புதல் உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கலாம் என மத்திய , மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட பின்பும் அதிகாரிகள் சான்றிதழை வழங்க தவறினால் அதிகாரியின் மீது சமந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்கலாம்.

*birth certificate பதிவு செய்த சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம்?*

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தேடுவதற்கு ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் தேட ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லா சான்றிதழை பெறவும் (Non- Availability Certificate)ரூபாய் 2 யை கட்டணமாக செலுத்த வேண்டும்.(இப்போது கட்டணம் மாறுபடலாம்) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் ரூபாய் 5.00 கட்டணமாக செலுத்தி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலேயே குழந்தை பிறந்தாள் சமந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவர் 21 நாட்களுக்குள் சமந்தப்பட்டவருக்கு பிறப்பு சான்றிதழை வழங்குவர்.

*இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் 21 நாட்களுக்குள் பெறவில்லையா?*

 21 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய தவறினால் தாசில்தாரிடம் மனு அளித்து தாமத கட்டணத்தை மாநகராட்சி , நகராட்சி , கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட அலுவலகங்களில் செலுத்தி சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

*ஒரு வருடத்திற்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளை செய்ய தாமதமா?*

ஒர் ஆண்டுக்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்ய தவறினால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் சட்டம் - 1969 , பிரிவு (13) 3-ன் கீழ் சமந்தப்பட்ட நபர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அல்லது மாநகர  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை சமந்தப்பட்ட பெற்றோர் மற்றும் வாரிசுதாரர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும்.

*birth and death certificate நீதிமன்றத்தில் பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்!*

1. பிறந்த தேதி அறிந்த மூன்றாம நபரின் வாக்குமூலம் .

2. பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்து பெறப்பட்ட பதிவில்லா சான்றிதழ் .

3. பள்ளி சான்றிதழ்

4. மருத்துவமனை அதிகாரியின் சான்றிதழ்.
 

நீதிமன்றத்தில் இறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !

1. புதைக்கப்படும் அல்லது கல்லறை அலுவலரின் சான்றிதழ்.

2.மருத்துவ அதிகாரியின் சான்றிதழ்.

3.இறப்பை பற்றி அறிந்த மூன்றாம் நபரின் வாக்குமூலம்.

4. ஏதேனும் நம்ப தகுந்த ஆவணங்கள்.

பதிவாளரிடம் இறப்பு மற்றும் பிறப்பை தெரிவிக்க வேண்டியவர்கள் .

வீட்டில் நடக்கும் இறப்பு மற்றும் பிறப்பு குடும்பத்தில் உள்ள மூத்த  உறுப்பினர்கள் , மருத்துவமனையில் இறப்பு மற்றும் பிறப்பு சமந்தமாக மருத்துவமனையின் மருத்துவர் , சாலையில் நடக்கும் இறப்பு குறித்து சமந்தப்பட்ட பகுதியின் அரசு அதிகாரிகளின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கையை அரசுகள் எடுத்து வருகின்றனர். 

மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இணையதளம் மூலம் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்யவும் , இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை சென்னை உட்பட பல மாவட்டங்கள் மாநகராட்சி மூலம் மக்களுக்கு எளிமையான முறையில் இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக பேரூராட்சி இயக்கத்தின் மூலம் இணையதளத்தில் பிறப்பு / இறப்பு சான்றிதழ்களை கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

முகவரி : 

http://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! பெரு நகர சென்னை மாநகராட்சியும் இணையதள வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முகவரி : http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களை கட்டாயம் பதிவு செய்வது நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தது . எனவே இது தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் ஒருங்கிணைந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

#birth_certificate
#death_certificate
#tntjsw

அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி

அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி?

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தங்கள் பெயர்களை சில முக்கிய காரணங்களுக்காக அரசு கெஜட்டில்  மாற்றம் செய்கின்றனர்.  காரணங்கள் பின்வருமாறு. 

* சில முக்கியமான ஆவணங்கள் புதியதாக எடுப்பதாற்க்காகவும், பழைய ஆவணங்களை திருத்தம் செய்வதற்க்காகவும் தங்கள் பெயர்களை மாற்றம் செய்கின்றனர்.
(எ.கா.: ஆதார்கார்டு, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் மற்றும் பல)

* அது போல இறைவனும் அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையில் இறைவனுக்கு இணை வைக்கும் பெயர்கள் அல்லாமல் அர்த்தமில்லாத பெயர்களை வைத்து சகோதரர்களும் தங்கள் பெயர்களை மாற்றி கொள்கின்றனர் (எ.கா.: சாஹுல் ஹமித் என்ற இறைவனுக்கு இணையான பெயரை மாற்றி அப்துல் ஹமீத் என்ற இணை இல்லாத பெயர்களாக மாற்றி கொள்கின்றனர்)

*சில தொப்புள் கொடி உறவுகள் சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்டு தங்கள் பெயர்களை இஸ்லாமிய பெயர்களாக மாற்றி கொள்கின்றனர். பிறகு பழைய பெயர்களை மாற்றி புதிய பெயரை அரசு கெஜட்டில் மாற்றம் செய்கின்றனர்.

* இந்திய அரசியல் சாசன சட்டமும் Article-25 அவரவர் மதங்களை அந்தந்த மத சட்டங்கள் அடிப்படையில் சுதந்திரமாக பின்பற்றலாம் எனவும். ஒவ்வொருவரும் தனது மதத்தை பின்பற்ற யாரும் தடை செய்ய முடியாது. அதில் தமது பெயரைகளை மாற்றம் செய்கிற உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகுனுக்கும் அளிக்கிறது. 

*அதுபோல் நபி(ஸல) அவர்கள் கூறினார்கள் 

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.

நூல் : முஸ்லிம் (147)

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

நூல் : அஹ்மத் (20704)

அந்த மறுமை நாளில் இறைவன் நம்மை அழைக்கும் போது இறைவனுக்கு இணையான பெயர்களையோ அல்லது பெருளற்ற முட்டாள் தனமான மூடநம்பிக்கையான பெயர்களை வைத்து நம்மை அழைக்கும் போது அது நமக்கு கைசேதம் மற்றும் இழுக்கை ஏற்படுத்தும் அத்தகைய பெயர்களை தவிர்த்து இறைவனின் அருள் பெருந்திய பெயர்களாக அமைத்துகொள்வோமாக. 

🔰 *அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி?*

நமது பெற்றோர் வைத்த பெயரையோ அல்லது தனக்கு விரும்பாத பெயரையோ மாற்றி புதிய பெயர் வைக்க அரசு கெஜட்டில் தனது பழைய பெயரை மாற்றம் செய்ய வேண்டும்.

அல்லது மதம் மாறியவர் தனக்கான புதிய பெயரை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளலாம் 

🔰  *பெயரை மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:*

🔅தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் 
🔅60 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

🔰 *பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:*

🔅பிறப்பு மற்றும் உங்களது கல்வி சான்றிதழ் 

🔅உங்களது போட்டோவை இதற்கென உள்ள விண்ணப்பத்தில் ஒட்டி அரசு அதிகாரியிடம்(Green Ink holder) கையெழுத்து வாங்க வேண்டும்...

(விண்ணப்பம் கீழே உள்ள லிங்கில் உள்ளது )

🔰 *இதற்கான கட்டணங்கள்:*

🔅ஏதோ ஒரு காரணங்களுக்காக பொதுவான ஒரு பெயரை தேர்ந்தெடுக்க கட்டணம் ₹415.

🔅தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் ₹50(அரசிதழில் விளம்பரம் செய்யவேண்டும்)

🔰 *பணம் செலுத்தும் முறை:*

🔅நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணத்தை செலுத்தலாம்.

🔅அல்லது கீழ்காணும் முகவரிக்கு டிடி வரைவோலை மூலம் பணத்தை அனுப்பலாம்

🔰 *அலுவலக முகவரி*

*உதவி இயக்குனர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையகம் 110 அண்ணா சாலை சென்னை 600 002*

🔰 *விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய நடைமுறைகள்:*

🔅அரசிதழில் நமது பெயர் மாற்றத்திற்கான  விளம்பரத்தை கொடுக்கவேண்டும்.

🔅ஒருவேளை அரசிதழிலும் பெயர் தவறாக அச்சுயிடப்பட்டால் அதை 6 மாத காலத்திற்குள் சரி செய்யவேண்டும் 

🔅விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் அரசு கேசட் ஆபீஸரிடம் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும்

🔅இத் துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பம் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் 

🔅பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசிதழில் நேரடியாக வந்து அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம் 

🔅தவறும்பட்சத்தில் தபால் மூலம் அனுப்பப்படும் 

🔅தபால் மூலம் அனுப்பப்பட்ட அரசிதழ் திருப்பப்பட்டால் ஆறு மாத காலத்திற்குள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்

🔅கீழ்காணும் அரசு இணைய தளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளது 

http://www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm

🔅 *விண்ணப்பங்களை பெற*

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm

ஆங்கிலத்தில் உள்ள  பெயரை மாற்ற:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-1E.pdf

தமிழில் உள்ள  பெயரை மாற்ற:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-1T.pdf

மதம் மாறியவர்கான விண்ணப்பம்:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-2.pdf

Thursday, October 24, 2019

நட்பு

நட்பு

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இது போன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.

நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்பு கொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம் முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது.

நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பனிடம் தெரிவிக்கும் போது நெஞ்சத்தில் ஏற்பட்ட கனம் காணாமல் போய் விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டடத்தைத் தாக்க வரும் மின்னலை இடிதாங்கி வாங்கிக் கொண்டு கட்டடத்தை காப்பதைப் போல உதவுகிறது.நண்பர்களை அதிகம் பெற்றவர்கள் தங்களது காரியங்களை சுலபமாக முடித்துவிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் நண்பர் பணிபுரிந்தால் இவர் மருத்துவமனை செல்ல நினைக்கும் போது தேவையான ஏற்பாடுகளை நண்பரே செய்து கொடுக்கிறார்.

கஷ்டங்கள் வரும்போது பக்கபலமாகவும் நிற்கிறார். இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் நபி (ஸல்) அவர்கள் நட்பு வைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)  நூல்: முஸ்லிம் (4760)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதி (1867)

அழகிய நட்பு இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளதால். எனவே நட்பின் ஒழுங்குகளை அறிந்து அதன்படி செயல்படுவோம்.

நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்…

ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களேத் தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)    நூல்: புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்குதல்

ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கங்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)   நூல்: புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.          அல்குர்ஆன்  (74:45)

நம்மை நாமே சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொண்டாலும் பல நேரங்களில் மனம்போன போக்கில் சென்று விடுகிறோம். தவறான முடிவுகளையும் எடுத்துவிடுகிறோம். ஆனால் நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்மை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். 
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)     நூல்: புகாரி (7198)

நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும். பெற்றுத் தருகிறது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடன் மறுமையில் நாம் இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய நேசத்திற்குரியவர் அதிகமான நற்செயல்களை செய்து நாம் அவர் செய்த நல்லறங்களைப் போல் செய்யாவிட்டாலும் அவருடன் இருக்கும் சிறப்பை இறைவன் நமக்குத் தருவான். எனவே நம்மை விட அதிக நன்மை புரிபவர்களுடைய நட்பை நாம் தவறவிடுவது மாபெரும் கைசேதம். நல்லோர்களின் நட்பு இவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) அவர்கள்      நூல்: புகாரி (6170)

அல்லாஹ்விற்காக நட்பு வைத்தல்

பெரும்பாலான நண்பர்கள் வீணாக பேசுவது ஊர் சுத்துவது திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. இஸ்லாத்தை பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்பு வைத்தவர் களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)   நூல்: அபூதாவூத் (4061)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு அவர், இல்லை. கண்ணியமானவனும் சங்கையான வனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் (4656)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)  நூல்: அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: முஸ்லிம் (4655)

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள். 
அறிவிப்பவர்: உமர் பின் அல்ஹத்தாப்(ரலி)
நூல்: அபூதாவூத் (3060)

உயிர் காப்பான் தோழன்

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள். புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்று நமக்கு தெரிகிறது. அது போல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது. உண்மையான நட்பை பற்றி குறிப்பிடும் போது ‘உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு’

என்று கூறுகிறது குறள். அதாவது தன் ஆடை விலகும் போது கை விரைந்து சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுவதைப் போல் நண்பன் கஷ்டப்படும் போது விரைந்து சென்று கஷ்டத்திலிருந்து அவனை விடுவிப்பவனே உண்மை நண்பன் என்பது இதன் அர்த்தம். இதே பொருளில் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியைச் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)   நூல்: புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்

தீமையான காரியங்களில் நண்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நண்பன் நன்மையான காரியங்களை செய்ய மறந்து விட்டால், உண்மை நன்பன் அவனுக்கு நினைவூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்துவிட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் திருக்குர்ஆன், நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு பணிக்கு பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நல்லதை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)   நூல்: நஸயீ (4133)

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)  நூல்: புகாரி (24)

தவறு செய்தால் மன்னிப்பு கோர வேண்டும்

தவறு நம் தரப்பிலிருந்து ஏற்படுமேயானால் கவுரவம் பார்க்காமல் நண்பனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமாகவும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் நண்பர்களின் மனம் புண்படும்படியாக பேசிவிட்டோமோ என்று நினைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இது போன்ற குணம் நண்பர்களிடையே வந்துவிட்டால் பகைமைக்கு அங்கு வேலையே இல்லை.

பிலால், சுஹைப், சல்மான் இன்னும் சிலர் (இருந்த சபைக்கு) அபூ சுஃப்யான் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘(அபூசுஃப்யானைப் பார்த்து) அல்லாஹ்வுடைய வாட்கள் அல்லாஹ்வின் எதிரியின் கழுத்தில், தாம் பதம் பார்க்க வேண்டிய இடத்தில் இன்னும் பதம் பார்க்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், (அவர்களிடம்) ‘குரைஷிகளின் தலைவரிடத்திலா இப்படி பேசுகிறீர்கள்?’ என்று கூறி விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘அபூபக்ரே, நீர் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திருக்கலாம். நீர் அவர்களை கோபப்படுத்தியிருந்தால் உமது இறைவனை கோபப்படுத்தி விட்டீர்’ என்று கூறினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த நபித் தோழர்களிடம் வந்து, ‘சகோதரர்களே, உங்களை நான் கோபப்படுத்தி விட்டேனா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘இல்லை. என் சகோதரரே, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயித் பின் அமர் (ரலி)  நூல்: முஸ்லிம் (4559)

பிரதி உபகாரம் செய்ய வேண்டும்

எப்போதும் நண்பன் நமக்கு செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர் ஒருமுறை செலவு செய்தால் அடுத்த முறை நாம் அவருக்கு செலவு செய்ய வேண்டும். சிலர் நண்பனுக்காக தன் புறத்திலிருந்து எதையும் கொடுக்காமல் அவனிடமிருந்து அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு நன்மை செய்தால் அதற்கு பதிலாக அவனுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். பொருள் வசதி நம்மிடம் இல்லாவிட்டால் அதிகமாக நண்பனுக்காக துஆ செய்ய வேண்டும்.

அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து யார் அடைக்கலம் கேட்கிறாரோ அவருக்கு அடைக்கலம் தாருங்கள். உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்க பிரதிஉபகாரம் செய்யுங்கள். (பிரதி உபகாரம் செய்ய பொருள்) உங்களிடத்தில் இல்லா விட்டால் அவருக்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்து விட்டீர்கள் என்னும் அளவிற்கு அவருக்காக துஆ செய்யுங்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)   நூல்: நஸயீ (2520)

நட்பை வெளிப்படுத்த வேண்டும்

நாம் ஒருவரை நேசிக்கிறோம். ஆனால் அவருக்கு நம்முடைய நேசம் தெரியாது. இந்நேரத்தில் கூச்சப்படாமல் அவரிடம் சென்று நமது நட்பை தெரிவித்து நண்பர்களாகிக் கொள்ள வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: அஹ்மத் (11980)

குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது

நண்பரைப் பற்றி தவறாக ஒரு செய்தி வந்தால் உடனே அதை நம்பிவிடக் கூடாது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் சந்தேகக் கண்ணுடன் குறைகளை ஆராய்வது நமக்குத் தேவையில்லாத விஷயம். நல்ல காரியங்களில் தவிர மற்ற விஷயங்களில் நண்பனை பார்த்துப் பொறாமைப் பட்டால் நட்பு வளர்வதற்குப் பதிலாக குரோதங்களும் பகைமையும் வளர்ந்து கொண்டே செல்லும். என்றும் நட்பு நிலைத்திருப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அவர்களுக்குப் பின் வந்தோர் ‘எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன் நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59:10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: புகாரி (6064)

ஏமாற்றக்கூடாது

நட்பை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூலித்து நண்பனை சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். இவர்களெல்லாம் நண்பன் போல் நடித்து காரியம் நடத்தும் நயவஞ்சகர்கள். இது போன்ற பொய்யர்களை கண்டுகொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் சில அடையாளங்களை கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: புகாரி (33)

கோபம் கொள்ளக்கூடாது

நம் தோழர்களை திருத்துவதற்காக நாம் பல முயற்சிகளை எடுப்போம். அவர்கள் தீமை செய்யும போது எடுத்துச் சொல்லி தீமைக்குத் தடைக்கல்லாக இருப்போம். அவனுடைய விருப்பத்திற்கு நாம் தடையாக இருப்பதினால் சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசி விடுவான். இந்நேரத்தில் அவன் மீது கோபப்பட்டு தவறான வார்த்தைகளை கூறிவிடக் கூடாது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்து கொண்டிருந்தார்.

மற்றொருவர் வணக்கத்தில் திளைத்தவராக இருந்தார். அந்த வணக்காசாலி தன் நண்பரை பாவம் செய்யக் காணும் போதெல்லாம் (இதை) செய்யாதே என்று கூறுவார். ஒரு நாள் ஒரு பாவம் செய்பவராக தன் நண்பரை அவர் கண்ட போது அவரிடத்தில் (இதை) செய்யாதே என்று கூறினார். அதற்கு அவர், ‘என்னை விட்டுவிடு. எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்ட (விஷயம் இது) என்னை கவனிப்பவராக நீ அனுப்பப் பட்டுள்ளாயா?’ என்று கேட்டார்.அந்த வணக்கசாலி, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் அல்லது சொர்க்கத்தில் உன்னை கொண்டு செல்லவே மாட்டான்’ என்று கூறினார்.

பின்பு இவ்விருவர்களின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அவர்கள் இருவரும் அகிலத்தின் இறைவனிடம் ஒன்று சேர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து, ‘என்னைப் பற்றி நீ அறிந்தவனா? என் கைவசம் உள்ளதைச் செய்ய நீ சக்தி படைத்தவனா?’ என்று கூறி விட்டு பாவம் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, ‘செல். என்னுடைய அருளாள் சொர்க்கத்தில் நுழைந்து கொள்’ என்று கூறினான். மற்றவரைப் பார்த்து ‘இவரை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: அபூதாவுத் (4255)

மானத்துடன் விளையடக்கூடாது

ஜாலி என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடி விடுவதுண்டு. நண்பனின் மனம் புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில் நண்பனை கேலிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம் நண்பனிடம் நடந்து கொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது. மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது. மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4650)

பெருமையடிக்கக் கூடாது

தனது நண்பனிடத்தில் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் பெருமையான பேச்சுக்களைப் பேசுகிறார்கள். இந்த மோசமான குணம் இருந்தால் கண்டிப்பாக வலுவான நட்பு ஏற்படாது. நம்முடைய நண்பனும் நம்மைப் போன்ற மனிதன் தான் என்று நினைத்து அவனை வேறுபடுத்திப் பார்க்காமல் பழகும் போது உயிரையும் கொடுக்கும் நண்பனாக அவன் மாறுகிறான். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறும் உபதேசத்தை கடைபிடித்தால் நமது நட்பு வலுப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார்(ரலி)  நூல்: அபூதாவூத் (4250)

நட்பை முறித்துவிடக் கூடாது

சில நேரங்களில் மிக நெருக்கமாக பழகுபவர்களுக்கிடையில் மனஸ்தாபங்களும் பிரச்சனைகளும் எழுவதுண்டு. இதை பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்து நட்பைத் தொடர வேண்டும். அற்ப விஷயங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு பகைவர்களாக பலர் வாழ்கிறார்கள். அதிக பட்சமாக 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. நல்ல நட்பிற்கு இறைவனிடத்தில் கூலி இருப்பதால் இது ஒரு நற்செயலாக கருதப்படுகிறது. எந்த ஒரு நற்செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப் படும்) நிலையான நற்செயலே ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)   நூல்: புகாரி (6464)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும் அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரீ (ரலி)  நூல்: புகாரி (6237)

நல்லவர்களுடைய தொடர்பை முறித்துவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பின்வரும் வசனத்தில் அறிவுரை கூறுகிறான்.

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்! 
அல்குர்ஆன் (6:52)

Thursday, October 10, 2019

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி ?

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி ? என்ன என்ன ஆவணங்கள் தேவைபடும் ?

இந்திய குடியுரிமையை உறுதி செய்ய பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) மற்றும் பாஸ்போர்ட் (passport) உதவியாக இருக்கும் என்பதை பார்த்தோம். அதில் பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிது, முதலில் அதன் விபரங்களை பார்ப்போம்

தேவையான ஆவணங்கள் :
இரண்டு விதமான ஆவணங்கள் பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்

1. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Date of Birth)
2. தற்போது வசிக்கும் முகவரியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Address)

I. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணங்கள்:

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
2. பள்ளிகளில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் (mark sheet) அல்லது மாற்று சான்றிதழ் (TC)

இந்த இரண்டு ஆவணங்களில் ஒன்று கூட உங்களிடம் இல்லை என்றால், கீழ்காணும் ஆவணங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

3. ஆதார் கார்ட்
4. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
5. ஓட்டுனர் உரிமம் (Driving License)
6. பான் கார்ட் (PAN Card)

II. முகவரியை நிருபிக்கும்  ஆவணங்கள் :

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் முகவரியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. ஆதார் கார்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
3. வங்கி கணக்கு புத்தகம் (Bank passbook)
4. கேஸ் இணைப்பு புத்தகம் (Gas Connection)
5. குடிநீர் வரி ரசீது (Water bill)
6. மின் கட்டண ரசீது (Electricity bill)

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க :

1. பெற்றோர்களின் பாஸ்போர்ட் நகல் (Copy of parents passport)
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
3. ஆதார் கார்ட் (அவசியமில்லை, கேட்டால் கொடுக்கவும், இல்லை என்றாலும் பரவாயில்லை)
4.  படிவம் (Annexure D), இது ஒன்றும் இல்லை, ஆன்லைனில் Annexure D படிவத்தை டவுன்லோடு செய்து, பெயர்கள், முகவரி எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி பெயர்கள் பாஸ்போர்டில் இடம் பெற :

திருமண சான்றிதழ் இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை
புதிய பாஸ்போர்ட் விதிகளின் படி திருமண சான்றிதழ் கட்டாயம் இல்லை
https://mea.gov.in/Images/attach/Announcement_tamil.pdf

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

1. நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் , முகவரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், மாறி இருந்தால் பாஸ்போர்ட் விண்ணபிக்கும் முன் அணைத்து ஆவணங்களில் உள்ள விபரங்கள் ஒரே மாதிரி இருக்கும் படி சரி செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் இந்தியாவில் தான் பிறந்துள்ளீர்கள் என்பதை நிருபிக்கும்,  பிறந்த இடம் (Place of Birth) என்ற இடத்தில் நீங்கள் பிறந்த மாவட்டத்தை குறிப்பிடுங்கள், உங்களை ஊரை குறிப்பிட வேண்டாம், உதாரணத்திற்க்கு சென்னை, மதுரை, சிவகங்கை என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடுங்கள்.

3. பிறந்த தேதிக்கும், முகவரிக்கும் ஒரே ஒரு ஆவணத்தை சான்றாக கொடுக்க முடியாது, அதாவது ஆதார் காட்டை பிறந்த தேதி மற்றும் முகவரிக்கும் சான்றாக கொடுக்க முடியாது. ஆதார் காட்டை முகவரிக்கு சான்றாக பயன்படுத்தினால், பிறந்த தேதிக்கு வேறு ஆவணம் கொடுக்க வேண்டும்

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை :

பாஸ்போர்ட் https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

1. https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் e-mail முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்
2. பதிவு செய்த user name , password மூலம் பாஸ்போர்ட் இணையதளத்தில்  Log in செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தயாராகுங்கள்
3. தொடர்ந்து பல பக்கங்களில் உங்களின் விபரங்களை கொடுக்க வேண்டும்
4. கூடுதலாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, உங்கள் தாய், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி
5. உங்கள் தெருவில் உள்ள இரண்டு நபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்
6. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்ப கட்டணம் ரூ.1500 ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்
7. பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில்  அப்பாய்ன்ட்மென்ட் (Appointment) தேதி, நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
8. குறிப்பிட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூன்று கட்ட நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்
9. பாஸ்போர்ட் அலுவலகத்தின் முதல் பிரிவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு புகைபடம் எடுக்கப்படும்
10. இரண்டாம் பிரிவில் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்
11. மூன்றாம் பிரிவில் உள்ள அரசு அதிகாரி சில கேள்விகள் கேட்பார்,  ஏன் பாஸ்போர்ட் எடுகின்றீர்கள் ? என்று கேட்டால், வெளிநாட்டில் வேலை, அல்லது வெளிநாட்டில் உள்ள உறவினரை சந்திக்க அல்லது ஹஜ், உம்ரா என ஏதாவது ஒரு தகுந்த காரணங்களை சொல்லவும்
12. இதன் பின்னர் சில நாள்களில் காவல்துறையினர் வீட்டிற்க்கு வந்து விசாரிப்பார்கள் (police verification)
13. அதன் பின்னர் தபாலில் (Post) பாஸ்போர்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

அனைத்தும் சரியாக இருந்தால் மொத்தமாக 3 அல்லது 5 வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கூடுதல் விளக்கம் தேவைபட்டாலோ, விண்ணப்பிப்பதில் பிரச்சனைகள் இருந்தாலோ எனது  பேஸ்புக் பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிகின்றேன்

https://www.facebook.com/siddique.mtech/posts/1147988965402382

ஆக்கம் : S.சித்தீக் M.Tech