https://convertlive.com/u/convert/hectares/to/square-feet
Land Measurements calculator
https://convertlive.com/u/convert/hectares/to/square-feet
Land Measurements calculator
வில்லங்கச் சான்றிதழில் EC (Encumbrance Certificate) என்றால் என்ன? அதில் புரியாதவை கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்ன இருக்கின்றன?
நாம் வீடு, நிலம் வாங்கும்போது அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நம்பிக்கையின் அடிப்படையிலும் முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையிலும் பலர் சொத்துகளை வாங்கிவிடுகிறார்கள். அந்தச் சொத்துகள் மீதுள்ள பிரச்சினை பிறகுதான் நமக்குத் தெரியவரும். அப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்போம். முறையான ஆவணங்கள் இல்லாமல் நாம் புகார்கூடக் கொடுக்க முடியாது.
இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே சட்ட ரீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வாங்குவது. நாம் வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.
வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்
நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
நாம் கண்டுபிடிக்க முடியாதவை?????
ஆனால் 2009ஆம் ஆண்டு நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகியது. அதனால் அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது.
பவர் ஆஃப் அட்டர்னி
பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்தப் பவர் ஆஃப் அட்டர்னியை வைத்துதான் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால் இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது 2009 நவம்பரில்தான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது என்பதால் உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் வெறும் பவர் ஆஃப் அட்டானியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.
வில்லங்கச் சான்றிதழ் பெறும் முறை
நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்தச் சேவை எந்த ஊர்களுக்கு இருக்கிறது என்ற விவரமும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்தில் போய் முடியலாம்.இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் like &share செய்யுங்கள் நண்பர்களே மற்றவர்களும் அறியட்டும் நன்றி சட்டபுத்தக நிறுவனர் C.பிரகதீஷ் BA.LLB
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
**********************************************************************
https://m.facebook.com/story.php?story_fbid=1626865627611087&id=1565094460454871
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
மேலும் விவரம் வேண்டுபவர்களுக்கு இந்த கீழ்கண்ட தமிழ்நாடு அரசின் இணையதம் தொடர்பு கொடுத்திருக்கிறேன் ... அணைத்து தகவல்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு கிடைக்கும்..
http://www.tn.gov.in/ta/documents/deptname
யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பிற பங்காளிகள் பெயர் கூட்டுபட்டாவில் இல்லை!
பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது ?
UDR க்கு முன்பே எங்களிடம் பட்டா இருக்கிறது ஆனால் எங்கள் பெயர் ஏறவில்லை !
இடத்தின் பரப்பளவு கூடுதலாக / குறைவாக UDR ல் உள்ளது.?
சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது.
கௌநிலத்தின் வகை புஞ்சையிலிருந்து நஞ்சை ஆகிவிட்டது, புன்செய் கிராம நத்தம் ஆகிவிட்டது, அதே போல் நன்செய் – புன்செய் ஆகிவிட்டது. நத்தம் புன்செய் ஆகிவிட்டது போன்ற தவறுகள்.
கிராம நத்த சர்வேயின் போது எங்கள் இடத்தை அனாதீனம் ஆக்கி விட்டனர் , புறம்போக்கு என்று வகைபடுத்திவிட்டனர்.
கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர்.
கிராம நத்த நிலத்தில் பத்திரத்தில் 10சென்ட் இருக்கிறது, ஆனால் தோரயபட்டா 5 சென்ட் தான் கொடுத்து இருகிறார்கள்.
கிராம நத்த ஆவணங்களில் கூட்டு பட்டாவில் என்னுடைய பங்காளிகள் பெயர் இருக்கிறது. என் பெயர் இல்லை.
கிராம நத்தம் / புன்செய்யாக மாற்றிவிட்டனர். – UDR க்கு மாற்றி விட்டார்கள்.
கிராம நத்த FMB யில் அளவுகள் தவறு, உட்பிரிவு எண்கள் தவறு.
கிராம நத்த FMB யில் புதிதாக வழி ஏற்படுத்தி விட்டார்கள், (அல்லது) வழியை எடுத்துவிட்டார்கள்.
UDR FMB யில் சர்வே எண் & உட்பிரிவு தவறுதலாக உள்ளது.
UDR – FMB யில் உள்ள பரப்பு அளவுகள், A.பதிவேட்டுடன் ஒத்து போகவில்லை.
FMB யில் குளம் , குட்டை, கிணறு, சின்னங்கள், தவறுதலாக மார்க் செய்யப்பட்டு இருக்கிறது.
இப்படி பல பிரச்சினைகளுக்கு இள தலைமுறையினர் வட்டாட்சியர் & மாவட்ட ஆட்சியர் அலுவலகம் படையெடுத்து வருகின்றனர் .
சென்ற தலைமுறை வரை நிலத்தின் விலை இவ்வளவு ஏறவில்லை. இடத்தின் விலை கூட கூட மக்களின் பேராசையும் கூடிவிட்டது. தற்போது இடம் வைத்து இருப்பவர் ஏதாவது சட்ட ஓட்டை தனது சொத்தில் வைத்து இருந்தால் அதனை எப்படி பயன்படுத்தி பணம் பார்ப்பது என்ற சிந்தனை.மேலும் பட்டா , பத்திரபதிவு, ஆன்லைன் என ஆவண நடைமுறைகள் இறுக்கப்பட்டு கொண்டேவருவதால் பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்ற முடியவில்லை! கடன் கிடைக்க வில்லை, வீடுகட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால், வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி படையெடுத்து சரி செய்ய முயலுகிறார்கள்.
UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று என் கள அலுவலகத்தில் கூறுகிறேன். நிச்சயம் இளைய தலைமுறையினர் பயன் பெறுவர்.
மேலே சொன்ன எல்லா சிக்கல்களும் , தீர்வு கிடைக்க செய்ய வேண்டியவை
1. முதலில் உங்களுக்கு என்ன வகையான சிக்கல் என்பதை தெளிவாக புரிந்து கொள வேண்டும். தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினையை தெரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்து விடுகிறது.
2. அதற்கு தங்கள் தரப்புக்கு ஆதரவான , உறுதுணையாக இருக்க கூடிய கிரைய பத்திரங்கள், மேனுவல் & கம்ப்யூட்டர் EC க்கள் , பழைய பட்டா, புதிய பட்டா, அ- பதிவேடு, FMB மற்றும் இதர ஆவணங்களை ஆகியவற்றை தேடி எடுத்து மேற்படி ஆவணங்கள் நம் கோரிக்கைக்கு துணை போகின்றனவா என்று ஆராய்தல் வேண்டும்.
3. நம் பிரச்சினை என்னவோ அதனை அரசு தரப்பு நிர்வாக பார்வையில் இருந்து மனு எழுதுதல் வேண்டும். பெரும்பாலும் பலர் தங்கள் கோணத்தில் இருந்து எழுதுகின்றனர். சிலர் புரியும்படி எழுதுவதில்லை,சிலர் படிக்கமுடியாத படிக்கு பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்.சிலர் கூறியது கூறல் , சிலர்ஆதாரமற்ற சந்தேகங்களை புகார்களாக வைக்கின்றனர் இதனால் குழப்பங்களும், நேர விரயங்களும் தான் நடக்கிறது.
4. மனுவில் இருக்கும் DRAFT மிக மிக முக்கியமானது. அவை மிக தெளிவாகவும், குழப்பம் இல்லாமலும் உயர் அதிகாரிகள் நிமிட நேரங்களில் புரிந்து கொள்ள கூடிய வகையில் சுருக்கமாக தெளிவாக மனு எழுதப்பட வேண்டும்
5. மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைத்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு பதிவு தபால் அனுப்ப வேண்டும். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து அத்தாட்சி பெற வேண்டும். உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் அத்தாட்சி கொடுக்கும் படி கேட்டுகொள்கிறேன் என்று மனுவில் எழுதி இருக்க வேண்டும்.
6. மனுவை பெரும்பாலும் நேரில் கொடுப்பதை விட பதிவு தபாலில் அனுப்பி வைத்துவிட்டு போஸ்டல் அக்னாலஜிமென்ட் பெறுவதே நமக்கும், அரசு எந்திரத்திறக்கும் உள்ள எளிமையான வழி .
7. பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன் DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் என் மனு வந்தாயிற்றா? அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு உரிய டேபிளுக்கு நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.
8. மேற்படி மனு வட்டாசியருக்கு DRO அலுவலகத்தில் இருந்து FORWARD செய்யப்படும் , அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை உங்கள் பெட்டிசன் எண் ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட டேபிளுக்கு நகர்ந்து விட்டதா என பார்த்துவிட்டு தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.
9. மேற்படி பெட்டிசன் வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.
10. மேற்படி VAO ஆய்வறிக்கை மற்றும் மனு RI க்கு மீண்டும் ரிவர்ஸ் ஆகும். அவரை பின் தொடர்ந்தால் அம்மனு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும்.அங்கே பட்டா மேல் முறையீடுகள் டேபிளில் நமது பைல் சென்று விட்டதா என உறுதி செய்யப்பட வேண்டும்.
11. UDR விஷயங்கள் , பட்டா மேல் முறையீடு டேபிளுக்கும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.
12. அழைப்பாணையில் குறிப்பிட்டு இருக்கும் தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.
13. எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும்.
14. அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
15. மேற்படி வேலைகளுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவைபட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , சென்னை நில அளவை துறை, நில நிர்வாக துறை போன்ற இடங்களில் ஆவண காப்பகங்களிலும் தேடுதல் நடத்தி ஆவணங்கள் பெற்று RDO கோர்ட்டில் வழக்குகள் நடத்தி வெற்றிபெற வேண்டும்.
16. மனு கொடுத்து விட்டோம், நிச்சயம் அரசு வேலையை முடித்துவிடும் என்று வேறு வேலை பார்க்க கிளம்ப கூடாது. தொடர்ச்சியான பின் தொடர்தல் இருந்தால் தான் மேற்படி மனு , அரசு எந்திரத்தின் ஒவ்வொரு டேபிளுக்கும் நகரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
17. அரசு எந்திரம் PROACTIVE ஆக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நாம் தான் PROACTIVE ஆகவும் , GO-GETTER ஆகவும் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உரிய மரியாதையும், நட்பினையும் வெளிபடுத்த தவறாதீர்கள்.
18. அரசு அதிகாரிகளிடம் எரிச்சல்படுதல், சண்டையிடுதல், லஞ்சம்/ஆதாயம் பெறுகிறார் என பழித்தல், சாதியுணர்வை காட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் எதிர்மறை விளைவுகள் தான் நிச்சயம் வரும்.
19. அரசு எந்திரத்தின் கும்பகர்ண உறக்கத்தை , அதிகபடியான தாமததையோ, நாம் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்து பேசுவதும், அதிகாரங்களை பயன்படுத்துவதும், நல்விளைவை ஏற்படுத்தாது. பல பெட்டிஷன்கள் மனிதர்களை கையாள தெரியாமல் தான் நகராமல் இருக்கிறது.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!
#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா #சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே #ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய் #பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்