Tuesday, May 15, 2018

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?

எந்த படிப்பை படிப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என மாணவர்களும், பெற்றோர்களும்  ஆலோசனை கேட்கும் காலம் இது. கல்வி நிறுவனங்களோ "உயர்தர கல்வி, உடனடி வேலைவாய்ப்பு" என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு  விளம்பரங்கள் செய்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.

என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கான எளிதான விடை, எந்த படிப்பையும் எங்கு படித்தாலும் கவனமாக, சிறப்பாக படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். படிப்பில் கவனமில்லாமல் கோட்டைவிட்டால் வேலைவாய்ப்பு என்பது சிரமமே. கல்வி அறிவை வளர்ப்பதற்க்கும், சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்க்கும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் படிக்கும் படிப்பு மட்டுமோ, அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமோ நமக்கு வேலை வாங்கி தருவதில்லை, மாணவரின் திறமை , அறிவு, ஆற்றல், ஆங்கில மொழி தொடர்பு திறன் ஆகியவைதான் வேலை வாய்ப்பை பெறுவதற்க்கான பிரதான காரணிகளாக இருகின்றன.

அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டி (Competition) அதிகமாக இருக்கும், போட்டி (Competition) குறைவாக இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாக இருகும். எனவே எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்க்கான தீர்வு எதை படிப்பதாக இருந்தாலும் சிறப்பாக படிப்பதே.

என்ன படிக்கலாம் ?

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது எல்லோரும் சொல்லும் அறிவுறை இதற்க்கான காரணம் என்ன வென்றால்
விருப்பமில்லாத படிப்பை படிக்க மாணவர்களை நிர்பந்தித்தால் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் கல்வியில் பின்தங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

விரும்பிய படிப்பை படிகும்போது ஆர்வம் இருக்கும்,  கவனம் இருக்கும், மாணவர்கள் பெற்றோர்கள் மீது பழி போட முடியாது, அவசியம் ஏற்படும் போது மாணவர்களே கடினமாக உழைத்து படிப்பார்கள்.
மிக முக்கியமாக மாணவர்களுக்கு ஆர்வமிருக்கின்றது என்பதற்க்காக பயனற்ற படிப்பை படிக்க அனுமதிக்ககூடாது.
'இறைவா உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.''(முஸ்லிம் 5266) என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு மார்க்கத்திற்க்கு முரணில்லாததாக இருக்க வேண்டும். சினிமா துறை, வங்கி (வட்டி) துறை போன்ற  படிப்புகளை தவிர்த்துவிடுங்கள்.
சில மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், விளையாட்டு சம்மந்தமாக நிறைய படிப்புகள் இருக்கின்றன, இவை அனைத்தும்  மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு உதவாது. எனவே விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதில் பயனளிக்கும் படிப்புகளாக  தேர்வு செய்து படிக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்குவது எப்படி ?

நன்றாக படித்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை அறிந்த நாம் அதை எவ்வாறு சாதிப்பது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் எதற்க்காக படிக்கின்றோம், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.

பிரார்த்தனை : சிறந்த கல்வியையும் , நல்ல வேலை வாய்ப்பையும் அடைய அல்லாஹ்விடம் பிரார்திக்க வேண்டும்,

"......என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!": (குர்ஆன் 20 : 114)
"என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……" (குர்ஆன் 28 : 24)

நமது உறுதியான  பிராத்தனையின் மூலம் இறைவன் நமது இலக்கை அடைவதற்க்கான வழியை எளிதாக்க கூடும்.

நம்பிக்கை : நன்றாக படித்து வாழ்வில் முன்னேற எவ்வளவுதான் தடைகள் வந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருகின்றான், நிச்சயம் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் , கடினமான பாடத்தை எளிதாக்கி அல்லாஹ் கற்று தருவான் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். நாம் படிக்கும் பாடங்களை பார்த்தோ, நுழைவு தேர்வுகளை பார்த்தோ பயந்து ஒதுங்கி விட கூடாது, முடியாது, இயலாது என நம்பிக்கை இழந்து விட கூடாது, பேரறிவாளனாகிய அல்லாஹ் நமக்கு அறிவை வழங்குவான் என்ற நம்மையுடன் தொடர்ந்து முயற்சி செய்து படிக்க வேண்டும்.

".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது" (குர்ஆன் : 30: 47)

யாராலும் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாது, எனவே படிப்பில் தோல்விகள் வரலாம், அதற்காக கவலைபட்டு முடங்கிவிட கூடாது. தொடர்ந்து முயற்ச்சி செய்ய வேண்டும், இறைவன் நமது நன்மைக்குதான் தற்காலிக தோல்வியை கொடுத்திருப்பான், இறைவன் நாடினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் கல்வி பாதையை நோக்கி நடைபோட வேண்டும்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். (குர்ஆன் 3:139)

கடின உழைப்பு : வீண் விளையாடுட்களிலும், வீண் பேச்சுகளிலும் நேரத்தை விரயமாக்காமல் படிப்பிற்க்கு அதிக நேரம் செலவிடுங்கள். புரியாத பாடங்களை பலமுறை படியுங்கள், எழுதி பாருங்கள், ஆசிரியர்களிடம் கேளுங்கள்,  நண்பர்களிடம் கேளுங்கள் (கல்வி கற்க வெட் கப்படாதீர்கள்). இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தியாகங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடையாது. எனவே உங்கள் நேரத்தை கல்வி கற்ற தியாகம் செய்யுங்கள்,

ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொருப்புகள் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி 893). மாணவர்களாகிய உங்களுக்கு இறைவன் வழங்கிய பொருப்பு கல்வி கற்பது, அல்லாஹ்விற்க்கு அஞ்சி உங்களுக்கு வழங்கப்பட்ட பொருப்பை சரிவர நிறைவேற்ற நன்றாக படியுங்கள்.

எங்கு படிக்கலாம் ?

உங்கள் மதிப்பெண்ணிற்க்கு எங்கு படிக்க இடம் கிடைக்குமோ அங்கு சேர்ந்து படியுங்கள், பல்லாயிரக்கணக்கான , பல லட்ச கணக்கான ரூபாய்களை கொடுத்து தேடி சென்று எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது, 
நாம் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் குறைந்த செலவில்  படிக்க இடம் கிடைக்கும், மதிப்பெண் குறைவாக எடுத்தால் தரமில்லாத கல்லூரியில் இடம் கிடைக்கும். எவ்வளவு மோசமான கல்வி நிறுவனத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், கடினமாக உழைக்க தயாராக இருந்தால் நல்ல கல்வியை பெற முடியும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.

பெற்றோர்களுக்கு :   லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கேட்கும் கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ சக்திக்கு மீறி சிரமபட வேண்டாம். வருடத்திற்க்கு 15 ஆயிரம் செலவு செய்து படிக்கும் எவ்வளவோ சிறந்த படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. இப்படிபட்ட படிப்புகளை படித்து மாதம் பல்லாயிரகணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் எண்ணற்ற இளைஞர்கள் இருக்கின்றார்கள்.

இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கி இருந்தால் லட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கலாம். பொருளாதாரம் குறைவாக இருந்தால் வசதிக்கு ஏற்றவாறு படிக்க வையுங்கள்.

படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

1. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை தேர்ந்தெடுங்கள், அல்லது மாணவர்களுக்கு சிறந்த படிப்பை பற்றி ஆர்வமூட்டுங்கள்.

2. இஸ்லாம் தடை செய்த படிப்புகளையும், பயனற்ற படிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள்.

3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த கல்வி கட்டணம் உள்ள படிப்பை தேர்ந்தெடுங்கள்.

4. எந்த நோக்கத்திற்க்காக படிக்கின்றோம் என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள். கல்வி அறிவை வளர்த்து கொள்ள, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற, அல்லது மத்திய, மாநில அரசு பணியில் சேர, அல்லது வெளி நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க, அல்லது மார்க்கம் மற்றும் சமூக பணியாற்ற என நமது இலக்கை தீர்மானித்து அதற்க்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுங்கள்.

5. எந்த கல்வி நிறுவனதில்  சேர முடிவு செய்துள்ளீர்களோ அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் சீனியர் மாணவர்களிடம் கல்வி நிறுவனத்தை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக மாணவர்களுக்கு : நாம் சில படிப்பை படிக்க  விருப்பபடலாம், அல்லது குறிபிட்ட கல்லூரியில் படிக்க வேண்டும் என விரும்பலாம், நமது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது நாம் எடுத்த மதிப்பெண் காரணமாகவோ அது இயலாமல் போகலாம். அதற்க்காக கவலைபட்டு நமக்கு கிடைத்த படிப்பை சரியான முறையில் படிக்காமல் விட்டுவிட கூடாது, நமக்கு எந்த படிப்பு, எந்த கல்லூரியில் கிடைததோ அதையே இறைவன் நமக்கு நாடியுள்ளான் என்பதை உணர்ந்து, கிடைத்த படிப்பை சிறந்து படித்தால் நிச்சியம் வாழ்கையில் சிறந்த நிலை அடையலாம் (இறைவன் நாடினால்).

“..... ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (குர்ஆன் 2:216)

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA , M.Arch படிக்க TANCET நுழைவு தேர்வு

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA , M.Arch படிக்க TANCET நுழைவு தேர்வு

பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடன் உயர் கல்வி கற்ற விருப்பபடுவார்கள். இதற்க்கு கல்வி கட்டணம் லட்ச கணக்கில் இருக்கும். குறைந்த செலவில் உயர்கல்வி கற்ற தமிழக அரசு TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழகங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் இந்த TANCET தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம். கல்லூரிக்கு ஏற்றார் போல் வருடத்திற்க்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கல்வி கட்டணம் இருக்கும்

TANCET தேர்வை பற்றிய விபரங்கள்:

இது 2 மணி நேரம் நடக்கும் தேர்வு , இந்த தேர்வு 3 பகுதிகளை கொண்டது, முதல் பகுதி கணிதம், இரண்டாம் பகுதி அடிப்படை பொறியில் மற்றும் அறிவியல்,  மூன்றாம் பகுதி இளநிலை படிப்பில் மாணவர் தேர்ந்தெடுத்த சிறப்பு பாட பிரிவு

M.E/M.Tech படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc….) படித்தவர்கள். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு (any degree) படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MCA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 – ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தற்போது அண்ணா பல்கலை கழகத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/tancet2018/index.html TANCET தேர்விற்க்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 23-ஆம் தேதி ஆகும், விண்ணப்ப கட்டணம் ரூ.500.

தேர்வுகள் கீழ் காணும் தேதிகளில் நடைபெறும்

MCA Admission :   மே 19-ஆம் தேதி (காலை)
MBA Admission :  மே 19-ஆம் தேதி (மாலை)
M.E/M.Tech/.Arch/M.Plan  Admission  :  மே 20-ஆம் தேதி (காலை)

TANCET தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்  அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.

பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?
எந்த பிரிவில் சேரலாம் ?

பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்ப படிப்பாக பொறியியல் (Engineering) படிப்புகள் இருப்பதற்க்கு காரணம் இதில் கிடைக்கும் அதிக ஊதியம், வெளி நாட்டில் வேலை , கைநிறைய  சம்பளம் என மாணவர்களை கவரும் பெரும்பாலான அம்சங்கள் உள்ளதால்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்ப தேர்வாக பொறியியல் படிப்புகள் உள்ளன.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்க்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை தமிழகத்தில் உயரவில்லை. எனவே வேலை வாய்ப்பை பொருத்தவரை போட்டி கடுமையாக இருக்கும். வெறும் பொறியியல் படிப்பதால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது, அதற்க்கு கீழ் கானும் திறன்கள் இருக்க வேண்டும் அல்லது வளர்த்துகொள்ள வேண்டும்.

பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பகுப்பாய்வு (Analytical skill)  போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால் நல்ல ஆங்கில மொழி திறமை (English Language skill), தொடர்பு திறன் (communication skill), தொழில் நுட்ப அறிவு (Technical knowledge or subject knowledge) ஆகிய திறன்கள் இருக்க வேண்டும்  அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேரலாமா ?

வெரும் டிகிரி வாங்குவதற்க்காக படிப்பவர்கள் கண்டிப்பாக பொறியியல் சேர வேண்டாம். தற்போது போட்டி மிக கடுமையாக உள்ளது. பொறியியல் படிப்பது தான் வாழ்வின் குறிக்கோள் என ஆர்வம்  உள்ள மாணவர்கள் மட்டும் சேரலாம். பொறியியல் படிப்பிற்க்கு எதிர்காலம் இல்லை என்பதெல்லாம் பொய்யான வாதம் தான், திறனுள்ள மாணவர்களுக்கு என்றைக்கும் வேலைவாய்ப்பு காத்துகொண்டு இருகின்றது என்பதுதான் உண்மை.

பொறியியலில் எந்த பாட பிரிவில் சேரலாம் ?

தகவல் தொழில் நுட்பம் , Automation, Machine learning, Artificial Intelligence போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே Electronics and communication (ECE), Computer science, Electronics and Electricals (EEE) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
பெரிய அளவில் வளராவிட்டாலும் தொய்வடையாத துறைகளான Mechanical, Civil, Production, Automobile போன்ற துறைகளையும் தேர்தெடுத்து படிக்கலாம். மேற்கண்ட பாடபிரிவுகளை படித்தாலும் மட்டும் போதாது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொண்டு இந்த பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால்  எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பொறியிலில் சிறப்பு பிரிவுகள் :

பொறியியல் படிப்பில் Aeronautical Engineering, Nano Science and Technology, Bio-Technology, Petroleum Engineering and Technology, Bio Medical Engineering, Food Technology, Textile Technology போன்ற சிறப்பு பிரிவுகள் பயிற்று விக்கப்படுகின்றன. சிறப்பு படிப்புகள் படிக்க ஆர்வம் இருந்தால் நல்ல மதிப்பெண் (above 190 cut off) எடுத்து அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லுரிகள், PSG போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கலாம், நன்றாக படித்தால் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது  அல்லாமல் சாதாரண கல்லூரிகளில்  சிறப்பு பிரிவுகளை எடுத்து படித்தால் பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைக்காது.

உடனடி வேலைவாய்ப்பை மைய்யபடுத்தாமல்  தொழில் நுட்பத்தை  அறிந்து கொள்வதற்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிப்பதற்க்கும் இவை ஏற்ற படிப்புகள்.  மேற்படிப்பிற்க்கு பிறகு ஆய்வு துறைகளில் அல்லது படித்தற்க்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே சிறப்பு பாட பிரிவு எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும், உடனடி வேலை வாய்ப்புதான் விருப்பம் என்றால் சிறப்பு பிரிவுகளை எடுக்க வேண்டாம். மேற்படிப்பு படிக்க விருப்பமும், கூடுதல் பொருளாதாரம் செலவு செய்ய வசதியும் இருந்தால் இப்படி பட்ட சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம், இல்லை என்றால் இவற்றை தவிப்பதே நல்லது.

எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

நல்ல கல்லூரிகள்  என்பது  சிறந்த பயிற்றுவிக்கும் முறை, தகுதிமிக்க ஆசிரியர்கள், கேம்ப்பஸ் இன்டெட்வியூ ஆகிய அம்சங்களை கொண்ட தாகும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன் கல்லூரிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட அம்சங்கள் சிறந்த முறையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ளலாம்.

பொதுவாக அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள். ஆனால் இங்கெல்லாம் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக கட்ஆஃப் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் கல்லூரியை நாம் தேர்வு செய்வதில்லை, நாம் எடுக்கும் மதிப்பெண்ணே தேர்வு செய்கின்றது.  எனவே கூடுதல் மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள், அல்லது நாம் எடுக்கும் மதிப்பெண்ணிற்க்கு ஏற்ற கல்லூரியில் சேர்ந்து நன்றாக படியுங்கள். 

பொறியியல் (Engineering) படிக்க ஆகும் செலவு :

அரசு கல்லூரிகளை தவிர்த்து தனியார் கல்லூரிகளில் படிக்க வருடத்திற்க்கு ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை செலவாகும், ஹாஸ்டலில் தங்கிபடிப்பதாக இருந்தால் கூடுதலாக ஆண்டிற்க்கு ரூ.50,000 வரை  ஆகும். எனவே பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோற்கள் இந்த பொருளாதார செலவையும் கணக்கில் கொள்ளவேண்டும். அரசு கவுன்சிலின் மூலமே கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், தனியார் கல்லூரிகளில் நன்கொடை (donation) கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சேர்வதை தவிர்க்கலாம்.

மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் பொறியியல் படிக்கலாமா ?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது குறைவான மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது கல்லூரியில் ECE பிரிவே கிடைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என்ற உறுதியும், ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறனை (communication skill) வளர்த்து கொள்ள ஆர்வமும் இருந்தால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம், நான் சுமாராகத்தான் படிப்பேன் வருங்காலத்திம் இப்படிதான் இருப்பேன் என  நினைக்கும்  மாணவர்கள் பொறியியல் படிப்பை தவிற்க்கலாம்.

வேறு என்ன வழிகளில் பொறியியல் படிக்க முடியும் ?

+ 2 முடித்த பிறகு , B.Sc கணிதம் (Mathematics), B.Sc  இயற்பியல் (Physics), B.Sc வேதியியல் (Chemistry)  3 வருடம் படித்து , அதன் பிறகு M.Sc கணிதம் (Mathematics), M.Sc  இயற்பியல் (Physics), M.Sc வேதியியல் (Chemistry)  2 வருடம் படித்து GATE அல்லது  TANCET தேர்வு எழுதி தேர்சி பெற்று முதுகலை பொறியியல் படிப்பான M.E / M.Tech படிக்கலாம். அதன் பிறகு பொறியியல் துறையில் வேலைக்கு சேரலாம். இந்த முறையில் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் தான் செலவாகும். ஆனால் கால அளவு அதிகமாக இருக்கும். B.Sc, M.Sc பிறகு M.E/M.Tech படித்து முடிக்க மொத்தம் 7 வருடம் ஆகும்.

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள 10-ஆம் வகுப்பு , 11-ஆம் வகுப்பு மாணவர்களே !

பொறியியல் படிக்க ஆர்வம் இருந்தால் முதலில் JEE எனப்படும் மத்திய அரசு நடத்தும் பொறியியல் நுழைவு தேர்வுவை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து IISc/IIT/NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்ததாக +2 -ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பாடத்தில் 190 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க முயற்ச்சி செய்யுங்கள், நேரத்தை வீணாக்காமல் இப்போதே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)

I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
மேல் நிலை படிப்பில் சேரும் முன் மாணவர்கள் அவர்களின் இலக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் அறிவியல் (pure science) பிரிவில் சேர்ந்தால் +2 விற்க்கு பிறகு பொறியியல் படிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் படிக்க நினைக்கும் துறையை தீர்மானித்துவிட்டு அதற்க்கு ஏற்றார் போல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவுகள் வாரியான துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேற் படிப்பு படிக்கலாம். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தால் இந்த First Group -பை எடுக்கலாம், ஏனெனில் பெரும்பாலான படிப்புகளுக்கு தகுதியாக இந்த பிரிவு இருக்கும், நீங்கள் விரும்பும் பட்ட படிப்பு படிக்க இந்த பிரிவு உதவியாக இருக்கும்.

அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவு, எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த பிரிவு கிடைக்காவிட்டால், இந்த பிரிவு கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவுகளில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : pure science என சொல்லப்படும்  இந்த பிரிவு மூலம் மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு.

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, பொருளாதார, கணக்கியல் துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கான படிப்புகள் படிக்க ஏற்ற பிரிவு.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A, சட்ட படிப்பு, மேலாண்மை படிப்பு போன்ற படிப்புகள் படிக்கலாம். மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்க்கான தேர்வுகள் எழுதி வெற்றி பெற ஆர்வம் இருந்தால் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில மொழி திறனை வளர்த்துகொண்டால் அலுவலக  வேலை வாய்ப்பு பெற முடியும்.

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, Vocational குரூபில் உள்ள குறிபிட்ட சில பிரிவுகள் மூலம்  பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதை விருப்ப பிரிவாக எடுத்துகொள்ளாதீர்கள், வேறு பிரிவு கிடைக்கவில்லை என்றால் இதில் சேருங்கள்.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. 

தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil, plastic engineering etc… போன்ற துறைகள் பல்வேறு துறைகள் உள்ளன. டிப்ளோமா படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable). 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் (B.E) படிக்கவும், 10- ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்க வேண்டாம்.

டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்து கொண்டு பகுதி நேர படிப்பாக பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.
பெரும்பாலான மருத்துவ துறை டிப்ளோமா படிப்புகள் +2 விற்க்கு பிறகே படிக்க இயலும். +2 விற்க்கு பிறகு டிப்ளோமா படிப்பு 2 ஆண்டுகள்.

III. சான்றிதழ் படிப்பு (Certificate courses):

மாணவர்களை பட்ட படிப்புவரை படிக்கவைய்யுங்கள். இது போன்ற சான்றிதழ் படிப்புகளில் சேர்த்து அவர்களின் படிப்பை நிருத்திவிடாதீர்கள். ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள்  இதை தேர்ந்தெடுக்கலாம். இது ஓராண்டு படிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ITI-களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சில தொழில் நுட்ப படிப்புகள் : Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker, Machine Operator (Plastics Recycling), Jewellery And Precious Metal Worker, Fitter, Turner, Machinist, Electrician, Welder etc… 

இன்னும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு

(கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. குறுகிய கால தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழக அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் (society college) மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.