Showing posts with label Career. Show all posts
Showing posts with label Career. Show all posts

Friday, November 29, 2019

சட்டம் எங்கு படிக்கலாம்?

#சட்டம் #அறிவோம் 

#சட்டம் #படிக்க #ஆசையா. ..

சட்டம் எங்கு படிக்கலாம்? எதிர்காலம் ?
இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். 
(ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). 
தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. 
சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. 
சென்னை ஆர். ஏ புரம் அருகே உள்ளது. 
இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் இதற்கென நடக்கும் பிரத்யேகமான நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படியில் தான் அட்மிஷன் நடக்கிறது. 
ப்ளஸ் டூ மார்க் eligibility-க்கு மட்டும் தான் பயன் படுகிறது. 
இதுவும் மிக அதிகம் கிடையாது. 50 அல்லது 60 சதவீதம் இருந்தால் போதுமானது.

நுழைவு தேர்வு பொது அறிவு அதிகமாகவும், சட்ட அறிவு ஓரளவிற்கும் உள்ள கேள்விகளை உள்ளடக்கி உள்ளது. 
நுழைவு தேர்வுக்கு சில நல்ல coaching centreகள் இந்த கல்லூரிகள் உள்ள ஊர்களில் உள்ளன.

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. 
கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 5000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. 
இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . 
BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். 
தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். 
(இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. 
வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். 
BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

#வேலை #வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். 
இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. 
டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். 
சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். 
இது ஓரளவுக்கு உண்மை தான். 
முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. 
#உதாரணத்துக்கு #சில: 
AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். 
மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். 
இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். 
இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். 
துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். 
போக போக நிச்சயம் சம்பளம் கூடும். 
ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). 
இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

Tuesday, July 23, 2019

மத்திய /மாநில அரசு பணி

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES -  indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

*இந்த பதவிகளில் எல்லாம் வடநாட்டு காரர்களும் கேரளா காரர்களும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.*

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, June 19, 2019

விரும்பியதை படி !

உனக்கு விரும்பியதை படி !
                      -  ஆக்கம் : அபூ ஸலாம், காயல்பட்டினம் மாணவரணி

பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து கல்லூரியை தெரிவு செய்ய கூடிய கட்டத்தில் பல மாணவர்கள் யோசிக்கக்கூடிய கால கட்டம் இது.  பன் முனைகளிலிருந்தும் ஆலோசனைகள், அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.

எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது ?

பெற்றோர் சொல்வதையா ?

நண்பர்கள் சொல்வதையா ?

உறவினர்கள் சொல்வதையா ?

ஆசிரியர்கள் சொல்வதையா ?

என யாரை திருப்திக்கொள்ள வைப்பது என மாணவர்கள் சிந்துத்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், உண்மையில் இவர்கள் யாரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுரை வழங்கிய பலர் ஆறு மாதத்தில் அறியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

நாம் ஒன்றை தெரிவு செய்து படிக்கும் போது பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டும்.

ஏனென்றால் நாம் படிக்கும் இந்த படிப்பு தான் இறுதி வரை நமது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கப் போகிறது.

மற்றவர்கள் சொல்லை கேட்டு ஒன்றை படிப்பதை விட, நமக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது ? அந்த துறை மார்க்க வரம்புக்கு உட்பட்ட எந்த துறையாக இருந்தாலும் அதை நாம் தெரிவு செய்யலாம்.

ஆனாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அதன் பிறகு தெரிவு செய்வதே சிறந்ததாக இருக்கும்.

ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த துறையை பற்றியான விவரங்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.

ஒரு துறையில் நுழையும்  முன் தொலைநோக்கு பார்வை மிக அவசியம்.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு ஆட்கள் தேவை என்பதை உணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மலிந்து போன துறைகளை தேர்ந்தெடுத்துப் படித்தால் அதற்கு வேலை கிடைப்பது மிகக் கடினம்.

உதாரணமாக, பிளாஸ்டிக் இந்த பூமிக்கு கேடு என்பதால் உலகம் முழுவதும் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது. எனவே, நாம் துறையை சார்ந்த படிப்புகள் படிக்கும் போது எதிர்காலத்தில் வேலை என்பது கேள்விக்குரியாகிவிடும்.

அதனால், பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்கு மாற்று என்ன என்பதை கண்டறிந்து இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பத்தை கற்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

அன்புள்ள மாணவ, மாணவிகள் தங்களது துறையை பல முறை யோசித்து அந்த துறையில் தடம் பதித்த பலரை சந்தித்து ஆலசனைகளை பெற்ற பின்பே தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் !

நன்றி: உணர்வு

Friday, March 29, 2019

B.A. டிபென்ஸ்

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

பகிருங்கள்..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

Sunday, December 9, 2018