Saturday, January 24, 2026

ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2026: ஹால் டிக்கெட் முதல் ஆடை கட்டுப்பாடு


ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2026: ஹால் டிக்கெட் முதல் ஆடை கட்டுப்பாடு வரை - மாணவர்கள் கவனிக்க வேண்டிய முழுமையான வழிகாட்டி!

2026 ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்குச் (JEE Main exam) செல்லும் மாணவர்கள் அட்மிட் கார்டு, அடையாள அட்டை மற்றும் எளிய உடைகளுடன் செல்ல வேண்டும்; நீரிழிவு நோயாளிகளுக்குச் சில உணவுச் சலுகைகள் உண்டு, ஆனால் மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசியத் தேர்வு முகமை நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வு, ஜனவரி 21 முதல் 29-ஆம் தேதி வரையிலான நாட்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் வேளையில், தேர்வர்கள் எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை என்.டி.ஏ வெளியிட்டுள்ளது.

ஜனவரி 21 முதல் 24 வரை தாள்தேர்வு-1 (Paper 1) காலை மற்றும் மதியம் என இரு வேளைகளில் நடைபெறும். தேர்வின் இறுதி நாளான ஜனவரி 29 அன்று தாள்தேர்வு-2 (Paper 2) ஒரே ஷிப்ட்டாக காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.

தேர்வு மையத்திற்குச் செல்லும் மாணவர்கள், தங்களின் ஹால் டிக்கெட் எனப்படும் 'அட்மிட் கார்டு' நகலை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அதனுடன், விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதே புகைப்படத்தின் கூடுதல் பிரதிகள் மற்றும் அசல் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமாகும். 

ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டிச் செல்வதுடன், வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்குத் தனியாக ஒரு புகைப்படத்தையும் கையோடு கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக் சாதனங்கள், கைக்கடிகாரங்கள், மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள் அல்லது எந்தவிதமான காகிதக் குறிப்புகளுக்கும் அனுமதி கிடையாது. 

ஆடை விஷயத்தில் மாணவர்கள் மிக எளிமையான உடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக, உலோகத் தன்மையுள்ள மோதிரங்கள், வளையல்கள், காதணிகள் மற்றும் ஸ்கார்ஃப் அணிவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

காலணிகளைப் பொறுத்தவரை, தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகளை அணிய அனுமதி இல்லை.

உடல்நல பாதிப்பு, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள மாணவர்களுக்கு என்.டி.ஏ சில முக்கிய சலுகைகளை வழங்கியுள்ளது. அவர்கள் தேர்வு அறையினுள் சர்க்கரை மாத்திரைகள், பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை) மற்றும் வெளிப்படையான தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சாக்லேட்டுகள், சாண்ட்விச்கள் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தாள்தேர்வு-2 எழுதும் மாணவர்கள் தங்களின் சொந்த ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களைக் கொண்டு வரலாம். இருப்பினும், நீர் வண்ணங்களை (Watercolors) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிந்து அறையை விட்டு வெளியேறும்போது, மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என என்.டி.ஏ எச்சரித்துள்ளது. 

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாணவர்கள் 011-40759000 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

#JEE
#JEEMain2026

விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்


விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு  சேவை இயக்கம் மூலம் அனைத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

கட்டணமில்லா vvvsi.com வேலை  வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. இதன் மூலம், பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாகியுள்ளது.

இதுவரை, இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத்தந்துள்ளது என்பது, இந்த இயக்கத்தின் சேவை வீச்சையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்த சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் உயரிய நோக்குடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் வகையில், vvvsi.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் இன்று மதுரையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தை சமூக அக்கறையும் மனிதநேயப் பொறுப்பும் கொண்ட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொடங்கி வைத்து,

“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் குடும்பத்தின் எதிர்காலமே மாறுவது போன்றது. அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணமின்றி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தொடர்ந்து ஒரு உறுதியான பாலமாக இருந்து வருகிறது” என மனதார பாராட்டினார்.

மேலும், அந்த இயக்கத்தின் தலைவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது, இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை, இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் அவர்கள் முன்னின்று செய்திருந்தார்.

மனிதநேய சிந்தனையும், வள்ளலார் வழியிலான கருணை, சமத்துவம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட இந்த கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதள முயற்சி, இனி தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கையின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் ஆழ்ந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் என்னுடைய வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து ஃபாலோ செய்யவும். 

https://chat.whatsapp.com/Gafh7lnjPHXIAT1SEQJXkP

சூரியனிலிருந்து புறப்படும் ஒளி ஒவ்வொறு கிரகத்தையும் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?

சூரியனிலிருந்து புறப்படும் ஒளி ஒவ்வொறு கிரகத்தையும் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?

சூரியனில் இருந்து கிரகங்களுக்கு ஒளி பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பிரபஞ்சத்தின் மிக வேகமானது ஒளி. இது ஒரு வினாடிக்கு 300,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது - ஒளியை விட வேகமாக எதுவும் நகர முடியாது.
ஒரே ஒரு நொடியில், ஒளி பூமியை 7 முறைக்கு மேல் வட்டமிடும்! 🌍✨

இப்போது சூரிய மண்டலத்தின் வழியாக அதன் பயணத்தை பின்பற்றுவோம்:

🟤 மெர்குரி – ~3 நிமிடங்கள்
🟡 வீனஸ் – ~6 நிமிடங்கள்
🌍 பூமி – ~8 நிமிடங்கள்
🔴 செவ்வாய் - ~13 நிமிடங்கள்
🟠 வியாழன் – ~43 நிமிடங்கள்
🪐 சனி – ~1 மணி நேரம் 20 நிமிடங்கள்
🔵 யுரேனஸ் – ~2 மணிநேரம் 40 நிமிடங்கள்
🔷 நெப்டியூன் – ~4 மணி நேரம்

👉இதுக்கு அர்த்தம் சூரியனை பார்க்கும் போது 8 நிமிடத்திற்கு முன்பு இருந்த மாதிரி தெரிகிறது. வானியலில், நாங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்... மீண்டும் சரியான நேரத்தில். ⏳🌌

#SpaceFacts 

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு


எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

 எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

1. மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் (CMAT) எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

2. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

3. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு நாளை மறுதினம் (25-ம் தேதி) நடைபெறுகிறது.
மேலும் கண்டறிக
Education
Educational Resources
Primary & Secondary Schooling (K-12)

4. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அக். 17-ல் தொடங்கி நவ. 25-ம் தேதி முடிவடைந்தது.

5. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

6. தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுகளை https://cmat.nta.nic.in/ எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7. கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம்.

8. சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?


சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?

நம் கடந்தகால அறிவியலையும் இலக்கியங்களையும் கலாச்சாரத்தையும் எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்த வேண்டும். அது சுவடியியல் (Manuscriptology) மூலம் சாத்தியமாகும்.

தொல்லியல் துறையின் துணைப்பிரிவாகச் சுவடியியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓராண்டு சுவடியியல் கல்வி வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்குப் பிறகு சுவடிகளைப் பாதுகாத்தல், தமிழ்ச் சுவடிகளைக் கண்டறிந்து படியெடுத்தல், மொழிபெயர்த்தல், விளக்கம் கொடுத்தல், படியெடுத்ததை வெளியிடுதல், பதிப்பித்தல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சுவடியியல் படிப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் சுவடியியல் சான்றிதழ் படிப்பும் பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஓராண்டு பட்டயப் படிப்பு வழங்குவதுடன், தமிழ்நாடு அரசு மாதம்தோறும் இப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்குகிறது.

தேர்வு அடிப்படையில் தேர்ச்சிப் பெறும் 10 மாணவர்களுக்கு மட்டும் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்ப் படித்த மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இலக்கியப் படிப்பு முடித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவராகவும், 40 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சுவடிகளைப் பாதுகாத்து, பராமரித்து, வகைப்படுத்தும் பணிகளுக்காக அருங்காட்சியகத்திலும் நூலகங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுவடிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ய, கலாச்சார - தொல்லியல் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறையில் பக்தி நூல்கள், மூலிகை, சுவரோவியங்கள், சுவடிகளைப் பாதுகாக்கும் வேலைகளைப் பெறலாம்.

பதிப்புத் துறையில் சுவடிகளைப் புதிய நூல்களாகத் தொகுத்துப் பதிப்பிக்கலாம். ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் இலக்கியங்களை இணையத்தில் பதிவேற்றும் வேலைகளும், பழைய ஓலைச் சுவடிகளை ‘ஸ்கேன்‌’ செய்து டிஜிட்டல் நிரலாக மாற்றும் வேலைகளும் இருக்கின்றன.

சுவடிகளைப் பாதுகாத்து ஆய்வு செய்பவரை, சுவடியியல் வல்லுநர்கள் என்றழைக்கிறார்கள். சுவடியியல் படிப்பு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது. தமிழ் வளர்ச்சி, மருத்துவம், ஜோதிடம், வானியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை ஆழப்படுத்தவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை செய்கிறது.

- அ. பவித்ரா (பயிற்சி இதழாளர்)

படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள்


படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள்

எந்தப் பொருளிலுமே டிசைனிங் என்கிற வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டிசைனிங் என்றதும் ஃபேஷன் டிசைனிங் மட்டுமேயான துறை என்று கருதிவிடக் கூடாது. கம்ப்யூட்டரில் உள்ள சிப்பை வடிவமைப்பதற்குக்கூட சிப் டிசைனர்கள் தேவை. அழகிய கட்டிடங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்டுகளுக்கும் டிசைனிங் என்பது முக்கியமானது.

மோட்டார் வாகனங்கள் போன்ற தொழில்துறைகளிலும் டிசைனிங் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜின் வடிவமைப்பிலிருந்து அதன் வெளிப்புற வடிவமைப்பு வரை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால்தான் மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். எனவே, டிசைனிங் என்பது தவிர்க்க முடியாத முக்கியத் துறையாக உருவாகியுள்ளது.

நாட்டிலேயே டிசைன் படிப்புகளைப் படிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன். பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் இதன் விரிவாக்க மையங்கள் உள்ளன. மத்திய அரசின் வணிகம் - தொழில் துறை அமைச்சகத்தின் மூலம் நடந்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மையத்தில் டிசைன் துறையில் பி.டெஸ். என்கிற நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. அனிமேஷன் பிலிம் டிசைன், எக்ஸிபிஷன் டிசைன், பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்

ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மையங்களில் கம்யூனிகேஷன் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், டெக்ஸ்டைல் அண்ட் அப்பேரல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்.

முதல் இரண்டு செமஸ்டர்கள், அதாவது முதலாண்டில் டிசைனர் ஆவதற்கான அடிப்படைப் பயிற்சியும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்புப் பாடங்களில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். முதல் முறையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் முதல் ஆண்டின் முடிவில், அதாவது இரண்டு செமஸ்டர்களில் மாணவர்களின் திறமை அடிப்படையில், சிறப்புப் பாடங்களைத் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு (Design Aptitude Test) நடைபெறும். முதல் கட்டத் தேர்வு காகிதத்தில் விடை எழுதும் வகையில் இருக்கும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

சென்னை, பெங்களூரு, விஜயவாடா, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நிலைத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தகுதி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக, ஸ்டுடியோ சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட், இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகளை எழுத வேண்டியதிருக்கும். இதில் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 60 சதவீதமும் இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 40 சதவீதமும் என்கிற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

இதேபோல டிசைன் படிப்பு தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்க சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. மும்பையில் உள்ள ஐஐடியில் பி.டெஸ். படிப்பைப் படிக்கலாம். காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங் (IITDM) கல்வி நிறுவனத்தில் டிசைன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக். படிப்பு உள்ளது. அத்துடன், இன்டகிரேட்டட் புராடக்ட் டிசைன் பாடப்பிரிவில் எம்.டெஸ். படிப்பும் உள்ளது.

+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?


+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?

இன்ஜினிரிங் படித்தால் அவர்கள் படித்த துறையில் மட்டுமே வேலை கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பல லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலைக்காக போராட வேண்டிய சூழ்நிலையே மிஞ்சுகிறது. ஆனால், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை, அவர்கள் படிக்கும் துறை மட்டுமல்லாமல் எந்த துறையிலும் நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு.

அந்தவகையில், 12 ஆம் வகுப்பில் வணிகவியலை பாடமாக படித்தவர்கள் அடுத்த கட்டமாக டிகிரி, புரோபோஷனல் கோர்ஸ், இன்டெர்நேஷனல் கோர்ஸ் என மூன்று விதமான படிப்பு முறைகளை தேர்தேடுக்கலாம்.

இந்தவகையான படிப்புகள் குறித்து முழுமையாக பார்க்கலாம். 

டிகிரியை எடுத்து கொண்டோமானல், பிகாம், பிபிஏ, பிஏ எக்னாமிக்ஸ், எல்எல்பி உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன.

🔹 பி.காம்., (B.Com. - Bachelor of Commerce) படிக்க என்ன தகுதிகள் தேவை:

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்தவகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம்.

வேலை வாய்ப்பு:

பி.காம்., முடிக்கும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் வேலை வாய்ப்பை பெற முடியும். இதை முடிப்பதின் மூலம் எம்.காம்., படிக்க தகுதி பெறுவதோடு, வங்கி, வணிக வளாகங்கள், போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியலாம். ஆரம்பகட்ட ஊதியமாக 25,000 முதல் பெற முடியும்.

🔹 பி.பி.ஏ., (BBA - Bachelor  of Business Administration) படிக்க என்ன தகுதிகள் தேவை:

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ரூ.2-3 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும்.

மேலும் அடுத்த கட்டமாக எம்.பி.ஏ., எனும் உயர்கல்வி கற்க முடியும். இது நாம் தேர்ந்தேடுக்கும் பாடப்பிரிவைப் பொறுத்து ஒரு ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை பயிற்றுவிக்கப்படுகிறது.

இதை படித்து முடிப்பதின் மூலம் சொந்தமாக தொழில் தொடங்குவதோடு, பல்வேறு முண்ணனி நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு உண்டு. குறைந்த பட்சமாக 2-3 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். மேலும் இதைக்கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் முயற்சி செய்யலாம்.

🔹 இளங்கலை பொருளாதாரம்/ பி.ஏ.,(எக்னாமிக்ஸ்) படிக்க என்ன தகுதிகள் தேவை:

பி.ஏ., எக்னாமிக்ஸ் என்பது பேச்சு வழக்கில் பார்த்தால் மிகச்சாதரணமான படிப்பாக தெரிந்தாலும், நாட்டின் பொருளாதரத்தையே அலசி ஆராயும் படிப்பாகும்.

இதை முடிக்கும் பட்சத்தில் எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற மேற் படிப்புகளை படிக்க வழி செய்வதோடு, சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதலாம். ஊதியமாக ஆண்டுக்கு ரூ.2-3 லட்சம் வரை பெறலாம்.

🔹 எல்.எல்.பி., (LLB - Bachelor of Laws) படிக்க என்ன தகுதிகள் தேவை:

இதை படிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மூன்று ஆண்டு படிப்பான இதை முடிக்கும் பட்சத்தில் ரூ.5-6 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். லீகல் அட்வைசர், வழக்கறிஞர் போன்ற பணிகளோடு பல்வேறு முண்ணனி வணிக நிறுவனங்களிலும் பணியாற்றலாம்.

🔹 புரோபோஷனல் கோர்ஸ் எனும் தொழில்முறை படிப்புகள்:

வணிகவியலை படித்த மாணவர்களுக்கென சில சிறப்பு படிப்புகள் உள்ளன. அவை சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ்., இதைப்பயில 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

🔹 சி.ஏ. எனும் பட்டயக்கடக்காளர் (Chartered Accountancy (CA)):

12 ஆம் முடிக்கும் பட்சத்தில் நேரடியாக சி.ஏ., படிப்பின் நிலை ஒன்றில் நுழைந்து படிக்கலாம். டிகிரி முடித்திருந்தால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டாவது நிலையில் நுழையலாம். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 4.5 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 3.5 ஆண்டுகளும் படிக்க வேண்டும். இதை முடிக்கும் பட்சத்தில் ஊதியமாக ரூ.8-25 லட்சம் வரை பெறலாம்.

வேலை வாய்ப்பு: 

சி.ஏ., பட்டதாரிகளுக்கு சென்ற இடமெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்புதான். அரசு நிறுவனங்கள், சொந்த தொழில், வங்கி, வணிக நிறுவனங்கள் என எதில் வேண்டுமானலும் பணியாற்றலாம்.

🔹 சி.எம்.ஏ. எனும் Cost and Management Accountancy (CMA):

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம், டிகிரி முடித்தவர்களுக்கும் இதில் சேர்ந்து பயில முடியும். 3-4 வருட கால அளவை கொண்ட இந்த படிப்பை முடிக்கும் பட்சத்தில் ரூ.5 லட்சத்தில் இருந்து ஊதியமாக பெற முடியும்.

வேலை வாய்ப்பு: 

பினான்ஸ் மேனேஜர், பினான்ஷியல் அனலைசிஸ்ட், பினான்ஷியல் ரிஸ்க் மேனேஜர், பினான்ஷியல் கன்ரோலர், காஸ்ட் கன்ரோலர், காஸ்ட் அக்கெளண்ட் போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

🔹 சி.எஸ். - கம்பெனி செக்ரடரிசிப் (Company secretary (CS)):

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம், டிகிரி முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயிலலாம். விதிமுறைகள் உண்டு. இதற்கான கால அளவு 3 ஆண்டு, சில பயிற்சி முறைகள் உண்டு. இதை முடிக்கும் பட்சத்தில் ரூ.4-5 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும்.

வேலை வாய்ப்பு: 

இன் ஹவுஸ் லீகல் எக்ஸ்பேர்ட், பெரிய, பெரிய நிறுவனங்களில் போர்டு ஆப் தி டிரைக்டர்களுக்கு சீப் அட்வைஸராக பணியாற்றலாம், கார்பரேட் பிளானர், ஸ்ரேட்டர்ஜிக் பிளானர். போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

🔹 இன்டெர்நேஷனல் கோர்ஸ்:
சி.எப்.ஏ,, ஏ.சி.சி.ஏ., சி.பி.ஏ., சி.எம்.ஏ.,(யுஎஸ்), சி.ஐ.ஏ., போன்ற பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. இவைகளை +2 முடித்தும், டிகிரி முடித்தும் விண்ணப்பிக்க முடியும்.

வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற இந்த வகையான படிப்புகள் உதவி புரிகின்றன இவை பொதுவாக நீண்டகால படிப்புகள் இவை குறித்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

(இது ஒரு மீள்பதிவு)

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்?


10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்?

10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் இருக்கவே செய்யும். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது தொழில்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படித்து பயன்பெற முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டில் ஏராளமான மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டில் எழுத உள்ளனர். 

மே மாதத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் 10-வது முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிப்பது என்ற கேள்வி அவர்கள் முன்னே எழுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்களுக்கான முக்கியமான காலகட்டம் இது. அடுத்து அவர்கள் தேர்வு செய்யப்போகும் பாடத்திட்டம்தான் அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது.

10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு தற்போது 3 முக்கிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதில் எதைத் தேர்வு செய்வது என்பதைப் பற்றி மாணவச் செல்வங்கள் முடிவு செய்து தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தை தீர்மானிக்கவேண்டும்.
10-வது படித்த மாணவர்கள் அடுத்து மேல்நிலை வகுப்பு பயில்வது அதாவது 11, 12-வது படித்தல், பட்டயப் படிப்புகளை படித்தல் அதாவது டிப்ளமோ படித்தல், 3-வது ஐடிஐ போன்ற தொழில்படிப்புகளைப் படித்தல் ஆகியவையே அந்த வாய்ப்புகளாகும்.

1.மேல்நிலை வகுப்பில் பயில்வது (பிளஸ்-2 படிப்புகள்):

பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலாவது குரூப் எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்யலாம். மருத்துவம் மட்டுமே பயில விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்த குரூப்களைத் தேர்வு செய்யும்போது பி.இ, பி.டெக், பி.ஆர்க், பொறியியல் டிப்ளமோ (B.E., /B.Tech,B.Arch, Diploma), மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், நர்சிங், சித்தா, ஆயுர்வேதா,யுனானி, ஹோமியோபதி, யோகா (MBBS, BDS, B.Phar, Nursing etc), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளையும் பயில முடியும்.

இதற்கு அடுத்தபடியாக வணிகவியல், கணக்குப் பதிவியல் படிக்க விரும்புபவர்கள் பொருளாதாரவியல் பிரிவுகளில் சேரலாம். சி.ஏ., பி.காம்., எம்.காம், அரசு வேலை, வங்கிப் பணியில் சேர விரும்புவர்கள் இந்த குரூப்பைத் தேர்வு செய்யலாம். கணக்குப் பதிவியல் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர்கள் வங்கி வேலை, அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம்.

வரலாறு, பொருளாதாரவியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்பவர்கள் உயர்கல்வியின்போது இதே பிரிவில் பி.ஏ, எம்.ஏ. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளைப் பயில முடியும். அதுமட்டுமல்லாமல் பட்டமேற்படிப்பு முடிக்கும்போது அவர்கள் அரசு தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ஆசிரியர் பணி உள்ளிட்ட துறைகளில் சேர முடியும்.

வொக்கேஷனல் குரூப்: இதுதவிர தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவை வொக்கேஷனல் குரூப் என்று அழைக்கிறோம். இந்தப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவச் செல்வங்கள் பொறியியல் (B.E., /B.Tech, B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகளைப் படிக்க முடியும். மேலும் தொழில் நுட்ப துறை சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும்.

2. பட்டய படிப்பு (டிப்ளமோ): 

10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு அடுத்த வாய்ப்பாக பட்டயப் படிப்பு எனப்படும் டிப்ளமோ படிப்புப் பிரிவில் உள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க விரும்பாத மாணவர்கள் டிப்ளமோ படிப்பைத் தேர்வு செய்யலாம். 

இது பெரும்பாலும் 3 ஆண்டு படிப்பாக இருக்கலாம்.  மெக்கானிக், சிவில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளமோ படிப்புகள் பரவிக் கிடக்கின்றன. தொழில் நுட்ப டிப்ளமோ படிப்புகளில் ஆட்டமொபைல், இஇஇ, இசிஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய டிப்ளமோ படிப்புகள் பிரபலமானவையாக உள்ளன. இவற்றை பெரும்பாலானா மாணவர் தேர்வு செய்து படிக்கின்றனர். மேலும் டிப்ளமோ படித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பி.இ., பி.டெக் படிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது.

இந்தத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால் ஆண்டுதோறும் டிப்ளமோ படிப்புகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்கின்றனர்.

அதைப் போலவே ஹோட்டல் நிர்வாகப் படிப்பு சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.

அதேபோல் மரைன் டெக்னாலஜி சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்தப் படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும்போது அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
டிப்ளமோ படிப்புகளை மாணவர்களுக்கான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு டிப்ளமோ படிப்புகள் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் என்னென்ன பிரிவில் படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனை படிப்புகளும் டிப்ளோமா பிரிவுகளில் உண்டு. இதற்கான டிப்ளமோ படிப்புகளை தமிழ கத்தில் உள்ள பாலிடெக்னிக்குகள் வழங்குகின்றன. சிறப்பான டிப்ளமோ படிப்பை 3 ஆண்டுகள் படித்து முடித்தவுடன் உள்நாட்டில் மட்டுமல்லாது யுஏஇ, கத்தார் போன்ற வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

தமிழ்நாட்டில் ஏராளமான டிப்ளமோ படிப்புகளை வழங்குவதற்காக அரசு பாலிடெக்னிக்குகள் , தனியார் பாலிடெக்னிக்குகள் பல இடங்களில் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ படித்து முடிக்கலாம். படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பை மாணவச் செல்வங்கள் பெற முடியும்.

மேலும் டிப்ளமோ படிப்பு படிக்கும் மாணவச் செல்வங்கள் மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.

3.  சான்றிதழ் படிப்பு (ITI): 

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பு, டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விரும்பாத மாணவர்கள், இறுதியாகத் தேர்வு செய்து சான்றிதழ் படிப்புகளான ஐடிஐ படிப்புகள்தான். இது தொழில்துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகளாக அமைந்துள்ளன.

இந்த வகை சான்றிதழ் படிப்புகள் பெரும்பாலும் 10 மாதங்கள் அல்லது ஓராண்டு பயிற்சி கொண்டதாக அமைந்துள்ளன. டர்னர், ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், ஏசி மெக்கானிக் போன்ற துறைகளில் ஐடிஐ படிப்புகள், தமிழக அரசு நடத்தும் ஐடிஐ-களில் வழங்கப்படுகின்றன. மிகவும் குறைந்த கட்டணத்தில் உதவித்தொகையுடன் அரசு இந்த ஐடிஐ பயிற்சியை மாணவச் செல்வங்களுக்கு வழங்குகிறது.
மேலும் ஐடிஐ பிரிவுகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் மாணவர்களுக்குக் காத்திருக்கின்றன. நல்ல படிப்புகளைத் தேர்வு செய்து நாம் படிக்கும்போது அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.
இங்கு திறன் மேம்பாட்டுக்கான ஏராளமான சான்றிதழ் படிப்புகளும் கற்று தரப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சொந்தமாகத் தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசே ஐடிஐ மூலம் செய்து கொடுக்கிறது.

புதிய துறைகள்: 

மேலும் நாள்தோறும் புதிய அளவிலான துறைகள் தோன்றி அதற்கான படிப்புகளும் வளர்ந்து வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் இ-காமர்ஸ் துறை அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்பத்துறையுடன் (Technical jobs), இணைய வணிகம் எனப்படும் இ-காமர்ஸ் (e- Commerce) துறையும் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே, இந்தத் துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் படித்து முடித்து தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும்.

10-வது படித்து முடித்த மாணவர்கள் தாங்கள் அடுத்து தேர்வு செய்யப்போகும் படிப்பு குறித்து ஒரு இலக்கை மனதில் கொண்டு அதற்கேற்ப முன்னேறிச் செல்லவேண்டும். மாணவர்கள், தங்களுடைய திறனுக்கும் மனநிலைக்கும் ஏற்ற சிறந்த படிப்பைத் தேர்வு செய்வது நல்லது.
பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புதான் நமக்குச் சிறந்தது என்று தேர்வு செய்து விட்டு பின்னர் பாதியில் அதிலிருந்து மீண்டும் டிப்ளமோ படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு என மனம் மாறக்கூடாது.
நமக்கு பிளஸ் 2 படிப்புதான் சிறந்ததுதான் என்றால் அதில் நமது திறமையைச் செலுத்தி முன்னேறிச் செல்லவேண்டும். தொழில்நுட்பப் படிப்புகள்தான் நமக்கு லாயக்கு என்று எண்ணும் மாணவர்கள் அந்த தொழில்நுட்பப் படிப்புகளை டிப்ளமோவாகப் படித்து அதில் சிறப்பு பயிற்சிகளைப் பெறலாம். குறிப்பிட்ட துறையில் நிபுணராக நாம் மாறும்போது நமது எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கல்லூரியில் படிப்பதென்பது...


College life

கல்லூரியில் படிப்பதென்பது...

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே.

ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள்.

இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை - அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்னபிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோநிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.

பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவேத் தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.

பாடப்புத்தகத்தை தவிர, வேறு எதற்கும் இடமில்லை. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி, உயர்கல்வியில், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதப்படும் நிலை உள்ளது.

சரி, அவை அப்படியே இருக்கட்டும். தற்போது, நாம் ஏதோ ஒரு உயர்கல்வி படிப்பில் சேர்ந்துவிட்டோம். அது எதுவாகவோ இருக்கட்டும். அந்தப் படிப்பை எப்படி படித்தால், அதாவது, நமது கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்வை எவ்வாறு செலவிட்டால், நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

சமீப ஆண்டுகளில், நாம் ஒரு செய்தியை(பொதுவாக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை படிப்புகளை படித்தவர்களுக்கானது) அடிக்கடி கேட்டிருப்போம்.

"பல பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தேசிய, உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான அளவில், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன" என்பன போன்ற செய்திகள்தான் அவை.

ஒவ்வொரு ஆண்டும், படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க, தகுதியான பணியாளர் பற்றாக்குறையோ, கூடிக்கொண்டே செல்கிறது. நாம், தகுதியான கல்லூரியில் படிக்கிறோமா என்பது இருக்கட்டும். ஆனால், ஒரு சுமாரான கல்லூரியில் படித்தாலும்கூட, ஒரு மாணவர், தனது படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.

பள்ளிப் படிப்பு வரையில், நாம் படித்த விதமே வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒருவர், வெற்றிகரமான மாணவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.

ஆனால், கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அப்படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, நாம் எந்தளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில்துறைதான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும்போதே தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது ஜொலிக்கலாம்.

எனவே, கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்கி, வாழ்விற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒரு மாணவர், பணிசெய்தல் என்ற மிகப்பெரிய ஒரு பொறுப்பிற்குள் செல்கிறார். அங்கே அவர் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில்தான் அடங்கியுள்ளது.

Monday, January 19, 2026

பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?


# 📜 பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

## (முழுமையான வழிகாட்டி – தமிழ்நாடு)

## 🔹 பிறப்புச் சான்றிதழ் ஏன் முக்கியம்?

பிறப்புச் சான்றிதழ் என்பது:

* அரசு வழங்கும் **முதல் அடையாள ஆவணம்**
* பாஸ்போர்ட்
* ஆதார்
* பள்ளி / கல்லூரி சேர்க்கை
* திருமணம்
* வேலை
* சொத்து பதிவு

போன்ற அனைத்திற்கும் அடிப்படையான ஆவணம்.

👉 எனவே இதில் உள்ள **பெயர், தேதி, பெற்றோர் விவரம்** அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.

## 🔹 பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்ற முடியுமா?

✅ **முடியும்**

ஆனால்,

* **சிறிய எழுத்துப் பிழை (Spelling mistake)**
* **முழு பெயர் மாற்றம் (Full Name Change)**

👉 இந்த இரண்டுக்கும் **வேறுபட்ட நடைமுறைகள்** உள்ளன.

## ✍️ 1. சிறிய எழுத்துப் பிழை (Spelling Mistake) திருத்தம்

### ✔️ உதாரணங்கள்:

* Rahman → Rehman
* Mohamed → Muhamed
* Initial தவறு

### 📌 நடைமுறை:

* **அரசிதழ் (Gazette) தேவையில்லை**
* நேரடியாக பிறப்புச் சான்றிதழ் பதிவாளரிடம் விண்ணப்பிக்கலாம்

### 📄 தேவையான ஆவணங்கள்:

* திருத்தம் கோரும் மனு
* பெற்றோரின் அடையாள சான்று
* மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி (இருந்தால்)
* பிரமாணப் பத்திரம் (Affidavit)

👉 சரிபார்த்த பின், பெயர் திருத்தம் செய்து தரப்படும்.

## ✍️ 2. முழுப் பெயர் மாற்றம் (Full Name Change)

### ✔️ உதாரணங்கள்:

* பழைய பெயரை முழுவதும் மாற்றுவது
* Initial சேர்த்தல் / நீக்கல்
* மதம்/ஜோதிடம்/தனிப்பட்ட காரணம்

### 📌 கட்டாய நடைமுறை:

1. **அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம்**
2. அதன் பின்
3. பிறப்புச் சான்றிதழ் பதிவாளரிடம் விண்ணப்பம்

## 🌐 அரசிதழ் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

🔗 இணையதளம்:
👉 **[www.stationeryprinting.tn.gov.in](http://www.stationeryprinting.tn.gov.in)**

### 📌 முக்கிய விதிமுறைகள்:

* விண்ணப்பத்தில் **விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம்**
* 18 வயதுக்குள் (Minor) இருந்தால்:

  * தந்தை / தாய் / பாதுகாப்பாளர் கையொப்பம்
  * உறவு விவரம் **Capital Letter-ல்** குறிப்பிட வேண்டும்
  * பாதுகாப்பாளர் என்றால் **Legal Guardianship Order** இணைக்க வேண்டும்

## 💰 பெயர் மாற்றக் கட்டணம்

* **ரூ.750**
* செலுத்தும் வழிகள்:

  * 🌐 [www.karuvoolam.tn.gov.in](http://www.karuvoolam.tn.gov.in)
  * வங்கி (Online / Offline)

👉 செலுத்திய ரசீதை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

## 👴 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு

* **Life Certificate**
* பதிவு பெற்ற அரசு மருத்துவரிடமிருந்து
* **அசல் சான்றிதழ்** கட்டாயம்

## ⚠️ முக்கிய கவனிக்க வேண்டிய விதிகள்

* புதிய பெயரில் **“என்கிற / Alias” பயன்படுத்த அனுமதி இல்லை**
* அரசிதழில் பிழை இருந்தால்:

  * **6 மாதத்திற்குள் மட்டுமே திருத்தம்**
* 6 மாதம் கடந்தால் ❌ திருத்தம் கிடையாது

## 📸 புகைப்படம் & சுய சான்றொப்பம்

* சமீபத்திய புகைப்படம் ஒட்ட வேண்டும்
* விண்ணப்பதாரர் **சுய சான்றொப்பம்** அவசியம்

## 📬 அரசிதழ் பெறுவது

* நேரில் பெற விரும்பினால்:

  * பிரசுரிக்கப்பட்ட **5 நாட்களுக்குள்** அலுவலகம் செல்ல வேண்டும்
* தவறினால்:

  * தபால் மூலம் அனுப்பப்படும்

## 📑 வயது நிரூபிப்பு இல்லாதவர்கள்

* பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லையெனில்
* அரசு மருத்துவரிடமிருந்து **Age Certificate** பெற வேண்டும்

## 📂 பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் (Checklist)

✅ பெயர் மாற்ற பிரமாணப் பத்திரம்
✅ பழைய பிறப்பு சான்றிதழ்
✅ கல்விச் சான்றிதழ்
✅ சாதி சான்றிதழ்
✅ ரேஷன் கார்டு
✅ வாக்காளர் அடையாள அட்டை
✅ ஆதார் அட்டை
✅ பாஸ்போர்ட் (இருந்தால்)

## 🔁 பெயர் மாற்றத்திற்குப் பின் செய்ய வேண்டியது

பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் முடிந்ததும்:

* ஆதார்
* பள்ளி / கல்லூரி சான்றிதழ்
* பாஸ்போர்ட்
* வங்கி ஆவணங்கள்

👉 அனைத்திலும் **புதிய பெயர் புதுப்பிக்க வேண்டும்**

### ✅ முடிவாக:

பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது **சாத்தியம்**,
ஆனால் **சரியான நடைமுறை + ஆவணங்கள்** மிகவும் முக்கியம்.

#பிறப்புச்சான்றிதழ்
#பெயர்மாற்றம்
#அரசு_சான்றிதழ்
#பெயர்திருத்தம்
#தமிழ்நாடு_அரசு
#அரசு_சேவைகள்
#ஆவண_திருத்தம்
#பிறப்புச்சான்றிதழ்_திருத்தம்
#சட்ட_நடைமுறை
#அரசிதழ்
#VAO
#ஆதார்
#பாஸ்போர்ட்
#முக்கிய_தகவல்

#BirthCertificate
#NameChange
#BirthCertificateCorrection
#GazetteNotification
#TamilNaduGovernment
#GovernmentServices
#LegalProcedure
#OfficialDocuments
#AadhaarUpdate
#PassportUpdate
#DocumentCorrection
#PublicAwareness

#ImportantInformation
#UsefulPost
#AwarenessPost
#MustRead
#PublicService
#TamilInfo
#TamilUpdates