Monday, April 2, 2018

சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களுக்கான ஐடியாக்கள்

மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..!

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த ஐடியாக்கள் கிடைத்தால் "ககக..போ" என்கின்ற பாணியில் கருத்துக்களைக் கச்சிதமாய்க் கவர்ந்து போக நீங்க தயாரா? இதோ ஐடியாக்களை அள்ளித் தெளிக்க நாங்க தயார்.

நம்முடைய வீட்டில் அல்லது வாடகைக் கட்டடத்தில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களைத் தொடங்கலாம். மிகக் குறைந்த முதலீட்டில் உற்பத்திக்கான சாதனங்கள் அல்லது இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உற்பத்திக்கான முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய இருபது வகையான உற்பத்தித் தொழில்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களுக்கான ஐடியாக்கள்

பேப்பர் தயாரிக்கும் தொழிலைக் குறைந்த அளவிலான முதலீட்டில் செய்ய இயலும். பேப்பருக்கான தேவையும் அதற்கான சந்தையிடல் வாய்ப்பும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. கல்வித் துறை மற்றும் பிற தொழில் துறைகளில் பேப்பருக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன. அதனால் பேப்பர் தயாரிக்கும் தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புகளும் இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பேப்பர் தயாரிப்பதற்கு முன்பு, அதனுடைய அளவு மற்றும் தேவையைச் சரியாக நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம். அதற்கேற்றார் போலப் பொருத்தமான இயந்திரங்கள், பிற உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உற்பத்தி செய்வதற்கான இடம் ஆகியவற்றைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் முதலீடு : ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரைதேவைப்படும் பொருட்கள் : பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருட்கள், தேவையான வேதிப் பொருட்கள்.

ஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பு
ஃபைல் மற்றும் பேப்பர் கவர்கள் தயாரிப்பதும் உற்பத்தி சார்ந்த எளிமையான சிறந்த சிறுதொழிலாக உள்ளது. கல்வி நிலையங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் ஃபைல்கள் மற்றும் பேப்பர் கவர்களுக்கான தேவை அதிகம். ஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது முறை, கைகளால் தயாரித்தல், இரண்டாவது வகை, இயந்திரங்களைக் கொண்டு தயாரித்தல். நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றலாம். இயந்திரங்கள் மூலம் தயாரிப்பது நலம் பயக்கும்.

தேவையான முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் ரூபாய்.தேவைப்படும் பொருட்கள் : உற்பத்தி இயந்திரம், பேப்பர் உள்ளிட மூலப்பொருட்கள்.

சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் தயாரிப்பு
சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் எப்பொழுதும் நிலையான விற்பனையையும், சந்தைக்கான தேவையையும் கொண்டவை. எனவே, சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் உற்பத்தியில் தயக்கமின்றி ஈடுபடலாம். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால், தயாரிப்பு முறைகளைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம். வேதிப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் மிகச் சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்தால் மட்டுமே நாம் விரும்புகின்ற வகையில் உற்பத்திப் பொருட்களைப் பெற முடியும். வீட்டிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி உற்பத்தியைத் தொடங்கலாம் அல்லது இதற்கெனத் தனியான ஒரு இடத்தைத் தேர்வு செய்து உற்பத்தியைத் தொடங்கலாம்.

தேவையான முதலீடு : சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை.தேவைப்படும் பொருட்கள் : தயாரிப்புக்கான வேதிப் பொருட்கள், பாத்திரங்கள், கரண்டிகள், பிளாஷ்டிக் பைகள், எரிவாயு அல்லது மின் அடுப்பு, கையுறைகள், தராசுகள்.

எண்ணைய் தயாரிப்பு

எண்ணெய் (ஹேர் ஆயில்) தயாரிப்பதும் மிகச் சிறந்த சிறு உற்பத்தித் தொழிலாகும். குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே உற்பத்தியைத் தொடங்கலாம். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால் இதற்கான தேவையும் விற்பனையும் அதிகம். நாம் தயாரிக்கும் எண்ணெய் பிசுபிசுப்பற்றதாகவும் நல்ல வாசனை கொண்டதாகவும் இருக்க வேண்டும். முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தகுந்த கூட்டுப் பொருள்களோடு எண்ணெய் தயாரிப்பது நம்முடைய விற்பனையை அதிகப்படுத்தும்.

தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரைதேவைப்படும் பொருட்கள் : எண்ணெய், மூலிகைப் பொருட்கள், வாசனைப் பொருள், பாட்டில்கள் மற்றும் கலைவை இயந்திரம்.

விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு

விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பையும் சிறிய முதலீட்டில் செய்ய முடியும். அதிகம்பேர் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களோடு தொடர்புடைய பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடலாம். பந்து, பேட், பேட்மிண்டன் ராக்கெட், கேரம் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கலாம். வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இத்தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம்.

தேவையான முதலீடு : சுமார் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரைதேவைப்படும் பொருட்கள் : மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்

பிஸ்கட் தயாரிப்பு

வீட்டிலிருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்ய நினைப்பவர்களுக்குப் பிஸ்கட் தயாரிப்புத் தொழில் சிறந்ததாகும். இது ஒரு இலாபகரமான சிறு தொழிலாகும். பல முன்னணி நிறுவனங்கள் பிஸ்கட் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், வீட்டில் தயாரிக்கப்படும் பிஸ்கட் வகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆரோக்கியமானதாகவும் நல்ல சுவை மிக்கதாகவும் பிஸ்கட் தயாரிக்கத் தெரிந்திருந்தால் இத்தொழிலை வெற்றிகரமாகச் செய்யலாம். பிஸ்கட் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது நமக்குத் துணை செய்யும்.

தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரைதேவைப்படும் பொருட்கள் : கோதுமை மாவு, சர்க்கரை, பொடிப்பதற்கும் அரைப்பதற்கும் தேவையான கிரைணடர், மிக்சி போன்ற இயந்திரங்கள்

மெழுகுவர்த்தித் தயாரிப்பு

மெழுகுவர்த்தித் தயாரிப்பு என்பது, பெரும்பாலானோர் ஈடுபடும் சிறு உற்பத்தித் தொழில் ஆகும். மிக வித்தியாசமான வடிவமைப்புடனும், நல்ல வாசனையுடனும் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளுக்கு வரவேற்பும் தேவையும் அதிகம். மிகக் குறைந்த முதலீட்டில் இத்தொழிலைத் தொடங்க முடியும்.

தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரைதேவையான பொருட்கள் : மெழுகு, வடிவமைப்பு அச்சுகள், வாசனைப் பொருட்கள், சூடான மெழுகினைத் தாங்குவதற்கான உபகரணங்கள்

பந்துமுனைப் பேனா மைக்குழாய் (Ball point Pen Refill) தயாரிப்பு

பேனாக்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, பந்துமுனை மைக்குழாய் (Refill) தயாரிக்கும் தொழிலை வீட்டிலிருந்தே செய்யமுடியும். கல்வி மற்றும் தொழில் சார்ந்ந சூழலில் பேனாக்களுக்கான பயன்பாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, பந்துமுனை மைக்குழாய் தயாரிக்கும் தொழில் இலாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தேவையான முதலீடு : சுமார் 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரைதேவைப்படும் பொருட்கள் : மை நிரப்பும் இயந்திரம், பந்துமுனையைப் பொருத்தும் இயந்திரம், துளையிடும் கருவி, வெப்பமூட்டும் இயந்திரம்

தேன் தயாரிப்பு

தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்புப் பண்ணை மூலமாகத் தேன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய தொழில்களுள் தேன் தயாரிப்புத் தொழிலும் ஒன்று. தேன், மருந்தாகவும், ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்காகத் தேனீ வளர்ப்பவர்கள் கூட அதனை வருமானத்திற்குரிய தொழிலாக மாற்றிக் கொள்ளலாம்.

தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை.தேவைப்படும் பொருட்கள் : தேன்வளர்ப்புப் பெட்டிகள், தேன் கூடுகள், சேகரித்துப் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள்.

ஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல்
பல்வேறு வகையிலான பழங்களைக் கொண்டு ஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். கேக் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஜாம் மற்றும் ஜெல்லி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வீடு மற்றும் உணவகங்களில் இவற்றுக்கான தேவையும் பயன்பாடும் அதிகம். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் உணவு வகைகளுள் இவற்றுக்கு முதலிடம் உண்டு. எனவே தயங்காமல் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம்.

தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரைதேவைப்படும் பொருட்கள் : பழங்கள், சர்க்கரை, சிட்ரிக் அமிலம், பதப்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள், நிறம் சேர்க்கும் பொருட்கள், வேதிப்பொருட்கள், பாட்டில்கள்.

பொம்மைகள் தயாரிப்பு

பொம்மைகள் மீது குழந்தைகளுக்கு என்றுமே ஆர்வம் அதிகம். பொம்மைகளுடன் விளையாடுவது அவர்களுக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. இதன் காரணமாகவே பொம்மைகளின் விற்பனை எப்பொழுதும் சரிவைச் சந்திக்காமல் ஏற்றத்துடனேயே இருக்கும். எனவே. தொழில் தொடங்கவேண்டும் என்னும் ஆர்வம் உடையவர்கள் தாராளமாகப் பொம்மைகள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் ஈடுபடுவதற்கேற்ப பொம்மைத் தயாரிப்புத் தொழில் சந்தை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

தேவைப்படும் முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரைதேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.

பிளாஷ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு

உணவு வகைகள், குளிர்பானங்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பேக்கிங் வசதிக்காகப் பிளாஷ்டிக் பாட்டில்களையே சார்ந்திருக்கின்றன. கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களுள் பெரும்பாலானவை பிளாஷ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே, பிளாஷ்டிக் பாட்டில்களுக்கான தேவையும் சந்தையும் மிகப் பரந்து விரிந்திருப்பதை அறியலாம். ஓரளவுக்கு முதலீடு செய்கின்ற திறன் இருந்தால் இத்தொழிலில் துணிந்து இறங்கலாம்.

தேவைப்படும் முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை.தேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.

உரம் தயாரித்தல்

வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நம்முடைய நாட்டில் உரத்திற்கான தேவை என்றும் குறைவதில்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிக்கும் தொழிலை முதலில் சிறிய அளவில் மேற்கொள்ளலாம். சந்தையின் போக்கினையும் தேவையையும் சரியாக அறிந்து கொண்ட பின்பு இத்தொழிலை விரிவு செய்து வெற்றிக்கொடி நாட்டலாம்.

தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரைதேவையான பொருட்கள் : மூலப்பொருட்கள், வேதிப் பொருட்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள்.

  ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு

ஆட்டோமொபைல் தொழில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. ஆட்டோமெபைல்களுக்கான உதிரிப் பாகங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஆர்வமும், திறனும், முதலீடு செய்வதற்கு ஏற்றப் பொருளாதார வசதியும் இருந்தால் நீங்கள் தாராளமாக ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். ஆட்டோமொபைலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை. எந்தப் பாகங்களுக்கு எப்பொழுதுமே அதிகமான தேவை உள்ளது என்பதைக் கண்டறிந்து அப்பாகங்களை உற்பத்தி செய்யலாம்.

தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரைதேவையான பொருட்கள் : மூலப் பொருட்கள், பாகங்களுக்கு ஏற்ற வடிவ அச்சுகள், தயாரிப்பு இயந்திரங்கள்.

எழுது பொருட்கள் தயாரிப்பு

பென்சில்கள், வண்ணங்கள், பேனா, அழிப்பான் (eraser), கூராக்கி (Sharpner), பின்னழுத்தி (Stapler), ஒட்டும் பசை, அளவுகோல்கள் (Rulers), நோட்டுகள் போன்றவை எக்காலத்திற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களாக இருக்கின்றன. பள்ளி, கல்லூரிகளையும் தாண்டி அனைத்துத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் இப்பொருட்கள் அவசியமாகத் திகழ்கின்றன. சந்தைக்கான தேவை என்கின்ற வகையில், எழுது பொருட்கள் உற்பத்திக்கு என்றைக்குமே வீழ்ச்சி இல்லை.தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரை.

தேவையான பொருட்கள் : நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஏற்ப மூலப்பொருட்களும் பிற உபகரணங்களும் தேவைப்படும்.

கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் தயாரிப்பு

கண் கண்ணாடி அல்லது பிரேம்கள் தயாரிப்புத் தொழிலும் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் விற்பனைக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. நல்ல வடிவமைப்புத் திறனும், முதலீடு செய்வதற்கேற்ற பொருளாதார வசதியும் இருந்தால் இத்தொழிலில் சாதிக்கலாம். ஏற்கனவே இத்தொழிலில் கால்பதித்துள்ள பெரும் நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரைதேவைப்படும் பொருட்கள் : அச்சு வெட்டுக் கருவி, உலோகம் மற்றும் பிளாஷ்டிக், கண்ணாடி மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள்

வாட்டர் ஃபில்டர் இயந்திரங்கள் தயாரிப்பு

நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் தண்ணீரை வடிகட்டித் துய்மைப்படுத்தி அருந்துகின்ற பழக்கம் பரவி விட்டது. இதற்காகத் தங்களது வீடுகளில் வெவ்வேறு வகையான வாட்டர் ஃபில்டர் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே வாட்டர் ஃபில்டர்களுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகம். அதிக அளவிலான நிதியிருந்தால் இத்தொழிலில் ஈடுபடலாம்.

தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை

அறைகலன்கள் (Furniture) தயாரிப்பு

வீடு, அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களுக்கும் அறைகலன்கள் தேவையாக உள்ளன. நாற்காலி, கட்டில், மேஜை, மெத்தை, கப்போர்ட், அலமாரிகள், தடுப்பறைகள் (Cabins) போன்று அறைகளுக்குத் தேவையான பொருட்கள் தயாரிப்புக்கு நல்ல விற்பனைச் சந்தையும் தேவையும் உள்ளது. எனவே தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக ஃபர்னிச்சர் தயாரிப்புத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

தேவையான முதலீடு : ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரைதேவையான பொருட்கள் : மரம், இயந்திரங்கள், பிற மூலப்பொருட்கள்

ஆடை தயாரிப்பு

ஆடை தயாரிப்பு என்பது வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். ஆடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் தனித்திறன் இருந்தால் மட்டுமே இத்தொழிலில் வெற்றியடைய முடியும். இத்தொழிலின் தொடக்கக் காலத்தில், தொழிற்சாலை மற்றும் பள்ளிகளுக்கான சீருடைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம். பிறகு நம்முடைய தொழிலை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.

தேவையான முதலீடு : சுமார் 25,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை.

தோல் பொருட்கள் தயாரிப்பு

தோலால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதும் மதிப்பும் தேவையும் உண்டு. சந்தைக்கான வாய்ப்புகளை நோக்கும்பொழுது, தயக்கமில்லாமல் தொடங்கப்படக் கூடிய தொழில்களுள் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தித் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. இத்தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால், இடம், சந்தை வாய்ப்பு, தொழில் திறன் ஆகியன குறித்து முறையான ஆய்வு மேற்கொள்வது நலம்.

தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை.

தவறாமல் பின்பற்ற வேண்டும்

மேற்கண்ட அனைத்துத் தொழில்களுக்கும் முறையான பதிவு மற்றும் தொழில் தொடங்குவதற்குரிய சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

உற்பத்தித் தொழில்

உற்பத்தித் தொழிலில் ஈடுபட நினைப்பது வரவேற்புக்குரிய செயல். சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, நேர்மையான வணிகம், தேவையான முதலீடு ஆகியவை இருந்தால் தொழிலில் சாதனைகளை நிகழ்த்த முடியும். உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால் பல்வேறு வகையான விசயங்கள் குறித்துத் தீர ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

20 சிறு உற்பத்தி தொழில்

இதுவரை குறிப்பிட்ட இருபது வகையான சிறு உற்பத்தித் தொழில்கள் குறித்த கருத்துக்கள், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுடைய விருப்பம், தனித்திறன், முன் அனுபவம், முதலீட்டுத் திறன், தொழில் சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு ஏற்ப இவற்றுள் எதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

https://tamil.goodreturns.in/sme/amazing-business-ideas-with-low-investment-010913.html

Wednesday, March 28, 2018

பட்டா வாங்குவது

பட்டா வாங்குவது எப்படி ?
============================
நிலத்தை வாங்குவதில் பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதுமானது இல்லை. அதை முறையாக வருவாய்த் துறையில் பதிவுசெய்து பட்டா பெற வேண்டும். ஆக பத்திரப்பதிவு போல பட்டாவும் அவசியமான ஒன்று. ஒரு சொத்தை வாங்கும்போதோ நமக்கு வாரிசு உரிமைப்படி எழுதி வைக்கப்படுவதாக இருந்தாலோ அந்த நிலத்தின் பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்.

பட்டா பெறுதல் எப்படி?
-----------------------------------
நாம் வாங்கிய சொத்து/நமக்குக் கிடைக்கப்பட்ட சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் >www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தின் விவரங்கள்
---------------------------------------------
விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி - தமிழ் தி ஹிந்து

Thursday, March 8, 2018

ஃப்ரீலான்ஸராக வருவாய் ஈட்ட அதிக வாய்ப்புள்ள 10 துறைகள்!

தற்போது ஃப்ரீலான்ஸராக வருவாய் ஈட்ட அதிக வாய்ப்புள்ள 10 துறைகள்!
20ஆம் நூற்றாண்டுகளில் ஒருவர் தொழில் செய்ததைக் காட்டிலும், தற்போதைய காலத்தில் தொழில் புரிவோர் பல சவால்களை சந்திக்கவேண்டி உள்ளது. போட்டி பல அளவுகளில் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் உரிமையாளர்களின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை எதிர்த்து போராடவும், தங்களின் செலவினங்களை குறைத்துக்கொள்ளும் விதத்திலும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன. அதற்கான முதல் அடி, முழுநேர ஊழியர்களை விட ஃப்ரீலான்சர்ஸ் அதாவது வேலையின் தேவைக்கேற்ப ஆட்களை அந்த பணிக்கு மட்டும் நியமித்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இது நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துவதாக நம்புகின்றனர் நிறுவனங்கள். அதே சமயம், ஃப்ரீலான்சர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க எண்ணுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஃப்ரீலான்சராக பணியாற்றி சம்பாதிக்க வழி காட்டும் 10 துறைகள் இதோ...

உள்ளடக்க எழுத்தாளர் (Content writing)

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களும், கணினியின் முன் உட்கார்ந்து யாரோ எழுதிய ஒருவரின் படைப்பாக இருக்கும். ஆயிரக்கணக்கான தளங்கள், பல நாளிதழ்கள், ப்ளாகுகள் மற்றும் மாத இதழ்கள் உள்ளன, அதில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பை பற்றி யோசியுங்கள். ஒரு கண்டெண்ட் எழுத்தாளராக ஆக, நீங்கள் மொழியின் ஆளுமையை பெற்று, இலக்கணத்தை நன்கு தெரிந்து கொண்டு, உங்கள் எழுத்து திறமையை கூர் ஏத்துங்கள். அப்போதுதான் உங்கள் எழுத்துக்களுக்கு வருமானம் ஈட்டமுடியும். இந்தியாவில் சுமாரான ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள் வருடத்திற்கு 1.8லட்சம் வரை சம்பாதிக்கின்றனர், இதுவே நல்ல எழுத்தாளர்களுக்கு 10-15 மடங்கு அதிகம் கிடைக்கிறது.

கிராபிக் டிசைனிங் (Graphic designing)

எழுத்தை போலவே, கிராபிக் டிசைன் செய்யத் தெரிந்தால் நீங்கள் தனிச்சையாக பணிகள் எடுத்து செய்யமுடியும். அவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமுள்ளது. பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்கள், திறமையான கிராபிக் டிசைனர்களுக்கு பணிகள் கொடுக்க தேடி வருகின்றனர். ஆனால் நீங்கள் அழகிய டிசைன்களை குறைந்த நேரத்தில் முடித்துக்கொடுக்கும் வல்லவராக அதற்கு இருக்கவேண்டும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், போட்டோஷாப் மற்றும் அதை சார்ந்த சில சாப்ட்வேர்களை கற்று தேர்ந்திருக்கவேண்டும். இதற்கான வாய்ப்புகள் சந்தையில் அதிகமாக உள்ளது.

வலைபதிவர்கள் (Blogging)

நீங்கள் உங்கள் சொந்த ப்ளாகை தொடங்கலாம், அல்லது வேறு ஒருவருடைய வலைதளத்தில் பதிவுகள் செய்து வருமானம் ஈட்டலாம். தனிச்சிறப்புள்ள தலைப்புகளில் எழுத தேர்ந்திருந்தால் இதில் நல்ல வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, தொழில்நுட்பம், ஃபேஷன், பயணம், கேளிக்கை மற்றும் தனிப்பட்ட நிதி ஆகிய துறைகள் பற்றி எழுதும் வல்லமை இருந்தால் அதற்கு அமோக வரவேற்பு உள்ளது. இதில் சம்பாதியத்தை பொருத்தவரை வானமே எல்லை. நீங்கள் கிட்டத்தட்ட 50-60 லட்சம் வரை ஒரு வருடத்தில் ஈட்டமுடியும். சிலர் இந்த தொகையை ஒரே மாதத்தில் சம்பாதித்தும் விடுவர்.

சமூக ஊடக மார்க்கெட்டிங் (Social media marketing)

கடந்த பத்தாண்டில், ட்விட்டர், ஃட்ஸ்புக், லிங்க்ட் இன், பிண்ட்ரெஸ்ட், இன்ஸ்டாக்ராம் மற்றும் ரெட்டிட் ஆகியவை சமூக ஊடக தளங்களில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள சமூக ஊடகங்களை நாடுகின்றனர். அதற்கு வழிவகை செய்வோர்களே சமூக ஊடக வல்லுனர்கள். இதற்கு தொழில்நுட்ப வல்லமை ஏதும் தேவையில்லை, வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள உதவினால் போதுமானது.

வெப் டெவலப்மெண்ட் (Web development)

இப்போதுள்ள நிறுவனங்கள் அனைத்திற்கும் வெப்சைட் இல்லாமல் இல்லை. அதற்கு வெப்சைட்டின் பின்புலத்தில் இருந்து பணிபுரிய ஆள் தேவைப்படுகின்றனர். வெப்சைட் வேகமாக செயல்பட, அவ்வப்போது அப்டேட் செய்ய என்று அதில் வல்லுனர் ஒருவர் கண்காணிக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தை நிரப்ப வெப் டெவலப்பர் தேவை அதிகமாகிறது. இது ஒரு தனிச்சையாக செய்யக்கூடிய பணியே அதனால் அதில் வல்லமை படைத்தவராக நீங்கள் இருந்தால், தினமும் ஒரு சில நேரம் மட்டும் செலவிட்டு நல்ல வருமான ஈட்டமுடியும்.

பின்னணி குரல் கலைஞர் (Voice-over artists)

மக்கள் விரும்பி கேட்கக்கூடிய நல்ல குரல் உங்களுக்கு இருக்கிறதா? விளம்பரங்கள் முதல், கார்ப்பரேட் வீடியோ வரை பின்னணி குரல் கலைஞர்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. அதற்கான சம்பளமும் நன்றாகவே உள்ளது. நல்ல பேச்சுத்திறன், அழகிய குரல்வளம், இவை இருந்தால் நீங்கள் வாய்ஸ் ஓவர் என்று சொல்லப்படும் துறையில் முயற்சி செய்யலாம்.

தேடு இயந்திர தேர்வுமுறை (Search engine optimisation)

ஆன்லைனில் நீங்கள் வருமான ஈட்ட, குறிப்பிட்ட இணையதளத்திற்கு பார்வையாளர்களின் ட்ராபிக் அத்தியாவசியமாக இருக்கிறது. அதற்கு சர்ச் எஞ்சின் அதாவது தேடு இயந்திரங்களான யாஹூ, பிங், கூகிள் மற்றும் சமூக ஊடக தளங்கள் அதிக பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும். இதற்கு ப்ரீலான்சாக பணிபுரியும் எஸ்இஒ (SEO) வல்லுனர்களை நிறுவனங்கள் அவ்வப்போது பணியமர்த்திக் கொண்டு தேவையான வேலையை பெற்றுக்கொள்வர். இன்றைய காலகட்டத்தில் SEO தெரிந்திருந்தால் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும்.

மொழிபெயர்ப்பு (Translation)

உங்களுக்கு ஒரு மொழிக்கு மேல் நன்கு படிக்க, எழுத, பேச தெரிந்திருந்தால் நீங்கள் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் ஆகலாம். ஏனெனில் மொழிப்பெயர்ப்பு துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. பிராந்திய மொழி வல்லமை மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் உங்களால் நல்ல ஒரு வருமானத்தை ஈட்டமுடியும். மொழிப்பெயர்ப்பு பணிகள் பெரும்பாலும் ப்ரீலான்சாக செய்பவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

நிர்வாகிகள் தேடு வல்லுனர்கள் (Executive search specialist)

நிறுவனங்களுக்கு தேவையான, பாங்கான ஊழியர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொடுக்கமுடியும். எச்ஆர் எனப்படும் மனிதவளத்துறைக்கு அவ்வப்போது அவர்களின் தேவைக்கேற்ப நிர்வாகிகளை தேடிப்பிடித்து பணிக்கு அனுப்பிவைக்க உங்களால் முடிந்தால், அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கும் வானமே எல்லை, அதிக தொடர்பு உள்ளோர் இந்த பணியை இடைவிடாமல் முழுநேரமாக அலுவலகம் செல்லாமலே வீட்டிலிருந்தே செய்தால் வருமானம் உங்களை தேடி வரும்.

செயலி உருவாக்கம் (App development)

இணையதள உருவாக்கம் போலவே ஆப் டெவலப்மெண்ட் இன்று பெரிதும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக உள்ளது. இதில் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கு கொஞ்சம் திறமைகள் தேவை. மொபைல் யுஐ டிசைனிங், பாக்எண்ட் கம்ப்யூட்டிங், ப்ரோக்ராமிங் மற்றும் சில தகுதிகள் செயலி உருவாக்க தேவைப்படுகிறது. இதை நீங்கள் சுலபமாக கற்றறியமுடியும். வருங்காலமே செயலிகளை நம்பி இருக்கும் இந்த வேளையில் அதை உருவாக்க நீங்கள் தெரிந்திருந்தால், ப்ராஜெக்ட் அடிப்படையில் பணிகள் எடுத்துக்கொண்டு வருமானம் ஈட்டமுடியும்.

இந்தியாவில் ப்ரீலான்சிங் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உங்களுக்கு தனித்திறமை இருந்தால், நிறுவனங்களோடு நல்ல தொடர்பும், இணக்கமும் இருந்தால் பலவித பணிகளை வீட்டில் இருந்தே முடித்துக்கொடுத்து நிலையான வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கமுடியும்.
ஆங்கில கட்டுரையாளர்: புபேந்திர ஷர்மா

Monday, March 5, 2018

சமையல் கேஸ் உபயோகிப்பாளர்களின் மேலான கவனத்திற்கு!*

*பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்*

கூடுதல் தொகையை கொடுக்க மறுப்போம்!
            கூட்டுக் கொள்ளையை கூடித் தடுப்போம்!!

*சமையல் கேஸ் உபயோகிப்பாளர்களின் மேலான கவனத்திற்கு!*

*பாரத் கேஸ், எச்.பி. கேஸ் மற்றும் இண்டேன் கேஸ்* ஆகியவற்றை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் பில்லில் குறிப்பிட்ட தொகையை விட *₹ 50* கூடுதலாக வசூலிப்பது வழக்கமாகி விட்டது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு கூடுதல் தொகை தர மறுத்தால், *கேஸ் சிலிண்டர் தர மாட்டோம்; நேரடியாக நீங்கள் கேஸ் ஏஜென்சியிடம் போய் தான் எடுக்க வேண்டி வரும்; வீடு பூட்டியிருந்தது என்று சொல்லி கேஸை விநியோகிக்காமல் சென்று விடுவோம்* என்று பலவாறு மிரட்டுகின்றனர்.

இம்மிரட்டல்களுக்கு அஞ்ச தேவையில்லை...! கேஸ் சிலிண்டரை விநியோகிக்காமல் செல்ல அவர்களுக்கு அதிகாரம் இல்லை !!

நமதூரில் பல வீடுகளில் ₹ 50 கூடுதல் தொகை கொடுக்க முடியாது எனக்கூறி விட்டனர். இருந்தும், அவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது! ஆகையால், கவலை வேண்டாம்!!

கூடுதலாக பணம் கேட்பவர்களிடம், நாம் அனைவரும் ஒரே மாதிரியாக *- ஊர் ஜமாஅத்தில் கொடுக்கக்கூடாது -* என தீர்மானித்துள்ளனர் எனக்கூறினால் முற்றிலுமாக இந்த கொள்ளையை ஒழித்து விடலாம்.

நமதூரில் மட்டும் சுமார் 150 சிலிண்டர்கள் தினசரி விநியோகிக்கப்படுகின்றன. 150 x ₹ 50 = ₹ 7,500 தினமும் கொள்ளை போகின்றது; மாதத்திற்கு  இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் (₹ 2,25,000) கொள்ளை; நாம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இரத்தத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணம் அநியாயமாக  கொள்ளை போக அனுமதிக்க வேண்டாம்.

நாம் நேரடியாக மூன்று கேஸ் கம்பெனிகளுக்கும் பொதுவான இலவச தொலைபேசி எண்ணை toll free ( *18002333555* ) தொடர்பு கொண்டு தமிழிலேயே புகார் செய்யலாம்.
18002333555 ->
தமிழுக்கு எண் 5 ->
இண்டேனுக்கு எண் 1; எச்.பி.க்கு எண் 2; பாரத்-க்கு எண் 3; ->
புகார்களுக்கு எண் 1

நமது ஜமாஅத் சார்பாக ஏற்கனவே கூடுதலாக வசூலித்த கேஸ் விநியோக வாகனத்தை நிறுத்தி கூடுதல் பணத்தை வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு வீடியோ எடுத்து,  சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது; காவல் நிலையத்திலும் முறையான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது; சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் தான், இக்கூட்டுக் கொள்ளையை முழுமையாக தவிர்க்க இயலும்.

மேலும் உதவிகள் - தொடர்புகளுக்கு:

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*
*ஆவணியாபுரம் கிளை - xxxxxxxxxx*
*ஆடுதுறை கிளை - xxxxxxxxxx*
*தஞ்சை வடக்கு மாவட்டம்*

Sunday, March 4, 2018

் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர

[பதிவு – 1,196]

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர் தேவையில்லை: மீண்டும் ஓட்டுநர் உரிமத்தின் நகல் பெற புதிய வசதி தொடக்கம் - போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு
*************************************************************************
ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.
வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கள் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதிய தாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் ரூ.2000 வரையில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளத்தில்..
அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய வசதியால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலை எளிதாக பெற முடியும். இதற்காக போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த வசதி டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: தி இந்து 07 Sep 2017
___________________________________________________

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298792593597955

--------------------------------------------------------------------------------------

பட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை: சென்னைப் பல்கலை.
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298776396932908
----------------------------------------------------------------------------

ஆவணங்கள் தொலைந்தால் இணையத்தில் புகார் தெரிவிக்கலாம்

https://www.facebook.com/trduraikamaraj/posts/1298758950267986

--------------------------------------------------------------------------------
பட்டா தொலைந்துவிட்டதா?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298748283602386
------------------------------------------------------------------------------

சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298732063604008
---------------------------------------------------------------

வீ டு வாங்குவோர் பத்திரம்.... பத்திரம்
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298741170269764

Wednesday, February 14, 2018

Link has everything about country chicken

http://krishnamoorthythottam.blogspot.in/2017/02/blog-post_35.html?m=0

Link has everything about country chicken