Wednesday, September 4, 2019

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்
பட்ட படிப்பின் இறுதி ஆண்டை முடித்த மாணவர்கள் பெரும்பாலோனோர் வேலை தேட ஆரம்பிக்கும் காலம் இது. பலர் ஏற்கனவே வேலை தேடிக்கொண்டிருக்கலாம், சிலர் இன்னும் சில நாள்களில் வேலை தேட துவங்கலாம். எப்படியும் நல்ல வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும், நல்ல வேலை கிடைக்க சில ஆலோசனைகளை பார்ப்போம்.
படித்து முடித்த உடன் வேலை கிடைக்குமா ?
படித்து முடித்துவிட்டோம், அனைத்து பாடத்திலும் தேர்சி அடைந்துவிட்டோம், கையில் டிகிரி உள்ளது எனவே உடனே வேலை கிடைத்துவிடும் என மாணவர்கள் எண்ண வேண்டாம். வெரும் டிகிரி வைத்து இருப்பதினால் மட்டும் நல்ல வேலை கிடைத்து விடாது, இன்டெர்வியூவில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தால் தான் வேலை கிடைக்கும், வேலைக்கு ஒரு இடம் காலியாக இருந்தால் 10 பேரை இன்டர்வியூவிற்க்கு கூப்பிடுவார்கள், அந்த 10 பேரை விட நாம் சிறப்பாக பதில் அளித்தால்தான் நமக்கு வேலை கிடைக்கும், எனவே வேலை கிடைப்பது என்பது நீங்கள் வாங்கிய டிகிரியில் (மட்டும்) இல்லை உங்கள் திறமையில்தான் இருக்கின்றது.
திறமை மட்டும் இருந்தால் போதாதா ?
பிறகெதற்க்கு டிகிரி படிக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே, இதை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம், ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ள 70 கிலோ எடையும் 6 அடி உயரமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறதென்று வைத்துகொள்வோம், ஒருவர் வந்து நான் 70 கிலோ எடை மற்றும் 6 அடி உயரம் உள்ளவன் எனவே எனக்கு முதல் பரிசு கொடுங்கள் என்று சொன்னால் போட்டி நடத்துபவர்கள் அவருக்கு பரிசு வழங்க மாட்டார்கள், நீங்கள் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவருடன் சேர்ந்து வேகமாக ஓடி முதலாவதாக வந்து பரிசை எடுத்து செல்லுங்கள் என்று கூறுவார்கள். 6 அடி உயரம், 70 கிலோ எடை என்பது போட்டியில் கலந்து கொள்ள தகுதிதானே தவிர அதுவே போட்டியில் வெற்றியை தராது, ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஓடி தான் வெற்றி பெற வேண்டும் , அதே போல் இன்டெர்வியூவில் கலந்து கொள்ள தகுதிதான் உங்கள் டிகிரி தவிர. டிகிரியே வேலை வாங்கி தராது, உங்கள் அறிவும் திறமையும் தான் உங்களுக்கு வேலை வாங்கி தரும்.
படித்தால் வேலை கிடைக்காதா ? என்ற கேள்விக்கு விடை, நன்றாக படித்து ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொண்டு, தொடர்பு திறனையும் (communication skill) வளர்த்து கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்
ஆங்கில பேச்சாற்றல் (English language skill) :
இன்டெர்வியூவில் முதலில் பார்ப்பது உங்களின் ஆங்கில மொழி திறமை, எந்த ஒரு கம்பெனியிலும் அலுவல் மொழி ஆங்கிலமாகதான் இருக்கும், மேலும் பல மொழி பேச கூடியவர்களும் பணி புரிவார்கள் அவர்களிடம் பேச பொதுவான மொழி ஆங்கிலம் தான். எனவே தான் ஆங்கில மொழிதிறமை பிரதானமாக பார்க்கப்படுகின்றனது.
தொடர்பு திறன் (communication skill) :
நமக்கு தெரிந்ததை பிறக்கு எளிய முறையில் எடுத்து சொல்லும் திறன் தான் தொடர்பு திறன் (communication skill) , கேள்விகள் கேட்க்கப்படும் போது சரியான பதிலை தெளிவாக எடுத்துறைக்க தொடர்பு திறன் மிக அவசியம். மேலும் குழு கலந்துறையாடல் (Group Discussion) தேர்வில் வெற்றி பெற இந்த தொடர்பு திறன் மிக அவசியம்.
படித்த பாடத்தில் ஆழ்ந்த அறிவு (Subject knowledge) :
நாம் எந்த பாட பிரிவை (branch) தேர்ந்தெடுத்து படித்தோமோ அதில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல கூடிய அளவிற்க்கு நமது பாடங்களை நன்றாக படித்து இருக்க வேன்டும், மொத்த பாடபிரிவுகளையும் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இரண்டு அல்லது மூன்று பாட பிரிவுகளை (subject) மிக நன்றாக படித்து அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.
எல்லாம் சரிதான் இப்ப என்ன செய்வது ?
டிகிரி படித்து முடித்தாகிவிட்டது, போதிய ஆங்கில பேச்சாற்றல் இல்லை, communication skill இல்லை, பாட அறிவு (subject knowledge) ஓரளவிற்க்கு தான் இருக்கு, இப்ப என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கான வேலை தேடும் வழிமுறைகள்
Resume- தயாரித்தல் :
உங்கள் Resume-தான் உங்களை பற்றி வெளி உலகிற்க்கு தெரிவிப்பது. எனவே அதை தெளிவாக சுருக்கமாக எழுதுங்கள், உங்களுக்கு தெரியாததை Resume-ல் போடாதீர்கள், நன்றாக தெரிந்ததை மட்டும் போடுங்கள் ஓரளவிற்க்கு தெரியும் என்றால் , ஓரளவிற்க்கு தெரியும் என குறிப்பிடுங்கள் (Familiar with). சிறந்த Resume தயாரிக்க இணையதளத்தில் பல வெப்சைடைட்டுகள் உள்ளன அதை பார்த்து சிறந்த Resume தயாரித்து கொள்ளுங்கள்.
விண்ணப்பித்தல் :
தயாரித்த Resume-யை naukri.comtimesjobs.com போன்ற வேலை தேடும் இனையதளங்களில் Upload செய்யுங்கள், Email Notification-யை செலெக்ட் செய்து கொள்ளுங்கள் இதனால் தினமும் வேலை வாய்ப்பு சம்மந்தமான Email வரும் அதை தினமும் படித்து உங்களுக்கு பொருத்தமாக இன்டெர்வியூற்க்கு செல்லுங்கள்.
அதிக படியான இன்டெர்வியூவில் கலந்து கொள்ளுங்கள் :
வாய்ப்புகள் உள்ள அனைத்து இன்டெர்வியூவிலும் கலந்து கொள்ளுங்கள், வேலை கிடைக்காவிட்டாலும் , இன்டெர்வியூவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்கும், இன்டெர்வியூவில் நீங்கள் தோற்றாலும், இன்டெர்வியூ எடுத்தவரிடம் உங்களிடம் உள்ள குறைகளை கேளுங்கள், அதை குறித்து வைத்துகொண்டு அடுத்த இன்டெர்வியூவில் அந்த குறையை சரி செய்ய முயற்ச்சி செய்யுங்கள்
இப்படி தொடர்ந்து குறைகளை கலைந்து இன்டெர்வியூவில் கலந்து கொண்டால் 20-வது அல்லது 25-வது இன்டெர்வியூவிலாவது வேலை கிடைக்கும். இன்டெர்வியூவில் கலந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் feedback- யை தெரிந்து கொண்டு உங்களை அதற்க்கு ஏற்றார் போல் தயாரித்து கொண்டு அடுத்த இன்டெர்வியூ என தொடர்ந்து முயற்சி செய்தால் ஏதாவது இன்டெர்வியூவில் நிச்சயம் வேலை கிடைக்கும்.
திறன் வளர்த்தல் :
வேலை தேடிகொண்டே உங்களுடைய திறன்களை வளர்க்க தினமும் நேரம் ஒதுக்குங்கள், ஆங்கிலம் என்பது ஒரு மொழி எனவே பேச பேச தான் மொழி திறமை வளரும், உங்களை போல் வேலை தேடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள், ஆங்கில குர்ஆனையும் , தமிழ் குர்ஆனையும் ஒரு சேர படிப்பது ஆங்கில பேச்சற்றலை வளர்க்கும், உங்களுக்குள் ஆங்கிலத்தில் பயான் செய்து பழகுங்கள். உங்களுக்குள் mock interview நடத்துங்கள், அதாவது உங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் இன்டெர்வியூ கேள்விகளை கேட்க வேண்டும் , நீங்கள் அதற்க்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும் உதவிக்கு google-லை அழைத்து கொள்ளுங்கள், நீங்கள் டிகிரியில் படித்த பாடத்தில் 2 அல்லது 3 பாடங்களை (subject) தேர்ந்தெடுத்து அதை ஆழ்ந்து படியுங்கள், அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவிற்க்கு படியுங்கள்
நேரத்தை வீணாக்க வேண்டாம் :
படித்து முடித்த பட்டதாரிகளே! உங்களுக்கான வாய்ப்பு ஒர் ஆண்டுதான் , ஓர் ஆண்டிற்க்கு பிறகு அடுத்த ஆண்டு மாணவர்கள் வேலை தேட வந்துவிடுவார்கள் எனவே நேரத்தை வீணாக்காமல் வேலை தேடுவதற்க்கும், திறன்களை வளர்த்து கொள்வதற்க்கும் செலவிடுங்கள், கெட்ட நண்பர்களிடம் சேராதீர்கள். வாய்ப்பிருந்தால் சென்னை அல்லது பெங்களூருவிற்க்கு இடம் பெயர்ந்து வேலை தேடுங்கள், ஏனெனில் இப்படி பட்ட பெரு நகரங்களில்தான் அதிக அளவு இன்டெர்வியூ நடைபெறும் .
நினைத்த வேலை கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது ?
நினைத்த சம்பளத்தில், நினைத்த துறையில் வேலை கிடைக்க வில்லை என்றால் தளர்ந்து விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். குடும்பம் வறுமையில் இருந்தால், வேலை கிடைக்கும் வரை சிறிய வேலைகளை செய்யலாம், சென்னை போன்ற நகரங்களில் மாதம் 10 ஆயிரத்திற்க்கு நிச்சயம் ஏதாவது ஒரு BPO வேலை அல்லது அலுவலக வேலை கிடைக்கும், அதில் சேர்ந்து கொண்டு வேலை தேடலாம். தொடந்து முயற்சி செய்யுங்கள், திறன்களை வளர்த்து கொள்ளுங்கள் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்
சிறிய கம்பெனிகளில் குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள் 2 அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போடுவார்கள், இருந்தாலும் பரவாயில்லை, நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள், இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பின்னர் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கலாம்.
வேலையே கிடைக்கவில்லை என்ன செய்வது ?
எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம் ஓராண்டுகள் ஆகியும் வேலை கிடைக்க வில்லை என்ன செய்வது என்ற நிலையில் சில பட்டதாரிகள் இருக்கலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மேற்படிப்பு, B.Sc முடித்தால் M.Sc படியுங்கள், B.E முடித்தால் M.E/M.Tech படியுங்கள், இதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், PG-யிலாவது நன்றாக படியுங்கள், தேவையான திறனை வளர்த்து கொள்ளுங்கள், நீங்கள் மறுபடியும் ஒரு Fresher ஆகலாம், அப்போது வாய்ப்பை தவரவிடாமல் வேலை வாங்கிவிடுங்கள். மேற்படிப்பு படிப்ப GATE, TANCET , JAM போன்ற நுழைவு தேர்வுகளில் வெற்றி பெறுவது அவசியம், இதற்க்கான விண்ணப்பங்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கப்படும். எனவே வேலை தேடும் போதே இதற்க்கான விண்ணப்பங்களை வாங்கி அப்ளே செய்துவிடுங்கள், பின்னர் தேர்வு எழுதிகொள்ளலாம்.
எல்லாவற்றைவிடவும் மிக முக்கியமானது உங்களின் நம்பிக்கை, நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், கடினமாக உழைத்து வேலை பெறுவதற்க்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள், வேலை கிடைக்கும் வரை முயற்சி செய்யுங்கள், உங்கள் உழைப்பு வீண் போகாது
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?
இஞ்சினியரிங் படித்த பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதால், மாணவர்களும் , பெற்றோர்களும் இஞ்சினியரிங் படிப்பை தவிற்கின்றனர்,
உண்மையில் எதிர்கால வேலை வாய்ப்புகள் கணினி, ஆட்டோமேஷன் , தகவல் பகுப்பாய்வு (Data Analytics) துறைகளிளேயே இருக்கும்,
தற்போது தனியார் துறை மட்டும் அல்ல, அரசு துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன, அலுவலக வேலைகளை மென்பொருள்களே (Software) தற்போது செய்கின்றன, பல நிறுவனங்களில் தொழிலாளர்களை நிர்வகிக்கும் மேலாளர் (Manager) வேலையையும், மென்பொருள்களும் (Software) , செல்போன் செயலிகளும் (mobile Application) செய்கின்றன, வரும் காலங்களில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தொழில் நுட்பம் சார்ந்துதான் இருக்கும்.
இதனால் பொறியியல்(Engineering) கட்டாயம் படிக்க வேண்டும் என்றில்லை, பொறியியல் அல்லாத பிற படிப்பு படித்தவர்களும் தொழில் நுட்ப துறையில் சாதிக்கின்றனர்.
பொறியியல் படிப்பது மாணவர்கள் தொழில் நுட்ப துறையில் சாதிக்க உதவியாக இருக்கும் அவ்வளவுதான்.
சரி இஞ்சினியரிங் படித்தால் உடனே வேலை கிடைக்குமா ? என்ற கேள்விக்கு விடை அறிய நமது "படித்தால் வேலை கிடைக்குமா ?" என்ற வீடியோவை பார்க்கவும் https://www.youtube.com/watch?v=xiUsOg1tWOw&t=57s
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்க்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை தமிழகத்தில் உயரவில்லை. எனவே வேலை வாய்ப்பை பொருத்தவரை போட்டி கடுமையாக இருக்கும். வெறும் பொறியியல் படிப்பதால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது, அதற்க்கு கீழ் கானும் திறன்கள் இருக்க வேண்டும் அல்லது வளர்த்துகொள்ள வேண்டும்.
பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பகுப்பாய்வு (Analytical skill) போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.
படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால் நல்ல ஆங்கில மொழி திறமை (English Language skill), தொடர்பு திறன் (communication skill), தொழில் நுட்ப அறிவு (Technical knowledge or subject knowledge) ஆகிய திறன்கள் இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.
பொறியியல் படிப்பில் சேரலாமா ?
வெரும் டிகிரி வாங்குவதற்க்காக படிப்பவர்கள் கண்டிப்பாக பொறியியல் சேர வேண்டாம். தற்போது போட்டி மிக கடுமையாக உள்ளது. தொழில் நுட்ப துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் சேரலாம். பொறியியல் படிப்பிற்க்கு எதிர்காலம் இல்லை என்பதெல்லாம் பொய்யான வாதம் தான், திறனுள்ள மாணவர்களுக்கு என்றைக்கும் வேலைவாய்ப்பு காத்துகொண்டு இருகின்றது என்பதுதான் உண்மை.
பொறியியலில் எந்த பாட பிரிவில் சேரலாம் ?
தகவல் தொழில் நுட்பம் , Automation, Data Analytics, Machine learning, Artificial Intelligence போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே Electronics and communication (ECE), Computer science, Electronics and Electricals (EEE) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
பெரிய அளவில் வளராவிட்டாலும் தொய்வடையாத துறைகளான Mechanical, Civil, Production, Automobile போன்ற துறைகளையும் தேர்தெடுத்து படிக்கலாம். மேற்கண்ட பாடபிரிவுகளை படித்தாலும் மட்டும் போதாது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொண்டு இந்த பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால் எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொறியிலில் சிறப்பு பிரிவுகள் :
பொறியியல் படிப்பில் Aeronautical Engineering, Nano Science and Technology, Bio-Technology, Bio Medical Engineering, போன்ற சிறப்பு பிரிவுகள் பயிற்று விக்கப்படுகின்றன. சிறப்பு படிப்புகள் படிக்க ஆர்வம் இருந்தால் நல்ல மதிப்பெண் (above 95 cut off) எடுத்து அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லுரிகள், PSG போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கலாம், நன்றாக படித்தால் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது அல்லாமல் சாதாரண கல்லூரிகளில் சிறப்பு பிரிவுகளை எடுத்து படித்தால் பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைக்காது.
உடனடி வேலைவாய்ப்பை மைய்யபடுத்தாமல் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதற்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிப்பதற்க்கும் இவை ஏற்ற படிப்புகள். மேற்படிப்பிற்க்கு பிறகு ஆய்வு துறைகளில் அல்லது படித்தற்க்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே சிறப்பு பாட பிரிவு எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும், உடனடி வேலை வாய்ப்புதான் விருப்பம் என்றால் சிறப்பு பிரிவுகளை எடுக்க வேண்டாம். மேற்படிப்பு படிக்க விருப்பமும், கூடுதல் பொருளாதாரம் செலவு செய்ய வசதியும் இருந்தால் இப்படி பட்ட சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம், இல்லை என்றால் இவற்றை தவிப்பதே நல்லது.
எந்த கல்லூரியில் படிக்கலாம் ?
நல்ல கல்லூரிகள் என்பது சிறந்த பயிற்றுவிக்கும் முறை, தகுதிமிக்க ஆசிரியர்கள், கேம்ப்பஸ் இன்டெட்வியூ ஆகிய அம்சங்களை கொண்ட தாகும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன் கல்லூரிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட அம்சங்கள் சிறந்த முறையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ளலாம்.
பொதுவாக அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள். ஆனால் இங்கெல்லாம் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக கட்ஆஃப் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் கல்லூரியை நாம் தேர்வு செய்வதில்லை, நாம் எடுக்கும் மதிப்பெண்ணே தேர்வு செய்கின்றது. எனவே கூடுதல் மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள், அல்லது நாம் எடுக்கும் மதிப்பெண்ணிற்க்கு ஏற்ற கல்லூரியில் சேர்ந்து நன்றாக படியுங்கள்.
பொறியியல் (Engineering) படிக்க ஆகும் செலவு :
அரசு கல்லூரிகளை தவிர்த்து தனியார் கல்லூரிகளில் படிக்க வருடத்திற்க்கு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை செலவாகும், ஹாஸ்டலில் தங்கிபடிப்பதாக இருந்தால் கூடுதலாக ஆண்டிற்க்கு ரூ.50,000 வரை ஆகும். எனவே பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோற்கள் இந்த பொருளாதார செலவையும் கணக்கில் கொள்ளவேண்டும். அரசு கவுன்சிலின் மூலமே கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், தனியார் கல்லூரிகளில் நன்கொடை (donation) கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சேர்வதை தவிர்க்கலாம்.
மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் பொறியியல் படிக்கலாமா ?
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது குறைவான மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது கல்லூரியில் ECE பிரிவே கிடைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என்ற உறுதியும், ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறனை (communication skill) வளர்த்து கொள்ள ஆர்வமும் இருந்தால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம், நான் சுமாராகத்தான் படிப்பேன் வருங்காலத்திம் இப்படிதான் இருப்பேன் என நினைக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பை தவிற்க்கலாம்.
வேறு என்ன வழிகளில் பொறியியல் படிக்க முடியும் ?
+ 2 முடித்த பிறகு , B.Sc கணிதம் (Mathematics), B.Sc இயற்பியல் (Physics), B.Sc வேதியியல் (Chemistry) 3 வருடம் படித்து , அதன் பிறகு M.Sc கணிதம் (Mathematics), M.Sc இயற்பியல் (Physics), M.Sc வேதியியல் (Chemistry) 2 வருடம் படித்து GATE அல்லது TANCET தேர்வு எழுதி தேர்சி பெற்று முதுகலை பொறியியல் படிப்பான M.E / M.Tech படிக்கலாம். அதன் பிறகு பொறியியல் துறையில் வேலைக்கு சேரலாம். இந்த முறையில் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் தான் செலவாகும். ஆனால் கால அளவு அதிகமாக இருக்கும். B.Sc, M.Sc பிறகு M.E/M.Tech படித்து முடிக்க மொத்தம் 7 வருடம் ஆகும்.
பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள 10-ஆம் வகுப்பு , 11-ஆம் வகுப்பு மாணவர்களே !
பொறியியல் படிக்க ஆர்வம் இருந்தால் முதலில் JEE எனப்படும் மத்திய அரசு நடத்தும் பொறியியல் நுழைவு தேர்வுவை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து IISc/IIT/NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்ததாக +2 -ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பாடத்தில் 90 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க முயற்ச்சி செய்யுங்கள், நேரத்தை வீணாக்காமல் இப்போதே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்பில் (B.E/B.Tech) சேர்வது எப்படி ?

ஆன்லைன் பொறியியல் (Engineering) கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்பில் (B.E/B.Tech) சேர்வது எப்படி ?
கடந்த ஆண்டில் இருந்து தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் (இணையதளம்) மூலம் மட்டுமே நடத்தபடுகின்றது, இதன் மூலம் நாம் வீட்டில் இருந்தே நமக்கு விருப்பமான கல்லூரி/ பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளுக்கு மட்டும் ஆன்லைன் கவுன்சிலிங் இல்லை, இவர்கள் சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்க்கு வந்து நேரடியாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் .
பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறை மூன்று கட்டங்களாக உள்ளது, முதலில் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், இரண்டாவதாக சான்றிதழ் சரிபார்ப்பு TFC (TNEA facilitation centers) எனப்படும் உதவி மைய்யங்களில் நடைபெறும், அதன் பின்னர் RANK பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும், தற்போது RANK பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் துவங்க உள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பில் இடம் தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்.
மாணவர்களின் Rank-கை பொருத்து பொறியியல் கவுன்சிலிங் 5 பிரிவுகளாக நடைபெறும், நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் முதல் பிரிவிலும், அடுத்து அடுத்து மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த அடுத்த பிரிவிலும் வருவார்கள், விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் கல்லூரி /பிரிவை தேர்வு செய்ய குறிபிட்ட தேதி ஒதுக்கப்பட்டு இருக்கும், (மொத்தம் 3 நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்) இந்த மூன்று நாள்களில் http://tneaonline.in/ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் User name மற்றும் பாஸ்வேர்ட் மூலம் Log-in செய்ய வேண்டும். முதலில் முன்பண தொகை ரூ.5000 கட்ட வேண்டும் (சலுகை உள்ளவர்கள் ரூ.1000 கட்ட வேண்டும்) .
பின்னர் இணையதளத்தில் உள்ள "ADD CHOICES" என்ற option மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் உள்ள விரும்பும் பாட பிரிவை தேர்வு செய்யலாம், எத்தனை கல்லூரிகள் விருப்பமோ அத்தனை கல்லூரிகளை , பாட பிரிவுகளை தேர்வு செய்யலாம். உங்களின் முதல் விருப்பம் எது, இரண்டாம் விருப்பம் எது என வரிசைபடுத்தி கொண்டே செல்லலாம். உங்களுக்கு இடம் வழங்கும் போது உங்களின் முதல் விருப்பத்தை பார்ப்பார்கள் அது காலியாக இருந்தால் அதை உங்களுக்கு வழங்குவார்கள், இல்லை என்றால் இரண்டாவது விருப்பத்தை பார்ப்பார்கள் இப்படியே வரிசையில் உள்ள உங்களின் விருப்பத்தின் அடிப்படையில் காலியாக உள்ள இடத்தை உங்களுக்கு ஒதுக்குவார்கள் எனவே உங்களுக்கு எது மிக விருப்பமான கல்லூரியோ, பாட பிரிவோ அதை முதலில் குறிபிடுங்கள்.
கல்லூரி / பாட பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது ?
கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையின் விபரங்கள் http://tneaonline.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரி / பாட பிரிவுகளை பாருங்கள், இதில் இருந்து உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு எந்த கல்லூரியில் என்ன பிரிவில் இடம் கிடைக்கும் என தோராயமாக கணக்கிடலாம், இதை வைத்து கொண்டு கல்லூரி / பாட பிரிவுகளை உங்களின் விருப்ப பட்டியலில் சேருங்கள்.
பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் சேர்வது ?, எந்த கல்லூரியில் சேர்வது ? என்பதற்க்கான விளக்கங்கள்
"என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?"https://www.facebook.com/wisdomkalvi/posts/805392253167360/ என்ற ஆக்கத்திலும்,
“பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/842299609476624 என்ற ஆக்கத்திலும் உள்ளது. கல்லூரி, பாட பிரிவுகளை தேர்வு செய்யும் முன் அதை ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.
விருப்பபட்டியலை உறுதி செய்தல் :
அவர்கள் குறிபிட்ட 3 நாள்களுக்குள் உங்கள் விருப்ப பட்டியலை http://tneaonline.in/ இணையதளத்தில் பதிவு செய்யுங்கள், பின்னர் “LOCK MY CHOICES” என்ற option மூலம் உங்கள் விருப்ப பட்டியலை இறுதி செய்யுங்கள், இறுதி செய்யும் போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு OTP நம்பர் வரும் அதை http://tneaonline.in/ வெப்சைடில் டைப் செய்து உங்கள் விருப்ப பட்டியல் இறுதி செய்யலாம், ஒரு முறை விருப்ப பட்டியலை இறுதி செய்தால் பின்னர் மாற்ற முடியாது எனவே இறுதி செய்யும் முன் கவனாமாக இருங்கள்.
தற்காலிக ஒதுக்கீடு :
மாணவர்களின் விருப்ப பட்டியல் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாட பிரிவு ஒதுக்கப்படும். அவர்கள் ஒதுக்கிய கல்லூரி / பாட பிரிவு நமக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட கலந்தாய்வின் மூலம் நாம் வேறு கல்லூரி / பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். (அதாவது மேற் சொன்ன முறையில் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம்). ஒரு வேளை நாம் கேட்ட அனைத்து கல்லூரிகளிலும் இடம் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் ஒதுக்கப்படாது, அடுத்த கட்ட கவுன்சிலிங் மூலம் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம். கடந்த ஆண்டு பொறியல் சேர்க்கை விபரங்களை பார்த்து நமது விருப்ப பட்டியலை தேர்வு செய்தால் இப்படி பட்ட சூழ்நிலை வராது, எனவே மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்னிற்க்கு ஏற்ப கல்லூரியை, பாட பிரிவிவை தேர்வு செய்யுங்கள்.
அவர்கள் வழங்கிய தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 நாள்கள் வழங்கப்படும். அதற்க்குள் நாம் ஏற்று கொள்ள வேண்டும் அல்லது நிகாரித்துவிட்டு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். எதுவுமே பிடிக்கவில்லை என்றாலோ, பொறியியல் படிப்பே வேண்டாம் என முடிவு செய்தாலோ கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறி விடலாம் (அதற்க்கான option இணையதளத்திலே உங்களுக்கு வழங்கப்படும்).
இறுதியாக அவர்கள் ஒதுக்கிய இடம் நமக்கு பிடித்து இருந்தால் அதை உறுதி செய்யலாம், பின்னர் நமக்கு Allotment order வழங்கப்படும், ஈ-மெயிலிலும் அனுப்புவார்கள் அல்லதுhttp://tneaonline.in/ இணையதளத்திலும் download செய்து கொள்ளலாம். பின்னர் அந்த Allotment order-ரை பிரின்ட் அவுட் எடுத்து சம்மந்த பட்ட கல்லூரியில் குறிபிட்ட தேதிக்குள் சமர்பித்து மீத கட்டணத்தை செலுத்தி பொறியியல் படிப்பில் சேரலாம்.
ஆன்லைன் கவுன்சிலிங் பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

GATE EXAM

இந்தியாவில்உள்ள IIT, NIT, மத்திய கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை கழகம், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.
இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரி மற்றும் படிப்பிற்க்கு ஏற்ப அரசு மாதம் ரூ.12,400 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது). இந்த தொகை மூலம் கல்வி கட்டணம், ஹாஸ்டல், உணவு, புத்தகம் என அனைத்து வகையான செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் நிறைவேற்றிகொள்ளலாம்.
இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் பெரும்பாலோன மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. கவனத்துடன் படித்தால் எந்த தேர்வையும் வெல்லலாம்.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
இது முழுக்க முழுக்க ஆன்லைனில் நடக்கும் தேர்வாகும். தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படும். கணினியில் தேர்வு என்பதால் , தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் ( Multiple Choice Questions) மற்றும் எண்களில் பதில் அளிக்கும் முறை (Numerical Answer) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 65 கேள்விகள் 100 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking).
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech (பொறியியல் படிப்பு) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல் ( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் (https://appsgate.iitd.ac.in/) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 24 (24-09-2019)
விண்ணப்ப கட்டணம் ரூ.1500
தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளாம்.
தேர்வுகள் 2020 பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
2020 மார்ச் 16-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
GATE - தேர்வில் தேர்சி பெற்றிருந்தால் நாம் விரும்பும் கல்லூரி/ பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.
GATE-தேர்வை பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டால் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

MBA படிக்க படிக்க விருப்பமா ? CAT தேர்விற்க்கு

MBA படிக்க படிக்க விருப்பமா ? CAT தேர்விற்க்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்புகளில் IIM-ல் உள்ள MBA படிப்பும் ஒன்று (IIM-ல் இதை PGP படிப்பு என்றும் அழைப்பார்கள்). அதிக சம்பளமும், பெரிய நிறுவங்களை நிர்வகிக்கும் பொருப்புகளையும் பெற CAT என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் எழுதி தேர்சி பெற வேண்டும். இப்போது இந்த தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 18 (18/09/2019).
தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் பல இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாம் மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM- ல் படித்தவர்கள். CAT மதிப்பெண்ணை வைத்து இன்ன பிற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் MBA படிப்பில் நேரடியாக சேரலாம். தமிழகத்தில் திருச்சியில் உள்ள NIT, வேலூரில் உள்ள VIT, சென்னையில் உள்ள Loyola கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் CAT மதிப்பெண்ணை வைத்து MBA சேரலாம்.
CAT நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
தேர்வு நடைபெறும் நாள் : நவம்பர் 24 (24/11/2019)
இது கணினியில் எழுதும் தேர்வாகும் (Computer based exam). CAT தேர்வு மூன்று பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Verbal Ability and Reading Comprehension (VARC), இரண்டாம் பகுதி Data Interpretation and Logical Reasoning (DILR), மூன்றாம் பகுதி Quantitative Ability. ஓவ்வொரு தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 180 நிமிடங்கள். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் தேர்ந்தெடுக்கும் முறை வகை ( Multiple Choice Questions) மற்றும் நேரடி கேள்வி வகையில் இருக்கும். தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் (Multiple Choice Questions) பகுதியில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking). நேரடி கேள்வி வகைகளில் Negative marking கிடையாது.
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் எழுதலாம்
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
3. இந்த தேர்வை எழுத வயது வரம்பு இல்லை.
இட ஒதுக்கீடு : பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27%, SC - 15 %, ST – 7.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். https://cdn.digialm.com/…/confi…/756/62128/Registration.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் ரூ.1900, தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம்.
சென்னை , மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உட்பட இந்தியாவில் பல நகரங்களில் தேர்வு நடைபெறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், அனைத்து ஐஐஎம்-களின் இணையதளங்களில் தர வரிசை பட்டியல் வெளியிடபடும். அதற்கேற்ப மாணவர்கள் அழைக்கப்படுவார்கள், எழுத்து தேர்வு (Written Ability Test), குழு விவாத திறமை (Group Discussion), நேர்முக தேர்வு (Personal Interviews) மூலம் மாணவர்கள் குறிப்பிட்ட ஐஐஎம் - களில் சேர்க்க படுவார்கள். CAT 2019 மதிப்பெண்ணுக்கான validity ஓர் ஆண்டு மட்டுமே.
இந்த தேர்வை பற்றி விபரங்கள் https://iimcat.ac.inஇணையதளத்தில் உள்ளது, மேலும் விபரங்கள் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Tuesday, July 23, 2019

மத்திய /மாநில அரசு பணி

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES -  indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

*இந்த பதவிகளில் எல்லாம் வடநாட்டு காரர்களும் கேரளா காரர்களும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.*

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, June 29, 2019

www.bse.ap.gov.in

நல்ல செய்தி!
அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், மத்திய அரசு நடத்தும் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 12000 / -, 9,10,11,12 ஆம் வகுப்பு (9 ஆம் வகுப்பு முதல் இடைநிலை வரை) அதாவது 4000 "48000 / - வரை கிடைக்கும்.
  விண்ணப்பிக்க கடைசி நாள்: -26-09-2019,
  தேர்வு தேதி: - 04-11-2019
  வலைத்தளம் www.bse.ap.gov.in

  உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தச் செய்தியைக் கற்றுக் கொடுத்து ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.

Wednesday, June 19, 2019

விரும்பியதை படி !

உனக்கு விரும்பியதை படி !
                      -  ஆக்கம் : அபூ ஸலாம், காயல்பட்டினம் மாணவரணி

பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து கல்லூரியை தெரிவு செய்ய கூடிய கட்டத்தில் பல மாணவர்கள் யோசிக்கக்கூடிய கால கட்டம் இது.  பன் முனைகளிலிருந்தும் ஆலோசனைகள், அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.

எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது ?

பெற்றோர் சொல்வதையா ?

நண்பர்கள் சொல்வதையா ?

உறவினர்கள் சொல்வதையா ?

ஆசிரியர்கள் சொல்வதையா ?

என யாரை திருப்திக்கொள்ள வைப்பது என மாணவர்கள் சிந்துத்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், உண்மையில் இவர்கள் யாரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுரை வழங்கிய பலர் ஆறு மாதத்தில் அறியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

நாம் ஒன்றை தெரிவு செய்து படிக்கும் போது பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டும்.

ஏனென்றால் நாம் படிக்கும் இந்த படிப்பு தான் இறுதி வரை நமது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கப் போகிறது.

மற்றவர்கள் சொல்லை கேட்டு ஒன்றை படிப்பதை விட, நமக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது ? அந்த துறை மார்க்க வரம்புக்கு உட்பட்ட எந்த துறையாக இருந்தாலும் அதை நாம் தெரிவு செய்யலாம்.

ஆனாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அதன் பிறகு தெரிவு செய்வதே சிறந்ததாக இருக்கும்.

ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த துறையை பற்றியான விவரங்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.

ஒரு துறையில் நுழையும்  முன் தொலைநோக்கு பார்வை மிக அவசியம்.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு ஆட்கள் தேவை என்பதை உணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மலிந்து போன துறைகளை தேர்ந்தெடுத்துப் படித்தால் அதற்கு வேலை கிடைப்பது மிகக் கடினம்.

உதாரணமாக, பிளாஸ்டிக் இந்த பூமிக்கு கேடு என்பதால் உலகம் முழுவதும் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது. எனவே, நாம் துறையை சார்ந்த படிப்புகள் படிக்கும் போது எதிர்காலத்தில் வேலை என்பது கேள்விக்குரியாகிவிடும்.

அதனால், பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்கு மாற்று என்ன என்பதை கண்டறிந்து இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பத்தை கற்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

அன்புள்ள மாணவ, மாணவிகள் தங்களது துறையை பல முறை யோசித்து அந்த துறையில் தடம் பதித்த பலரை சந்தித்து ஆலசனைகளை பெற்ற பின்பே தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் !

நன்றி: உணர்வு

Friday, March 29, 2019

B.A. டிபென்ஸ்

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

பகிருங்கள்..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

Saturday, March 2, 2019

Land Measurement calculator Live


https://convertlive.com/u/convert/hectares/to/square-feet

Land Measurements calculator