Sunday, December 4, 2016

பட்டா,அடங்கல்,சிட்டா

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடையகட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்
ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்
.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை
நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும்.
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும்.
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ்

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும். மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் வழி வகை செய்ய‍ப்பட்டுள்ள‍து.
இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகை யான சான்றிதழ்கள் அனைத் து தனியார் மற்றும் அரசா ங்க அலுவ லகங்களலும் ஏற்று கொள்ளப்படும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண் டிய எல்லாம் கீழ்க்கண்ட இ ணைய முகவரிக்குச் சென்று “Register Citizen” என்பதை கிளி க்செய்து உங்ளுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழுவிபரமும் ரிஜிஸ்டர் ஆகிவிடும். பின்னர் உங்களுக்கு தேவை யான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம்.
இணைய முகவரி http://edistrict.tn.gov.in/ —

Monday, August 24, 2015

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)
சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம்



ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது இரண்டு/மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தினை நமது மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியின் தகுதி உள்ள ஒருவர் தலைவராக இருப்பார். இந்தப் பதவிக்கு மாவட்ட நீதிமன்ற, நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரையே, மாநில அரசாங்கம் தலைவராக நியமிக்கிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவபர்கள் கல்வி, கேள்விகளில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்! என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிபந்தனை விதித்திருக்கிறது. ஆனால், ஓரளவு படித்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நீதிமன்றம் நடைபெறும். தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தால்கூட நுகர்வோர் நீதிமன்றம் நடைபெறும். தலைவர் வரவில்லை என்றால், இந்த நீதிமன்றம் நடைபெறாது.

மற்ற நீதிமன்றங்களைப் போல சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும், சாட்சிகளை விசாரிக்கவும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

வழக்கறிஞர்களோ, மனுதாரர்களோ தங்களது வாதுரைகளை (Arguments) வாய்மொழியாகவும், எழுத்துமூலமாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
மனுவினை தமிழிலோ, ஆங்கிலத்திலோ தாக்கல் செய்யலாம். மனுவினை மனுதாரரோ, வழக்கறிஞரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தவரோ தாக்கல் செய்யலாம்.

மனுதாரர், எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முகவர்கள் ஒவ்வொரு கேட்புநாளின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மனுதாரர், எதிர்மனுதாரர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். அவர்களுக்குப் பதிலாக, அவர்களது வழக்கறிஞர்கள் அல்லது முகவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்க வேண்டும்.

மனுதாரர் அல்லது மனுதாரரின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு அற்றும் ஆவணங்கள் குறிப்புரைகள் (Memos) ஆகிய எதற்கும் நீதிமன்ற முத்திரை வில்லைகள் (Court fee stamls) ஒட்ட வேண்டிய அவசியமில்லை. வழக்குரைக்கும் அதிகார ஆவணமான (Vakalat) வக்காலத்தில் மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையும், வழக்கறிஞர் நலநிதி முத்திரை வில்லையும் ஒட்டப்படுதல் வேண்டும்.

எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் (Vakalat) மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை மற்றும் வழக்கறிஞர் நலநிதி முத்திரைவில்லை ஒட்டினால் போதுமானதாகும். மற்றபடி எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் எதிர்விரை, மெய்ப்பு உண்மை உறுதிமொழி (Proof Affidavit) ஆவணம், ஆவணங்கள் (Documents), வரைமொழி வாதுரை (Written Argument), குறிப்புரை (Memos) ஆகிய எவற்றிற்கும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை ஒட்டவேண்டிய அவசியமில்லை.

மனுதாரர் தரப்பு ஆவணங்கள் A வரிசையிலும் , எதிர்மனுதாரர் தரப்பு ஆவணங்கள் B வரிசையிலும் குறியீடு செய்யப்படும். ஆவணங்கள் (Original documents) அசல் ஆவணங்களாகவோ, ஜெராக்ஸ் நகல்களாகவோ இருக்கலாம். ஆனால், நீதிமன்றம் அசல் ஆவணங்களைக் கோரினால், அவற்றையே மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆவணம் ஒவ்வொன்றையும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் மேலுரையுடன் (with Docket) தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வக்காலத், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முகவரியிட்ட இரண்டு பதிவு அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். மனு சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் எதிர்ம்னுதாரருக்கு வழக்குப் பற்றிய அறிவிப்பும், மனுவின் நகலும் அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு கேட்பு நாள் (Hearing Date) தெரிவிக்கப்படும்.

மனுவை கோப்பில் எடுப்பதற்கு முன்னர், சில விளக்கங்கள் தேவைப்பட்டால், அந்த விளக்கத்தை வழக்கறிஞரிடம் கேட்டு, நீதிபதி திருப்தி அடைந்த பிறகு, அந்த மனுவை கோப்பில் எடுப்பார். வழக்கறிஞரின் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால், அந்த மனுவை கோப்பில் எடுக்கமாட்டார்.

மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரும் அவரவர் தரப்பு சாட்சிகளை அவரவர்களே முன்னிலைப்படுத்த வேண்டும்.

சாட்சிகள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தால்தான் வருவேன் என்று கூறினால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாமே பெற்று, அந்த சாட்சிக்கு அழைப்பாணையை சார்வு செய்யலாம்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சாட்சிகளை விரிவான நிலையில் விசாரிக்க, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் காலம் இடந்தரவில்லை என்றுரைத்து தனை விரிவான நிலையில் விசாரிப்பதற்குரிய நீதிமன்றம், உரிமையியல் (Civil Court) நீதிமன்றம்தான். அதனால். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று, நுகர்வோர் சட்டத்தின் கீழான வழக்கொன்றை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைக்க முடியாது.

மனுதாரர் தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்பினால், குறிப்புரை ஒன்று தாக்கல் செய்து, திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வது சம்பந்தமாக, தமது மனுவிலும் எழுதி தமது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சமரசம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இருவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் குறிப்புரை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.

மனுவில் இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு தீர்ப்புரை வழங்கப்படும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் எதிர்வுரை (Counter) 45 நாட்களில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர் முன்னிலையாகாததால், ஒருதலைபட்சத் (Exparte) தீர்ப்பானால், அதனை நீக்கறவு (Setaside) செய்ய முடியாது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதே நேரத்தில், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்பவர்கள், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமலிருக்க தடையாணை (Stay order) பெற்றிருக்க வேண்டும். தடையாணை பெறப்படவில்லை எனில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும்.

எந்தெந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் வழக்கிடலாம்?
**********************************************************
பொருள்கள் எதனையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் போது அவைகள் பழுதுடையவைகளாகவோ, குறைபாடு உடையவையாகவோ இருக்கும்போது அந்தப் பொருள்கள் எவரிடம் வாங்கப்பட்டதோ அவரிடமே அதனை ஒப்படைத்து, வேறு நல்ல பொருள்களை தரும்படி கோர வேண்டும். அவர் அவ்வாறு குறைபாடுடைய பொருள்களுக்குப் பதிலாக வேறு நல்ல பொருளை மாற்றித் தராதபோது, விற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குண்டான தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவர்மீது இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

நபர் ஒருவருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கிடுமுன், அதனை எதிர்தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முன்னதாக அறிவிப்புக் கொடுப்பது நல்லதாகும்.

சேவைக்குறைபாடு தொடர்பாக வழக்கிடுதல்
************************************************
வழக்கறிஞர் ஒருவர் தமது கட்சிக்காரரிடம் வழக்குகளை நடத்த பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி வழக்குகளை நடத்துதல் வேண்டும். வழக்கறின்கரின் வருகையின்மையால், வழக்கு அவரது கட்சிக்காரருக்கு பாதகமானால், அதனால் ஏற்படும் இழப்புக்கு வழக்கறிஞர் பொறுப்பாவார். அதன் பொருட்டு வழக்கறிஞரிடம் இருந்து இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டபோது அவரது தவறான சிகிச்சையால் நோய் குணமடையாதிருந்தாலோ, தவறான அறுவை சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோயாளி மருத்துவரிடம் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொறியாளர் ஒருவர், வீடு கட்டித் தருவதாக ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான முறையில் வீட்டைக் கட்டித்தராமல் இருந்தாலோ, புதிய வீடு கட்ட அடமானத்தின் மூலம் கடன் தொகையை வழங்க முன்வந்திருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், உடனுக்குடன் கடன் வழங்காமல் இருந்தாலோ, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவற்றை பழுதுபார்த்தவர், அவைகளை சரியாக பழுது பார்க்காமல் இருந்தாலோ, கூரியர், அஞ்சல், மணியார்டர் போன்றவை காலதாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டாலோ, தொலைபேசித்துறை சரியான சேவை செய்யாமல் கட்டணம் பெற்றாலோ, கட்டணத்தை கூடுதலாக பெற்றாலோ, கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இனைப்புக் கொடுக்காமல் இருந்தாலோ, மருத்துவர் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாததால் பெண்மணி ஒருவர் கருவுற்றாலோ சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார்தாரர் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

எந்தெந்த வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது
*****************************************************
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, இந்திய தண்டணைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள், கடனுறுதிச் சீட்டு, விவாக ரத்து, குழந்தைகள் மீட்பு, ஜீவனாம்சம், அடமான மீட்பு, வாடகைப் பிரச்சனை, நிலப்பிரச்சனையில் தடையாணை பெறுதல் சம்பந்தமான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.

அவசரத் தன்மை - Emergent Petition



உரிமையியல் வழக்குகளில் (Civil Cases) எந்த வழக்காக இருந்தாலும், எந்த மனுவாக இருந்தாலும் அதனை அவசரத் தன்மையுடன் தாக்கல் செய்யலாம். மனுவை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்வதற்கு அவசரத்தனை மனு (Emergent Petition) மற்றும் உண்மை உறுதிமொழி ஆவணத்தை (Affidavit) தாக்கல் செய்வது அவசியமாகும். 

வழக்கு அல்லது மனு அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப் படும் போது, அது சரியான முறையில் இருக்கும் நிலையில் அன்றைய தினமே எண் கொடுக்கப்பட்டு, கோப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவசரத்தன்மை மனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தில் (Affidavit) வாதி/மனுதாரரின் கையொப்பத்தைப் பெற்று, வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து சான்றொப்பம் (Attestation) பெறுதல் வேண்டும். வழக்கை நடத்தும் வழக்கறிஞரே தமது கட்சிக்காரரின் கையொப்பத்தை உறுதி செய்வதாக சான்றொப்பம் இடக்கூடாது.

உண்மை உறுதிமொழி (Affidavit) ஆவணத்தில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை (Court fee Stamp) ஒட்டுதல் கூடாது.
மனு மற்றும் அதனுடன் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தின் நகல் எதையும் எதிர்வாதி மற்றும் மனுதாரருக்கு அளிக்க வேண்டியதில்லை. மேலும் அது குறித்து எதிர்வாதி/எதிர்மனுதாரருக்கு அறிவிப்பும் கொடுக்க வேண்டியதில்லை.

சொத்து எந்த வகை ...??



சொத்து வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா என சொத்து தொடர்பான ஆவண சரிபார்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். சொத்துக்கான பத்திரம், பட்டா சரியாக இருந்தாலும் அந்த சொத்து விற்பனை செய்பவருக்கு எந்த வகையில் வந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பாகப்பிரிவினை

அந்த ஆவணங்களை நன்றாக படித்து பார்த்து விட்டு அதில் வேறு ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கும் வகையிலான வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில் சொத்தை விற்பனை செய்பவருக்கு அது அவருடைய சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அதைவிடுத்து அவருக்கு வேறு வகையில் சொத்து வந்திருந்தால் அதில் இருக்கும் விவரங்களை கூர்ந்து படித்து இறுதி செய்வது நல்லது.

அதிலும் பாகப்பிரிவினை மூலம் சொத்து வந்திருந்தால் முறைப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாகப்பிரிவினை செய்திருப்பார்கள். ஆனால் தனித்தனியாக அவரவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை உங்களுக்கு விற்பனை செய்பவர் மட்டும் பத்திரப்பதிவு செய்து இருக்கலாம்.

பத்திரப்பதிவு

அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக குறிக்கப்பட்டிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இடத்தின் நான்கு பக்கங்களிலும் என்னென்ன இருக்கிறது என்பதுடன் அந்த இடத்தின் பரப்பளவு சரியாக இருக்கிறதா? என்பதை சர்வேயர் மூலம் உறுதி செய்து கொள்வது அவசியம்.

ஏனெனில் சொத்தை விற்பனை செய்பவருடைய குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தங்கள் பாகப்பிரிவினை இடத்தை பத்திரப்பதிவு செய்யும் போது இட அளவுகள் சரியாக இருந்து வில்லங்கம் ஏற்படாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. அதுபோல் சொத்தை விற்பனை செய்பவர் தன்னுடைய பெயருக்கு பட்டா உட்பிரிவு செய்து இருக்கிறாரா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்

அவர் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் பத்திரப்பதிவு மட்டும் செய்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்கான பட்டா அவருடைய குடும்பத்தினர் பெயரில்தான் இருக்கும். அதை அவருடைய பெயருக்கு மாற்றிய பிறகுதான் நீங்கள் உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவர் சொத்தை விற்கும் அவசரத்தில் உங்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்து கொடுத்துவிட்டால் பின்னர் பட்டாவுக்கு அவரை தேடி அலைய வேண்டியிருக்கும்.

அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை இல்லை. எனவே வாங்கும் சொத்தின் பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் அவர் பெயரில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம்.

நிபந்தனைகள்

அதேபோல் சொத்தை விற்பனை செய்பவருக்கு அந்த சொத்து தானப்பத்திரம் மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். அவருக்கு அந்த சொத்தை தானமாக கொடுத்தவர் யார்? என்பதை தெரிந்து கொள்வதுடன் அவருடைய முழு சம்மதத்துடன்தான் சொத்து எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக சொத்தை எழுதி கொடுத்தவர் ஏதேனும் நிபந்தனைகள் எதுவும் குறிப்பிட்டிருக்கிறாரா? என்பதை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

ஏனெனில் சொத்தை தானமாக கொடுத்தவர் வாழ்நாள் மூலம் அதை தானமாக பெற்றவர் அனுபவிக்க மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுபோல் வேறு ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிட்டிருந்தாலும் அப்படிப்பட்ட சொத்தை வாங்குவது சிக்கலை உருவாக்கி விடும். அதுபோல் தான–செட்டில்மெண்ட் மூலமும் ஒருவருக்கு சொத்து கிடைத்திருக்கலாம்.

சொத்தின் வகை

அது அவருடைய குடும்ப உறவுகளிடமிருந்து அல்லாமல் வேறொருவர் மூலமாக பெற்றிருக்கலாம். ஒருவருக்கு சொத்து எப்படி வந்திருந்தாலும் அதில் வில்லங்கம், நிபந்தனைகள் ஏதும் இருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அதேபோல நீங்கள் வாங்கும் சொத்து மைனருடைய சொத்தாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சொத்தை நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய முடியும். எனவே வாங்கும் சொத்து எந்த வகையை சார்ந்தது என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு இறுதி முடிவு எடுப்பது நல்லது.

COMMUNITY, INCOME, RESIDENCE CERTIFICATE ONLINE,,,,,,,



சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ் , No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.
இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/

PAN Card - Mandatory



இந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது. வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும். இந்நிலையில் பான் எண் அவசியமாகத் தேவைப்படும் சில முக்கிய இடங்களையும், அதன் வழிமுறைகளையும் பார்ப்போம்...
பணப் பரிவர்த்தனை
****************************
ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய வியாபாரத்திற்கு நிரந்தரக் கணக்கு எண் அல்லது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது டீலர்களுக்குத் தரப்படும் தொகை மற்றும் தங்க நாணயம் வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
ஹோட்டல் அல்லது உணவு விடுதி
***************************************************
ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ஒரு ஹோட்டலுக்கோ அல்லது உணவு விடுதிக்கோ தரப்படும்போது பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
விமானப் பயணம்
***************************
வெளிநாடு செல்ல ஒரே சமயத்தில் பயணக் கட்டணமாகச் செய்யப்படும் செலவு இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விமான நிறுவனங்கள் பான் எண்ணை அவசிமாகப் பெறப்படுகிறது.
ஆயுள் காப்பீடு
*********************
ஒரு வருடத்திற்குள் ஐம்பதாயிரம் அல்லது அதற்கதிகமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டுப் பிரிமியத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.
வைப்பு நிதி திட்டம்
*******************************
வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வைப்புத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.
தொலைப்பேசி இணைப்பு
***************************************
தனிநபர் அல்லது அலுவலகத்திற்குத் தொலைப்பேசி அல்லது செல்ஃபோன் இணைப்புப் பெறத் தரப்படும் விண்ணப்பத்தில் கூடப் பான் எண்ணை முக்கியமாக ஆவணமாகக் கருதப்படுகிறது.
காசோலை
*****************
ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வங்கி ஆணை அல்லது காசோலைகளை வங்கிகளில் பெற விண்ணப்பிக்கும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்
பங்கு அல்லது கடன் பத்திரங்கள்
*********************************************
ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பங்கு அல்லது கடன் பத்திரங்கள் வாங்க அல்லது விற்கப்படும்போது செய்யப்படும் ஒப்பந்தத்தில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
வங்கிக் கணக்கு
************************
வங்கிக் கணக்கை துவக்கும் நபர் இளையவராக அதாவது மைனர் இருந்தால், அவருடைய தந்தை, தாய் அல்லது காப்பாளர் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு
********************************************
வங்கிகள் உங்கள் சேமிப்பு கணக்கின் மீது நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விரும்பினால், இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது பான் எண் கட்டாயமாகக் கோரப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டு
***************************
மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் அல்லது பங்குகள் வாங்கும்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்
பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி
******************
ஐம்பதாயிரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன்பத்திரங்கள் அல்லது பங்குப்பத்திரங்கள் வாங்கும்போது பாண் எண்ணை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்
வாகனம்
****************
கடந்த சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் அல்லது மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பாண் எண் பெறப்படுகிறது. இதன் மூலம் அரசு அதிக மதிப்புடைய உங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கவணிக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
படிவ எண் 60
******************
பான் எண் இல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புபவர் படிவ எண் 60ஐ சமர்ப்பிக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் வருமானம் பெறும் நபர் படிவ எண் 61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

Monday, August 17, 2015

கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?



கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரயப் பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

கிரயப் பத்திரம்:

கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும்.

காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் (OATH COMMISSIONER) முன்பாக பிறப்பிக்கப்பட்ட உறுதிமொழி (AFFIDAVIT), சர்வே எண் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தர வேண்டும்.

ஆவணக் கட்டணம் ரூ.100. இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.20 கட்ட வேண்டும்.

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்