Wednesday, July 8, 2020

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்றால் என்ன?

உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.

இந்தத் துறையின் தொழில்முறை ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக நடத்தை ,விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிக்கும் முறையாகும்.

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி ஆராயும் பிரிவு ஆகும். மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன. இதற்கென்று பல பரிசோதனைகளும் உள்ளன. பலதரப்பட்ட மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.

உளவியலாளர் என்பவர் யார்?

உளவியலாளர் என்பவர் உளவியல் துறையில் பட்டங்களைப் பெற்றவர், இவர் மனிதர்களுடைய செயல்பாடுகளைப்பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகளைப்பற்றி நான்கு அறிந்த நிபுணர் ஆவார். உளவியலாளர்கள் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி மனிதர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், புரிந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை எந்தெந்த காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என ஆராய்கிறார்கள். பொதுவாக உளவியலாளர்களிடம் வருகின்றவர்களுக்கு பல விதமான பிரச்னைகள், சவால்கள் இருக்கலாம். உதாரணமாக, சிலருக்கு உறவு சார்ந்த பிரச்னைகள், சிலருக்கு பெற்றோரிடம் பிரச்னைகள், சிலருக்கு வளர் இளம் பருவம் பற்றிய பிரச்னைகள், சிலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சிலருக்கு நாள்பட்ட நோய்கள்... இப்படிப் பல்வேறு பிரச்னைகளால் இவர்கள் உளவியலாளரிடம் வரும்போது, அவர்கள் சான்று அடிப்படையிலான ஊகங்களை வைத்துத் தலையீடுகளை உருவாக்கி, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சவால்களை அவர்கள் சந்திக்கவும், சமாளிக்கவும் உதவுகிறார்கள். பதற்றம், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடு, அச்சக் குறைபாடு, அளவுக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துதல் போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்கள் உளவியலாளர்களிடம் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு உதவுகிறார்கள்.உளவியலாளர்கள் தரும் சிகிச்சையின் அடிப்படை அறிவியலும், கட்டமைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் விதம் பல வகைகளில் அமைகிறது.

மருத்துவ உளவியலாளர்கள்: 

இவர்கள் பாதிக்கப்பட்டவருடைய உள்ளம் சார்ந்த அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள், முன்னிறுத்துகிறார்கள். அசாதாரணமான உளவியலைப்பற்றிப் படித்த உளவியலாளர்கள், பதற்றம், மனச்சோர்வு, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல், அவற்றிற்கு அடிமையாதல் போன்ற மனநலப் பிரச்னைகளைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்கள் குணம் பெற உதவுகிறார்கள்.    ஆலோசகர்கள்: பொதுவாக ஓர் ஆலோசகரிடம் வருகிறவருக்கு எந்தவிதமான மனநோயும் இருப்பதாகக் காணப்பட்டிருக்காது, அதே சமயம் அவர்களிடம் மனநலம் சார்ந்த சில பிரச்னைகள் காணப்படலாம். அவற்றைப் பேசி புரிந்து கொள்வதற்காக இவர்கள் ஆலோசகரிடம் வருகிறார்கள். இப்படி வருகிறவர்களிடம் ஆலோசகர்கள் பேசி அவர்களிடம் சமநிலையிமையை உண்டாக்கியிருக்கிற பிரச்னை என்னவாக இருக்கும் என்று கண்டறிகிறார்கள், அதை குணப்படுத்துகிறார்கள். பொதுவாக மனநல ஆலோசகரிடம் வருகிறவருக்கு பலவிதமான பிரச்னைகள் இருக்கக்கூடும். உதாரணமாக, தங்களுடைய அன்புக்குரியவரின் மரணத்தைத் தாங்க இயலாதவராக இருக்கலாம், சிலர் இப்போதைய அல்லது முந்தைய உறவுகளில் இருக்கும் பிரச்னைகளைத் தாங்க முடியாமல் சிரமப்படலாம், சிலர் நடவடிக்கை சார்ந்த பிரச்னைகளின் மூலம் பாதிப்புகளைச் சந்திக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் மனநல ஆலோசகர்கள் விரிவாகப் பேசுகிறார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு, புகைப்பழக்கத்தை விடுவதற்கு, அவர்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறார்கள்.

பள்ளியில் உள்ள உளவியலாளர்கள்: 

இவர் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருடன் இணைந்து பணியாற்றுகிறார், அவர்களுடைய கற்றல் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரிகிறார்.     பள்ளி உளவியலாளர்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றக் கூடும். அல்லது கல்வி சார்ந்த கொள்கைகளை உருவாக்குகின்ற நிர்வாக அமைப்புக்களுடனும் சேர்ந்து பணியாற்றக்கூடும்.வழக்கு சார்ந்த உளவியலாளர்: இவர் சட்டச் செயல்முறைகள் சார்ந்த உளவியல் அம்சங்களை ஆராய்கிறார், உதாரணமாக, குற்றவியல் விசாரணைகளில் கோட்பாடுகளை அமல்படுத்துதல், குற்ற எண்ணத்துடன் செயல்படுகிற ஒருவருக்கு என்னவிதமான உளவியல் பிரச்னை இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், குற்றம் செய்தவர்களுக்குச் சிகிச்சை வழங்குதல் போன்றவை. வழக்கு சார்ந்த உளவியலாளரைக் ‘குற்றவியல் உளவியலாளர்’ ‘ சட்ட உளவியலாளர்’ அல்லது ‘கிரிமினாலஜிஸ்ட்’ என்றும் அழைப்பதுண்டு.

நரம்பியல்-உளவியலாளர்: 

இவர் மூளைக்கும் அதன் நரம்பியல்- உளவியல் செயல்பாடுகளான பார்வை, ஞாபக சக்தி மற்றும் நுகரும் சக்தி ஆகியவற்றுக்கும் உள்ள உறவைப்பற்றி ஆராய்கிறார். மூளைக்காயம் அல்லது பிற நரம்பியல் பிரச்னைகளான பக்கவாதம், டிமென்சியா, கட்டி மற்றும் மூளைச்சிதைவுப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புனர்வாழ்வுக்கு இவர் உதவுகிறார்.

பணி சார்ந்த உளவியலாளர்: 

இவர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து சிறந்த செயல்திறனைப் பெறுவதற்கும், ஊழியர்கள் தங்கள் பணியில் திருப்தி அடைவதற்கும் உதவுகிறார். இந்தத்துறையில் அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் நிறுவனங்களுக்கும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல வகைகளிலும் உதவுகிறார்கள்: ஊழியர்களை ஊக்கத்துடன் செயல்படச் செய்வதற்கான வியூகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு பணிக்கும் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தல், தனி நபர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுதல், அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையைத் திட்டமிட உதவுதல், ஒரேமாதிரியான வேலையைச் செய்து சலிப்படைந்த ஒருவர் அதைச் சமாளிக்க உதவுதல் போன்றவை. ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நபர் பொருந்துவாரா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான உளவியல் பரிசோதனைகளையும் பணி சார்ந்த உளவியலாளர்கள் வடிவமைக்கலாம், பயன்படுத்தலாம்.

உளவியல் மதிப்பீடு என்றால் என்ன?

உளவியல் மதிப்பீடு என்பது, ஒருவர் எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார், எப்படி நடந்துகொள்கிறார், சில குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப்பற்றிய விவரங்களை ஓர் உளவியலாளர் கண்டறியும் வழிமுறை ஆகும். உளவியல் மதிப்பீடு என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது. உதாரணமாக, சம்பந்தப்பட்டவருடன் உரையாடுதல், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்தல், மதிப்பிடுதல், முறையான உளவியல் பரிசோதனைகளை நடத்துதல், பிற நிபுணர்களைத் தொடர்புகொண்டு தொடர்புடைய விவரங்களைப் பெறுதல் போன்றவை.

குறிப்பு: உளவியல் மதிப்பீடு என்பது ஒரு பரிசோதனையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது, பிறகு இந்தப் பரிசோதனையின் முடிவுகள் நிபுணரால் மதிப்பிடப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்படுகின்றன.பல்வேறு மதிப்பீடு முறைகளில் சேகரிக்கப்பட்ட வெவ்வேறு விவரங்களை நிபுணர்கள் தொகுக்கிறார்கள், அதன் அடிப்படையில் ஒருவருடைய திறன்கள் மற்றும் நடவடிக்கைகளைப்பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை உருவாக்குகிறார்கள். இந்த விவரத்தின் அடிப்படையில் அவருக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பது சிபாரிசு செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை அல்லது இளைஞருடைய உளவியல் மதிப்பீட்டை வைத்து அவருடைய கல்வி அல்லது பணி வாழ்க்கையைத் திட்டமிடலாம், மனநல பாதிப்பு கொண்ட ஒருவருடைய மதிப்பீட்டைக் கொண்டு அவருக்கு எத்தகைய சிகிச்சை தரவேண்டும் எனத் திட்டமிடலாம். மனநல மதிப்பீட்டில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, ஓர் உளவியல் அறிக்கையாக வெளியிடப்படுகின்றன.

உளவியல் பரிசோதனை என்றால் என்ன?

உளவியல் பரிசோதனை என்பது, ஒருவருடைய மனப்போக்கு மற்றும் புத்திசாலித்தனத் திறன்களைப் பரிசோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் தரநிலைப்படுத்தப்பட்ட உளவியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைகின்றன.உளவியல் பரிசோதனையின் வடிவமைப்பு பலவிதமாக மாறுபடலாம். உதாரணமாக, சில பரிசோதனைகளில் பேனா, பென்சில் கொண்டு தாளில் ஏதாவது எழுத வேண்டியிருக்கலாம், கணினி சார்ந்த பரிசோதனைகளும் உள்ளன. சில பரிசோதனைகளில் புதிர்கள் தரப்பட்டு அவற்றை விடுவிக்குமாறு கேட்கப்படலாம், சில பரிசோதனைகளில், மதிப்பிடப்படுகிறவர் ஓவியங்களை வரையவேண்டியிருக்கலாம். கணக்குகளைப் போடவேண்டியிருக்கலாம், அவருக்குச் சொல்லப்பட்ட ஏதாவது ஒரு விவரத்தை நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கலாம். சில மனநல பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டவர் பிறருடன் எப்படி பழகுகிறார்,     எப்படி நடந்து கொள்கிறார் என்பவையும் அளவிடப்படலாம்.இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஒரு தனி நபருக்குள் இருக்கும் திறன்கள் மற்றும் அவருடைய சாத்தியங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை உளவியலாளர்கள் வழங்குகிறார்கள். மதிப்பிடப்படும் நபருக்குத் தெரியாத விஷயங்களை ஊகித்து அறியும் உத்திகளும் உள்ளன. உதாரணமாக கருப்பொருள் அடிப்படையிலான தன்னை அறிதல் பரிசோதனை மற்றும் ரோர்ஸ்கார்ஷ் பரிசோதனை.

ஓர் உளவியல் பரிசோதனையில் எந்தெந்த அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன?

ஓர் உளவியல் பரிசோதனையில், பலவிதமான தன்மைகள் மதிப்பிடப்படுகின்றன:தகவமைப்புப் பதிவுமுறை மதிப்பீடுகள்: இந்த மதிப்பீடுகள் ஒருவருடைய சமூக மற்றும் இயல்பான திறன்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு குழந்தை சமூகச் சூழல்களில் எப்படி நடந்துகொள்கிறது, பள்ளியில் அல்லது வீட்டில் பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான வாழ்க்கைத் திறன்கள் அதற்கு உள்ளவனவா போன்றவற்றை மதிப்பிடுவதற்கு இந்தப் பரிசோதனை பயன்படும். பொதுவாக இந்தப் பரிசோதனை அறிவாற்றல் பரிசோதனையுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. குறிப்பாக, தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாதவர்கள் அல்லது குறைவான அறிவாற்றல் பிரச்னை உள்ளதோ என்று சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திறனறிதல் பரிசோதனை: 

இந்தப் பரிசோதனை, பல்வேறு செயல்பாடுகளை ஒருவரால் செய்ய இயலுகிறதா என்பதை மதிப்பிடுகிறது. உதாரணமாக, சிலர் இயக்கவியல் சார்ந்த செயல்பாடுகளில் மற்றவர்களைவிடச் சிறந்து விளங்குவார்கள், சிலர் மொழி மற்றும் புரிந்து கொள்ளுதல் திறன்களில் சிறந்து விளங்குவார்கள், சிலர் படைப்புணர்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். இப்படி வெவ்வேறு திறன்களில் ஒருவர் எவ்வளவு திறமைசாலி என்பதை அளவிடுவதில் இந்தப் பரிசோதனை கவனம் செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒருவர் சரிப்படுவாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், ஒருவருடைய திறன்கள் அடிப்படையில் அவருக்கு ஏற்ற வேலையைத் தீர்மானிப்பது எளிதாகிறது.

அறிவாற்றல் பரிசோதனைகள்: 

இந்தப் பரிசோதனைகள் ஒருவருடைய பிரச்னையை தீர்க்கும் திறன், தர்க்கரீதியில் சிந்திக்கும் திறன், மொழி வளம், புரிந்துகொள்ளும் திறன், ஞாபகத்திறன் போன்றவற்றை மதிப்பிடுகின்றன. இவற்றைப் புத்திசாலித்தன பரிசோதனைகள், IQ பரிசோதனைகள், பொதுத் திறன் பரிசோதனைகள் என்றும் அழைப்பார்கள், இவை பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களுடைய திறன்களை அடையாளம் கண்டு முழு சாத்தியங்களை எட்டுவது இந்தப் பரிசோதனைகள் மூலம் சாத்தியமாகிறது.

கல்வி / சாதனைப் பரிசோதனைகள்: 

இந்தப் பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஒருவர் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை மதிப்பிடப் பயன்படுகின்றன. உதாரணமாக கணிதம், வாசிப்பு போன்ற திறன்களை ஒருவர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறார் என்பதை அறிதல், அவற்றைக் கற்பதில் அவருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்று அடையாளம் காணுதல் போன்றவை. இந்த வகையிலான பரிசோதனைகள் பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குழந்தையின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இவற்றை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.வழக்கு சார்ந்த உளவியல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் பொதுவாக அறிவாற்றல், ஆளுமை, நரம்பியல்-உளவியல் ஆகிய மதிப்பீடுகளின் தொகுப்பாக அமைகின்றன. இதன்மூலம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்தாரா இல்லையா என்பதை தீர்மானித்து உறுதிசெய்ய இயலும். ஆகவே இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் சட்டத்துறையில் செய்யப்படுகின்றன.மனநல மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு, இப்போதைய மனநல நிலை ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறது, இதன்மூலம் அவருக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருக்கக்கூடுமா என்பதை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் பிரச்னையை அடையாளம் காணுதல், சிகிச்சை வழங்குதலுக்கு உதவுகிறது.

நரம்பியல்-உளவியல் பரிசோதனை: 

இந்தப் பரிசோதனை ஒருவருடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதை ஆராய்கிறது. அவருடைய மூளையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை அடையாளம் காண்கிறது. உதாரணமாக, மூளைக்காயம் கொண்ட ஒருவர் அல்லது டிமென்சியா அபாயம் உள்ள ஒருவருடைய ஞாபகத்திறன் பரிசோதிக்கப்படலாம் அதன் அடிப்படையில் அவருடைய மூளையின் இயங்குதிறனில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படலாம்.ஆளுமை மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய ஆளுமைப் பண்புகளில் கவனம் செலுத்துகிறது. இதைக்கொண்டு ஒருவர் அதிகம் அகவயத் தன்மை கொண்டவரா அல்லது புறவயத்தன்மை கொண்டவரா சுய உறுதிப்பாடு கொண்டவரா, அல்லது பிறருடன் பழகத் தயங்குபவரா என்பது போன்ற விஷயங்களைக் கண்டறியலாம். இதன்மூலம் அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் அந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மதிப்பிடலாம்.

Psychology - பொதுவான உளவியல்

Psychotherapy - நடை முறையில் நோயாளிகளுக்கும், மக்களுக்கும் சிகிச்சை கொடுத்தல்

Psychiatry - மனோத்தத்துவம்

Neuro sciences - நரம்பியல்

Behavioral therapy - அன்றாட வாழ்க்கையில் / செய்முறையில் பிரச்சனை மற்றும் தீர்வு

Occupational therapy - சில வேலைகளின் கடினமான போக்கால் மனிதன் செயல்முறையில் மாற்றம்

counseling - பேசி புரிந்து தீர்வினை நோக்கிய வழி

மேற்கூறிய அனைத்தும் பொதுவான உளவியலில் வரும் சுற்றுபுறத்தையும் மனிதர்களையும் கண்டு, இணக்கத்தோடு மனநிம்மதி பெற்று வாழ்வதே உளவியலின் நோக்கம்.

பாலிமர் இன்ஜினியரிங் (Polymer engineering) துறை வேலை வாய்ப்புகள் எப்படி?

பாலிமர் இன்ஜினியரிங் (Polymer engineering) துறை வேலை வாய்ப்புகள் எப்படி?

பாலிமர் என்பது ஒரு அடிப்படை வேதிப்பொருளை (monomer) பன்மடங்காக ஒன்றாக்கி ஓரு புதிதாக உருவாக்கிய நெகிலிப்போன்ற வேதிப்பொருளாகும்.

பாலிமருக்கு உதாரனம், PVC, PET, Polythene, Nylon etc. இவைகள் பெரும்பாலும் நெகிழி தன்மையும், எலாஸ்டிக் தன்மையும் கொண்டவை. இவைகளின் பயனபாடு எண்ணிலடங்காது. பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றம் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பு

இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம்.

இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.
எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ. பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத் துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இத்துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்டு டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன. பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்த இன்கிரிமென்ட், படிகள், பயன்கள் என பல வகைகளிலும் பாலிமர் இன்ஜினியர்களின் ஊதியம் சிறப்பாக அமைகிறது. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

அனுபவம், தகுதி, திறன்கள் ஆகியவையே இத் துறையில் நல்ல சம்பளம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. பொதுவாக பொதுத் துறையில் பணி புரிபவர்களை விட தனியார் துறையில் பணி புரிபவருக்கே நல்ல சம்பளம் இத் துறையில் கிடைக்கிறது. இத் துறையில் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணி புரியும் சீனியர் பாலிமர் இன்ஜினியர் மற்றும் சயின்டிஸ்டுகள் மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்கள்(IIT), என்.ஐ.டிக்கள்(NIT), மெஸ்ராவிலுள்ள பிட்ஸ்(Birla Institute of Tech.), கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம் (IISc), மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-தொடுபுழா போன்றவற்றில் இத்துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இது சம்மந்தமான மற்றதுறைகள்:

Polymer science
Nano polymer technology 
Polymer Rheology
Polymer Chemistry
Plastic technology

பி.காம்

அடேங்கப்பா..! இத படிச்சா கோடீல சம்பாதிக்க முடியுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் குறிப்பாக பி.காம் போன்ற படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐடி துறைகளிலும் பி.காம் தேவை அதிகரித்திருப்பதே. பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமர்த்திக் கொள்கின்றன.

பி.காம் படித்தால் என்ன வேலை இருக்கு ?

பி.காம். படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடிய பட்ட மேற்படிப்புகள் உள்ளது. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது கட்டாயம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட் படித்து ஆசிரியர் பணியிடத்துக்குக் கூட செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

போட்டித் தேரிவுகளில் பி.காம்..!

பி.காம். படிப்பவர்களுக்கு காலை, மாலை உள்ளிட்ட பல வசதியான நேரங்களில் கல்வி நிறுவனங்கள் மேற்படிப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக முடியும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை எளிதில் அடையமுடியும். பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது.

உலக வங்கியில் பி.காம் மாணவர்கள்..!

தாய் மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற கூடுதல் மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கிறது. பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்ல எளிமையான வழிகள் கிடைக்கும். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது கட்டாயமாகும்.

நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பி.காம்.!

தற்போதுள்ள போட்டிகள் நிறைந்த உலகில் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கில்லை. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் பி.காம் மாணவர்களுக்கே உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பி.காம் தொடர்புடைய மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது.

வங்கிகளை ஆட்டிப்படைக்கும் பி.காம்..!

கணினித் துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை எவ்வித தயக்கமும் இன்றி தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும்.

உங்கள் கையில் பங்குச் சந்தை!

மாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் போன்ற பி.காம் தொடர்புடைய பட்ட மேற்படிப்பினை மும்பை பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டுத் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் காப்பீட்டு மேலாண்மை, ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.

பி.காம்., படிக்க என்ன தகுதிகள் தேவை !

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு வனிக தொகுப்பில் தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்தவகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம்.

வளமான வாழ்வு நிச்சயம்..!

அனைத்துத் துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றில், பி.காம். என்பது மிகவும் சாதகமான ஓர் அம்சமாக தற்போது உருபெற்றுள்ளது. பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு மேற்கொண்டால் வளமான வேலை வாய்ப்பைப் பெறலாம்.

பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்

மாணவர்களின் சிந்தனை:

பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்

பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அதுபோல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.

ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.

பெற்றோரின் பெரிய கடமை

அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். 

அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

தொடக்க கல்வி முக்கியம்

பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கிவிடக்கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அதற்கு புதிய சமூகசூழலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்த நாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

நல்ல வார்த்தைகள்

குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. 

எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.

Environmental Sciences

காலத்தின் தேவையை நிறைவேற்றும் படிப்பு! சுற்றுச்சூழல் அறிவியல்
(Environmental Sciences)

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்னை, மாசு கட்டுப்பாட்டு பிரச்னை, ஓசோன் பிரச்னை என பல பிரச்னைகள் உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காணவும், சுற்றுச்சூழலில் ஏற்படும் கேடுகளைக் கட்டுப்படுத்தவும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்த சுற்றுச்சூழல் அறிவியல் பட்டப்படிப்பை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU) வழங்கி வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் - தென்காசி மார்க்கத்தில் ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் ஒப்புயுர்வு மையம் (Sri Paramakalyani Centre for Excellence in Environmental Sciences ) சுற்றுச்சூழல் அறிவியல் பட்டப் படிப்பை வழங்கி வருகிறது.

இதில் பி.எஸ்.சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி படித்த பட்டதாரிகள் முதுநிலை எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பில் சேரலாம்.
பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடம் எடுத்து படித்தவர்கள் பாடத்தில் 60 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இவர்கள் எம்.எஸ்சி சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பை 5ஆண்டுகள் (M.Sc. Environmental Sciences,5 yrs Integrated course) படிக்க வேண்டும். இந்த படிப்பு குறித்து அந்த ஆய்வு மையத்தின் தலைவர் ஏ.ஜி. முருகேசன் கூறியது:

"தமிழகத்திலேயே சுற்றுச்சூழலுக்கான ஒரே ஒப்புயுர்வு மையமாக இது விளங்கி வருகிறது. பிளஸ் 2 படித்து விட்டு இந்தப் படிப்பில் சேருபவர்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் பத்து மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மாதம் ரூ. 2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கும். தொடக்கத்தில் விலங்கியலின் பல்லுயிர் பரவல், தாவரங்களின் பல்லுயிர் பரவல், வேதியியல் பாடம், தமிழ், ஆங்கிலம், யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. தொடந்து அடிப்படை அறிவியல் , மனித உடலில் உள்ள செல்கள் குறித்தும், மரபியல், உடல் இயங்கியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியியல் உள்ளிட்டவை குறித்து பாடம் நடத்தப்படும். மாசுக் கட்டுப்பாடு, நச்சுவியல், இயற்கை வளங்கள், தட்ப வெப்பம், புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, வன உயிர் பாதுகாப்பு, மரபு சாரா எரிசக்தி, கழிவு மறுசுழற்சி, நானோ தொழில்நுட்பம், கரியமில வாய்வு சேகரம், சூழல் தாக்க மதிப்பீடு, தொழிற்சாலைப் பாதுகாப்பு, சுற்றுச் சூழலும் தொடர்பியலும் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குறுந்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நான்காம் ஆண்டு மாணவர்கள் காடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புலிகள், யானைகள் கணக்கெடுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள், காடுகளில் உள்ள மரங்கள், அவற்றின் தன்மை, பாதுகாப்பு, பறவைகள், விலங்குகள் குறித்து நேரில் சென்று பயிற்சி பெறுவார்கள்.

இறுதியாண்டு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து திட்ட அறிக்கை தயாரித்து, சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆய்வு மையத்தில் பசுமைகுடில், விலங்கு சோதனை நிலையம், மியூசியம், தாவரஆவணக் காப்பகம், கள ஆய்வு வசதிகள் உள்ளன.
இம்மையத்தின் வளர்ச்சிக்காக பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் நிதிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு சென்டர் ஆஃப் எக்ஸ்சலன்ஸ் விருதை இந்த ஆய்வு மையத்திற்கு வழங்கியுள்ளது. இந்த படிப்பினை முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் துறைகள், மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகள், வனத்துறை, சூழல் தாக்க மதிப்பீட்டாளர்கள், சூழல் விஞ்ஞானிகள், சூழல் பாதுகாப்பாளர், நானோ மெடிசின் மற்றும் அரசு சாரா துறைகளில் வேலைவாய்ப்புக்கள் உள்ளன. ஆய்வில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

- எஸ். பாலசுந்தரராஜ்

Courses offered Department Of Environmental Science of MSU

https://www.msuniv.ac.in/Academic/Department/EnvironmentalScience/ProgrammesOffered

•••••••••••••••••••••••••••••••••••••

Environmental Science is an interdisciplinary field that integrates physical and biological sciences, including physics, chemistry, biology, soil science, geology, and geography, to the study of the environment and the solution of environmental problems. Environmental Science deals with environmentally relevant matters like pollution control, industrial hygiene, radiation protection, hazardous waste management, toxic materials control, water supply and other allied areas in this field. An Environmentalist is a person who is concerned with problems of the environment and especially with the effects of uncontrolled pollution on the Earth's atmosphere. Environmental Scientists work on subjects like the understanding of earth processes, evaluating alternative energy systems, pollution control and mitigation, natural resource management, and the effects of global climate change.

Environmental Science Courses in India

https://targetstudy.com/courses/environmental-science-courses.htm

List Of Top B.Sc In Environmental Science Colleges In India Based On 2019 Ranking

https://collegedunia.com/bsc/environmental-science-colleges

(இது ஒரு மீழ்பதிவு)

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? இதற்கான படிப்புகளை வழங்குகிறது, சென்னையில் உள்ள இந்தியன் மாரிடைம் யுனிவர்சிட்டி (IMU) என்று அழைக்கப்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்.

லட்சக்கணக்கில் சம்பளம். ஆறு மாதம் வேலை. ஆறு மாதம் விடுமுறை. பல நாடுகளுக்கும் செலவில்லாமல் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு. வேலை நேரம் போக மீதி நேரம் சொகுசான பயணத்துடன் கூடிய வாழ்க்கை. பணியின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கப்பலை இயக்கும் கேப்டன் அல்லது தலைமை பொறியாளர் பதவி என பல வித வசதிகள்.

கப்பலில் வேலை பார்க்க ஆர்வம் இருக்கிறதா?

உங்களுக்கு கலங்கரைவிளக்காய் வழிகாட்ட காத்திருக்கிறது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்ட்டில் அமைந்திருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம்.

இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் செயல்பட ஆரம்பித்தது. மும்பை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி, கண்ட்லா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் மையங்களும் இதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர, பல்வேறு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல்சார் படிப்புகள் வழங்கி வந்த கல்லூரிகளும் படிப்படியாக இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது 41 கடல் சார் கல்லூரிகள், இந்திய கடல் சார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இதில், 15 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இதைத்தவிர, சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மரைன் என்ஜினீயரிங் படிப்பையும், தனியார் கல்வி நிலையங்கள் டிப்ளமோ படிப்பையும் வழங்குகின்றன.

இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. விஜயன், இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். . ”தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரே சமயத்தில் இந்தப் படிப்பில் 320 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. சர்வதேச அளவில் இந்தியர்களைத்தான் கடல்பணிக்கு பெருமளவில் தேர்வு செய்வது நமக்கு கூடுதல் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்றவர், நாங்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பில் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு ’ போஸ்ட்கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்’ பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிதாக எட்டுத் துறைகளை உருவாக்கி உள்ளோம்” என்றார்.

”இந்தத் துறையைப் பொறுத்தவரையில் 21 வயதில் வேலைக்குச் சேர்பவர்கள் 30 வயது வரை சம்பாதித்துவிட்டு, கப்பல் பணியில் இருந்து விடுபட்டு, துறைமுகம் சார்ந்த பணிக்கு வந்துவிடலாம். கடல் வளமும், கப்பல் போக்குவரத்தும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் என்பதால், வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது’. தற்போது எங்களிடம் உள்ள எம்பிஏ படிப்புக்கு பெரிய அளவில் தேவை உருவாகி இருக்கிறது.

மேலாண்மைப் படிப்பில் சேர பட்டப்படிப்பு படித்தால் போதுமானது. பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் 320 இடங்கள், பி.டெக்., நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங் படிப்பில் 40 இடங்கள், எம்.பி.ஏ., ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் தலா 30 இடங்கள் உள்ளன. மேலும், பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில், ‘ஸ்பான்சர்டு’ பிரிவில் இடங்கள் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் சென்னை, மும்பை, கோல்கட்டா வளாகங்களில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன” என்று தொடர்ந்தார்.

“வருகிற ஆண்டுகளில் கடலோர மாநிலங்களில் புதிய கல்வி மையங்களை திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் கப்பல் துறையில் பெரிய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக, கப்பல் போக்குவரத்து பிரிவுகளில் பெண்கள் பணிபுரிவதில்லை. ஆனால், தற்போது பலரும் விரும்பும் துறையாக மாறி இருப்பதால் பெண்களும் விண்ணப்பித்து சேர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி சேர்பவர்களுக்கு நாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் மரைன் இன்ஜினீயரிங் படிக்க உள்ள பெண்களுக்கு டியூசன் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியால் கப்பல் கட்டுமான துறையும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் நாங்கள் பி.எஸ்சி கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு படிப்பை தொடங்கி இருக்கிறோம். இது கொச்சியில் நடந்து வருகிறது. இதைப்போலவே விசாகப்பட்டினத்தில் நேவல் ஆர்கிடெக்சர் படிப்பையும் தொடங்கி இருக்கிறோம். இங்கு படிப்பவர்கள் இந்திய கடற்படை கப்பல் பிரிவில் வேலைவாய்ப்பை பெறலாம்” என்றார் விஜயன்.

நாங்கள் இந்திய சட்டத்துறையுடன் செய்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், அடுத்த மாதம் கடல்சார் சட்டப்படிப்பை துவங்க இருக்கிறோம். இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாங்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கும், மரைன் இன்ஜினீயரிங் மற்றும் இதர பிரிவு படிப்புகளுக்கும் நடத்தப்படும் நுழைவு தேர்வு 150 வினாக்கள் கொண்டதாக இருக்கும். இதில் 6 விதமான பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் மூன்று பகுதியில் இருந்து கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். அடுத்த மூன்று பகுதிகள் பொது அறிவு, பொது ஆங்கிலம் மற்றும் திறனறிவு சார்ந்தவையாக இருக்கும். நுழைவு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறுகிறவர்களுக்கு நாங்கள் பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்குகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு பெருமளவில் நிதி உதவி செய்து வருகிறது. இதைப்போலவே மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பலவிதமான சலுகைகள் இருக்கின்றன. பொதுவாக கடல்சார் படிப்பு படிக்க வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இளைஞர்கள் தைரியமாக இப்படிப்பில் சேரலாம்” என்றார் துணைவேந்தர் விஜயன்.
நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க வேதியியல், இயற்பியல், கணிதம் பட்டப்படிப்பை படித்தவர்களும் சேரலாம். நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேரும் போது பல வங்கிகளும் கல்வி கடன் வழங்க முன்வருவதால் படிப்பு கட்டணம் பற்றி கவலைப்படத்தேவையில்லை.
பொறியியல் பிரிவில் செல்ல விரும்புகிறவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மரைன் இன்ஜினீயரிங் படிப்பு படிக்க வேண்டும். படிப்பின் போது அதிகளவில் பயிற்சி அளிக்கப்படும். கடல் சார் பல்கலைக்கழகத்தின் கோல்கத்தா, சென்னை மையங்களில் மரைன் இன் ஜினீயரிங் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இந்த படிப்பை முடித்தவர்கள் பொறியாளர் பயிற்சியாளராகவோ அல்லது இளநிலை பொறியாளராகவோ சேரலாம். இறுதிநிலையாக, தலைமை பொறியாளர் பதவி பெறலாம். கடல்சார் படிப்பில் டிப்ளமோ முடித்தாலே வேலை வாய்ப்பு மிகவும் எளிதாக கிடைப்பதால், அதற்கு மேல் பொறியியல் படிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரமாதமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பிட கால கப்பல் பணி அனுபவத்திற்கு பிறகு, கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெறமுடியும். மேலும், துறைமுகங்கள் சார்ந்த வேலைவாய்ப்பிலும் சேர முடியும். கப்பல் துறைமுகத்துக்கு வரும்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பழுது பார்க்கும் பணியை பார்த்திடவும் பெரிய அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் கடல்சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

கப்பல் போக்குவரத்தில் இப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தவிர, சொகுசு பயணம் செய்பவதும், சுற்றுலா செல்வதும் அதிகரித்திருக்கிறது. இதனால் கப்பல் சுற்றுலா சார்ந்த பிரிவுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. சம்பளமும் பெரிய அளவில் கிடைக்கிறது. துறைமுகக் கட்டுமானப் பொறியியல், எண்ணெய் வளங்களைக் கடலில் கண்டறிவது தொடர்பான பெட்ரோல் இன்ஜினீயரிங் படிப்புகளும்கூட இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன.

அதனால், கடல்சார் படிப்பு என்பதற்கான எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது.இப்போது மின்துறை முக்கியத்துவம் பெற்று வருவதால், அந்தத் துறையில் தெர்மல் பவர் பிளான்ட் மற்றும் இதர மின் தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளுக்கு கப்பல் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. அதேபோல நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகப் பணிகளிலும் எளிதாக வேலைக்குச் சேரமுடியும். மரைன் இன்ஜினீயரிங் படித்தால், கப்பலில் இருக்கும்போதும் வாய்ப்பு; கரைக்கு வந்தாலும் வாய்ப்பு.கப்பல் பணியில் இருந்து விடுபட்டு வருகிறவர்களுக்கு மரைன் கல்லூரிகளில் ஆசிரியர் பணி, துறைமுகங்களில் ஷிப்பிங் நிறுவனங்களில் சர்வேயர் பணி, பயிற்சியாளர் பணி, டெக்னிக்கல் சூப்பிரடென்டன்ட் போன்ற வேலைகள் கிடைக்கின்றன.

மேலும் தகவலுக்கு:

https://www.imu.edu.in

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நுழைவு தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வானார்கள். இப்போது முழுக்க முழுக்க + 2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது . 

தமிழக சட்ட கல்லூரிகளை பொறுத்தவரை - அரசு கல்லூரிகள் எனில் + 2 வில் 80 முதல் 90 % வரை மொத்த மதிப்பெண் எடுத்தால் சீட் கிடைக்கும்.

மேலே சொன்ன சென்னை School of Excellence , தரமணி கல்லூரியில் 85 முதல் 90 % மதிப்பெண் என்றால் சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசு கல்லூரி மற்றும் School of Excellence இரண்டிலுமே + 2 வில் எந்த பாட திட்டத்தில் படித்திருந்தாலும் - சேரலாம்.. காமர்ஸ் க்ரூப் தான் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; கணிதம்- இயற்பியல்- கணினி அறிவியல்- உயிரியல் போன்ற பிரிவில் படித்த மாணவர்கள் கூட சட்டம் படிக்கலாம் (நானே அப்படி + 2வில் கணிதம் மற்றும் உயிரியல் படித்த மாணவன் தான்)

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 10000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

School of Excellence , தரமணியில் ஆண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை செலவாகும்

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

வக்கீலாக ப்ராக்டிஸ் செய்வது எனில் அதில்-

சிவில் Side  (கொடுக்கல் வாங்கல்- சொத்து சம்பந்தமான பிரச்சனைகள்)
கிரிமினல்  Side  (அனைத்து வித குற்றங்கள்- திருட்டு, கொலை, etc )
கம்பனி சட்டம் ( கம்பனிகள் மீது போடப்படும் வழக்குகள்)
இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போன்ற பிரிவு
குடும்ப நீதிமன்றம் (விவாகரத்து போன்றவை)

என எந்த பக்கம் நாம் ப்ராக்டிஸ் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை உடனே செய்ய வேண்டும் என்றில்லை; படிக்க துவங்கிய பின் நமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ - அதில் நுழையலாம்.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

கால்நடை அறிவியல் படிப்புகளின்

கால்நடை அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவமும் வேலை வாய்ப்புகளும்!

விலங்குகளுக்கும் மானுட நாகரிகத்திற்கும் ஆழமான தொடர்பு உள்ளது. கால்நடைகளைப் பழக்கி தனது உணவுத்தேவை முதல் வேலைகள் வரை பல  விதங்களில் பயன்படுத்திக் கொண்டதே மானுட நாகரிகத்தின் ஆரம்பப்புள்ளி. அன்று முதல் இன்றுவரை மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும்  கால்நடைகளின் பங்கு இன்றியமையாததாகவே  உள்ளது. மனிதன் இல்லாமல் கால்நடைகளால் வாழ இயலும். ஆனால், கால்நடைகள் இல்லாமல்  மனிதனால் வாழவே முடியாது என்பது தர்க்கபூர்வ உண்மை. 

இயற்கையின் உணவுச் சங்கிலி அமைப்பு மற்றும் உயிரியல் சமநிலையை நிர்மாணிப்பது விலங்குகளின் இருப்பாலே சாத்தியப்படுகிறது. உணவு,  மருந்து, விவசாயம், பொருளாதாரம் என பல தளங்களில் விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை சார்ந்துதான் மனிதன் உள்ளான். மனித  வாழ்க்கையின் அத்தனை கூறுகளிலும் கலந்துள்ள கால்நடைகளைப் பற்றிய அறிவியல் துறையே கால்நடை அறிவியல் (Veterinary Science).  வனவிலங்குகள் காப்பகம், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் சார்ந்த நவீன ஆராய்ச்சிகள், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் என மனிதர்கள்  அல்லாத மற்ற உயிர்கள் மீதும் கவனம் செலுத்தும் இன்றைய யுகத்தில் கால்நடை நிபுணர்களின்  தேவை இன்றியமையாததாக உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

ஐந்தரை ஆண்டுகள் கால அளவுடைய இளங்கலைப் படிப்பான B.V.Sc (Veterinary Science)-ல் ஓர் ஆண்டுகாலம் களத்தில் கற்கப்படும்  இண்டர்ன்ஷிப்புக்காக ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அளவுடைய முதுகலைப் படிப்பான M.V.Sc (Veterinary Science) மற்றும் கால்நடை  உட்பிரிவுகளை சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிப் பட்டமும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளாலும்  வழங்கப்பட்டுவருகிறது.

கல்வித் தகுதி

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை தேர்வு செய்து +2 முடித்திருப்பது இளங்கலை படிப்பிற்கான அடிப்படை கல்வித் தகுதியாகும்.  மாநில அரசுகளால்  நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கால்நடை அறிவியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை  நடத்தப்படும். Veterinary Council of India என்ற அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளங்கலை B.V.Sc படித்திருப்பது முதுகலைப் படிப்பான  M.V.Sc-க்கு அடிப்படைக் கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. அடுத்து Indian Council for Agricultural Research மற்றும் National Testing Agency  ஆகிய அமைப்புகளால் இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது முதுகலைப் படிப்பிற்கு  முக்கிய கல்வித்  தகுதியாகும். 

வேலை வாய்ப்பு

பால் உற்பத்தி, இறைச்சி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது இந்தியா. ஆடு மாடு வளர்ப்பு என பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில்  தொடங்கி பூனை, நாய் போன்ற வீட்டுப் பிராணிகள், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் ஆராய்ச்சிகள் என பல தளங்களில் தொழில்முறைப் பயிற்சி  பெற்ற கால்நடை நிபுணர்களுக்கான தேவை உள்ளது. மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் அமைந்திருக்கும் கால்நடை மருத்துவமனைகளிலும்  பொதுத்துறை வங்கிகளில் Agricultural Field Officer/Rural Development Officer போன்ற பிரிவுகளில் என அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள்  பெருகிவருகின்றன. அதே நேரம் பின்தங்கிய இடங்களில் செயல்படும்  தனியார் வங்கிகளிலும், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் கால்நடை அறிவியல்  படித்தவர்களின் தேவை உள்ளது. பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் நாய்களின் ஆரோக்கியத்தை பேணுவது, கல்விநிறுவனங்களில்  விரிவுரையாளர், தனியாக வளர்ப்பு பிராணிகளுக்கான கிளினிக்குகள் தொடங்குதல், இந்திய அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் என  பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன.

கல்வி நிறுவனங்கள்

மாநில மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்கள் கால்நடை அறிவியல் சார்ந்த   இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*    Bihar Animal Sciences University, Patna. 

*    Sri Venkateswara Veterinary University, Tirupati. 

*    Tamilnadu Veterinary & Animal Science University, Chennai.

*    West Bengal University of Animal & Fisheries Science, kolkatta.

*    Kerala Veterinary & Animal Science University,, Wayanad.

*    Kamadhenu University , Gandhinagar.

*    Assam Agricultural University, Jorhat.

*    Karnataka Veterinary, Fisheries & Animal Science, Bidar.

*    Dr. Rajendra Prasad Agricultural University, Pusa.

பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவுப் பொருட்கள் பதனிடுதல்  போன்ற பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் கால்நடை அறிவியல் பயின்றவர்களின் தேவை அதிகம்  உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே பல்வேறு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில்  சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்  கல்லூரிகள்/மையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றிகரமான வாழ்வை  அமைத்துக்கொள்ளலாம்.

List Of Top Veterinary Sciences Colleges In Tamil Nadu Based On 2020 Ranking

🔹Tamil Nadu Veterinary and Animal Sciences University - [TANUVAS], Chennai
Chennai, Tamil Nadu

Courses offered: B.V.Sc., M.V.Sc., (20 streams)

🔹Veterinary College and Research Institute - [VCRI], Chennai
Chennai, Tamil Nadu

Courses offered: B.V.Sc., 

M.V.Sc., (6 streams: Animal Genetics And Breeding, Animal Nutrition, Veterinary Microbiology, Veterinary Parasitology, Veterinary Pathology & Poultry Science)

🔹Annamalai University - [AU],
Chidambaram, Tamil Nadu

Courses offered: UG Diploma in Veterinary Science

🔹Central University of Tamil Nadu - [CUTN], Thiruvarur
Thiruvarur, Tamil Nadu

Courses offered: Ph.D in Veterinary Science

🔹Annamalai University -Distance Education (DDE)
Chidambaram, Tamil Nadu

Courses offered: UG Diploma in Veterinary Science

🔹 College of Food and Dairy Technology, Tamil Nadu Veterinary and Animal Sciences University - [CFDT],
Chennai, Tamil Nadu

Courses offered: B.V.Sc., M.V.Sc., (1stream)

🔹 Post Graduate Research Institute in Animal Sciences - [PGRIAS],
Chennai, Tamil Nadu

Courses offered: M.V.Sc., (1stream) & Ph.D.

🔹Veterinary College and Research Institute - [VCRI], Orathanadu campus, 
Pudukkottai
Tamil Nadu

Courses offered: B.V.Sc. (6 streams)

🔹 Veterinary College and Research Institute - [VCRI], Tirunelveli campus, 
Tirunelveli
Tamil Nadu

Courses offered: B.V.Sc., (8 streams)

🔹 Madras Veterinary College - [MVC],
Chennai, Tamil Nadu

Courses offered: B.V.Sc., M.V.Sc.

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு..

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு..

இமைப்பது என்பது அனிச்சையான செயல் தான். பொதுவாக நாம் ஒரு நிமிடத்தில் பதினான்கு முறை இமைக்கிறோம். ஆனால் நம் மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன.

கண்களில் நீர் வற்றிப் போய், பின் நடிகர் விஜயகாந்த் கண்கள் போல் சிவப்பாவதை தவிர்க்க, 20-20-20 முறை உதவும்.

அதாவது கணிப்பொறி பயன்படுத்துபவர் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 நொடிகள், 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்த்து, இமைத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே அது.

 நீங்கள் கூகிள் குரோம் உலாவியை பயன் படுத்தினால்கீழ் கண்ட மென்பொருளை நிறுவி உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் 

https://chrome.google.com/webstore/detail/eyecare-protect-your-visi/eeeningnfkaonkonalpcicgemnnijjhn/related?hl=e

LinkedIn வேலை வாய்ப்புக்கான சமூகவலைதளம்

Job and skill network/LinkedIn
வேலை வாய்ப்புக்கான சமூகவலைதளம்

‘லிங்க்ட்இன்’(LinkedIn) சமூக வலைதளம் வித்தியாசமானது. இணையத்தில் செயல்படுபவர்கள் லிங்க்ட்இன் வெப்சைட்டில் கணக்கு ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் புரொஃபைலை அப்டேட் செய்து வைத்துக் கொண்டால், ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க முடியும். தேவை யானதைத் தேவையான சமயத்தில் சுலபமாகப் பெற்றுக்கொள்ள உதவும் வசதி களைக்கொண்ட சமூக வலைதளம் இது.
 
வேலைகள், பணியாளர்கள், பல்வேறு தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கற்றல், கற்பித்தல் போன்ற சேவைகளுக்கான வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பொதுவான தொழில் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். உற்பத்தித் திறனும் வர்த்தக வாய்ப்புகளும் இணைந்து இந்த வாய்ப்புகளை அதிகரிக்கும்.

‘லிங்க்ட்இன்’ அடிப்படை இலக்கு வல்லுநர்களை இணைப்பதுதான். இதன் மூலம் திறமையுள்ளவர்கள் இணைந்து கொள்ள முடிகிறது. தங்கள் திறமையைப் பிறருக்கு அளித்து, வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடிகிறது. ஒருவருக்கொருவர் பரிந்துரையின் பேரில் வேலை வாய்ப்புகளைப் பெற முடிகிறது.

தங்கள் புரொஃபைலைப் பதிவுசெய்து செயல்படுபவர்கள், தங்களுக்குள் குழுக் களை அமைத்துக்கொண்டு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பெரும்பாலும் வேலை தேடும் குழுக்களாகவே இவை செயல் படுகின்றன. ஆனாலும் கல்வி, ஆராய்ச்சிகள், பலவகைத் தேடல்கள் எனப் பல பயனுள்ள குழுக்களும் இயங்கிவருகின்றன.

இந்தச் சமூகவலைதளத்தில் இணைந்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமையைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் திறனையும் திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் தொழில் வாய்ப்புகளை வளம் நிறைந்ததாக மாற்ற முடியும்.

லிங்க்ட்இன் பயன் என்ன?

1. வேலைக்குச் செல்ல முதலில் நாம் தயாரிப்பது நம் சுயவிவரக் குறிப்புகள்தான். பெயர், முகவரி, அலைபேசி எண்கள், திறமை, குறிக்கோள், எதிர்பார்க்கும் சம்பளம் போன்றவை இருக்கும்.

2. ஒரு தொழில் செய்யும்போது வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக இருந்தால் பத்திரிகைகளிலும் ஆன்லைனிலும் விளம்பரம் கொடுப்போம். அதில் நம் நிறுவனத்தின் தேவையைக் குறிப்பிடுவோம்.

3. வேலை தேடுபவர்கள், வேலை கொடுப்பவர்கள் இந்த இரண்டு பிரிவினரையும் இணைக்கும் பாலமாக லிங்க்ட்இன் விளங்குகிறது. இரு பிரிவினரும் தங்கள் தேவைகளைத் தெளிவாகத் தங்கள் புரொஃபைலில் வெளியிட்டால் இருசாராரும் பயனடைய முடியும்.

4. எழுத்தாளர்கள், ஓவியர்கள், சினிமா துறையைச் சார்ந்தவர்கள், சிறிய, பெரிய தொழில் செய்பவர்கள் என அனைத்துப் பிரிவினரும் தங்களைப் பற்றிய விவரங்களை லிங்க்ட்இன் வெப்சைட்டில் பதிவுசெய்துகொண்டால், அது நிறையத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

5. பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வேலை தேடுபவர்களாக இருந்தால் வேலை வாய்ப்பைப் பெறுவதற்குமான சிறந்த களமாக இது விளங்குகிறது.

லிங்க்ட்இன் பயன்படுத்தும் முறை

www.linkedin.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, யூசர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். முகப்புத் திரையில் நம் தொடர்பில் உள்ளவர்கள் பதிவுசெய்யும் தகவல்கள் வெளிவரும். நாம் ஏதேனும் பகிர நினைத்தால், Share and Update என்ற பட்டனை க்ளிக் செய்து தகவல்களை டைப் செய்துகொள்ளலாம்.

லிங்க்ட்இன் நபரைத் தேடி இணைக்கும் முறை

லிங்க்ட்இன் வெப்சைட்டின் முகப்புத் திரையில் உள்ள தேடு பொறியில் நமக்குத் தேவையான நபரின் பெயரை டைப் செய்ய வேண்டும். நபர்கள் பட்டியலிடப்படும். அவர்கள் புகைப்படத்துக்குக் கீழே அவர்களின் பணி விவரம் தெரியும். நமக்குத் தேவையான நபரின் பெயர் மீது மவுஸை வைத்து க்ளிக் செய்தால் அவரது புரொஃபைல் வரும். யாரை இணைத்துக்கொள்ள விருப்பமோ அவருக்கு Send invitation என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அழைப்பு விடுத்த நபர், நம் அழைப்பை ஏற்றுக்கொண்டால் அவர் நம் தொடர்பில் இணைந்துவிடுவார்.

https://in.linkedin.com/

நன்றி: தமிழ் இந்து

(இது ஒரு மீழ்பதிவு)