Wednesday, July 8, 2020

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நுழைவு தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வானார்கள். இப்போது முழுக்க முழுக்க + 2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது . 

தமிழக சட்ட கல்லூரிகளை பொறுத்தவரை - அரசு கல்லூரிகள் எனில் + 2 வில் 80 முதல் 90 % வரை மொத்த மதிப்பெண் எடுத்தால் சீட் கிடைக்கும்.

மேலே சொன்ன சென்னை School of Excellence , தரமணி கல்லூரியில் 85 முதல் 90 % மதிப்பெண் என்றால் சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசு கல்லூரி மற்றும் School of Excellence இரண்டிலுமே + 2 வில் எந்த பாட திட்டத்தில் படித்திருந்தாலும் - சேரலாம்.. காமர்ஸ் க்ரூப் தான் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; கணிதம்- இயற்பியல்- கணினி அறிவியல்- உயிரியல் போன்ற பிரிவில் படித்த மாணவர்கள் கூட சட்டம் படிக்கலாம் (நானே அப்படி + 2வில் கணிதம் மற்றும் உயிரியல் படித்த மாணவன் தான்)

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 10000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

School of Excellence , தரமணியில் ஆண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை செலவாகும்

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

வக்கீலாக ப்ராக்டிஸ் செய்வது எனில் அதில்-

சிவில் Side  (கொடுக்கல் வாங்கல்- சொத்து சம்பந்தமான பிரச்சனைகள்)
கிரிமினல்  Side  (அனைத்து வித குற்றங்கள்- திருட்டு, கொலை, etc )
கம்பனி சட்டம் ( கம்பனிகள் மீது போடப்படும் வழக்குகள்)
இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போன்ற பிரிவு
குடும்ப நீதிமன்றம் (விவாகரத்து போன்றவை)

என எந்த பக்கம் நாம் ப்ராக்டிஸ் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை உடனே செய்ய வேண்டும் என்றில்லை; படிக்க துவங்கிய பின் நமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ - அதில் நுழையலாம்.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.


கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்

#கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்!

Courtesy:- திருவாரூர் தெற்கு மாவட்ட மாணவரணி

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

மொத்த உலக பட்டு உற்பத்தியில் 18% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடை வடிவமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தும் இன்றைய நவீன தலைமுறையினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் துறையாக விளங்குகிறது கைத்தறித்துறை. 

இத்தகைய சிறப்பு மிக்க கைத்தறி துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப கைத்தறித் துறை வல்லுநர்களின் தேவை அதிகமாக வாய்ப்புள்ளது. அத்தகைய தொழில் வல்லுநர்களை உருவாக்கவே நவீன கைத்தறி தொழில்நுட்ப படிப்புகளை உருவாக்கப்பட்டது. 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அத்தகைய படிப்புகளை வழங்கி வருகிறது. கைத்தறி தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வி படிப்புகளான மூன்று வருட டிப்ளோமா படிப்புகள், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆறு கல்வி நிறுவனங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நான்கு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, தமிழ்நாட்டில் சேலம், அஸ்ஸாமில் கவுஹாத்தி, ராஜஸ்தானில் ஜோத்பூர், ஒடிசாவில் பாரகார்ஹ், மேற்குவங்கத்தில் ஃபுலியா- சண்டிப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன. மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் ஆந்திராவில் வெங்கடகிரி, கர்நாடகாவில் கட்டாக், சதிஸ்கரில் சம்பா, கேரளாவில் கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ளன.

சேலத்தில் வழங்கப்படும் படிப்புகள்

* B.Tech - Handloom & textile Technology (4 Yrs)

* Post Diploma in Textile Processing

* Diploma - Handloom & Textile Technology (3 yrs)

* Handloom Entrepreneur (Certificate Course)

கேரளாவில் வழங்கப்படும் படிப்புகள்:-

* Clothing and Fashion Technology (CFT)

* Computer Aided Fashion Designing (CAFD)

* Computer Aided Textile Designing (CATD)

* Diploma in Handloom and Textile Technology (DHTT)

* Pattern Cutting Master Course (PCMC)

* Post Diploma in Home Textile Management (PDHTM)

ஆந்திரா, கவுகாத்தி, ஜோத்பூர், கர்நாடக என அனைத்து கல்விநிறுவனங்களிலும் மூன்று வருட படிப்பான டிப்ளோமா இன் ஹேண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் வாரணாசி மற்றும் சேலம் நிறுவனங்கள் 18 மாத கால அளவிலான போஸ்ட் டிப்ளோமா இன் ஹோம் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்குகிறது.


வணிகவியல் துறையில் கால்பதிக்க எண்ணமா?

பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது அடுத்து வணிகவியல் துறையில் கால்பதிக்க எண்ணமா?

பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வணிகவியல் துறையில் சிறந்து விளங்கலாம் . வணிகவியல் துறையானது இன்றைய காலகட்டத்தில் கோலோச்சும் துறையாக இருக்கின்றன .

வணிகவியல் துறையானது அனைத்து துறைக்கும் ஒரு வடிகாலாக இருக்கின்றன. உலகில் உள்ள அனைத்து துறைகளும் வணிகவியல் துறையின் சார்ந்தே இயங்குகின்றன. கணக்காளர் (அக்கவுன்டன்ட்) இல்லாத கம்பெனிகளே இல்லை என்று சொல்லலாம். வணிகவியல் துறைசார்ந்த பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

1. நிதி (ஃபினானஸ்)
2. கணக்குபதிவியல் (அக்கவுன்ட்ஸ்) 
3. சட்டம் (கமர்சியல் லா)
4. வரி விதிப்பு (டேக்ஸேசன்)
5. ஆடிட்டிங் 
6. மேலாண்மை (மேனேஜ்மெண்ட்) 
7. முதலீடு (இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்)
8. பொது வங்கியியல் (ஜெனரல் பேங்கிங்) 
9. ஆலோசகர் (கன்சல்டிங்)
10. கண்கானிப்பாளர் (சூப்பர்வைசிங்)
11. அறிக்கை தாக்கல் (ரிப்போர்டிங் )
12. முடிவெடுத்தல் (டெசிஸன் மேக்கிங்)

இன்னும் எண்ணற்ற பல துறைகளை கொண்டு இயங்குகின்றது. 

வணிகவியல் துறை

வணிகவியல் துறையானது அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றது. வணிகவியல் இன்றி ஒருதுறையும் இயங்காது என்பதனை நாம் அறிந்துள்ளோம். வனிக துறையில் B.com, B.com (honors), BA economics, BBA போன்ற பல இளங்கலை படிப்புகளும், CA, CS, ICWA இவற்றுக்கான foundation படிப்புகளும் உள்ளன.

வணிகவியல் படிப்புகள் படிக்கும் ஒரு நபர் வணிகம் சார்ந்த துறைகளில் செம்மை பெறுகிறார் . அத்துறையின் போக்குகுறித்தும் அவருகென்று மதிப்பீடு இருக்கும்.

படிப்புகள்

B.com: பிகாம் எனும் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பானது 3 வருட படிப்பாகும். இப்பட்டப்படிப்பானது அடிப்படை வணிகவியல் துறைப் படிப்பு ஆகும். மேலும் இது ஆரம்பகாலம் முதல் நடைமுறையில் இருக்கும் ஒரு துறையாகும் .  இப்படிப்பு எல்லா கலை-அறிவியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. மாறிவரும் உலகின் தேவைக்கேற்ப இப்படிப்பில் புதிய சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது,  

B.com specialization 

Mathematics 
Accountancy
Accounting and Taxation 
Accounting and Finance
Actuarial Science Advanced Accountancy
Advertising and Brand Management Applied Economics
Banking and Finance Banking and Insurance
Banking Management 
Business Administration
Business Economics 
Communicative English
Computer Application 
Computer Applications and Informatics
Computer Science 
Corporate Accountancy
Corporate Affairs and Administrations
Corporate Secretaryship
Customer Service Management 
e-Commerce
Electronic Education 
Executive Education
Executive Communication 
Financial Accounting
Financial Planning 
Foreign Trade Management
Functional English 
Garment Production 
Export Management
Hotel Management and Catering Human Resource Management
Industrial Management 
Information Systems
Information Technology 
Information Technology and its Application in Business
Jewellery Design and Technology Marketing and Advertising
Marketing Management 
Money and Financial System
Office Management and Secretarial Practices 
Principles and Practice of Accountancy
Principles of Management Professional Secretarial Practice Statistics
Supply Chain Management 
Tax Procedure and Practice
Taxation 
Tourism and Travel Management
B.Com + MBA Integrate 
Integrated B.Com (B.Com + M.Com)

B.com (honors) : பிகாம் ஹானர்ஸ் படிப்பானது பிகாம் துறையை போன்றது. பொதுவாக ஹானர்ஸ் படிப்பென்பது பிரதான பாடப்பிரிவுடன் சில சிறப்பு பாடங்களையும் உடன் சேர்வது பயில்வதைக் குறிக்கும். பிகாம் ஹானர்ஸ் படிக்கும் போது கணக்கியல் மற்றும் மேலாண்மை, பொருளாதாரம் சேர்த்து கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 

B.Com (Hons) Courses in India 

Accountancy 
Accounting and Finance
Banking and Insurance 
Computer Applications and e-Business
International Accounting 
Marketing and Retail Management
Marketing 
Marketing and Management
Taxation 
Entrepreneurship

BA (economics) : இந்த எக்கானிமிக்ஸ் துறையானது பனிரெண்டாம் வகுப்புக்குப்பின் பட்டப்படிப்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்துறைகள் கான்செப்ட்ஸ், பொருளாதார திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் திரனாய்வு முறைகள், வங்கியின் செயல்பாடு போன்றவற்றை அறியலாம் . பொருளாதார கருத்துக்கள் உங்களது போட்டிதேர்வுக்கு இன்னும் உதவிகாரமாக இருக்கும் . 

BBA: பிபிஏ எனப்படும் இளங்கலை வணிக மேலாண்மை (Bachelor of Business Administration) வணிக மேலாண்மைத் துறையில் மேல்நிலை பள்ளிக்கல்வி பயின்றபின் பெறும் ஓர் பட்டமாகும். பல கல்வித்துறைகளிலிருந்தும் மாணவர்களைக் கவரும் இந்தக் கல்வித்திட்டம், 19வது நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் தொழில் புரட்சியின் விளைவாக எழுந்த வணிக வளர்ச்சியை அறிவியல் சார்ந்து முகவாண்மை செய்யக்கூடிய தேவை ஏற்பட்டதை யடுத்து, உருவாக்கப்பட்டது. 

Commerce Courses in India Apart from B.Com/B.Com (Hons) /B.A. in Economics:

BBA in Accounting and Finance
BBA in Banking and Finance 
BBA in Banking
BBA in Marketing and Finance Bachelor of Business Management (BBM) in Computer Application
Bachelor of Corporate Science Bachelor of Economics
B.Sc in Banking and Finance Bachelor in Financial Management
Bachelor of Business Studies Bachelor of System Administration
Final Course For Company Secretary Final Course for ICWAI (Institute of Cost and Work Accountants in India)
Foundation Course for Company Secretary 
Foundation Course for ICWAI
Intermediate Course for Company Intermediate Course for ICWA

பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகள்:

மேல்நிலை பள்ளிக்கல்விக்கு பிறகு வனிக துறையில் மேற்சொன்ன இளங்கலையில் ஒரு பட்டம் பெற்று கேரியரை துவங்குவதுதான் சிறந்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் பட்டப்படிப்பை தொடர முடியாதவர்கள் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொடரலாம். 

பட்டய படிப்புகள் (Diploma)

Diploma Courses in India 

Accounting and Auditing Administrative Services
Advance Accounting Advance Cost Accounting
Banking and Finance Banking and Insurance
Banking Laws 
Banking Management
Banking Services 
Consumer Protection
Customs and Central Excise 
e-Commerce
Finance, Budget and Accounting Financial Accounting and Taxation
Financial Service 
Income Tax and Company Law
Mother and Child Health and Family Welfare 
Operational Research
Statistical Process Control and Operational Research 
Stock Analysis and Trading
Tally Software 
Taxation
VAT Rules Procedures 

சான்றிதழ் படிப்புகள் (Certificate courses)

Certification Courses in India 

Office Automation Operations Research with Applications in Engineering and Management
Applied Managerial 
Economics 
Banking
Central Excise 
Derivatives
e-Commerce 
Financial Accounting and Taxation
Financial Engineering and Risk Management 
Income Tax
Micro Finance 
Personal Management
Phonetics 
Stock Market
Tally 
VAT
Accounting 
Accounting Technicians
Certificate Programme on Capital Markets 
Certified Public Accountant 
Certified Management Accountant 
Chartered Financial Analyst 
Chartered Institute of Management Accountant

வேலைவாய்ப்பு

நிறுவனங்களில் CFO-விலிருந்து கீழுள்ள அக்கவுன்டன்ட் வரை அனைவரும் இத்துறையை எடுத்து பயின்றவர்கள்தான்.  மேலும் வங்கிகள், இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு நிறுவனங்கள், முதலீடு நிறுவனங்கள் போன்றவை முழுக்க முழுக்க இத்துறையை சார்ந்தவர்களைக் கொண்டே இயங்குகின்றன. அதனால் சிறப்பான எதிர்காலம் நிச்சயம்.

மேற்படிப்பகள்:

M.com, MBA, MA, M.Phil, Ph.D, CA, CS, ICWA, Pg diploma என நிறைய படிப்புகள் உள்ளன. 

இன்னும் அடுத்தடுத்தப் படிப்புகள் அதன் வாய்ப்பு தொடர்ந்து அறிவோம் ....


நீங்கள் ஆடிட்டர் ஆக வேண்டுமா?

6 கல்வி முறைகள்

உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவைதான்!!! 
6 best Education System in the world

பண்டையக் காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் நம் தமிழ் அறிஞர்கள் பலரும் கல்வியைத் தான் தலைசிறந்த செல்வமாகக் கருதுகின்றனர். மனிதனின் அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான் என்று வலியுறுத்தி சொல்லியும் இருக்கின்றனர். கல்வியின் முதன்மையான நோக்கம் நாம் கற்ற அறிவை மற்றவருக்கு எடுத்துரைப்பது தான். அறிவை போதிக்கும் போது நாம் ஆசானாக மாறுகிறோம். ஆசானாக இருப்பதற்கு முதலில் நாம் கல்வியைப் பயில வேண்டும். இதனால் தான் ஆங்கிலத்தில் “லேர்னிங் இஸ் கண்டினியூஸ் ப்ராசஸ்” என்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பணத்தைக் கொடுத்து அறிவை வாங்குவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கல்வி முறையானது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த பதிவில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் கல்வி முறை எது? எதனால் உலக மக்களால் அந்த கல்வி முறை அப்படி கருதப்படுகிறது? என்றும் பார்க்கலாம் வாங்க.

#1. நியூஜிலாந்து-New Zealand, இங்கே ஐந்து வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்களுக்கு செல்கின்றனர். உலக அளவில் தலை சிறந்த ஆன்லைன் எஜுகேஷன் சிஸ்டம் இங்கேதான் இருக்கிறது. சராசரியாக இருபத்தி ஐந்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு மாணவருக்கு நியூசிலாந்து அரசாங்கம் 12000 டாலரை செலவு செய்கிறது. இங்கே வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் நான்கு சதவிகிதம்தானாம்.

#2. டென்மார்க்-DenMark, இங்கே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். சரியாக 2008 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு தங்களது கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி கொண்டது டென்மார்க் அரசாங்கம். இங்கே ஒரு ஆசிரியரின் சம்பளமும் மருத்துவரின் சம்பளமும் ஒரே அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இங்கே கல்வி இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

#3. சுவிட்ஜர்லாந்து-Switzerland, இந்த நாட்டில் ஒரு மாணவருக்கு 16000 டாலர்களை அந்த மாணவனின் கல்விக்காக அரசாங்கம் செலவிடுகிறது. இங்கே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் அவர்களது மேல் படிப்பை முடித்தவர்களாக இருக்கின்றனர். இங்கே படிக்கும் நூறு சதவிகித மாணவர்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்கிறது. வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்பும் ஒரு மாணவரின் படிப்பு செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதாம்.

#4. நெதர்லாந்து-Netherland, மற்ற நாடுகளில் இருக்கும் கல்வி முறையை விட இங்கே இருக்கும் கல்வி முறையானது சற்றே மாறுபட்டு இருக்கிறது. இங்கே field education system பின்பற்றப்படுகிறது. இங்கே இருக்கும் எல்லா பள்ளிக் கூடங்களும் அரசாங்கப் பள்ளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு ஆசிரியருக்கு 7000 டாலர் சம்பளமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இலவசக் கல்வியைப் பயிலும் மாணவர் தனது 12 வது வயதில் மேலே என்ன படிக்கலாம்? எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சுயமாக முடிவு செய்ய முடியும்.

#5. சிங்கை-Singapore, இங்கே மொழியைத் தாண்டி கணிதத்திற்கும், அறிவியலிற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்டின் கல்வி முறையை பல நாடுகள் பின்பற்றுகின்றனர். அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 சதவிகிதம் மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படுகிறது. இங்கே ஒரு குழந்தை ஆறு வயதில்தான் பள்ளிக்குச் செல்கிறது. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியும், ஏதாவது ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

#6. ஃபின்லாந்து-Finland, இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஆனால் இவர்களது கல்வி முறை உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஒரு ஆசிரியரை அதிக அளவில் மதிக்கின்றனர். இங்கே மாணவர்களுக்கு ஆசிரியராக ஆவது தான் கனவாக இருக்கிறதாம். இந்த நாட்டில் ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். 16 வயது வரை அவர்களுக்கு தேர்வுகளே கிடையாது.  

 – இந்த ஆறு கல்வி முறைகளும் தான் உலக அளவில் சிறந்த கல்வி முறைகளாக கருதப்படுகின்றது.

நன்றி: Maybemaynotbe


ஜாம் தேர்வு - ஓர் பார்வை

M.Sc admission/Premium institutes/JAM Exam

ஜாம் தேர்வு - ஓர் பார்வை

ஜாம் (JAM) எனப்படும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு (Joint Admissions test for Master's) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு எம்.எஸ்சி, முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.

நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக ஜாம் நடத்தப்படுகிறது.

படிப்புகள்: 

1. எம்.எஸ்சி.,(2 ஆண்டுகள்), M.Sc.

2. இணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி., இரட்டை பட்டம், (Joined M.Sc+Ph.D Dual Degree)

3. எம்.எஸ்சி.-எம்.எஸ்.(ஆராய்ச்சி) / பிஎச்.டி., (M.Sc+MS(Research)/Ph.D)

கல்வி நிறுவனங்கள்: 

இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-IITs., 
நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-NITs, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - IIEST., 
சண்ட் லாங்கோவல் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - SLIET, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் - IISER, 
ஆகிய கல்வி நிறுவனங்களில் JAM தேர்வின் அடிப்படையிலேயே M.Sc., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

கல்வித் தகுதி: பாடப்பிரிவுற்கு ஏற்ப உரிய படிப்பில், மொழிப்பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ஒட்டுமொத்தமாக 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: செப்டம்பர் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 2020

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 2021

2020ஆம் ஆண்டுக்கான ஜாம் தேர்வை ஐஐடி கான்பூர் (IITK) நடத்தியது. இந்த முறை ஆறு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே ஜாம் தேர்வு நடத்தப்பட்டது.

திருச்சி என்ஐடி-யில் எம்எஸ்சி சேர்க்கை

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம் - JAM score) மூலம் எம்எஸ்சி (M.Sc.) படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறகிறது.

இதுதொடர்பாக, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறியது:
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகமானது, இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

2014ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய இக்கல்லூரியானது தேசிய நிறுவங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடம் வகிக்கிறது.
சிறந்த ஆய்வு நிறுவனமாக இருப்பதுடன் பல முன்னணி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது என்றார். 

சகல வசதிகளுடன் எழில்மிகு வளாகத்தில் 10 இளநிலை, 28 முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பியல் துறைகள் இரண்டாண்டுகள் படிக்கும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலைப் பிரிவில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) நடத்தும் தேசியளவிலான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைத் தேர்வு (ஜாம்) மூலம் நடைபெறுகிறது. 

முதுநிலை கணினி அறிவியலுக்கான ஜாம் தேர்வு கணிதப் புள்ளியியலை சார்ந்து நடைபெறும். 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2020ஆம் ஆண்டு ஜாம் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை வழங்கும் துறைகள் குறித்த விவரங்களுக்கு வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றார் அவர்.

Related links:

http://www.ccmn.in
https://www.nitt.edu

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!  

இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புதிய புதிய நோய்களைப்போல புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. 

மேலும் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான பல மருத்துவக் கருவிகள் - புதிய தொழில் நுட்பங்களுடன் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

மருத்துவக் கருவிகளை வடிவமைக்கவும், அதில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி மேம்படுத்தவும் கற்றுக் கொடுக்கும் உயிரி மருத்துவ பொறியியல் (பயோ மெடிக்கல் என்ஜீனியரிங்) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு என்பது மருத்துவம் மற்றும் பொறியியல் இணைந்து அமைக்கப்பட்டதாகும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மிகச் சில கல்லூரிகளிலேயே இந்தப் படிப்பு உள்ளது. கோயம்புத்தூரில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் என்ற நிர்வாகத்தின் கீழ் டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக்கல்லூரியில் இந்த  "பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்' என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. 

இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் கே.பொற்குமரன், துறைத்தலைவர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: 
"பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை சிறப்பு பாடங்களாக எடுத்துப் படிப்பவர்கள், அப்பாடங்களில் 60 சதத்திற்கு மேல் எடுத்தவர்கள் இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள். இந்தப் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வழங்குகிறது.

பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோ மெட்டீரியல், பயோ மெக்கானிக்ஸ், செல்லுலார் என்ஜினீயரிங், டிஸ்யூ என்ஜினீயரிங், ஹியுமேன் பிசியாலஜி அண்டு அனாடமி, மைக்ரோ பயாலஜி அண்டு பேதாலஜி, பயோ கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பயோ டெலிமெட்ரி, பயோ விர்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஜெனட்டிக் என்ஜினீயரிங், கிளிக்கல் என்ஜினீயரிங், ஆர்த்தோபேடிக், பயோ என்ஜினீயரிங் நேவிகேசன் சிஸ்டம் ஆகிய பாடங்கள் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவை குறித்த பாடங்களோடு  அடிப்படை பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மனித உடலியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், நோயியல் ஆகியவை குறித்த பாடங்களுடன் மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை மையம், ஸ்கேன் மையம் ஆகியவற்றில் உள்ள இயந்திரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாகப் பாடம் நடத்தப்படுகிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயோ மெட்டிரியல்,  மின்ணனு நுண் செயலிகள் குறித்த பாடங்களோடு, மருத்துவமனையில் உள்ள இ.சி.ஜி.கருவி, இருதயம் பரிசோதிக்கும் கருவியில் உள்ள பாகங்கள், அதன் செயல்பாடுகள், அதன் தன்மைகள், அவற்றைப்  பழுது நீக்குதல் உள்ளிட்டவை  குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மனித உறுப்புகளில்  ஏதாவது ஒன்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்து, அந்த உறுப்புகளுக்கு உரிய மருத்துவக்கருவிகள் தயாரிக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

பின்னர் தற்போது உள்ள மருத்துவக்கருவியில் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது மருத்துவத்துறைக்கு ஏதாவது ஒரு புதிய கருவியை வடிவமைத்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை நடைபெறும் போது கருவிகளில் கோளாறு ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய பொறியாளர்களால்தான் இயலும். எனவே பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாகும்.

மனித உடலில் உறுப்புமாற்றம், உறுப்புக்களைச் சீர்படுத்துதல் போன்றவற்றுக்கும் இந்தப் படிப்பு பெரும் உதவியாக உள்ளது. முன்பு பல மருத்துவ உபகரணங்களும், கருவிகளும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இன்று இந்தியாவில் பல நிறுவனங்கள் மருத்துவக்கருவி தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்கியுள்ளன. எனவே வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  எங்கள் கல்லூரி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடோ அட்லாண்டிக் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தத் துறையில் மேற்படிப்பை அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.

எங்கள் கல்லூரியில் படித்தவர்களில் பலர் உயர்கல்வி கற்க அங்கே செல்கிறார்கள். பலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு'' என்றார்கள் அவர்கள்.

நன்றி: DInamani

சிலிக்கா பாக்கெட்



புதுசா ஏதாவது வாங்கினா இந்த #சிலிக்காபாக்கெட் உள்ளே இருக்கும் ஏன் என்று தெரியுமா?????
 தெரியாமகூட கீழ போட்றாதீங்க…!!!!

#விழிப்புணர்வுபதிவு..

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…

◆சமையலறையில்..

பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

◆மொபைல்_நீரில்விழுந்தால்:

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

◆ஆவணங்கள்:

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

◆துணிகள் காயவைக்க:

நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

◆கத்தி கூர்மையாக:

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

◆துர்நாற்றம்:

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.

◆வளர்ப்பு பிராணிகள்:

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

◆நகைகள்:

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

◆அலங்காரப் பொருட்கள்:

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

◆ஜன்னல்கள்:

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

◆ஷூ துர்நாற்றம்:

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும

#குறிப்பு:

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..

Friday, April 24, 2020

மத்திய பல்கலை கழகம்



மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. 

இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,  காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்...

மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள். 

பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

 தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.  இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குறிய விசயம்.

சரி. 
எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  cucetexam. Central University common entrance exam. 

+2 முடித்து அறுபது  சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cucetexam.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

Wednesday, February 12, 2020

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?
சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்  அமைந்து  உள்ளது.  இந்தத் துறையானது  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு  கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள்  இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த வரைபடத்தின் மூலமாக,  நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான  குளம்,  குட்டை, கால்வாய், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக  கண்டறியலாம். 
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ள “அ” பதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும்.

https://www.facebook.com/601997245/posts/10157996908937246/