Wednesday, July 8, 2020

6 கல்வி முறைகள்

உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவைதான்!!! 
6 best Education System in the world

பண்டையக் காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் நம் தமிழ் அறிஞர்கள் பலரும் கல்வியைத் தான் தலைசிறந்த செல்வமாகக் கருதுகின்றனர். மனிதனின் அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான் என்று வலியுறுத்தி சொல்லியும் இருக்கின்றனர். கல்வியின் முதன்மையான நோக்கம் நாம் கற்ற அறிவை மற்றவருக்கு எடுத்துரைப்பது தான். அறிவை போதிக்கும் போது நாம் ஆசானாக மாறுகிறோம். ஆசானாக இருப்பதற்கு முதலில் நாம் கல்வியைப் பயில வேண்டும். இதனால் தான் ஆங்கிலத்தில் “லேர்னிங் இஸ் கண்டினியூஸ் ப்ராசஸ்” என்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பணத்தைக் கொடுத்து அறிவை வாங்குவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கல்வி முறையானது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த பதிவில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் கல்வி முறை எது? எதனால் உலக மக்களால் அந்த கல்வி முறை அப்படி கருதப்படுகிறது? என்றும் பார்க்கலாம் வாங்க.

#1. நியூஜிலாந்து-New Zealand, இங்கே ஐந்து வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்களுக்கு செல்கின்றனர். உலக அளவில் தலை சிறந்த ஆன்லைன் எஜுகேஷன் சிஸ்டம் இங்கேதான் இருக்கிறது. சராசரியாக இருபத்தி ஐந்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு மாணவருக்கு நியூசிலாந்து அரசாங்கம் 12000 டாலரை செலவு செய்கிறது. இங்கே வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் நான்கு சதவிகிதம்தானாம்.

#2. டென்மார்க்-DenMark, இங்கே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். சரியாக 2008 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு தங்களது கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி கொண்டது டென்மார்க் அரசாங்கம். இங்கே ஒரு ஆசிரியரின் சம்பளமும் மருத்துவரின் சம்பளமும் ஒரே அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இங்கே கல்வி இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

#3. சுவிட்ஜர்லாந்து-Switzerland, இந்த நாட்டில் ஒரு மாணவருக்கு 16000 டாலர்களை அந்த மாணவனின் கல்விக்காக அரசாங்கம் செலவிடுகிறது. இங்கே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் அவர்களது மேல் படிப்பை முடித்தவர்களாக இருக்கின்றனர். இங்கே படிக்கும் நூறு சதவிகித மாணவர்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்கிறது. வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்பும் ஒரு மாணவரின் படிப்பு செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதாம்.

#4. நெதர்லாந்து-Netherland, மற்ற நாடுகளில் இருக்கும் கல்வி முறையை விட இங்கே இருக்கும் கல்வி முறையானது சற்றே மாறுபட்டு இருக்கிறது. இங்கே field education system பின்பற்றப்படுகிறது. இங்கே இருக்கும் எல்லா பள்ளிக் கூடங்களும் அரசாங்கப் பள்ளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு ஆசிரியருக்கு 7000 டாலர் சம்பளமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இலவசக் கல்வியைப் பயிலும் மாணவர் தனது 12 வது வயதில் மேலே என்ன படிக்கலாம்? எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சுயமாக முடிவு செய்ய முடியும்.

#5. சிங்கை-Singapore, இங்கே மொழியைத் தாண்டி கணிதத்திற்கும், அறிவியலிற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்டின் கல்வி முறையை பல நாடுகள் பின்பற்றுகின்றனர். அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 சதவிகிதம் மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படுகிறது. இங்கே ஒரு குழந்தை ஆறு வயதில்தான் பள்ளிக்குச் செல்கிறது. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியும், ஏதாவது ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

#6. ஃபின்லாந்து-Finland, இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஆனால் இவர்களது கல்வி முறை உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஒரு ஆசிரியரை அதிக அளவில் மதிக்கின்றனர். இங்கே மாணவர்களுக்கு ஆசிரியராக ஆவது தான் கனவாக இருக்கிறதாம். இந்த நாட்டில் ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். 16 வயது வரை அவர்களுக்கு தேர்வுகளே கிடையாது.  

 – இந்த ஆறு கல்வி முறைகளும் தான் உலக அளவில் சிறந்த கல்வி முறைகளாக கருதப்படுகின்றது.

நன்றி: Maybemaynotbe


No comments:

Post a Comment