Wednesday, July 8, 2020

NIFT/Design courses

Career/Design/NIFT/Design courses

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (National Institute of Fashion Technology, NIFT) இந்தியாவின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். 1986ஆம் ஆண்டு இந்திய அரசின் துணித்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்ட இந்த கல்லூரிகள் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் முதன்மையான தொழில்சார் வல்லுனர்களை உருவாக்கி பன்னாட்டு உடையலங்கார வணிகத்தில் முன்னிலை எடுக்க வழிகோலியுள்ளன. 2006ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இவற்றிற்கு சட்டபூர்வ நிலை வழங்கி பட்டங்களையும் பிற கல்வி சிறப்புகளையும் வழங்கவும் தகுதி கொடுத்துள்ளது.

இந்தக் கழகம் உடையலங்கார தொழிலில் கல்வி வழங்க பதினான்கு உள்நாட்டு மையங்களை புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரேலி, பட்னா, சில்லாங், போபால், தலிபரம்பா, புவனேசுவர், காங்ரா மற்றும் ஜோத்பூரில் அமைத்துள்ளது. மொரிசியசில் பன்னாட்டு மையமொன்றை நிறுவியுள்ளது.

கற்பனைத் திறன் மிக்க மாணவரா நீங்கள்...? NIFT நிறுவனத்தில் டிசைனிங் படிக்கலாம்.

இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Institute of Fashion Technology, 

இங்கு Bachelor of Design (B.Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இரு வகையான இளநிலை படிப்புகளும், Master of Design (M.Des), Master of Fashion Management (M.F.M) மற்றும் Master of Fashion Technology (M.F.Tech) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

எத்தனை இடங்கள்?

Bachelor of Design பிரிவில், Fashion Design (390 இடங்கள்), Leather Design (120), Accessory Design (390), Textile Design (360), Knitwear Design (210), Fashion Communication (360) ஆகிய படிப்புகளில் மொத்தம் 1830 இடங்களும் Bachelor of Fashion Technology பிரிவில் Apparel Production படிப்பில் 360 இடங்களும் உள்ளன. Master of Design படிப்பில் 90 இடங்கள், Master of Fashion Management படிப்பில் 420 இடங்கள், Master of Fashion Technology படிப்பில் 100 இடங்கள் என்று முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மொத்தம் 610 இடங்கள் உண்டு.

கல்வித்தகுதி

+2 தேர்ச்சி பெற்றவர்கள் B.Des படிப்பில் சேரலாம். B.F.Tech படிப்பில் சேர, +2வில் இயற்பியல், வேதியியல், கணக்குப் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தேர்வை எழுத உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். B.F.Tech படிப்பிற்கு மூன்றாண்டு இஞ்சினியரிங் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Des, M.F.M படிப்புகளில் சேர ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது NIFT (National Institute of Fashion Technology), NID (National Institute of Design) போன்ற நிறுவனங்கள் வழங்கிய மூன்றாண்டு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.F.Tech படிப்பில் சேர NIFT நிறுவனம் வழங்கிய Bachelor of Fashion Technology பட்டம் அல்லது பி.இ/பி.டெக் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 1.10.2020 அன்று 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு ஏதுமில்லை.

நுழைவுத் தேர்வு

இந்தப் படிப்புகளில் சேர NIFT நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினை எழுத விரும்புபவர்கள் www.nift.ac.in/admissions.html எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1500, எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள் (குத்துமதிப்பாக-Tentative-இது குறித்து சரியான தகவல் அடுத்த மாதம் வெளியாகும்)

அக்டோபர் 2020 முதல் வாரம் - பதிவு தொடக்கம்

டிசம்பர் 2020 கடைசி வாரம் - பதிவு முடிவு

டிசம்பர் 2020 கடைசி வாரம் - பிழை திருத்த வாய்ப்பு

ஜனவரி 2021 முதல் வாரம் - அனுமதி அட்டை பதிவிறக்கம் தொடக்கம்

ஜனவரி 2021 இரண்டாம் வாரம் - எழுத்து தேர்வு

மார்ச் 2021 முதல் வாரம் - முதற்கட்ட தேர்வு முடிவுகள்

மே 2021 முதல் வாரம் - நேர்முக தேர்வு/குரூப் டிஜ்கசன்/சுட்சுவேசன் இன்டர்வியூ

ஜூன் 2021 இறுதி வாரம் - இறுதி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

ஜூன் 2021 இறுதி வாரம் - கலந்தாய்வு தொடக்கம்

தேர்வு மையங்கள்

சென்னை, கோவை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 32 மையங்களில் தேர்வு நடைபெறும். B.Des, M.Des படிப்புகளுக்கு, காலையில் Creative Ability Test , பிற்பகலில் General Ability Test எனும் இரண்டு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பெறும். B.F.Tech, M.F.M., M.F.Tech ஆகிய படிப்புகளுக்கு General Ability Test மட்டும் நடைபெறும்.

மே/ஜூன் 2021 கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு,

https://nift.ac.in

சென்ற ஆண்டு (2019) தகவல் மடல்
https://nift.ac.in/sites/default/files/inline-files/Prospectus%202019%20compressed.pdf

No comments:

Post a Comment