Wednesday, July 8, 2020

CUCET தேர்வு

இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலை கழகங்களில் (Central Universities) B.A/B.Sc/M.A/M.Sc/PhD படிக்க CUCET தேர்வு 

தமிழகத்தில் திருவாரூரில் உள்ள மத்திய அரசின் மத்திய பல்கலை கழகம் உட்பட இந்தியாவில் உள்ள 14 மத்திய பல்கலை கழகங்களில் B.A, B.Sc, B.Ed மற்றும் M.A, M.Sc, M.B.A, மற்றும் M.Phil, Phd படிக்க CUCET என்ற தேர்வு ஆண்டு தோறும் நடத்தபடுகின்றது, அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி  ஏப்ரல் 11 (11-04-2020).

மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering) படிப்பில் சேர விருப்பம் இல்லாதவர்கள், இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் கலை, அறிவியல் (Arts & Science) படிப்புகள் படிக்கலாம், சிறந்த மேற்படிப்புகளுக்கும், வேலை வாய்ப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு இது. கல்வி கட்டணமும் குறைவுதான், அரசு கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும்.

B.A, B.Sc படித்து வேலை தேடுபவர்கள், M.A, M.Sc படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் M.A, M.Sc படிப்புகள் படிக்கலாம், உங்களின் வேலைவாய்ப்பிற்க்கும் , ஆராய்ச்சி படிப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு. 

இந்த தேர்வை நான் பல மாணவர்களுக்கும் பரிந்துறை செய்துள்ளோம், தேர்வு சற்று கடினம் தான், உண்மையில் நம்பிக்கையோடு உழைத்து படித்தால் எந்த தேர்வும் கடினமில்லை. +2, B.A/ B.Sc மாணவர்கள் அவசியம் இந்த தேர்வை எழுதுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம், தேர்வை பற்றிய விபரத்தை பார்ப்போம்

கல்வி தகுதி : 

+2 படித்தவர்கள், இந்த ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் B.A, B.Sc படிக்க விண்ணப்பிக்கலாம்.

M.A, M.Sc, M.B.A படிக்க B.A, B.Sc, B.B.A முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

M.Phil, Phd படிக்க  M.A, M.Sc முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

தேர்விற்க்கு விண்ணப்பிக்க : 

https://www.cucetexam.in/ என்ற இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வழிமுறை இந்த https://cucetexam.in/Document/How_to_Apply.pdf
லின்கில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, விண்ணப்ப கட்டணம் ரூ.800

தேர்வு வருகின்ற மே மாதம் 30, 31 தேதிகளில் நடைபெறும், தேர்வு முடிவுகள் ஜூன் 26 அன்று வெளியிடப்படும்.

CUCET தேர்வை பற்றி : 

இந்த தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. இந்த இரண்டு பகுதியிலும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேள்விகள் கேட்கப்படும். 

பகுதி 1 : இதில் ஆங்கிலம்,  பகுத்தறிவு (English Language, general awareness, mathematical aptitude and analytical skills) பற்றிய கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 25 கேள்விகள்

பகுதி 2 : இதில் துறை சார்ந்த (Domain Knowledge)  கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 75 கேள்விகள்.
மொத்தம் 100 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண், தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் கழித்து கொள்ளப்படும் (0.25 negative mark for wrong answer)

தேர்வின் பாடதிட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் கீழ்காணும் இணைய தளத்தில் மிக தெளிவாக உள்ளது.
https://cucetexam.in/CUCET2020/RecPages/Search01Program16Details.aspx

இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது
https://cucetexam.in/Document/General_Instructions.pdf

கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் Wisdom கல்வி வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

https://www.facebook.com/wisdomkalvi/posts/1052078968498686/

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi
#CUCET2020

No comments:

Post a Comment