Wednesday, July 8, 2020

சட்ட படிப்பு

டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம் +2 படித்த மாணவர்கள் மற்றும் பட்ட படிப்பு முடித்த மாணவர்கள் சட்ட படிப்பு படிக்க விண்ணப்பங்களை வரவேற்கின்றது. அதன் விபரங்களை பார்ப்போம்

+2 தேர்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 11 அரசு சட்ட கல்லூரியிலும், ஒரு தனியார் சட்ட கல்லூரியிலும் 5 ஆண்டு  சட்ட படிப்பு (B.A.L.L.B) படிக்க மே 16 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31.

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு (Any degree) படித்த மாணவர்கள் 3 ஆண்டு சட்ட படிப்பிற்க்கு (L.L.B) ஜூன் 28 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 26

மாணவர்கள் குறைந்தபட்சம் 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். (SC/ST மாணவர்களுக்கு 40 %). விண்ணப்ப கட்டணம் ரூ.500 (SC/ST மாணவர்களுக்கு ரூ.250)

சென்னை பெருங்குடியில் உள்ள School of Excellence in Law சட்ட பள்ளியில் சிறப்பு சட்ட படிப்பான B.A.LL.B.(Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B.(Hons.), B.C.A.LL.B.(Hons.)  படிக்கவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இதற்க்கு +2 படித்த மாணவர்கள் 70 % மதிப்பெண்ணும் (SC/ST மாணவர்கள் 65 %) பட்ட படிப்பு படித்தவர்கள் 60 % மதிப்பெண்ணும் (SC/ST மாணவர்கள் 55 %) பெற்றிருக்க  வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1000 (SC/ST மாணவர்களுக்கு ரூ.500)

விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள சட்ட பல்கலை கழகம் மற்றும்  அனைத்து சட்ட கல்லூரிகளிலும் கிடைக்கும்

மேலும் விபரங்கள் சட்ட பலகலை கழக இணையத்தில் http://tndalu.ac.in/ உள்ளது.

சட்ட படிப்பு சம்மந்தமாக கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#Wisdom_Kalvi
#Law

No comments:

Post a Comment