Wednesday, July 8, 2020

ஃபுட்வேர்_படிப்புகள்

#எட்டாம்_வகுப்பு_முதல்_பட்டப்படிப்பு_முடித்தவர்கள்_வரை_பயனளிக்கும்
_ஃபுட்வேர்_படிப்புகள்!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

சென்னை கிண்டியில் செயல்படும் இன்ஸ்டிட்யூட் எனப்படும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் காலணி தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை டிப்ளமோ  மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிறுவனம் 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தத் துறையில் பல வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என அனைத்து பிரிவுனருக்கும் அவர்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை பல்வேறு படிப்புகளை இந்த கல்வி நிலையத்தில் கற்றுக் கொள்ளலாம்.
 
சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள், படித்து முடித்ததும் வேலை கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், மத்திய அரசு நிறுவனத்தில் படிக்க விரும்புவோர் என அனைவரும் புட்வேர் படிப்புகளில் சேரமுடியும்.

இங்கு படித்தவர்கள் உள்நாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைகளைப் பெறுவதற்கு பயிற்சி நிறுவனம் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறது. ஃபுட்வேர் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள் உள்நாடு மட்டுமல்லாது இத்தாலி, யுகே, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் நல்ல ஊதியத்துடன் பணிவாய்பைப் பெற்றுள்ளனர்.

#படிப்புகள்

Short Term Courses: Duration (1 Month to 3 Months)

:- Certificate In Shoe Computer Aided Design (CSCAD)

:- Design and Pattern Cutting.

:- Shoe CAD.

:- Shoe Upper Clicking

:- Shoe Upper Closing.

:- Lasting, Full Shoe Making and Finishing.

:- Leather Goods Making.

:- Die-Less Cutting design.

 

Medium Term Courses: (Duration 6 Months)

:- Condensed Course In “Footwear Design & Production” (CFDP)

Long Term Courses:- (Duration 1 Year to 3 Years)

 
:- Post Graduate Higher Diploma In Footwear Technology & Management Studies

:- Diploma In Footwear Manufacture And Design

:- Post Graduate Diploma In Footwear Technology

:- Certificate Course In Footwear Design & Product Development

:- Post Diploma In Footwear Technology 

:- Certificate Course In Footwear Manufacturing Technology

#கல்விக்கட்டணம்

குறுகியகால படிப்புகளுக்கு (Shot Term Courses ) கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரையில் உள்ளது.

நடுத்தர படிப்புகளுக்கு (Medium Term Courses) கல்வி கட்டணம் ரூ.40 ஆயிரம் வரையில் உள்ளது.

நீண்ட படிப்புகளுக்கு (Long Term Courses) கல்வி கட்டணம் ரூ.1 இலட்சம் முதல் 4 இலட்சம்  வரையில் உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் கிடையாது.

#கல்வித்தகுதி

:- எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு பல குறுகிய கால படிப்புகள் படிக்க இயலும்.

:- பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லா குறுகிய கால படிப்புகளும் சில டிப்ளமோ படிப்புகளும்  படிக்க இயலும்

:- பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏறக்குறைய எல்லா படிப்புகளும் படிக்க இயலும்.

டிப்ளமோ படிப்புக்கு மட்டும் 17 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். மற்ற படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 
#விண்ணப்பிக்கும்_முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் படிப்பு மற்றும் விணணப்பம் தொடர்பான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்

இமெயில் மூலம் பெறமுடியும். வெளியூர் மாணவர்களுக்கு தங்கிப் படிக்க விடுதி வசதி உண்டு.

கூடுதல் தகவல்களுக்கு...

https://cftichennai.in/contact-us.php

Central Footwear Training Institute, 
65/1, GST Road, Guindy,
Chennai - 600032,
Tamil Nadu, INDIA

EMAIL: cfti@cftichennai.in

LANDLINE: 044-22501529 / 044-22500876 / 044-22501038

MOBILE: 9677943633 / 9677943733

No comments:

Post a Comment