Wednesday, July 8, 2020

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?

பொறியியல் (Engineering) படிக்கலாமா ?

Engineering-ல் எந்த பிரிவு எடுக்கலாம் ?

இஞ்சினியரிங் படித்த பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதால், மாணவர்களும் , பெற்றோர்களும் இஞ்சினியரிங் படிப்பை தவிற்கின்றனர், உண்மையில் எதிர்காலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகள் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிளேயே (ஆட்டோமேஷன் (Automation) , தகவல் பகுப்பாய்வு (Data Analytics), ML, AI, AR etc..)  இருக்கும்.

தனியார் துறை மட்டும் அல்ல, தற்போது அரசு துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன, பல அலுவலக வேலைகளை மென்பொருள்களே (Software) தற்போது செய்கின்றன, பல நிறுவனங்களில் தொழிலாளர்களை நிர்வகிக்கும் மேலாளர் (Manager) வேலையை கூட, மென்பொருள்களும் (Software), செல்போன் செயலிகளும் (Mobile Apps) செய்கின்றன.

வரும் காலங்களில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தொழில் நுட்பம் சார்ந்துதான் இருக்கும். இதற்க்காக பொறியியல் (Engineering) கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்றில்லை, பொறியியல் அல்லாத மற்ற படிப்பு படித்தவர்களும் தொழில் நுட்ப துறையில் சாதித்து வருகின்றனர். பொறியியல் (Engineering) படிப்பது மாணவர்கள் தொழில்நுட்ப துறையில் சாதிக்க உதவியாக இருக்கும் அவ்வளவுதான்.

அப்ப ஏன் இஞ்சினியரிங் படித்து விட்டு பலர் சும்மா இருக்கின்றார்கள் ? என்ற கேள்வி எழுவது இயற்க்கையே. அதற்க்கான பதிலை பார்ப்போம்

படிப்பை (Degree) மட்டுமே அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge), திறமையையும் (Skill) அடிப்படையாக கொண்டே வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. வெரும் பட்ட படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை. பட்ட படிப்போடு சேர்த்து அறிவும், திறமையும் இருந்தால் தான் இப்போது நல்ல வேலை கிடைக்கும். 

இன்னும் விரிவாக அறிந்து கொள்ள "படித்தால் வேலை கிடைக்குமா ?" என்ற வீடியோவை பார்க்கவும் https://www.youtube.com/watch?v=xiUsOg1tWOw&t=57s
“எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையையும் முழுமையாக வாசிக்கவும்.

சுய தொழில் செய்ய ஏற்ற படிப்பு இஞ்சினியரிங் என சொல்லலாம். நீங்கள் படிக்கும் காலத்திலேயே நன்றாக மென்பொருள் மற்றும் செயலிகளை (Software & Apps) உருவாக்க கற்று கொண்டால் படிக்கும் போதே Freelancer முறையில் வேலை பார்த்து மாதம் ஒரு லட்சம் வரை கூட சம்பாதிக்கலாம். 
இஞ்சினியரிங் படித்து முடிக்கும் போது Freelancer முறையில் செய்த வேலைகளை ஓர் ஆண்டு அனுபவமாக காண்பித்து 1 year experience என்று வேலை தேடினால் உடனடியாக வேலை கிடைக்கும்

இஞ்சினியரிங் படிப்பிற்க்கென்று தனியாக மதிப்பு கிடையாது. இஞ்சினியரிங் படிக்கும் போது நீங்கள் வளர்த்து கொள்ளும் அறிவும் , அந்த அறிவை கொண்டு நீங்கள் உருவாக்கிய மென்பொருள்கள் (Software & Apps) தான் இஞ்சினியரிங் படிப்பிற்க்கு மிகப்பெரும் மதிப்பை உங்களுக்கு தருகின்றது.

வெரும் பட்ட படிப்பிற்க்கு மதிப்பில்லை. உங்கள் அறிவோடும், திறமையோடும் அந்த படிப்பு சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது.

பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பகுப்பாய்வு (Analytical skill), ஆங்கில மொழி திறமை (English Language skill), தொடர்பு திறன் (communication skill) போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேரலாமா ?

வெரும் டிகிரி வாங்குவதற்க்காக படிப்பவர்கள் கண்டிப்பாக பொறியியல் (Engineering) படிப்பில் சேர வேண்டாம். தற்போது போட்டி மிக கடுமையாக உள்ளது. தொழில்நுட்ப துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் பொறியியல் படிப்பில் சேரலாம். 

பொறியியல் படிப்பிற்க்கு எதிர்காலம் இல்லை என்பதெல்லாம் பொய்யான தகவல், திறனுள்ள மாணவர்களுக்கு என்றைக்கும் வேலைவாய்ப்புகள் காத்துகொண்டு இருகின்றது என்பதுதான் உண்மை.

பொறியியலில் எந்த பாட பிரிவில் சேரலாம் ?

தகவல் தொழில் நுட்பம், Automation, Data Analytics, Machine learning, Artificial Intelligence, AR போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே Electronics and communication (ECE), Computer science, Electronics and Electricals (EEE) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

பெரிய அளவில் வளராவிட்டாலும் தொய்வடையாத துறைகளான Mechanical, Civil, Production, Automobile போன்ற துறைகளையும் தேர்தெடுத்து படிக்கலாம். மேற்கண்ட பாடபிரிவுகளை படித்தாலும் மட்டும் போதாது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொண்டு இந்த பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால் தான் சாதிக்க முடியும்.

பொறியியலில் சிறப்பு பிரிவுகள் (Special Engg. branches) :

பொறியியல் படிப்பில் Aeronautical Engineering, Nano Science and Technology, Bio-Technology, Bio Medical Engineering, போன்ற சிறப்பு பிரிவுகள் பயிற்று விக்கப்படுகின்றன. சிறப்பு படிப்புகள் படிக்க ஆர்வம் இருந்தால் நல்ல மதிப்பெண் (above 95 cut off) எடுத்து அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லுரிகள், PSG போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கலாம், அல்லது JEE நுழைவு தேர்வு மூலம் IIT/NIT-களில் படிக்கலாம். நன்றாக படித்தால் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது அல்லாமல் சாதாரண கல்லூரிகளில் சிறப்பு பிரிவுகளை எடுத்து படித்தால் பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைக்காது.

உடனடி வேலைவாய்ப்பை மைய்யபடுத்தாமல் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதற்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிப்பதற்க்கும் இவை ஏற்ற படிப்புகள். மேற்படிப்பிற்க்கு பிறகு ஆய்வு துறைகளில் அல்லது படித்தற்க்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே சிறப்பு பாட பிரிவு எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும், உடனடி வேலை வாய்ப்புதான் விருப்பம் என்றால் சிறப்பு பிரிவுகளை எடுக்க வேண்டாம். மேற்படிப்பு படிக்க விருப்பமும், கூடுதல் பொருளாதாரம் செலவு செய்ய வசதியும் இருந்தால் இப்படி பட்ட சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம், இல்லை என்றால் இவற்றை தவிப்பதே நல்லது.

சிறப்பு பிரிவுகளுக்கான வேலை வாய்ப்புகள் மற்ற பிரிவுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவை பொருத்தவரை குறைவாகவே உள்ளது. எனவே சிறப்பு பிரிவை தேர்ந்தெடுத்தால் அதில் மிக சிறந்த வல்லுனராக இருந்தால் மட்டுமே எளிதில் வேலை கிடைக்கும்

எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

பொதுவாக மத்திய, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள், ஆனால் இவற்றில் சேர, நுழைவு தேர்வுகளில் (JEE) நல்ல மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் அல்லது +2 தேர்வில் மிக அதிக மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். நல்ல மதிப்பெண் எடுத்தால் அரசு கல்லூரிகள் அல்லது அண்ணா பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.

குறைவான மதிப்பெண் எடுத்தால், கல்லூரியை தேர்வு செய்ய கீழ்காணும் வழிமுறையை பின்பற்றுங்கள்

1. உங்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ள அண்ணா பல்கலை கழக உறுப்பு கல்லூரிகள் அல்லது குறைவான பொருளாதாரம் செலவாகும் தனியார் கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்யுங்கள்

2. அதில் நல்ல கட்டமைப்பு உள்ள கல்லூரிகள், அதாவது நல்ல ஆசிரியர்கள், நல்ல ஆய்வுகூடம் (Lab), placement cell, மாணவரின் திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கும் கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள்

3. அதில் ஒழுக்க ரீதியான கட்டுபாடுகள் அதிகம் உள்ள கல்லூரிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்
கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன் கல்லூரிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட அம்சங்கள் சிறந்த முறையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ளலாம்.

அரசு கவுன்சிலின் மூலமே கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், தனியார் கல்லூரிகளில் நன்கொடை (donation) கொடுத்து சேர்வதை தவிர்க்கலாம். நன்கொடை (donation) இல்லாமல் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் சேர்த்து கொண்டால் சேரலாம். வட்டிக்கு வாங்கி, கடன் வாங்கி படிக்க வைக்க வேண்டாம். வசதில்லை என்றால் குறைவான கட்டணத்தில்  இடம் கொடுக்க பல கல்லூரிகள் தயாராக உள்ளது. அப்படி பட்ட கல்லூரிகளில் சேருங்கள்

மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் பொறியியல் படிக்கலாமா ?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது குறைவான மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது கல்லூரியில் ECE பிரிவே கிடைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என்ற உறுதியும், ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறனை (communication skill) வளர்த்து கொள்ள ஆர்வமும் இருந்தால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம், நான் சுமாராகத்தான் படிப்பேன் வருங்காலத்திம் இப்படிதான் இருப்பேன் என நினைக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பை தவிற்க்கலாம்.

வேறு என்ன வழிகளில் பொறியியல் படிக்க முடியும் ?

+ 2 முடித்த பிறகு , B.Sc கணிதம் (Mathematics), B.Sc இயற்பியல் (Physics), B.Sc வேதியியல் (Chemistry) 3 வருடம் படித்து , அதன் பிறகு M.Sc கணிதம் (Mathematics), M.Sc இயற்பியல் (Physics), M.Sc வேதியியல் (Chemistry) 2 வருடம் படித்து GATE அல்லது TANCET தேர்வு எழுதி தேர்சி பெற்று முதுகலை பொறியியல் படிப்பான M.E / M.Tech படிக்கலாம். அதன் பிறகு பொறியியல் துறையில் வேலைக்கு சேரலாம். இந்த முறையில் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் தான் செலவாகும். ஆனால் கால அளவு அதிகமாக இருக்கும். B.Sc, M.Sc பிறகு M.E/M.Tech படித்து முடிக்க மொத்தம் 7 வருடம் ஆகும்.

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள 10-ஆம் வகுப்பு , 11-ஆம் வகுப்பு மாணவர்களே !

பொறியியல் படிக்க ஆர்வம் இருந்தால் முதலில் JEE எனப்படும் மத்திய அரசு நடத்தும் பொறியியல் நுழைவு தேர்வுவை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து IISc/IIT/NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்ததாக +2 -ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பாடத்தில் 90 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க முயற்ச்சி செய்யுங்கள், நேரத்தை வீணாக்காமல் இப்போதே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

இந்த கட்டுரையை பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டால் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
www.facebook.com/wisdomkalvi/posts/1062314110808505/

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் இரண்டாம் பகுதி இது , இன்னும் பல தலைப்புகளில் வரும் நாள்களில் பல வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisodm கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வரவுள்ளது. அனைத்தையும் படித்து பயன் பெறுங்கள்.

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi
Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment