Wednesday, July 8, 2020

சென்னை கணித நிறுவனம்

The Chennai Mathematical Institute என்ற சென்னை கணித நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனம்.

இதில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குகிறது.

சென்னை கணிதவியல் கழகம் (Chennai Mathematical Institute) சென்னையில் அமைந்துள்ள கல்வி, ஆய்வுக் கழகம்.

இங்கு இயற்பியல், கணிதம், கணினியியல் படிப்புகள்  படிப்பிக்க படுகின்றன.

ஆண்டுதோறும் 10+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களு ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தகுதி அடிப்படையில் கீழ்க்கண்ட இளங்கலை பட்ட வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நேஷனல் சயின்ஸ் ஒலிம்பியாட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் இத்தேர்வு எழுத தேவையில்லை.

பிஎஸ்சி கணிதம் மற்றும் கணிணி அறிவியல். ஹானர்ஸ்

பிஎஸ்சி கணிதம் மற்றும் இயற்பியல் ஹானர்ஸ்

முதுகலைப் பிரிவில்

எம்.எஸ்ஸி‌ கணிதம்.

எம்எஸ்சி கணினி அறிவியல்.

எம்எஸ்சி தரவு அறிவியல்.(Data Science)

பிஎச்டி‌ கணிதம்

பிஎச்டி கணினி அறிவியல்.

பிஎச்டி இயற்பியல்

இளங்கலை ஹானர்ஸ் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது எந்த பிரிவு என்பதை குறிப்பிடவேண்டியதில்லை சேர்க்கையின் போது தெரிவிக்க வேண்டும்..

கல்வித்தகுதி.

மேல்நிலைப்பள்ளியில் கணிதம் இயற்பியல் கணினி அறிவியல் பாடங்களில் பயின்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டு 35 நபர்களுக்கு உதவித்தொகையுடன் முழு கட்டண தள்ளுபடி உண்டு
மேலும் இதில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். விடுதி கட்டணம் உணவு தங்குமிடம் சேர்த்து ஒரு செமஸ்டருக்கு 23 ஆயிரத்து 800 ரூபாய்.
இதில் பயின்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் மேற்படிப்புக்கான உத்திரவாதமும் கிடைக்கும்.

https://www.cmi.ac.in/

-AKV

No comments:

Post a Comment