Wednesday, July 8, 2020

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

பட்ட படிப்பின் இறுதி ஆண்டை முடித்த மாணவர்கள் பெரும்பாலோனோர் வேலை தேட ஆரம்பிக்கும் காலம் இது. பலர் ஏற்கனவே வேலை தேடிக்கொண்டிருக்கலாம், சிலர் இன்னும் சில நாள்களில் வேலை தேட துவங்கலாம். எப்படியும் நல்ல வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும், நல்ல வேலை கிடைக்க சில ஆலோசனைகளை பார்ப்போம்.

படித்து முடித்த உடன் வேலை கிடைக்குமா ?

படித்து முடித்துவிட்டோம், அனைத்து பாடத்திலும் தேர்சி அடைந்துவிட்டோம், கையில் டிகிரி உள்ளது எனவே உடனே வேலை கிடைத்துவிடும் என மாணவர்கள் எண்ண வேண்டாம். வெரும் டிகிரி வைத்து இருப்பதினால் மட்டும் நல்ல வேலை கிடைத்து விடாது, இன்டெர்வியூவில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தால் தான் வேலை கிடைக்கும், வேலைக்கு ஒரு இடம் காலியாக இருந்தால் 10 பேரை இன்டர்வியூவிற்க்கு கூப்பிடுவார்கள், அந்த 10 பேரை விட நாம் சிறப்பாக பதில் அளித்தால்தான் நமக்கு வேலை கிடைக்கும், எனவே வேலை கிடைப்பது என்பது நீங்கள் வாங்கிய டிகிரியில் (மட்டும்) இல்லை உங்கள் திறமையில்தான் இருக்கின்றது.

திறமை மட்டும் இருந்தால் போதாதா ? 

பிறகெதற்க்கு டிகிரி படிக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே, இதை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம், ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ள 70 கிலோ எடையும் 6 அடி உயரமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறதென்று வைத்துகொள்வோம், ஒருவர் வந்து நான் 70 கிலோ எடை மற்றும் 6 அடி உயரம் உள்ளவன் எனவே எனக்கு முதல் பரிசு கொடுங்கள் என்று சொன்னால் போட்டி நடத்துபவர்கள் அவருக்கு பரிசு வழங்க மாட்டார்கள், நீங்கள் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவருடன் சேர்ந்து வேகமாக ஓடி முதலாவதாக வந்து பரிசை எடுத்து செல்லுங்கள் என்று கூறுவார்கள். 6 அடி உயரம், 70 கிலோ எடை என்பது போட்டியில் கலந்து கொள்ள தகுதிதானே தவிர அதுவே போட்டியில் வெற்றியை தராது, ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஓடி தான் வெற்றி பெற வேண்டும் , அதே போல் இன்டெர்வியூவில் கலந்து கொள்ள தகுதிதான் உங்கள் டிகிரி தவிர. டிகிரியே வேலை வாங்கி தராது, உங்கள் அறிவும் திறமையும் தான் உங்களுக்கு வேலை வாங்கி தரும்.

படித்தால் வேலை கிடைக்காதா ? என்ற கேள்விக்கு விடை, நன்றாக படித்து ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொண்டு, தொடர்பு திறனையும் (communication skill) வளர்த்து கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் 

ஆங்கில பேச்சாற்றல் (English language skill) :

இன்டெர்வியூவில் முதலில் பார்ப்பது உங்களின் ஆங்கில மொழி திறமை, எந்த ஒரு கம்பெனியிலும் அலுவல் மொழி ஆங்கிலமாகதான் இருக்கும், மேலும் பல மொழி பேச கூடியவர்களும் பணி புரிவார்கள் அவர்களிடம் பேச பொதுவான மொழி ஆங்கிலம் தான். எனவே தான் ஆங்கில மொழிதிறமை பிரதானமாக பார்க்கப்படுகின்றனது.

தொடர்பு திறன் (communication skill) :

நமக்கு தெரிந்ததை பிறக்கு எளிய முறையில் எடுத்து சொல்லும் திறன் தான் தொடர்பு திறன் (communication skill) , கேள்விகள் கேட்க்கப்படும் போது சரியான பதிலை தெளிவாக எடுத்துறைக்க தொடர்பு திறன் மிக அவசியம். மேலும் குழு கலந்துறையாடல் (Group Discussion) தேர்வில் வெற்றி பெற இந்த தொடர்பு திறன் மிக அவசியம்.

படித்த பாடத்தில் ஆழ்ந்த அறிவு (Subject knowledge) :

நாம் எந்த பாட பிரிவை (branch) தேர்ந்தெடுத்து படித்தோமோ அதில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல கூடிய அளவிற்க்கு நமது பாடங்களை நன்றாக படித்து இருக்க வேன்டும், மொத்த பாடபிரிவுகளையும் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இரண்டு அல்லது மூன்று பாட பிரிவுகளை (subject) மிக நன்றாக படித்து அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.

எல்லாம் சரிதான் இப்ப என்ன செய்வது ?

டிகிரி படித்து முடித்தாகிவிட்டது, போதிய ஆங்கில பேச்சாற்றல் இல்லை, communication skill இல்லை, பாட அறிவு (subject knowledge) ஓரளவிற்க்கு தான் இருக்கு, இப்ப என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கான வேலை தேடும் வழிமுறைகள்

Resume- தயாரித்தல் :

உங்கள் Resume-தான் உங்களை பற்றி வெளி உலகிற்க்கு தெரிவிப்பது. எனவே அதை தெளிவாக சுருக்கமாக எழுதுங்கள், உங்களுக்கு தெரியாததை Resume-ல் போடாதீர்கள், நன்றாக தெரிந்ததை மட்டும் போடுங்கள் ஓரளவிற்க்கு தெரியும் என்றால் , ஓரளவிற்க்கு தெரியும் என குறிப்பிடுங்கள் (Familiar with). சிறந்த Resume தயாரிக்க இணையதளத்தில் பல வெப்சைடைட்டுகள் உள்ளன அதை பார்த்து சிறந்த Resume தயாரித்து கொள்ளுங்கள்.

விண்ணப்பித்தல் :

தயாரித்த Resume-யை naukri.com, timesjobs.com போன்ற வேலை தேடும் இனையதளங்களில் Upload செய்யுங்கள், Email Notification-யை செலெக்ட் செய்து கொள்ளுங்கள் இதனால் தினமும் வேலை வாய்ப்பு சம்மந்தமான Email வரும் அதை தினமும் படித்து உங்களுக்கு பொருத்தமாக இன்டெர்வியூற்க்கு செல்லுங்கள்.

அதிக படியான இன்டெர்வியூவில் கலந்து கொள்ளுங்கள் :

வாய்ப்புகள் உள்ள அனைத்து இன்டெர்வியூவிலும் கலந்து கொள்ளுங்கள், வேலை கிடைக்காவிட்டாலும் , இன்டெர்வியூவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்கும், இன்டெர்வியூவில் நீங்கள் தோற்றாலும், இன்டெர்வியூ எடுத்தவரிடம் உங்களிடம் உள்ள குறைகளை கேளுங்கள், அதை குறித்து வைத்துகொண்டு அடுத்த இன்டெர்வியூவில் அந்த குறையை சரி செய்ய முயற்ச்சி செய்யுங்கள்
இப்படி தொடர்ந்து குறைகளை கலைந்து இன்டெர்வியூவில் கலந்து கொண்டால் 20-வது அல்லது 25-வது இன்டெர்வியூவிலாவது வேலை கிடைக்கும். இன்டெர்வியூவில் கலந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் feedback- யை தெரிந்து கொண்டு உங்களை அதற்க்கு ஏற்றார் போல் தயாரித்து கொண்டு அடுத்த இன்டெர்வியூ என தொடர்ந்து முயற்சி செய்தால் ஏதாவது இன்டெர்வியூவில் நிச்சயம் வேலை கிடைக்கும்.

திறன் வளர்த்தல் :

வேலை தேடிகொண்டே உங்களுடைய திறன்களை வளர்க்க தினமும் நேரம் ஒதுக்குங்கள், ஆங்கிலம் என்பது ஒரு மொழி எனவே பேச பேச தான் மொழி திறமை வளரும், உங்களை போல் வேலை தேடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள், ஆங்கில குர்ஆனையும் , தமிழ் குர்ஆனையும் ஒரு சேர படிப்பது ஆங்கில பேச்சற்றலை வளர்க்கும், உங்களுக்குள் ஆங்கிலத்தில் பயான் செய்து பழகுங்கள். உங்களுக்குள் mock interview நடத்துங்கள், அதாவது உங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் இன்டெர்வியூ கேள்விகளை கேட்க வேண்டும் , நீங்கள் அதற்க்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும் உதவிக்கு google-லை அழைத்து கொள்ளுங்கள், நீங்கள் டிகிரியில் படித்த பாடத்தில் 2 அல்லது 3 பாடங்களை (subject) தேர்ந்தெடுத்து அதை ஆழ்ந்து படியுங்கள், அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவிற்க்கு படியுங்கள்

நேரத்தை வீணாக்க வேண்டாம் :

படித்து முடித்த பட்டதாரிகளே! உங்களுக்கான வாய்ப்பு ஒர் ஆண்டுதான் , ஓர் ஆண்டிற்க்கு பிறகு அடுத்த ஆண்டு மாணவர்கள் வேலை தேட வந்துவிடுவார்கள் எனவே நேரத்தை வீணாக்காமல் வேலை தேடுவதற்க்கும், திறன்களை வளர்த்து கொள்வதற்க்கும் செலவிடுங்கள், கெட்ட நண்பர்களிடம் சேராதீர்கள். வாய்ப்பிருந்தால் சென்னை அல்லது பெங்களூருவிற்க்கு இடம் பெயர்ந்து வேலை தேடுங்கள், ஏனெனில் இப்படி பட்ட பெரு நகரங்களில்தான் அதிக அளவு இன்டெர்வியூ நடைபெறும் .

நினைத்த வேலை கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது ?

நினைத்த சம்பளத்தில், நினைத்த துறையில் வேலை கிடைக்க வில்லை என்றால் தளர்ந்து விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். குடும்பம் வறுமையில் இருந்தால், வேலை கிடைக்கும் வரை சிறிய வேலைகளை செய்யலாம், சென்னை போன்ற நகரங்களில் மாதம் 10 ஆயிரத்திற்க்கு நிச்சயம் ஏதாவது ஒரு BPO வேலை அல்லது அலுவலக வேலை கிடைக்கும், அதில் சேர்ந்து கொண்டு வேலை தேடலாம். தொடந்து முயற்சி செய்யுங்கள், திறன்களை வளர்த்து கொள்ளுங்கள் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்

சிறிய கம்பெனிகளில் குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள் 2 அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போடுவார்கள், இருந்தாலும் பரவாயில்லை, நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள், இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பின்னர் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கலாம்.

வேலையே கிடைக்கவில்லை என்ன செய்வது ?

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம் ஓராண்டுகள் ஆகியும் வேலை கிடைக்க வில்லை என்ன செய்வது என்ற நிலையில் சில பட்டதாரிகள் இருக்கலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மேற்படிப்பு, B.Sc முடித்தால் M.Sc படியுங்கள், B.E முடித்தால் M.E/M.Tech படியுங்கள், இதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், PG-யிலாவது நன்றாக படியுங்கள், தேவையான திறனை வளர்த்து கொள்ளுங்கள், நீங்கள் மறுபடியும் ஒரு Fresher ஆகலாம், அப்போது வாய்ப்பை தவரவிடாமல் வேலை வாங்கிவிடுங்கள். மேற்படிப்பு படிப்ப GATE, TANCET , JAM போன்ற நுழைவு தேர்வுகளில் வெற்றி பெறுவது அவசியம், இதற்க்கான விண்ணப்பங்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கப்படும். எனவே வேலை தேடும் போதே இதற்க்கான விண்ணப்பங்களை வாங்கி அப்ளே செய்துவிடுங்கள், பின்னர் தேர்வு எழுதிகொள்ளலாம்.

எல்லாவற்றைவிடவும் மிக முக்கியமானது உங்களின் நம்பிக்கை, நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், கடினமாக உழைத்து வேலை பெறுவதற்க்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்,  வேலை கிடைக்கும் வரை முயற்சி செய்யுங்கள், உங்கள் உழைப்பு வீண் போகாது

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

#Job_Search
#WisdomKalvi

No comments:

Post a Comment