Wednesday, July 8, 2020

B.A Economics

B.A (Economics) படிக்கலாமா ?

B.A Economics படிப்பிற்க்கான எதிர்கால வாய்ப்புகள் என்ன?

உலக பொருளாதாரத்தையே கட்டுபடுத்தும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உள்ள முக்கிய பதவிகளில் பணியாற்றும் பலர்  இந்தியாவில் பொருளாதாரம் (Economics) படித்தவர்கள்.

உலக பொருளாதாரத்தை முன்னேற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னத பணி செய்யும் Economics படிப்புகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

B.Com கிடைக்காத மாணவர்கள் வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கும் படிப்பு தான் B.A (Economics),  இதை யாரும் விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை, காரணம் இந்த படிப்பை முடித்த பிறகு எதிர்பார்க்கும் வேலை கிடைப்பதில்லை, கிடைக்கும் வேலைக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகின்றது.

ஆனால் செய்திதாள்களை வாசிக்கும் போது, இந்தியாவில் பொருளாதாரம் (Economics) படித்த பலர், உலக அளவில் பொருளாதார ஆலோசகராக, ஆய்வாளராக இருந்து பல கோடி ரூபாய்களை சம்பளமாக பெறுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஒரு பக்கம் மிக குறைந்த சம்பளம், ஒரு பக்கம் பல கோடி சம்பளம், இவர்கள் அனைவருமே இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் Economics படித்தவர்கள் தான். ஏன் இந்த இடைவெளி ? இதற்க்கான பதிலை விரிவாக பார்ப்போம்

B.A (Economics) படிப்பை எப்படி படித்தால் பொருளாதார வல்லுனராக முடியும் ?

+2 -ல் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு கல்லூரியில் B.A (Economics) சேர்ந்து கொள்ளுங்கள் . M.A (Economics) படிப்பை இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் படிப்பதன் மூலம் நீங்கள் உலக பொருளாதார மேதையாகலாம். அதற்க்கான வழிமுறையை பார்ப்போம்.

பொருளாதார துறையில் சிறந்து விளங்க ஆங்கில அறிவு (English knowledge) மிக மிக அவசியம், முதலில் அதை வளர்த்து கொள்ளுங்கள், அடுத்து Analytical skill என்று சொல்லப்படும் பகுப்பாய்வு திறனை வளர்த்து கொள்ளுங்கள். ஆய்வுகள் மூலம் எதிர்கால போக்கை கணிக்கும் (Prediction based on data analysis) அறிவை வளர்த்து கொள்ளுங்கள். மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தகவல்களை எடுத்து சொல்லும் திறனை (Presentation skill) வளர்த்து கொள்ளுங்கள்.

கூடுதலாக கணித அறிவையும் (mathematical knowledge), தொடர்பு திறனையும் (Communication skill) வளர்த்து கொள்ளுங்கள்.

இந்த திறன்களோடு, இந்தியாவில் உள்ள (Top Economics Schools) பொருளாதார உயர் கல்வி நிறுவனங்களில் M.A (Economics) படிக்க நடத்தப்படும் நுழைவு தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்

நீங்கள் பொருளாதார மேல்நிலை படிப்பை (PG in Economics) கீழ்காணும் கல்லூரிகளில் படித்தால், எளிதில் பொருளாதார வல்லுனராக அதிக வாய்ப்புகள் உள்ளது.

1. Delhi school of Economics - உலக அளவில் உள்ள பல பொருளாதார மேதைகள் இங்கு படித்தவர்கள், B.A (Economics)-ல் நீங்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் இங்கு சேர்க்கை நடைபெறும். கூடுதல் விபரங்கள் http://econdse.org/ இணையதளத்தில் உள்ளது.

2. St Stephen's College, Delhi - புகழ்பெற்ற பழமையான கல்லூரி, இங்கு இடம் கிடைப்பது கடினம் தான், B.A (Economics)-ல் நீங்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் இங்கு சேர்க்கை நடைபெறும். கூடுதல் விபரங்கள் www.ststephens.edu இணையதளத்தில் உள்ளது.

3. டெல்லி IIT-யில் M.Sc (Economics) படிக்கலாம், இதற்க்கு JAM நுழைவு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

4. Madras School of Economics : இங்கு 2 ஆண்டு PGDM படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றது, சென்னையில் உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் படிக்க CAT/XAT/GMAT/CMAT தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

5. INDIAN STATISTICAL INSTITUTE (ISI) - சென்னையில் உள்ள இந்த உயர் கல்வி நிறுவனத்தில், B.A (Economics) படித்தவர்களுக்கு M.S(QUANTITATIVE ECONOMICS)  என்ற இரண்டு ஆண்டு மேற்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றது. இதற்க்கு ISI நடத்தும் நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் https://www.isical.ac.in/~deanweb/mqe2.html இணையதளத்தில் உள்ளது.

6. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலை கழகம் (Central University) உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலை கழகங்களிலும் M.A (Economics) படிக்கலாம். இதற்க்கு CUCET தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

7. Madras University : சென்னை பல்கலை கழகத்தில் M.A (Economics) படிக்கலாம், இதற்க்கு சென்னை பல்கலை கழகம் நடத்தும் நுழைவு தேர்வில் தேர்சி பெற வேண்டும்.

இது போக, Hyderabad School of Economics, Jamia Milia Islamia, JNU (School of Social Sciences), St. Xavier’s College, கொல்கத்தா ஆகிய கல்லூரிகளில், பொருளாதாரத்தில் உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது. இங்கும் M.A (Economics) படிக்க முயற்சி செய்யலாம்.

Economics படிப்பிற்க்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் :

1. பொருளாதார ஆலோசகர் (Economic adviser), Finance planner, Profit Analyst , Sales Analyst, Market Analyst போன்ற பணிகளில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இப்படிபட்ட உயர் பணிகளில் சேர, படிப்புடன் சேர்த்து மேலே குறிபிட்ட திறன்கள் இருக்க வேண்டும்.
மேலே குறிபிட்ட கல்லூகளில் படித்து இருந்தால் இதே துறையில் மிக அதிக சம்பளத்துடன் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றலாம்.

2. பொருளாதார ஆராய்ச்சி (Research in Economics): இந்தியாவில் M.A (Economics) படித்துவிட்டு, பொருளாதாரத்தில் ஆராய்ச்சி (PhD) படிப்புகள் வெளிநாடுகளில் படிக்கலாம், இதற்க்கு கூடுதல் பொருளாதாரம் செலவாகும், வெளிநாடுகளில் உள்ள சிறந்த பொருளாதார பல்கலை கழகங்களில் PhD படிப்பதன் மூலமும் இந்த துறையில் சிறந்து விளங்க முடியும்.

3. நிதி மேலாண்மை (Finance Management) :  B.A (Economics) முடித்த பிறகு பலரும் MBA (Finance) படிக்க விரும்புகின்றனர்.  நேரடியாக ஏதேனும் ஒரு கல்லூரியில் MBA படிப்பதை விட CAT, TANCET போன்ற தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண் எடுத்து, இந்திய அளவில் உள்ள, தமிழக அளவில் உள்ள, சிறந்த கல்லூரிகளில் MBA படித்தால் நிதி மேலாண்மை துறையில் சிறந்த பணிகளில் அமரலாம்.

4. அரசு பணிகள் (Govt. Jobs) : அரசு பணிகளுக்காக நடத்தப்படும் பெரும்பாலான தேர்வுகளில், பொருளாதாரம் (Economics) ஒரு பாடமாக இருப்பதினால் B.A (Economics) படித்தவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகலாம், தேர்வுகளில் தேர்சி பெற்று அரசு பணிகளில் சேரலாம் 

5. சட்ட படிப்பு (Law) : B.A (Economics) முடித்தவர்கள், மேற்படிப்பாக சட்டம் (LLB) படிக்கலாம். பொருளாதாரம் சார்ந்த சட்டங்களில் வல்லுனராக இருந்தால், பெரிய நிறுவனங்களின் சட்ட விவகாரங்களை கையாள்வது, பொருளாதார குற்றங்கள் சம்மந்தமான வழக்குகளில் வாதாடுவது போன்ற பணிகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளது.

6. ஆசிரியர் பணி (Teaching Jobs) : M.A (Economics) முடித்து B.Ed படித்தால் பள்ளிகளில் (Schools) பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர்களாக பணியாற்றலாம்.

7. மேற்படிப்பு இல்லாமல், சாதாரண கல்லூரிகளில் B.A (Economics) மட்டும் படித்தவர்கள், தற்போதைக்கு BPO பணிகள் , அன்றாட அலுவலக பணிகள் (office operational jobs), Marketing பணிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த துறைகளில் சம்பளம் குறைவாக இருக்கும்

இயன்ற வரை நுழைவு தேர்வுகள் எழுதி உயர் கல்வி நிறுவனங்களில் M.A (Economics)  படிக்க முயற்சி செய்யுங்கள்.

வெறும் B.A (Economics) படிப்பிற்க்கு குறைந்த சம்பளத்தில் ஏதேனும் ஒரு அலுவலக வேலை தான் கிடைக்கும், உங்களின் ஆங்கில அறிவு, தொடர்பு திறன் (communication skill), நுழைவு தேர்வுகளில் எடுக்கும் நல்ல மதிப்பெண், அதன் மூலம் சிறந்த கல்லூரிகளில் படிக்கும் PG படிப்பு, ஆகியவை உங்களுக்கு அதிக சம்பளத்தில் சிறந்த வேலையை பெற்று தரும்.

B.A (Economics) என்பது சாதாரண படிப்பு தான், உங்கள் அறிவோடும், திறமையோடும் B.A (Economics) படிப்பு சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது. இன்னும் விரிவாக அறிந்து கொள்ள “எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ? https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் 7-ஆம் பகுதி இது. ஏற்கனவே பல தலைப்புகளில் கல்வி வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisdom கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வெளிவந்துள்ளது. இன்னும் பல கட்டுரைகள் வெளிவரவுள்ளது அனைத்தையும் படித்து பயன் பெறவும்

B.A (Economics) படிப்பு பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டா
ல் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
www.facebook.com/wisdomkalvi/posts/1076973286009254

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது YouTube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment