Wednesday, July 8, 2020

B.Com படிக்கலாமா ?

B.Com படிக்கலாமா ?
B.Com படிப்பிற்க்கு உள்ள வேலை வாய்ப்புகள் என்ன ?

பனிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் (Commerce) குரூப் எடுத்த மாணவர்களின் முதன்மை தேர்வாக இருப்பது B.Com படிப்பு,  எனவே இதற்க்கு கடும் போட்டி இருக்கும். இந்த படிப்பின் எதிர்கால வாய்ப்புகள் பற்றி விரிவாக பார்ப்போம் 

தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், பெரும்பாலான அலுவலக வேலைகள், கணக்கீடு வேலைகள், ஆவணபடுத்தும் வேலைகளை தற்போது மென்பொருள்களே (software) செய்கின்றன. மனிதர்களுக்கு இந்த துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றது.

எனவே B.Com படிக்க விரும்பும் மாணவர்கள், வணிகம், பொருளாதாரம், அரசின் வரிவகைகள்(tax), வணிகம் தொடர்பான சட்டங்கள் (Polices & Laws) ஆகிய துறைகளில் தங்களின் அறிவையும் திறமையையும் வளர்த்து கொண்டால் எதிர்காலத்தில் சாதிக்கலாம். 

B.Com படிப்பிற்க்கான எதிர்கால வாய்ப்புகள்

1. CA (Chartered Accountant) : ICAI என்ற அமைப்பு நடத்தும் தொடர் தேர்வுகளில் தேர்சி பெறுவதன் மூலம் CA ஆகலாம். CA என்பது B.Com மாணவர்களின் கனவு தேர்வு என சொல்லலாம், இதற்க்கு B.Com அவசியமில்லை, இருந்தாலும் B.Com படித்து விட்டு CA தேர்வுகளை எழுதினால் இலகுவாக இருக்கும். CA முடித்து எங்கும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை, சுயமாக நாமே ஒரு அலுவலகத்தை துவக்கி பல நிறுவனங்களுக்கு Accountant-க இருக்கலாம்.

2. CS -Corporate Secretary : ICSI என்ற அமைப்பு நடத்தும் தொடர் தேர்வுகளில் தேர்சி பெறுவதன் மூலம் CS (Corporate Secretary) certification பெறலாம். வணிக நிறுவனங்களில் நிர்வாகம், நிதி மேலாண்மை, சட்ட ரீதியான விவகாரங்களை கையாள்வது போன்ற பல பணிகளில் CS (Corporate Secretary) முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

3. CMA (Certified Management Accountant) : ICAI என்ற அமைப்பு நடத்தும் தொடர் தேர்வுகளில் தேர்சி பெறுவதன் மூலம் CMA ஆகலாம். வணிக, மற்றும் வியாபார நிறுவனங்களில் மேலாளார் (Manager) , Accounts Officer, Finance officer  போன்ற பல பணிகளில் CMA முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

4. Diploma in Taxation : B.Com முடித்து Taxation கோர்ஸ் படித்தால் வணிக நிறுவனங்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும், வரவு செலவுகளை கணக்கீடு செய்து, வருட வருடம் அரசிற்க்கு வரி தாக்கல் செய்யும் பணியை மேற்கொள்ளலாம். வருமான வரி கட்ட விரும்பும் தனி நபர்களுக்கும் வரி தாக்கல் செய்ய உதவலாம். அரசு துறையிலும், தனியார் துறையிலும் taxation படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. சுயதொழிலாக பலருக்கும் பணியாற்றும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.  தற்போதைக்கு வளார்ந்து வரும் துறை.

5. E-Commerce துறை : B.Com படிக்கும் போது கணிணி அறிவை (computing and programing skill) வளர்த்து கொண்டால் E-Commerce துறையில் developer, automation, manager, consultant  போன்ற பல வேலை வாய்ப்புகள் உள்ளன.  அதிக வேலை வாய்ப்புள்ள வளர்ந்து வரும் துறைகளில் E-Commerce-ம் ஒன்று.

6. MBA : நல்ல ஆங்கில மொழி திறனும், தொடர்பு திறனும் (communication skill),  இருந்தால் மேற்படிப்பாக MBA படிக்கலாம். MBA-ல் Logistics and Supply Chain, Marketing, Operations ஆகிய துறைகளை தேர்ந்தெடுக்கலாம். MBA படிப்பு பற்றி முழுவிபரங்களும் தனி கட்டுரையாக சில வாரங்களில் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி பக்கத்தில் (www.facebook.com/wisdomkalvi/) வெளிவரும் அதையும் பார்க்கவும்.

7. M.Com படித்து பின்னர் B.Ed படித்தால் பள்ளி கூட ஆசிரியர் (Teacher) ஆகலாம்.

இன்னும் பல துறைகளில் B.Com படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது

B.Com-ல் எந்த பிரிவு எடுக்கலாம் ?

a) B.Com (General) : இதை தேர்ந்தெடுத்தால் பிற்காலத்தில் விரும்பும் துறைக்கு செல்லாம், எனவே இந்த பிரிவு கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள்
b) B.Com (Corporate Secretary ship) : CA, CS, CMA, taxation துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம்
c) B.Com (COMPUTER APPLICATIONS) : E-Commerce, கணிணி துறையில் சாதிக்க விரும்புவர்கள் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம்

B.Com படிக்க விரும்பும் மாணவர்களுக்கு!

E-Commerce, taxation மற்றும் MBA இப்போது முன்னனியில் உள்ளன. எனவே கணித அறிவு (mathematical knowledge), கணிணி அறிவு (programing knowledge), சட்ட நுணுக்கங்கள், ஆங்கில மொழி திறன், தொடர்பு திறன் (communication skill) போன்ற திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்

படிப்பை (Degree) மட்டுமே அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge), திறமையையும் (Skill) அடிப்படையாக கொண்டே வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. வெரும் B.Com படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை. B.Com படிப்போடு சேர்த்து அறிவும், திறமையும் இருந்தால் தான் இப்போது நல்ல வேலை கிடைக்கும். 

வெரும் B.Com படிப்பிற்க்கென்று தனியாக மதிப்பு கிடையாது. உங்கள் அறிவோடும், திறமையோடும் B.Com படிப்பு சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது. இன்னும் விரிவாக அறிந்து கொள்ள “எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

நல்ல மதிப்பெண் எடுத்தால் B.Com-ல் சேர வாய்ப்புள்ளது, ஒரு வேளை குறைவான மதிப்பெண் எடுத்து B.Com கிடைக்க வில்லை என்றால், BA (Economics), BA (English) போன்ற படிப்புகள் பற்றிய விபரங்கள் வரும் நாள்களில் நமது Wisodm கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வரவுள்ளது. அனைத்தையும் படித்து பயன் பெறுங்கள்.

B.Com படிப்பு பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டால் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
www.facebook.com/wisdomkalvi/posts/1064460920593824

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi
Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment