Wednesday, July 8, 2020

பாராமெடிக்கல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்

Career/Medicine/Paramedical Courses

பாராமெடிக்கல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்

உலக அளவில் மருத்துவத் துறையில் நவீனமயமாக்கப்பட்டு மிகப்பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் நாடு இந்தியா. இதற்கு ஆதாரமாக பல சிக்கலான  அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து மருத்துவ சாதனைகள் படைத்திருக்கின்றன சில இந்திய மருத்துவமனைகள்.

மருத்துவம் கார்பரேட் மயமாகிவரும் நிலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் அதிகரித்துவருகிறது. ஆனால், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வால் எட்டாக்கனியாக்கப்பட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பல மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற கனவோடு எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்று பெரும் முயற்சி மெற்கொள்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம்.

சமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூட பல பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன.  

‘எம்.பி.பி.எஸ்., மட்டுமே மருத்துவப் படிப்பு அல்ல’

மருத்துவப் படிப்பு என்றாலே, அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது எம்.பி.பி.எஸ்.,! இன்று பெரும்பாலானோரின் முதல் விருப்பமும் அதுவே! அதேவேளை, மாணவர்களுக்கு உண்மையாகவே மருத்துவ துறையில் ஆர்வம் இருக்குமானால், அவர்களை மருத்துவம் படிக்க வைக்கலாம். ஆனால், ஆர்வம் இல்லாத மாணவர்களை, பெற்றோர் வற்புறுத்தி மருத்துவ படிப்புகளில் சேர்ப்பது உகந்ததல்ல!

எம்.பி.பி.எஸ்., படித்தவுடன் முதுநிலை படிப்பு, அதன்பிறகு சூப்பர் ஸ்பெஷாலிட்டி, என அடுத்தடுத்த படிப்புகளை படிக்க வேண்டும் என்ற மனநிலையே இன்றைய மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. எந்த படிப்பாக இருந்தாலும், ஆழமாக புரிந்து படிக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த பப்ளிக் ஹெல்த், மெடிக்கல் எஜுகேஷன், ரிசர்ச், அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற பிரிவுகளிலும் இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

அனைத்துமே அவசியம்

இன்று, எம்.பி.பி.எஸ்., படிப்பையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த ஏராளமான படிப்புகள் மருத்துவ துறையில் உள்ளன. பி.பார்ம், பார்ம்-டி,  நர்சிங், போஸ்ட் பேசிக், பிசியோதெரபி, பயோ மெடிக்கல் சயின்ஸ், பயோஇன்பர்மேட்டிக்ஸ், பயோடெக்னாலஜி,  என்விரான்மென்டல் ஹெல்த் சயின்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, இன்டஸ்டிரியல் சேப்டி, டயாலிசிஸ் டெக்னாலஜி உட்பட ஏராளமான படிப்புகள் இன்று வழங்கப்படுகின்றன.  ஒவ்வொரு படிப்புமே முக்கியத்துவம் நிறைந்த படிப்பு தான்!

எந்த ஒரு படிப்பையும் சாதரணமானது என்று தள்ளி வைத்து பார்க்க முடியாது. டாக்டர் ஒருவரால் மட்டுமே பரிசோதனை, சிகிச்சை, சிகிச்சை பிறகான கண்காணிப்பு என அனைத்தையும் செய்துவிட முடியாது. மருத்துவ சிகிச்சையில், பல்வேறு நிலைகளில் நிபுணர்கள் முதல் உதவியாளர்கள் வரை அவசியம் தேவை.

இவற்றை உணர்ந்து, புதிய புதிய படிப்புகளுடன், டாக்டருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவும் ‘பிஷிசியன் அசிஸ்டென்ட்’ எனும் படிப்பும் சில கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. மேலும், ஜீடியாட்டிக் கேர், கிரிட்டிக்கல் கேர், ஆர்த்தோபீடிக் டெக்னாலஜி, பிளாஸ்டிக் சர்ஜரி அன்ட் காஸ்மெடிக் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.

பாராமெடிக்கல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக அமைந்திடாது என்றாலும் மருத்துவத்துறையில் இந்தப் படிப்புக்கான பணிவாய்ப்புகளையும் சமூக அந்தஸ்த்தையும் நாம் மறுக்க முடியாது.

 மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். என்று சொல்லப்படும் ஐந்து ஆண்டு படிக்கும் மருத்துவர்களைப் போலவே அறுவை சிகிச்சை பணிகளில் கூட பங்கெடுத்துக்கொள்ளும் அளவு அந்தஸ்து கொண்ட பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் உள்ளது. பாராமெடிக்கலில் இளநிலையில் படிக்கவேண்டுமென்றால் ஃபார்ம்-டி, பிஸியோதெரபி, நர்சிங், ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி போன்ற பிரிவுகளைப் படிப்பதால் கட்டாயம் நல்ல எதிர்காலம் உண்டு.

இப்படிப்புகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே நர்சிங் பணிக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுகின்றனர். பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். அதாவது, ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம். பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும்.

Pharm D
பார்ம்-டி: பார்மஸி டாக்டர் எனப்படும் இந்தப் படிப்பானது 6 வருட காலம் கொண்டதாகும். (5 வருடங்கள் வகுப்பறை படிப்பும் 1 வருடம் பயிற்சியும் உள்ளடக்கியது.) இந்தியாவில் பார்மஸி சார்ந்த துறையில் நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் வாய்ப்பை பெற்றது இந்தத் துறை மட்டுமே. அதாவது, MBBS, M.D. படித்துள்ள மருத்துவர்களைப் போல அவர்கள் மருத்துவ சேவை செய்ய முடியும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது).  

Physiotherapy
பிஸியோதெரபி: இப்படிப்பானது சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வரும் ஒரு படிப்பாகும். இந்தப் படிப்பிற்கு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிகுந்த வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்பு 4½ வருட காலம் உள்ளடக்கியதாகும். இந்த பிஸியோதெரபி துறையில் பல உட்பிரிவுகள் உண்டு.

Nursing
நர்சிங்: நர்சிங் பணிக்கு உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே முடிக்கும் பாடப்பிரிவு இது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்தால் அரசுப் பணிக்கும் வாய்ப்பு உண்டு. முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு. டிப்ளமோ நர்சிங் படிப்பும் உள்ளது.

Occupational Theraphy
ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது பற்றி சொல்லிக்கொடுப்பது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதற்கான மர்மத்தை ஆராய்ந்து அதற்குரிய சரியான சிகிச்சையை அளிப்பது இதன் பணி. பரபரப்பாக அவசரகதியாக ஓடும் இன்றைய மனித வாழ்க்கையினால் பலபேர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பாதிப்படைபவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.

Audiology
ஆடியோலஜி: பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் ‘ஸ்பீச் தெரபி’ படிப்பும் உள்ளது. 

இது தவிர மருத்துவம் சார்ந்த நல்ல பணி வாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகள் நிறையவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை குறித்து அறிவதற்கு ரேடியோகிராபி படிப்பு. ரேடியோதெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

நோயைக் கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. இதற்குரியது மருத்துவத்துறையில் முக்கியமான படிப்பான மெடிக்கல் லேப் டெக்னாலஜி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்புகள் (பி.எம்.எல்.டி.) உள்ளன. இதை படிப்பதனால் மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்
களில் பணி வாய்ப்புகள் ஏராளம். இவை தவிர மருத்துவத் துறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

- சாரதி
நன்றி: கல்விமலர்

These courses can be pursued prior to graduation or straightforwardly after 10th standard:

Diploma in Emergency Medicine

Diploma in Medical Laboratory Technology (DMLT)

Diploma in Hospital Administration

Diploma in Biomedical Instrumentation

Diploma in Physiotherapy

Diploma in Nursing Care Assistant

General Nursing Midwifery (GNM)

Diploma in X-Ray Technology

Diploma in Dialysis Technician

Diploma in Operation Theatre Technology

Auxiliary Nursing Midwifery (ANM)

Some other options after 10th or 12th:

DE diabtest educator

Certificate Course in Healthcare Quality Management

X-Ray Technician

List Of Paramedical Degree Courses (After 12th Science)

Bachelor of Physiotherapy

B.Sc. in Medical Lab Technology

B.Sc. in OTT (Operation Theatre Technology)

Bachelor of Science (B.Sc) in Renal Dialysis Technology

BSc in X-Ray Technology

B.Sc. in Radiography

Bachelor in Dialysis Technology

B.Sc. in Anaesthesia Technology

B.Sc. in Perfusion Technology

B.Sc. in Ophthalmic Technology

Bachelor in Radiotherapy

B.Sc in Critical care technology

Bachelor of Naturopathy and Yoga Science

B.Sc. in Medical Record Technology

FELLOWSHIPS:

In addition to the list of paramedical courses after 12th and list of paramedical courses after 10th, there are Fellowship programmes as well. These are for the most part for MBBS doctors and is even more of a research based title provided.

– Fellowship in Cardiac Rehabilitation

– Fellowship in Dialysis

– Fellowship in Sports Sciences etc….

List Of Paramedical Post Graduate (PG) Courses 

At last, for further specialization in their degree program, a student can go to PG paramedical courses. After the Postgraduate course, a student can achieve extra skills in their course.

M.Sc. in Obstetrics & Gynecology 
Nursing

Post Basic B.Sc nursing

Master in Physiotherapy (MPT)

M.Sc. Medical Lab Technology

M. Pharm

M.Sc. in Child Health Nursing

Post Graduate Diploma in Medical Radio-diagnosis (D.M.R.D.)

M.Sc -Nursing (Paedritics Nursing)

PG Diploma in Anesthesiology

PG Diploma in Perfusion Technology

Paramedical courses list (after 12th arts)

Certificate in Dialysis Technician

X-Ray Technician Certificate

Certificate – Lab Assistant/Technician

GNM (General Nursing Midwifery)

Certificate in Operation Theatre Assistant

Certificate in ECG and CT Scan Technician

ANM Auxiliary Nursing Midwifery

HIV and Family Education Certificate

Certificate in Nutrition and Childcare

Rural Health Care Certificate

Top 10 Jobs After Paramedical Courses

Physiotherapists
Nursing
Geriatric Manager
Lab Technicians
Pharmacist
Homeopathy
Prosthetic and Orthotic Engineering
Occupational Therapists
Speech Therapists

(இது ஒரு மீழ்பதிவு)

No comments:

Post a Comment