Wednesday, July 8, 2020

B.Sc (Computer Science), B.Sc (IT), B.C.A படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா ?

B.Sc (Computer Science), B.Sc (IT), B.C.A படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா  ?
இந்த படிப்புகளுக்கான எதிர்கால வாய்ப்புகள் என்ன ?

கணிணி தொழில்நுட்பம் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு, அனைத்து துறைகளும் கணிணி மயமாக்கப்பட்டு வருகின்றன.

பல அலுவலக வேலைகளை மென்பொருள்களே (Software) தற்போது செய்கின்றன, பல நிறுவனங்களில் தொழிலாளர்களை நிர்வகிக்கும் மேலாளர் (Manager) வேலையை கூட, மென்பொருள்களும் (Software), செல்போன் செயலிகளும் (Mobile Apps) செய்கின்றன.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ள துறைகளில் கணிணி துறையும் (IT, Networking sector) ஒன்று. நல்ல எதிர்காலத்தை கட்டமைக்க B.Sc (Computer Science), B.Sc (IT), B.C.A  படிப்புகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை

கணிணி துறையில் (IT, Networking sector) எளிதில் வேலை வாய்ப்புகள் பெற மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் ?

படிப்பை (Degree) மட்டுமே அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge), திறமையையும் (Skill) அடிப்படையாக கொண்டே தற்போது வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

வெரும் பட்ட படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை. பட்ட படிப்போடு சேர்த்து அறிவும், திறமையும் இருந்தால் தான் இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

B.Sc (CS), B.Sc (IT), B.C.A படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science), பகுப்பாய்வு திறன் (Analytical skill), ஆங்கில மொழி திறன் (English Language skill), தொடர்பு திறன் (communication skill) போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

நீங்கள் படிக்கும் காலத்திலேயே மென்பொருள் மற்றும் செயலிகளை (Software & Apps) உருவாக்க கற்று கொண்டால், படிக்கும் போதே Freelancer முறையில் வேலை பார்த்து சம்பாதிக்கலாம். படித்து முடிக்கும் போது Freelancer முறையில் செய்த வேலைகளை ஓர் ஆண்டு அனுபவமாக காண்பித்து 1 year experience என்று வேலை தேடினால் உடனடியாக வேலை கிடைக்கும். வேலை கிடைக்கவில்லை என்றாலும் Freelancer முறையில் பணியை தொடரலாம்.

“எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?” என்ற தலைப்பில் இதை இன்னும் விரிவாக விளக்கியுள்ளேன் அதையும் வாசிக்கவும்.
பார்க்க  https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937  

B.Sc (CS), B.Sc (IT), B.C.A எதிர்கால வாய்ப்புகள் :

1. ஆட்டோமேஷன் (Automation), தகவல் பகுப்பாய்வு (Data Analytics), இணையதள பாதுகாப்பு (Cyber security), Machine Learning, Artificial Intelligent, Virtual Reality, Augmented Reality ஆகியவை வளர்ந்து வரும் துறைகள், படிக்கும் காலத்தில் இந்த துறைகளில் மாணவர்கள் ஒரு சில புராஜெக்ட்கள் செய்து தங்களின் திறமையை நிருபித்தால் நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம்.

2. இந்த துறைகள் இல்லாமல் தற்போது எல்லா துறைகளும் கணிணி சார்ந்து இருப்பதால் உங்களுக்கு எந்த துறை பிடித்திருகின்றதோ அந்த துறையில் உங்களின் திறமையை நிருபித்தால் நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம்.

3. சுய தொழில் செய்ய ஏற்ற படிப்புகள் கணிணி துறை சார்ந்த படிப்புகள்.  வேலை கிடைக்கவில்லை என்றால் நீங்களே ஒரு Software கம்பெனி ஆரம்பிக்கலாம். Software கம்பெனி துவங்க பெரிய முதலீடு தேவை இல்லை. சில கணிணிகள் போதும். இங்கே அறிவு தான் முதலீடு. மிக குறைந்த முதலீட்டில் சொந்தமாக கம்பெனி ஆரம்பிப்பது கணிணி துறையில் மட்டுமே சாத்தியம்.

4. எந்த வேலையும் கிடைக்க வில்லை என்றால், தொழில்நுட்ப பயிற்சியாளர் (Technical Trainer) பணிக்கு செல்லலாம்.  இதற்க்கு, வளர்ந்து வரும் தொழில் நுட்பம் (Technology), கணிணி மொழி (Programming language) ஆகியவற்றை நன்றாக கற்று கொள்ள வேண்டும். (அப்போது தானே மாணவர்களுக்கு நாம் அதை சொல்லி கொடுக்க முடியும்). 

எந்த தொழில் நுட்பமாக இருந்தாலும் இலவசமாக இணைய தளங்களில் கற்கும் வசதி தற்போது உள்ளது.  நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி (www.facebook.com/wisdomkalvi/) சார்பாகவும் பல்வேறு தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றோம்.

5. Development, Testing என பல பிரிவுகள் முன்னர் இருந்தது, தற்போது DevOps முறையிலேயே பெரும்பாலான புராஜெக்ட்கள் செயல்படுகின்றன. எனவே மாணவர்கள் Development, Testing என பிரிக்காமல்,  முழு அறிவு (End to End knowledge) கொண்டவர்களாக தங்களை வளர்த்து கொள்ள வேண்டும். Development, Testing, deployment என அனைத்து பிரிவுகளிலும் வல்லுனராக (Expert) இருக்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

6. தொழில்நுட்ப வேலைகளை தவிர்த்து சட்ட படிப்புகள் (L.L.B) படித்து சட்ட துறையில் பணியாற்றலாம்.

7. அரசு தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு பணியிலும் சேரலாம்

B.Sc (CS), B.Sc (IT), B.C.A இதில் எதை தேர்ந்தெடுக்கலாம் ?

B.Sc (CS) கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள், அது கிடைக்கவில்லை என்றால் B.Sc (IT) எடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் B.C.A எடுங்கள். மீண்டும் சொல்கின்றேன், எந்த படிப்பு என்பது முக்கியம் இல்லை, படிக்கும் போது நாம் வளர்த்து கொள்ளும் அறிவும், திறமையும் தான் முக்கியம்.

B.Sc (CS, IT) மற்றும் B.E (CS, IT) என்ன வித்தியாசம் ?

முன்பெல்லாம் பொறியியல் (Engineering) படிப்புகளின் கல்வி கட்டணம் மிக அதிமாக இருக்கும், B.Sc (CS, IT) படிப்புகளுக்கு குறைவாக இருக்கும். எனவே வசதி குறைந்தவர்கள் கணிணி துறையில் பணியாற்ற B.Sc (CS, IT) படிப்புகளை தேர்ந்தெடுப்பார்கள். 

இப்போது இரண்டிற்க்கும் ஒரே கல்வி கட்டணம் தான். எனவே தான் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த சந்தேகம் எழுகின்றது.

B.E (CS) என்பது நான்கு ஆண்டு படிப்பு, எனவே வேலைவாய்ப்புகளில் B.E (CS) படித்தவர்களுக்கு பெரிய நிறுவனங்கள் அதிக சம்பளம் தருகின்றன. B.Sc (CS), B.Sc (IT), B.C.A படித்தவர்களுக்கு சற்று குறைவாக தருகின்றன. சிறிய நிறுவனங்கள் B.E (CS) படித்தவர்களுக்கும், B.Sc (CS) படித்தவர்களுக்கும் ஒரே சம்பளமே தருகின்றன.

பெரிய நிறுவனங்களில் B.E (CS) படித்தவர்களுக்கு இணையாக சம்பளம் பெற வேண்டும் என்றால், B.Sc (CS), B.Sc (IT), B.C.A படித்தவர்கள் கூடுதலாக M.Sc (IT) அல்லது M.C.A படிக்க வேண்டும். (இதை வேலை பார்த்து கொண்டே தொலைதூர கல்வி (correspondence) மூலமும் படிக்கலாம்).

B.Sc (CS, IT) மற்றும் B.E (CS, IT) இதில் எதை தேர்ந்தெடுக்கலாம் ?

இரண்டிலும் சாதக, பாதகங்கள் உள்ளது. மாணவர்களின் விருப்பத்தை பொருத்து இது மாறுபடும்.

B.Sc (CS) படிப்பிற்க்கு அரை நாள் தான் கல்லூரி நடைபெறும், எனவே மாணவர்கள் கூடுதல் தொழில் நுட்பங்களை கற்று கொண்டு சொந்தமாக புராஜெக்ட்கள் தயாரிக்க இது உதவியாக இருக்கும். (சில மாணவர்கள் இந்த நேரங்களை, அறிவை வளர்த்து கொள்ள பயன்படுத்தாமல் , வீணாக கழிக்கின்றனர்)

எனவே சுய தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்கள், சிறிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், Freelancer முறையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் B.Sc (CS) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். (கூடுதலாக M.Sc (IT) அல்லது M.C.A படிப்பது சிறந்தது)

பெரிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் B.E (CS) படிப்பை தேர்ந்தெடுக்கலாம் (நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும், கல்லூரி முழு நேரமும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்) 

B.Sc (CS), B.Sc (IT), B.C.A படிப்புகளை பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டால் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
https://www.facebook.com/wisdomkalvi/posts/1078759819163934

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் 8-ஆம் பகுதி இது. ஏற்கனவே பல தலைப்புகளில் கல்வி வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisdom கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வெளிவந்துள்ளது. இன்னும் பல கட்டுரைகள் வெளிவரவுள்ளது அனைத்தையும் படித்து பயன் பெறவும்.

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது YouTube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment