Wednesday, July 8, 2020

வெளிநாடுகளில் டாக்டர் (MBBS) படிக்கலாமா ?

வெளிநாடுகளில் டாக்டர் (MBBS) படிக்கலாமா ?

கல்வி கட்டணம் குறைவு என்பதால் பலர் வெளிநாடுகளில் டாக்டர் (MBBS) படிக்க விரும்புகின்றனர். அதில் உள்ள சாதக, பாதகங்களை விரிவாக பார்ப்போம்

வெளிநாடுகளில் டாக்டர் படிக்க வேண்டும் என்றாலும் நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். கடந்த ஆண்டிலிருந்து மத்திய அரசு வெளிநாடுகளில் டாக்டர் படிக்க நீட் (NEET) தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. நீட் (NEET) தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, தேர்ச்சி மட்டும் போதும்.

வெளிநாடுகளில் மத்திய அரசின் MCI (Medical Council of India) அங்கீகரித்த சில கல்லூரிகளில் மட்டும் தான் டாக்டர் படிக்க முடியும். மத்திய அரசு அங்கீகரித்த வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் கீழ்காணும் லின்கில் உள்ளது

https://www.mciindia.org/CMS/information-desk/for-students-to-study-in-abroad

வெளிநாடுகளில் டாக்டருக்கு படித்தாலும் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்றால் மத்திய அரசு நடத்தும் FMGE தேர்வில் வெற்றி பெற வேண்டும். (வரும் காலத்தில் FMGE தேர்வு “NEXT” தேர்வுடன் இணைக்கபடலாம்).

நீட் தேர்வு அளவிற்க்கு இணையானது தான் இந்த FMGE தேர்வும். FMGE தேர்வை பற்றிய முழுவிபரமும் கீழ்காணும் லின்கில் உள்ளது

https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/image/pdf1/Information_Bulletin_FMGE_Dec_2019.pdf

வெளிநாடுகளில் டாக்டர் (MBBS) படிக்க விரும்புவர்கள் கவனிக்க வேண்டியது :

1. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

2. வெளிநாடுகளில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்

3. எந்த நாட்டில் படிப்பது ? :  வெளிநாட்டில் MBBS படித்து, FMGE தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற தகுதி பெற்று இருந்தாலும், சில மருத்துவமனைகள் வெளிநாட்டில் படித்தவர்களை விரும்புவதில்லை. காரணம் வெளிநாடுகளில் ஏற்படும் நோய்களின் தன்மையும் (disease pattern) இந்தியாவில் ஏற்படும் நோய்களின் தன்மையும் வித்தியாசப்படுவதே . எனவே காமன் வெல்த் நாடுகள், இந்தியாவின் அண்டை நாடுகளில் படிப்பது சிறந்தது.

4. வெளிநாட்டில் MBBS படிக்கும் காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் FMGE (அல்லது NEXT) தேர்விற்க்கும் சேர்த்து படிப்பது நல்லது, இதனால் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு முடித்த அதே ஆண்டில் இங்கு FMGE (அல்லது NEXT) தேர்வு எழுதி தேர்சி பெற்று மருத்துவராக பணியாற்றலாம்.

ஒரு வேலை உங்களால் FMGE தேர்வில் தேர்ச்சி பெறவே முடியவில்லை என்றால் வெளிநாடுகளில் மருத்துவ PG படிப்பு படிக்கலாம், இந்தியாவை தவிர்த்து பிறநாடுகளில் மருத்துவராக பணியாற்றலாம்.

சரியான நாட்டை தேர்ந்தெடுங்கள், அங்கீகரிக்கப்பட்ட நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள், பலர் பெண் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்புகின்றனர், எனவே மாணவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள், படிக்கும் காலத்தில் FMGE (அல்லது NEXT) தேர்விற்க்கு சேர்த்து தயாராக சொல்லுங்கள், படிப்பு முடிக்கும் வரை தொடர்ந்து கண்கானித்து வாருங்கள்

கவனத்துடனும், பாதுகாப்புடனும், தொடர் கண்கானிப்பில் உங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க முடியும் என்றால் அவசியம் வெளிநாட்டில் டாக்டர் (MBBS) படிக்க வையுங்கள்

கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/  பக்கத்தை Like செய்யுங்கள்.

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment