Wednesday, July 8, 2020

B.A (History) படிக்கலாமா ?

B.A (History) படிக்கலாமா ?

• B.A (History) படிப்பிற்க்கான எதிர்கால வாய்ப்புகள் என்ன ?
• தொல்லியல் துறை (Archaeology) பணிகளில் சேர்வது எப்படி ?

கடினமில்லாமல் மிகவும் எளிதாக, படித்து பட்டம் பெற ஏற்ற படிப்பு B.A (History) படிப்பு. பெரும்பாலும் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களே B.A (History) படிப்பில் சேர்கின்றனர். 

B.A (History) நல்ல படிப்பு தான். அரசு பணிகள், தொல்லியல் துறை (Archaeology) பணிகள், ஆசிரியர், பேராசிரியர் பணிகள் என பல்வேறு வாய்ப்புகள் B.A (History) படித்தவர்களுக்கு உள்ளது, அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

யார் B.A (History) படிப்பை தேர்ந்தெடுக்கலாம் ?

அரசு பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள், வரலாற்றை ஆய்வு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் B.A (History) படிப்பை தேர்ந்தெடுக்கலாம். 

நல்ல வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள், ஆங்கில அறிவு (English knowledge), தொடர்பு திறன் (Communication skill), நினைவில் நிறுத்தும் திறன் (Memorization Skill) ஆகிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

B.A (History) படிப்பிற்க்கான எதிர்கால வாய்ப்புகள் :

1. அரசு பணிகள் (Govt. Jobs) :  மத்திய, மாநில அரசு பணிகளில் சேர பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் அரசு பணிகளில் சேர முடியும். இப்படி பட்ட தேர்வுகளுக்கு தயாராக 2 அல்லது 3 ஆண்டு பயிற்சி அவசியம். B.A (History) படிப்பு மிகவும் எளிதான படிப்பு, எளிதில் தேர்சி பெற்று விடலாம். கல்லூரி நேரமும் அரை நாள் தான். எனவே அரசு பணிக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற அதிக நேரங்களை ஒதுக்க முடியும். 

படிக்கும் காலத்தில் 60 % நேரங்களை அரசு பணிக்கு தயாராகவும், 40 % நேரங்களை B.A (History) படிக்கவும் மாணவர்கள் பயன்படுத்தலாம். மேலும் பெரும்பான அரசு தேர்வுகளில் வரலாறு (History) ஒரு பாடமாக இருக்கும், எனவே B.A (History) படிப்பது, அரசு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவியாக இருக்கும். B.A (History) படிப்பில் சேர்ந்து, கூடவே மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு மூன்று ஆண்டு பயிற்சியும் எடுத்தால், படிப்பு முடித்ததும் ஏதேனும் ஒரு அரசு தேர்வில் வெற்றி பெற்று எளிதில் அரசு பணியில் சேரலாம்.

2. தொல்லியல் துறை (Archaeology) வேலை வாய்ப்புகள் : மத்திய, மாநில அரசுகளின் தொல்லியியல் துறை (Archaeology) பணிகளில் எப்படி சேர்வது என்பது பற்றிய முழு விபரங்களும் இறுதியில் கொடுத்துள்ளேன் பார்க்கவும்

3. வரலாற்று ஆய்வு (Research) : B.A (History)-க்கு பிறகு M.A படித்து, வரலாற்றில் ஆய்வு படிப்பு (PhD) படிக்கலாம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்கள் வரலாற்று (History) பிரிவில் ஆய்வு படிப்புகளை வழங்கி வருகின்றன. சில பல்கலை கழகங்கள் ஆய்வு படிப்பிற்க்கு உதவி தொகையும் (stipend) வழங்குகின்றது. ஆய்வு படிப்புகள் (PhD) முடித்து கல்லூரிகளில் விரிவுரையாளர் (Lecturers) பணிகளில் சேரலாம். 

4. ஆசிரியர் (Teacher) பணி: B.A (History)-க்கு பிறகு M.A படித்து, அதற்க்கு பின் B.Ed படித்து, பள்ளிகளில் வரலாற்று (History) ஆசிரியராக பணியாற்றலாம். TRB நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பள்ளியிலும் வரலாற்று ஆசிரியராக பணியாற்றலாம்.

5. சட்ட (Law) படிப்பு : B.A (History) படிப்பிற்க்கு பிறகு, மேற்படிப்பாக சட்ட படிப்பு (L.L.B) படிக்கலாம். (அதாவது B.A.L.L.B). வழக்கறிஞர், சட்ட ஆலோசகர் மற்றும் சட்ட துறை சார்ந்த பல்வேறு பணிகளில் வாய்ப்புகள் உள்ளது.

6. பத்திரிக்கை துறை (Journalism) : உலகம் முழுவதும், வரலாற்றை மையப்படுத்தி பல்வேறு பத்திரிக்கைகள், டி.வி சேனல்கள் இயங்கி வருகின்றன, பெரிய செய்தி நிறுவனங்களில் வரலாற்றிக்கு என்றே தனிபிரிவுகளும் உள்ளன. வரலாறு படித்தவர்களுக்கு இந்த பிரிவுகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. எழுத்திலும், பேச்சிலும் ஆங்கில அறிவை வளர்த்து கொண்டால் பத்திரிக்கை துறை பணிகளில் சேரலாம்.

7. அலுவலக வேலைகள் (Office operational jobs), BPO வேலைகள் : B.A (History) படித்து முடித்து நேரடியாக அலுவலக பணிகளின் சேரலாம், மார்கெடிங் (Marketing) துறையிலும் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இவற்றில் சம்பளம் குறைவாக இருக்கும். இது தவிர BPO பணிகளிலும் B.A (History) படித்தவர்கள் வேலைக்கு சேரலாம். இதற்க்கு அடிப்படை கணிணி அறிவும் (Computer knowledge), ஆங்கில அறிவும் (English knowledge) அவசியம்.

மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை (Archaeology) பணிகளில் சேர்வது எப்படி ?

இந்தியாவில் பல்வேறு வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன. அரசு சார்பில் அருங்காட்சியகங்களும் (Museums) நடத்தப்படுகின்றது. இவற்றை பராமரிப்பது, இந்தியாவில் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) செய்து வருகின்றது.

தமிழகத்தில்  உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, பராமரிக்க தமிழ்நாடு தொல்லியல் துறை (Department of Archaeology) செயல்பட்டு வருகின்றது. இவற்றில் உள்ள பல்வேறு பணி இடங்களில் வரலாறு (History) படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்

மத்திய அரசின் தொல்லியல் துறை (ASI) பணிகளில் சேர்வது எப்படி ?

"Institute of Archaeology" என்ற கல்வி நிறுவனத்தை Archaeological Survey of India (ASI) நடத்தி வருகின்றது. இங்கு Post-Graduate Diploma in Archaeology (PGDA) என்ற 2 ஆண்டு படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்திய தொல்லியல் துறையின் (ASI) பணிகளில் சேர்கின்றனர். 

இங்கு PGDA படிக்க M.A (Archaeology) படித்து இருக்க வேண்டும், கூடுதலாக அரபி, சமஸ்கிருதம், பார்சி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.

இந்திய தொல்லியல் துறையின் (ASI) உயர் பதவிகளில் சேர மத்திய அரசின் UPSC தனியாக தேர்வுகளை நடத்தி வருகின்றது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றும்  இந்திய தொல்லியல் துறையில் (ASI) பணியாற்றலாம்.

இது போக ஒப்பந்த அடிப்படையிலும் (Contract Jobs) பல்வேறு பணிகளில் சேர இந்திய தொல்லியல் துறை (ASI) அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இன்னும் கூடுதல் தகவல்களை பெற இந்திய தொல்லியல் துறையின் இணையதளத்தை https://asi.nic.in/ பார்க்கவும்.

தமிழக அரசின் தொல்லியல் துறை (Department of Archaeology) பணிகளில் சேர்வது எப்படி ?

தமிழக அரசின் தொல்லியல் துறை பணிகளில் சேர TNPSC அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. பெரும்பாலான வாய்ப்புகளுக்கு M.A (Archaeology) படித்து இருப்பது அவசியம். TNPSC நடத்தும் சிறிய அளவிலான தேர்வுகள் மூலம் தமிழக அரசின் தொல்லியல் துறை பணிகளில் சேரலாம்.

இன்னும் கூடுதல் தகவல்களை TNPSC-யின் இணைதளம் மற்றும் தமிழக அரசின் தொல்லியல் துறையின் இணையதளத்தில்  https://www.tnarch.gov.in/ பார்க்கவும்.

சென்னை பல்கலை கழகத்தில் M.A (Ancient History and Archaeology) படிப்பு பயிற்று விக்கப்படுகின்றது. 

B.A (History) படிக்க விரும்பும் மாணவர்களுக்கு !

வெறும் B.A (History) படிப்பிற்க்கு நல்ல வேலை கிடைப்பது கடினம், எனவே MA வரை படிக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை (Archaeology) பணிகளுக்கான நுழைவு தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.

தொல்லியல் துறையில் வேலை  கிடைக்கவில்லை என்றால் B.Ed அல்லது PhD படித்து ஆசிரியர் அல்லது கல்லூரி விரிவுரையாளர் பணிகளில் சேர முயற்சி செய்யுங்கள்.

அதுவும் இல்லை என்றால் அரசு பணிக்கான நுழைவு தேர்வுகளுக்கு தயாராகுங்கள். அதுவும் இல்லை என்றால் சட்ட (L.L.B) படிப்பில் சேர முயற்சிக்கலாம்.

அதுவும் இல்லை என்றால் ஆங்கில அறிவை வளர்த்து கொண்டு அலுவலக பணிகள் மற்றும் BPO பணிகளில் சேரலாம்.

B.A (History) என்பது சாதாரண படிப்பு தான், உங்கள் அறிவோடும், திறமையோடும் B.A (History) படிப்பு சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது. இன்னும் விரிவாக அறிந்து கொள்ள “எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ? https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் 9-ஆம் பகுதி இது. ஏற்கனவே பல தலைப்புகளில் கல்வி வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisdom கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வெளிவந்துள்ளது. இன்னும் பல கட்டுரைகள் வெளிவர உள்ளது அனைத்தையும் படித்து பயன் பெறவும்.

B.A (History) படிப்பு பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டால் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
www.facebook.com/wisdomkalvi/posts/1082071905499392

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது YouTube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment