Wednesday, July 8, 2020

துணை மருத்துவ (Paramedical medical) படிப்புகள்

துணை மருத்துவ (Paramedical medical) படிப்புகள்  

+2 முடித்த பிறகு துணை மருத்துவ துறையில் (Paramedical medical) படிப்பதற்க்கு  எண்ணற்ற படிப்புகள் உள்ளன.  இதற்க்கு NEET தேர்வு அவசியம் இல்லை, +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடங்களை படித்த மாணவர்கள் மட்டுமே இந்த மருத்துவ படிப்புகளை படிக்க முடியும். மிகவும் சொற்ப்பமான சில மருத்துவ படிப்பிற்க்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மருத்துவ துறையில் கல்வி பயில 4 கவுன்ஸிலிங் நடத்தபடுகின்றது (கால்நடை மருத்துவ கவுன்சிலிங் தனி)

1. பொது மருத்துவம் (MBBS/BDS)
2. துணை மருத்துவ பட்ட படிப்புகள்
3. துணை மருத்துவ டிப்ளோமா/சான்றிதழ் படிப்புகள்
4. இந்திய மருத்துவ படிப்புகள்

பொது மருத்துவம் (MBBS/BDS) NEET தேர்வின் அடிப்படையில் நடைபெறுகின்றது, MBBS/BDS தவிற்த்து பிற படிப்புகள் பற்றி பார்ப்போம்

துணை மருத்துவ படிப்புகள் (Para medical courses) :

தமிழக மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ (Para medical courses) படிப்புகளை படிக்க தமிழக அரசு தனியாக கவுன்சிலிங் நடத்துகின்றது. ஆகஸ்டு மாதத்தில் இதற்க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதிகாரபூர்வமாக இதுவரை இந்த சேர்க்கைக்கு NEET தேர்வு அவசியமில்லை. +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேற்சொன்ன பாடங்களில் சராசரியாக 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் இதற்க்கு முயற்சி செய்யலாம்.

சில துணை மருத்துவ படிப்புகள் : 
• B.Pharm.
• B.Sc.(Nursing)
• B.P.T. (Physiotherapy)
• Bsc MLT (Medical Lab Technology)
• B.Sc. Radiology and Imaging Technology
• B.Sc. Radio Therapy Technology
• B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology
• B.O.T (Occupational therapy)
• B. Optom. (Optometry)
• Bsc in Medical Record Science
• Bsc in OTT (Operation Theatre Technology)
• Bsc in Dialysis Technology

மருத்துவ டிப்ளோமா/சான்றிதழ் படிப்புகள் :

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு மருத்துவ டிப்ளோமா படிப்புகள் மற்றும் ஓர் ஆண்டு மருத்துவ சான்றிதழ் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் சேர்வதற்க்காக தமிழக அரசு தனி கவுன்சிலிங் நடத்துகின்றது. ஆகஸ்டு/ செப்டம்பர் மாதங்களில் இதற்க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதிகார பூர்வமாக இதுவரை இந்த சேர்க்கைக்கு NEET தேர்வு அவசியமில்லை. +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

சில மருத்துவ டிப்ளோமா படிப்புகள் (இரண்டு ஆண்டுகள்) : 
• Accident & Emergency Care Technology
• Critical Care Technology
• Operation Theatre & Anesthesia Technology
• Medical Record Science
• Optometry Technology
• Radiology & Imaging Technology
• Medical Lab Technology
• Dialysis Technology

சில மருத்துவ சான்றிதழ் படிப்புகள் (ஓர் ஆண்டு): 
• ECG/Treadmill Technician
• Pump Technician
• Cardiac Catherization Lab Technician
• Emergency Care Technician
• Respiratory Technician
• Dialysis Technician
• Anaesthecia Technician
• Theatre Technician
• Orthopaedic Technician

அனைத்து துணை மருத்துவ படிப்புகளின் பட்டியல் தமிழக அரசின் Dr.M.G.R மருத்துவ  பல்கலை கழகத்தின் இணையதளத்தில் உள்ளது  

https://www.tnmgrmu.ac.in/index.php/courses/allied-health-sciences.html

அனைத்து மருத்துவ கவுன்சிலுங் விபரங்களும் 
http://tnhealth.org/
https://tnmedicalselection.net/
என்ற இணையதளங்களில் காணலாம்

இந்திய மருத்துவ படிப்புகள்:

நீண்ட கால மருத்துவத்திற்க்கு ஆங்கில மருத்துவத்தைவிட இந்திய மருத்துவ முறைகளே பெரும்பாலோரின் தேர்வாக இருகின்றது . பின்விளைவு (Side Effect) இல்லாத மருத்துவ முறை என மக்காளால் அறியப்பட்ட இந்திய மருத்துவ படிப்புகளை பற்றி பார்ப்போம். இந்திய மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு NEET தேர்வு அவசியம் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்க வில்லை, ஆனால் இந்த வருடம் இதற்க்கும் NEET தேர்வு அவசியம் என கட்டாயமாக்கபடலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது.

படிப்பு விபரம் :

கீழ் கானும் இந்திய மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றது 
1.B.S.M.S-Bachelor of Siddha Medicine and Surgery (சித்தா) 
2.B.U.M.S-Bachelor of Unani Medicine and Surgery (யுனானி) 
3.B.A.M.S-Bachelor of Ayurveda Medicine and Surgery (ஆயுர்வேதா)
4.B.H.M.S-Bachelor of Homeopathy Medicine and Surgery (ஹோமியோபதி)
5.B.N.Y.S-Bachelor of Naturopathy and Yogic Science (நேச்சுரோபதி)

கால அளவு மற்றும் கல்வி கட்டணம் : 4 1/2 ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு பயிற்சி மொத்தம் 5 1/2 (ஐந்தரை) ஆண்டுகள். அரசு கல்லூரிகளில் படித்தால் வருட கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும், தனியார் கல்லூரிகளில் படித்தால் கல்லூரிகள் தரத்திற்க்கு ஏற்றவாறு வருட கட்டணம் ரூ.60,000 வரை இருக்கும்

கட் ஆஃப் மதிப்பெண் : + 2 - ல் இயற்பியல், வேதியியல் , உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவுகளில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே கட் ஆஃப் மதிப்பெண் கணிக்கிடப்படும்.

சேர்கை முறை : ஜூன் மாதம் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும், சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா, யுனானி கல்லூரியில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500

மேற்சொன்ன வகையில் கட் ஆஃப் கணக்கிடபட்டு தர வரிசை படியல் (Rank List) தயாரிக்கப்படும். 160 - க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் மருத்துவ பல்கலை கழகமான Dr.M.G.R மருத்துவ  பல்கலை கழகத்தின் இணையதளத்தில், பல்கலை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. 

https://www.tnmgrmu.ac.in/index.php/examination/previous-examination-time-table/2-uncategorised/1704-list-of-affiliated-institutions.html

கல்லூரியில் சேரும் முன் அது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியா மேலே குறிப்பிட்ட லின்கில் சரிபார்த்து கொள்ளுங்கள்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.
#Wisdom_Kalvi

No comments:

Post a Comment