Wednesday, July 8, 2020

ஆந்தைக்கு பகலில் கண்

மூடநம்பிக்கைகள், கட்டுகதைகள், அறிவியல் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் போன்றவற்றை நம்புவர்களில் நம்மில் பலர் இருக்கின்றனர்.

அப்படி, மிக நீண்டகாலமாக நம்பக்க கூடிய செய்தி தான்!

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது!
ஆந்தை பகலில் குருடாக இருக்கும்!
இரவில் மட்டுமே அவைகளுக்கு பார்வைத்திறன் உண்டு!
என்று தவறான புரிதலின் காரணமாக நம்மில் பலர் அதை உண்மை என நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

அவற்றை பற்றி தெளிப்படுத்தவே இந்த பதிவு.

ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?

உண்மையில், ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியும். அவைகளுக்கு பகலில் பார்க்கக்கூடிய திறன் உண்டு!
ஆந்தைகள் பகலில் குருடர்களாக இருக்கின்றன என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது.
ஆந்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூர்மையான பார்வை கொண்டவை.

ஆனால், இரவில் பார்வை மிகவும் கூர்மையானது. கடும் இருளில் கூட தங்களின் இரையை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.

ஆந்தைகளின் கூர்மையான பார்வைக்கான காரணங்கள் என்ன?

ஆந்தைகள் பெரிய குழாய் வடிவ கண்களைக் கொண்டுள்ளன, அவை கண்களைச் சுழற்றுவதைத் தடுக்கின்றன.ஆந்தைகளின் கண்களிலுள்ள சிறப்பம்சங்கள் அவைகளின் பார்வையை பெரிதும் மேம்படுத்துகின்றன.

ஆந்தைகளின் கண்களின் பெரிய பகுதி கண்ணுக்குள் அதிக ஒளி பெற அனுமதிக்கிறது.
இதன் விளைவாக, அதனோடைய கண் பாவை இரவில் பெரிதும் விரிவடைகிறது, இரவில் பார்க்கும் அவர்களின் சிறந்த திறனுக்கு பங்களிக்கிறது.

ஆந்தைகளால் முழு இருளில் கூட பார்க்க முடிகிறது! ஆனால், ஏன் மனிதர்களால் பாதி இருளில் கூட பார்க்கமுடிவதில்லை?

ஆந்தையின் கண்கள் மனித கண்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான ஒளிச்சேர்க்கை (ஒளி-உணர்திறன்) செல்கள் அல்லது தடி செல்களைக் கொண்டுள்ளன.இதன் விளைவாக, அவைகள் நம்மை விட சிறந்த இரவு பார்வை கொண்டவர்களாக இருக்கின்றன.

பகலில் ஆந்தைகளின் பார்வைத்திறன் எப்படிப்பட்டது?

ஆந்தை இனங்களில் பெரும்பாலானவை இரவாடிகளாகும்.இரவாடி (Nocturnal) என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும்.
இத்தகையப் பண்புடைய பறவைகள், விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.

ஆதலால், ஆந்தைகள் இரவில் விழித்திருந்து வேட்டையாடி பகல் நேரங்களில் தூங்கி பொழுதை கழிக்கின்றன.ஆந்தைகளின் கண்களுக்கு பகலில் வேலை இல்லை.இரவில் பார்வை மிகவும் கூர்மையானது என்றாலும் பகலில் இதற்கு மாறாக, பகலில் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் அவர்களின் பார்வைத் தரம் பாதிக்கப்படுகிறது.
பகலில் அதிக வெளிச்சத்தில் நாம் பார்க்கும் போது நம்முடைய கண் பாவை தானாகவே சுருங்கி கொள்ளும்.

நாமும் கண்களை சுருக்கி பார்ப்போம் அல்லது கையினை கண்களுக்கு மேலே வைத்து மறைத்து பார்ப்போம்.ஆனால், அவைகளின் கண்பாவை (Pupil) சுருங்குவதில்லை, எனவே ஆந்தைகள் பகலில் அதிக சூரிய ஒளியைத் தடுக்க கண்களை பாதியிலேயே மூடுக்கொண்டே இருக்கும்.ஆனாலும், அவைகளால் பகலில் சூழலை சரியாகக் காண முடியும்.

நன்றி :யுவாஸ்

No comments:

Post a Comment