Wednesday, July 8, 2020

ஜாம் தேர்வு - ஓர் பார்வை

M.Sc admission/Premium institutes/JAM Exam

ஜாம் தேர்வு - ஓர் பார்வை

ஜாம் (JAM) எனப்படும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு (Joint Admissions test for Master's) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு எம்.எஸ்சி, முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.

நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக ஜாம் நடத்தப்படுகிறது.

படிப்புகள்: 

1. எம்.எஸ்சி.,(2 ஆண்டுகள்), M.Sc.

2. இணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி., இரட்டை பட்டம், (Joined M.Sc+Ph.D Dual Degree)

3. எம்.எஸ்சி.-எம்.எஸ்.(ஆராய்ச்சி) / பிஎச்.டி., (M.Sc+MS(Research)/Ph.D)

கல்வி நிறுவனங்கள்: 

இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-IITs., 
நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-NITs, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - IIEST., 
சண்ட் லாங்கோவல் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - SLIET, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் - IISER, 
ஆகிய கல்வி நிறுவனங்களில் JAM தேர்வின் அடிப்படையிலேயே M.Sc., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

கல்வித் தகுதி: பாடப்பிரிவுற்கு ஏற்ப உரிய படிப்பில், மொழிப்பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ஒட்டுமொத்தமாக 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: செப்டம்பர் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 2020

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 2021

2020ஆம் ஆண்டுக்கான ஜாம் தேர்வை ஐஐடி கான்பூர் (IITK) நடத்தியது. இந்த முறை ஆறு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே ஜாம் தேர்வு நடத்தப்பட்டது.

திருச்சி என்ஐடி-யில் எம்எஸ்சி சேர்க்கை

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம் - JAM score) மூலம் எம்எஸ்சி (M.Sc.) படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறகிறது.

இதுதொடர்பாக, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறியது:
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகமானது, இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

2014ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய இக்கல்லூரியானது தேசிய நிறுவங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடம் வகிக்கிறது.
சிறந்த ஆய்வு நிறுவனமாக இருப்பதுடன் பல முன்னணி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது என்றார். 

சகல வசதிகளுடன் எழில்மிகு வளாகத்தில் 10 இளநிலை, 28 முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பியல் துறைகள் இரண்டாண்டுகள் படிக்கும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலைப் பிரிவில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) நடத்தும் தேசியளவிலான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைத் தேர்வு (ஜாம்) மூலம் நடைபெறுகிறது. 

முதுநிலை கணினி அறிவியலுக்கான ஜாம் தேர்வு கணிதப் புள்ளியியலை சார்ந்து நடைபெறும். 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2020ஆம் ஆண்டு ஜாம் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை வழங்கும் துறைகள் குறித்த விவரங்களுக்கு வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றார் அவர்.

Related links:

http://www.ccmn.in
https://www.nitt.edu

No comments:

Post a Comment