Wednesday, July 8, 2020

கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்

#கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்!

Courtesy:- திருவாரூர் தெற்கு மாவட்ட மாணவரணி

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

மொத்த உலக பட்டு உற்பத்தியில் 18% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடை வடிவமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தும் இன்றைய நவீன தலைமுறையினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் துறையாக விளங்குகிறது கைத்தறித்துறை. 

இத்தகைய சிறப்பு மிக்க கைத்தறி துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப கைத்தறித் துறை வல்லுநர்களின் தேவை அதிகமாக வாய்ப்புள்ளது. அத்தகைய தொழில் வல்லுநர்களை உருவாக்கவே நவீன கைத்தறி தொழில்நுட்ப படிப்புகளை உருவாக்கப்பட்டது. 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அத்தகைய படிப்புகளை வழங்கி வருகிறது. கைத்தறி தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வி படிப்புகளான மூன்று வருட டிப்ளோமா படிப்புகள், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆறு கல்வி நிறுவனங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நான்கு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, தமிழ்நாட்டில் சேலம், அஸ்ஸாமில் கவுஹாத்தி, ராஜஸ்தானில் ஜோத்பூர், ஒடிசாவில் பாரகார்ஹ், மேற்குவங்கத்தில் ஃபுலியா- சண்டிப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன. மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் ஆந்திராவில் வெங்கடகிரி, கர்நாடகாவில் கட்டாக், சதிஸ்கரில் சம்பா, கேரளாவில் கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ளன.

சேலத்தில் வழங்கப்படும் படிப்புகள்

* B.Tech - Handloom & textile Technology (4 Yrs)

* Post Diploma in Textile Processing

* Diploma - Handloom & Textile Technology (3 yrs)

* Handloom Entrepreneur (Certificate Course)

கேரளாவில் வழங்கப்படும் படிப்புகள்:-

* Clothing and Fashion Technology (CFT)

* Computer Aided Fashion Designing (CAFD)

* Computer Aided Textile Designing (CATD)

* Diploma in Handloom and Textile Technology (DHTT)

* Pattern Cutting Master Course (PCMC)

* Post Diploma in Home Textile Management (PDHTM)

ஆந்திரா, கவுகாத்தி, ஜோத்பூர், கர்நாடக என அனைத்து கல்விநிறுவனங்களிலும் மூன்று வருட படிப்பான டிப்ளோமா இன் ஹேண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் வாரணாசி மற்றும் சேலம் நிறுவனங்கள் 18 மாத கால அளவிலான போஸ்ட் டிப்ளோமா இன் ஹோம் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்குகிறது.


No comments:

Post a Comment