Wednesday, July 8, 2020

கடல்வாழ் உயிரியல் - மரைன் பயாலஜி (Marine Biology)

கடல்வாழ் உயிரியல் - மரைன் பயாலஜி (Marine Biology)

உலகளவில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், எரிசக்தி ஆதாரங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கு, கடல்களை நாம் பெருமளவு சார்ந்திருப்பதை நன்கு அறிவோம்!

கடல்களின் ஆதாரங்களை நமக்கு சாதமாக பயன்படுத்தும் அதேசமயம், கடல் வளத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொறுப்பும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு நிச்சயம் உள்ளது. இந்நிலையில், கடல் துறை சார்ந்த படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, கடல் மற்றும் கடல் வாழ் உயரினங்கள் பற்றிய ‘மரைன் பயாலஜி’ பட்டப் படிப்பு மிகவும் அவசியமானது!

பயாலஜி என்பது உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.  அதில் மரைன்  பயாலஜி என்பது கடல்வாழ் உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.   

கடல் வாழ் உயிரினங்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் எவ்வாறு அவை கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றத் தொடர்பினை கொண்டுள்ளது, என்பதைப் பற்றி ஆராய்ந்து படிப்பது தான் ‘மரைன் பயாலஜி’.

சிறிய செடிகள், மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரையில் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு மரைன்  பயாலஜி படிப்பு உதவியாக உள்ளது.  மரைன்  பயலாஜி படித்தவர் மரைன்  பயாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.  

இப்படிப்புடன் பயாலஜிகல் ஓசனோகிராபி, ஜியாலஜிகல் ஓசனோகிராபி, மாலிகுளர் பயலாஜி மற்றும் இரசாயனம், இயற்பியல் ஆகியவற்றை இணைந்தே வழங்கப்படுகிறது. மாலிகுளர் பயலாஜியின் உத்திகள் இடம்பெறுவதால், கடலோர சேற்று நிலப் பரப்பு, ஆழ்கடலில் இருக்கும் வைரஸ்கள், தாவரங்கள் மற்றும் மீன்கள் முதலியனவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்து அறிவதற்கான சிறந்த படிப்பு ‘மரைன் பயாலஜி’.

தகுதிகள்

இளநிலை பட்டப்படிப்பில் சேர, பள்ளி மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவை முதன்மைப் பாடமாக பயின்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை பட்டப்படிப்பில் சேர, இளநிலை பட்டப் படிப்பில் விலங்கியல், தாவரவியல், கடல் உயிரியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயாலஜி மற்றும் மீன்வளர்ப்பு போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் 60 சதவீத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கடல் சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் மற்றும் கடலியல் நிறுவனங்களில் மரைன் பயாலஜி படித்தவர்களுக்கு வேலைகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன.

இதில் பட்டயப்படிப்பு தொடங்கி இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் உள்ளன.  இதைப் படித்தவர்கள் அந்த படிப்பு சம்பந்தமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், பேராசிரியராகும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரியவும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள், கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தும் நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன.

மரைன் பயாலஜி படிப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்கள் :

Cochin University of Science and Technology - http://www.cusat.ac.in/research_activities.php

Andhra University  - http://andhrauniversity.edu.in/coursesoff.html

Annamalai University - http://annamalaiuniversity.ac.in/T00_info.php?fc=T00

Pondicherry University - http://www.pondiuni.edu.in/department/department-oceanstudies-and-marine-biology 

Veer Narmad South Gujarat University -  http://www.vnsgu.ac.in/

••••

Why is Marine Science Important?

Marine biology is the study of marine organisms, their behaviors and interactions with the environment. Marine biologists study biological oceanography and the associated fields of chemical, physical, and geological oceanography to understand marine organisms.

Marine biology is a very broad area, so most researchers select a particular area of interest and specialize in it. Specializations can be based on a particular species, group, behavior, technique, or ecosystem.

Molecular biology is a related area of specialization in marine biology. Researchers apply molecular techniques to many environments ranging from coastal marshes to the deep sea and to various organisms such as viruses, plants, and fish.

MARINE RELATED CAREERS
researcher
professor or teacher
environmental consultant
natural resource manager
fisheries biologist
environmental lobbyist
naturalist
marine illustrator
aquarium employee
biotechnology specialist
aquaculturist

Related links:

https://www.environmentalscience.org/career/marine-biologist

No comments:

Post a Comment