Wednesday, July 8, 2020

மாணவர்களின் அறிவையும் (knowledge) , திறனையும் (Skill) அடிப்படையாக கொண்டே

படிப்பை (Degree) அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge) , திறனையும் (Skill) அடிப்படையாக கொண்டே வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.  வெரும் பட்ட படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை

படிக்கும் காலங்களில் உங்களின் அறிவை நிருபித்து இருக்க வேண்டும், உங்களின் திறமையையும் நிருபித்து இருக்க வேண்டும். படித்து முடிக்கும் போது உங்களுக்கென்று ஒரு புரொஃபைலை (Profile) உருவாக்கி இருக்க வேண்டும்.

நான் இந்த படிப்பு படித்துள்ளேன், எனக்கு இன்ன இன்ன துறைகளில் அறிவு (knowledge) இருகின்றது . படிக்கும் காலத்தில் இன்ன இன்ன புராஜெக்டுகள் (model projects) செய்து இந்த இந்த துறைகளில் எனது திறனை வெளிகாட்டியுள்ளேன் என்பதை தெளிவாக எடுத்து சொல்லி, குறிபிட்ட துறைகளை (field of expertise) தேர்தெடுத்து வேலை தேடினால் எளிதில் வேலை கிடைக்கும்.

மாத மாதம் சம்பளம் கொடுக்கும் வேலைகள் (Salary based job) குறைய துவங்கியுள்ளது. Remote job , Freelancer முறையிலான வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றது. Freelancer என்பது உங்களுக்கு ஒரு புராஜெக்ட் கொடுப்பார்கள் அதை நீங்கள் செய்து முடித்தால் அதற்கான ஊதியம் தருவார்கள், (அதாவது வேலைக்கு ஏற்ற ஊதியம்). இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில்  பல கம்பெனிகளுக்கு வேலை பார்க்கலாம். அதிக ஊதியமும் பெறலாம். 

2030-ஆம் ஆண்டுகளில் இப்படி பட்ட Remote job , Freelancer job போன்ற வேலைகளே அதிகம் இருக்கும். 

எனவே கொடுக்கும் வேலையை செய்யும் முழு திறன் (End to End knowledge) இருந்தால் மட்டுமே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 

படித்த பட்டம் (degree) அடிப்படை தகுதியாக (basic qualification) கருதபடுமே தவிர, வேலை பெறுவதற்க்கான தகுதியாக கருதப்படாது

எனவே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால், லட்ச கணக்கில் பணத்தை செலவு செய்து படிக்க வைக்க வேண்டாம். மாணவர்கள் வாங்கும் பட்டம் (degree) எதிர்காலத்தில் வேலை பெற உதவ போவதில்லை. எனவே குறைந்த செலவில் உள்ள பட்ட படிப்புகளில் சேர்த்து விடுங்கள். 

குறைந்த செலவில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகளின் விபரம் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி பக்கத்தில் உள்ளது பார்க்கவும் : https://www.facebook.com/wisdomkalvi/posts/990005831372667 

மாணவர்கள் தங்களில் திறன்களை கொண்டு மாதிரி புராஜெக்டுகள் (model projects) செய்ய உங்கள் பொருளாதாரத்தை பயன்படுத்துங்கள்.

*** எதிர்காலத்தில் வளர்ந்து வரும் துறைகள் என்ன ?மாணவர்கள் எந்த துறைகளில் தங்களின் திறன்களை வளர்த்து கொள்ளலாம் ? ***

கலை (Arts) , அறிவியல் (Science), பொறியியல் (Engineering) என எந்த படிப்பாக இருந்தாலும் கீழ்காணும் துறைகளில் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் தங்களின் திறனை வெளிகாட்டும் வகையில் சில மாதிரி புராஜெக்ட் செய்யலாம்

Data analytics (தகவல் பகுப்பாய்வு):  உங்கள் துறை சார்ந்த  தகவல்களை Data analytics  மூலம்  ஆய்வு செய்யும் செயலிகளை (applications) உருவாக்கலாம்.  கலை (Arts), அறிவியல் (science) துறையில் எந்த பிரிவு படிக்கும் மாணவர்களும் Python, R- போன்ற கணிணி மொழிகளை (programing language) கற்று செயலிகளை (applications) உருவாக்கலாம்.

ஆட்டோமேஷன் (Automation) : நீங்கள் என்ன படிப்பு படித்தாலும், அந்த துறையில் மனிதர்களால் செய்யப்படும் வேலைகளை, செயலிகள் (applications) மூலம் எப்படி தானியங்கியாகிய (Automated) செயல்படுத்துவது என சில மாதிரி புராஜெட்டுகள் செய்யலாம்

செயற்க்கை நுண்ணறிவு (Artificial intelligent) : உங்கள் படிப்பின் துறைக்கு (branch) ஏற்ப, தகவல்களை ஆராய்ந்து சிறந்த முடிவுகள் எடுக்கும் செயற்க்கை நுண்ணறிவு (Artificial intelligent) செயலிகளை (Applications) உருவாக்கலாம்.

Virtual reality (3D தொழில் நுட்பம்)  :  கணிணியில் கற்பனையாக உபகரணங்களை உற்பத்தி (virtual model) செய்து, சோதனை செய்து பார்ப்பது. தகவல்களை முப்பரிமான (3D) முறையில் வெளிகாட்டுவது (Present) ஆகிய துறையில் சில மாதிரி புராஜெக்டுகள் செய்யலாம்

நான் மேலே குறிபிட்ட துறை சார்ந்து அறிவை வளர்த்து கொள்ள பெரிய அளவில் பொருளாதாரம் தேவை இல்லை, இவற்றை செய்யும் அனைத்து மென்பொருள்களும்  open source என்ற முறையில் இலவசமாக கிடைகின்றது. அவற்றை பயன்படுத்தும் வழி முறைகளுக்கான பயிற்சி வீடியோக்களும் YouTube-ல் இலவசமாக கிடைகின்றன. 

மாதிரி புராஜெக்டுகள் செய்ய சிறிய அளவில் பொருளாதாரம் தேவைபடும்.

மேற்சொன்ன துறைகளில் திறன்களை வளர்க்க ஏதேனும் உதவி தேவை பட்டால் நமது Wisdom கல்வி வழிகாட்டியை தொடர்பு கொள்ளுங்கள் (www.facebook.com/wisdomkalvi/)

*** கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன ? ***

படிக்கும் காலங்களில் அறிவு சார்ந்து பல போட்டிகள் கல்லூரிகளில் நடைபெறும், அதில் கலந்து கொண்டு நீங்களும் உங்களின் ஆய்வுகளை, தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இதை technical  completions  , paper presentation என சொல்வார்கள்.

உங்கள் கல்லூரியில் மட்டும் இல்லாமல் பிற கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற technical போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்

நீங்கள் படிக்கும் துறை சார்ந்த பத்திரிக்கைகளில் (Tech journals) உங்களின் ஆய்வு கட்டுரைகளை வெளியிட முயற்சிக்க வேண்டும், தோற்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து பங்கு பெற்று அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளுங்கள்

உதாரணத்திற்க்கு ஒன்றை சொல்கின்றேன், சில ஆண்டுகளுக்கு முன் மெக்கானிகல் இஞ்சினீரிங் படித்த மாணவர் ஒருவர் விமானத்தின் டிசைனை எப்படி மாற்றி அமைத்தால் எரிபொருளை மிச்ச படுத்தலாம் என ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது போல் உங்கள் துறையிலும் உள்ள பிரச்சனைகளுக்கு உங்கள் அறிவை கொண்டு தீர்வு சொல்லலாம்

அனுபவம் (experience) இருந்தால் தான் இப்போது வேலை கிடைக்கும். எனவே வேலைக்காக காத்து கொண்டு இருக்காமல் படிக்கும் போதே நீங்கள் படிக்கும் துறைக்கு ஏற்ப மேலே குறிபிட்ட புராஜெட்டுகளை தேர்ந்தெடுத்து செய்து காட்டுங்கள். படித்துவிட்டு வேலை தேடும் போது நீங்கள் செய்த புராஜெக்டுகளை அனுபவமாக (experience) சுட்டி காட்டலாம்.

உதாரணத்திற்க்கு கணிணி அறிவியல் படிக்கும் ஒருவர் www.naukri.com போன்று வேலை தேடுவதற்க்கான இணைய தளத்தை உருவாக்கலாம். அதையே ஓர் ஆண்டு அனுபவமாக Resume-ல் குறிப்பிடலாம். இணைய தளங்கள் உருவாக்க பணம் தேவை இல்லை, அதை பற்றிய அறிவு மட்டும் இருந்தால் போதும்

பொருளாதார மந்த நிலை ஏற்படுத்திய வேலை இழப்புகளால், எதிர்காலம் மாணவர்களுக்கு சவாலாகதான் இருக்கும், இதில் கவலை அடைய  ஒன்றும் இல்லை, படிப்போடு சேர்த்து அறிவையும் , திறமையையும் வளர்த்து கொண்டால் எளிதில் வேலை வாய்ப்பை பெறலாம் அல்லது வேலை வாய்ப்பை உருவாக்கலாம். 

கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி சந்தேகம் இருந்தாலோ, இந்த கட்டுரையை பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டாலோ விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது Wisodm கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech

No comments:

Post a Comment