Wednesday, July 8, 2020

Mathematics

கணிதத்தைக் கற்க மாணவர்கள் திணறுவதற்கான காரணம் என்ன? அதனை சுலபமாகக் கற்பது எவ்வாறு?

கணிதத்தின் அடிப்படை எண்கள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமே. சற்று நம்பிக்கையும், ஆர்வமும், பயிற்சியும் இருப்பின் கணிதம் சுலபமான பாடமே.

எனது உறவினர் ஒருவர் தனது பையன் பத்தாவது வகுப்பு படிக்கும் போது கணிதத்தில் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவதாக என்னிடம் அழைத்து வந்தார். அவனின் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரச் சொன்னேன்.

கீழேக்கண்ட தவறுகளை சுட்டிக்காட்டி அவனின் கணித விடைத்தாள்களை அவனே ஆய்வு செய்யச் சொன்னபோது கீழேக்கண்ட தவறில் மூன்று அல்லது நான்கு தவறுகளே திரும்பதிரும்ப வருவதாய் சொன்னான். அதை மட்டும் கவனம்கொள்ள சொன்னேன்.

தேர்வு எழுதும் போது கீழேக்கண்ட பகுதிகளில்தான் பொதுவாக தவறுகள் செய்வோம்:

1. கேள்வியை சரியாக புரிந்து கொண்டு சரியான விடைக்கான வழியை (பார்முலா) தவறின்று எழுதுதல்.

2. சரியான எண்களை கேள்வியில் இருந்து எடுத்து அதில் நிரப்புவது.

3. ஒரு வரியில் இருந்து அடுத்த வரி (ஸ்டெப்) போகும் போது எண்களை கவனம் பிசகாமல் சரியாக எழுதுவது.

4. அதே போல் பெருக்கல் வகுத்தல் போன்ற குறிகளையும் வரிக்கு வரி மாறாமல் பார்த்துக் கொள்ளல்.

இத்தவறுகளை தவிர்ப்பது எப்படி?

🔹 கேள்வியை சரியாக புரிந்துக்கொண்டு சரியான சூத்திரத்தை (பார்முலா) தேர்ந்தெடுக்க வேண்டும். அதுபோல் எல்லா பார்முலாகளையும் நன்கு மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

🔹 எண்களை கேள்வியில் இருந்து எடுத்து விடைத்தாலில் நிரப்பும் போது அதிக கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டுமுறை எண்களை சரிபார்த்துக் (verify) கொள்ளவேண்டும்.

🔹 மனதிற்குள் கூட்டுவதற்கு பதில் கவனக் குறைவாய் கழிப்பதோ, பெருக்குவதோ போன்ற தவறுகளை சாதரணமாய் செய்வோம்.

🔹 ஸ்டெப்பில் ஒன்றைக் குறைவாக எழுதுவதை நேரம் மிச்சம் பிடிப்பதாக கருதி, தவறான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களை போடுவதை தவிரக்க வேண்டும்.

🔹 சற்றே அதிகமான பயிற்சியும் தன் தவறுகளை தானே கண்டுபிடித்தலும் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும்.

- குவரா/ AKV

No comments:

Post a Comment