Wednesday, July 8, 2020

பொருளாதார மந்தநிலை

தற்போதுள்ள பொருளாதார மந்தநிலை ஆயிரக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பை பறித்துள்ளது. இது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா ? என்கின்ற அச்சம் மாணவர்கள் மத்தியிலும், பணத்தை செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவுகின்றது.

உற்பத்தி துறையில் ஏற்பட்ட லட்சக்கணக்கான வேலை இழப்புகள், ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் விலை உயர்வு, பங்குசந்தை வீழ்ச்சி, குறைந்து போன பொருளாதார வளர்ச்சி என இப்போதுள்ள பொருளாதார மந்தநிலை, திறமையானவர், திறமை இல்லாதவர் என அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகின்றது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே உற்பத்தி துறையின் வீழ்ச்சி (Manufacturing sector) குறிபிடபட்டிருந்தது. இந்தியாவில் தற்போதைக்கு ஓரளவிற்க்கு வருவாய் ஈட்டி தருவது சேவை துறைதான் (Service sector)

இப்படிபட்ட பொருளாதார சூழ்நிலையில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திகொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்

பொதுவாக மாணவர்கள் தேர்வில் தேர்சி பெற்றால் போதும் என்ற மனநிலையில் படிப்பார்கள், இனி இது மட்டும் போதாது. தேர்வில் தேர்சி என்பது 30 % மட்டும் தான்.  இன்னும் பல திறன்களை வளர்த்து கொண்டால் தான் மோசமான பொருளாதார சூழ்நிலையிலும் நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியும். 

உலக வேலை வாய்ப்புகள் (Global Job market) :

உலக அளவில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்க்கான திறன்களை மாணவர்கள் படிக்கும் காலங்களில் வளர்த்து கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல், ஆராய்சி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும், இப்போது எல்லாமே ஆன்லைதான், எனவே இதற்க்கு பெரிய அளவில் பொருளாதாரம் செலவாகாது, இதற்க்கு தேவை புதிய சிந்தனைகள் (innovative ideas) , உங்களின் ஆய்வுகள், அறிக்கைகள், கட்டுரைகள் மூலம் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பரிசும் கிடைக்கும். இப்படி பட்ட சர்வதேச அங்கீகாரங்களை கொண்டு உலக வேலை வாய்ப்புகளை பெற முயற்சிக்களாம். இன்னும் பல வழிகள் உள்ளது, வரும் காலங்களின் இது சம்மந்தமாக கூடுதலான தகவல் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி பக்கத்தில் (www.facebook.com/wisdomkalvi/) பார்க்கலாம். 

சுய வேலைகள் (Freelancer jobs) :

ஒரு கம்பெனியில் மட்டும் வேலை பார்க்காமல் Freelancer என்ற முறையில் வீட்டில் இருந்து நாம் பல கம்பெனிகளுக்கு வேலை பார்த்து கொடுக்கலாம், இதன் மூலம் நாம் பயின்ற கல்வியை கொண்டு பல மடங்கு சம்பாதிக்கலாம்.

இதற்க்கு நமக்கு நல்ல தொழில் நுட்ப அறிவு (Technical skill) இருக்க வேண்டும், எந்த தொழில் நுட்பத்தையும் எளிதில் இணையதளத்தில் இலவசமாக கற்று கொள்ளலாம்.

Remote Jobs என்ற முறையில் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கம்பெனிகளில் வேலை பார்க்கலாம். 
ஒருவராக முடியவில்லை என்றால், திறமைகள் உள்ள இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கம்பெனிகளுக்கு புராஜெக்டுகள் செய்து கொடுத்தும் பொருளாதாரம் ஈட்டலாம்

சிறு தொழில் (solution oriented small business) :

அனைத்து துறைகளிலும் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருக்கும், அதற்க்கு தீர்வு அளிக்கும் உபகரணங்கள், சாஃப்வேர்கள், ஆன்ட்ராய்ட் ஆஃப்கள், iOS ஆஃப்கள் உருவாக்கி , உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ விற்க்கலாம், இதற்க்கு முதலீடு பெரிதாக தேவைபடாது, சாஃப்வேர்கள் தயாரிக்க ஒரு லேப்டாப் போதும், இணையதளத்தில் உங்களின் படைப்புகளை சர்வதேச சந்தையில் எளிதில் விற்கலாம். எந்த பிரச்சனைகும் தீர்வை தேடும் அறிவை (solution oriented thoughts) வளர்த்து கொண்டு, தொழில் நுட்ப அறிவையும் வளர்த்து கொண்டு, கூடுதலாக வியாபார யுக்திகளையும் கற்று கொண்டால், சில ஆயிரம் முதலீட்டில் கோடிகள் வரை சம்பாதிக்கலாம்.

சிந்தனைகளை விற்பது (Selling ideas) : 

தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த கண்டுபிடிப்புகளை எவ்வாறு தங்களின் தொழில் துறைகளில் பயன்படுத்துவது என எல்லா முன்னனி நிறுவனங்களும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. 

நீங்கள் இப்படி பட்ட கண்டுபிடிப்புகளை எவ்வாறு தொழில் துறைகளில் பயன்படுத்துவது என்கின்ற வழிமுறையை நடைமுறைபடுத்தி சில மாதிரி புராஜெக்டுகளை (sample projects, demo projects, model projects) உருவாக்கி பெரிய கம்பெனிகளுக்கு விற்கலாம். உங்களின் சிந்தனைகளுக்கு உருவம் கொடுக்க virtual reality, 3D modeling போன்ற தொழில் நுட்பங்கள் உதவியாக இருக்கும், இவற்றை எளிதில் இணையதளத்தில் இலவசமாக கற்றுகொள்ளலாம்.

துறை சார்ந்த அறிவை வளர்த்து கொள்வது (Subject knowledge) :

100 வேலை வாய்ப்பிற்க்கு 1000 பேர் விண்ணப்பித்தால் முதல் 100 அறிவாளிகளுக்கு வேலை கிடைக்கும், வேலை வாய்ப்புகள் குறைந்து 10 வேலை வாய்ப்புதான் இருந்தால் விண்ணப்பித்த  1000 பேரில் முதல் 10 அறிவாளிகளுக்கு வேலை கிடைக்கும், எனவே நாம் நம்முடையை துறை சார்ந்த அறிவை (Subject knowledge) பல மடங்கு பெருக்கிகொண்டால் குறைந்த வேலை வாய்ப்புகளே இருந்தாலும் நமக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மாணவர்களே ! நீங்கள் ஒரு சவாலான காலகட்டத்தில் உள்ளீர்கள், எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் நீங்கள் நினைப்பது போல் இருக்காது, கல்லூரி வாழ்கையை கல்வி கற்ற மட்டும் பயன்படுத்துங்கள், முன்பைவிட பல மடங்கு நேரத்தை கல்வி கற்ற செலவிடுங்கள், நண்பர்களுடன் வீண் விளையாட்டு என உங்கள் வாழ்கையை வீணாக்கிட வேண்டாம்.

உங்களின் கடின உழைப்பு, கவனத்துடன் படிப்பு, தீர்வை சொல்லும் அறிவு, ஆய்வு சிந்தனை, விடா முயற்சி, ஆர்வம் இவைகள் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை பெற்று தரும்.

கல்வி வேலை வாய்ப்பு சார்ந்த உங்களின் கேள்விகளை கெமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

S.சித்தீக்.M.Tech

No comments:

Post a Comment