Wednesday, July 8, 2020

தூக்கமின்மையினை

தூக்கமின்மையினை சரிசெய்ய எளிதான வழிகள் எவை?

தூக்கம் சரியாக இல்லாததற்கு முக்கியமான காரணங்கள்,

1. தினசரி உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி குறைவாக இருத்தல்

2. இரவில் போதிய காற்று வசதி இல்லாத அறையை பயன் படுத்துவது

3. உடம்பில் போதிய நீர் சத்து இல்லாமல் இருப்பது

4. இரவில் அதிகப்படியாக எளிதில் செரிக்காத உணவை எடுத்துக்கொள்வது

5. உணவு உண்டவுடனே உறங்கச் செல்வது

6. பல்வேறு காரணங்களால் உடல் சூடு அதிகரித்திருந்தாலும் தூக்கம் வருவது குறையும்

7. இதை சொல்லவே வேண்டியதில்லை ஆயிரம் முறை கேட்டிருப்பீர்கள், போன் ,டி‌வி ,கம்ப்யூட்டர் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது

8. அதிகமாய் கவலைப்படுவது

9. டீ ,காபி போன்ற புத்துணர்வு தரும் பானங்களை இரவில் அருந்துவது . தூங்கபோகும் போது எதுக்குங்க புத்துணர்வு ?!!

10. கொசு மற்றும் அதிக குளிர்

11. பகலில் கொஞ்சம் நேரம் தூங்குகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்று மணி நேரம் தூங்குவது

12. சரியான தலையணையை பயன்படுத்தாதது

13. முக்கியமாக லேட் நைட் நாடகங்கள் பார்ப்பது

14. படுக்க போகும் முன் அதிக தண்ணீர் அருந்துவது

என்ன பண்ணலாம் நல்லா தூக்கம் வருவதற்க்கு? 

* நடைப்பயிற்சி,சைக்கிள் ஒட்டுதல் ,ஓடுதல் ,ஏதாவது ஒரு விளையாட்டு (டென்னிஸ்,டேபிள் டென்னிஸ்,ஷட்டில் காக் ,கிரிக்கெட் ) அல்லது கடைசிக்கு எட்டு நடையாவது நீங்கள் இருக்கும் இடத்திலேயே நடக்கலாம் . இதில் எதாவது ஒன்றையாவது உங்கள் காலை வேளையில் உடற்பயிற்சியாக சேர்த்துக்கொள்ளவும்

* காற்றாடிக்கு நேரே உங்கள் முகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும் மூக்கடைப்பு ,சளி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .

* குளிர்காலத்தில் கம்பளியும், கோடைகாலத்தில் மெலிதான திரைசீலை போன்ற போர்வையையும் பயன் படுத்தலாம்.

* உடம்பின் தினசரி நீர்தேவையை பூர்த்தி செய்வது கட்டாயத்திலும் கட்டாயம் குறைந்தது 2 லிட்டர் நீராவது பருகவும்.

* ஆவியில் வேக வைத்த உணவுகளை இரவு உணவாக எடுத்துக்கொள்ளலாம். இட்லி மிகவும் சிறந்தது.

* இனிப்பு வகைகளையும் ,எண்ணை பதார்த்தங்களையும் மாலை 6 மணிக்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.

* 6 மணியில் இருந்து 8 மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்து விடுங்கள்.

* உடல் சூட்டை குறைக்க வாரத்திற்கும் மூன்று முறை உங்கள் தொப்பிளில் விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை வைக்கலாம் .

* 6 மணிக்கு மேல் உங்கள் ஸ்மார்ட் போனை வெறும் உரையாடலுக்காக மட்டும் பயன் படுத்தவும் .

* நல்ல தலையணை, மெத்தை உங்களின் தூக்கத்தை அதிகரிக்கும் என்ன கொஞ்சம் அதிகம் செலவு செய்ய வேண்டும்.

* கொசுவுக்கு கொசுவலை பயன்படுத்தலாம் அல்லது உறங்கும் முன்னர் அறைக்கதவை சாத்திவிட்டு. இயற்கை வழியில் வேப்பிலை புகை போடலாம் .

* உங்களுக்கு கவலைப்பட அதிக காரணங்கள் இருந்தால் இரவில் படுத்துக்கொண்டு கவலைப்படவேண்டாம். அதற்கு தனியாக நேரம் ஒதுக்கி கொள்ளவும்.

* புத்தகம் படிக்கலாம் .

* இரவில் உங்கள் பாதங்களை குளிர்ந்த நீரில் நனைப்பது அல்லது எண்ணை கொண்டு பாதத்தை மசாஜ் செய்வது இரவு தூக்கத்தை அதிகரிக்க சில நல்ல வழிகள் .

* மனதிற்கு மிருதுவான இசையை கேட்கலாம்.

* அதிகாலை எழுவதினால் இரவில் விரைவிலேயே தூக்கத்தை வரவழைக்கும்

* உங்கள் படுக்கை அறையில் மிகவும் குறைவான பொருட்களையே வைத்துக்கொள்ளவும் . ஒருநாளும் டிவியை படுக்கை அறையில் வைத்துக்கொள்ளவேண்டாம்.

* வெளிச்சம் குறைவான இரவு விளக்கை பயன்படுத்தவும் இல்லாமல் இருந்தால் கூட நன்று .

* கொஞ்சம் சூடு குறைவாக உள்ள நீரில் இரவு படுக்கும் முன்னர் குளிக்கலாம் .

* இரவில் தூக்கம் நடுவில் தடை படும் பொது சிறுநீர் கழித்து சென்று மீண்டும் தூங்கலாம் அடக்கி வைக்க வேண்டாம்.

* முடிந்தால் உங்கள் செல் போனை வேறு அறையில் வைத்துவிட்டு வந்து தூங்கவும்.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு சென்று விடுங்கள்.

No comments:

Post a Comment