Wednesday, July 8, 2020

TANCET தேர்வு

குறைந்த செலவில் M.E / M.Tech/ MBA / MCA / M.Arch / M.Plan படிக்கTANCET  தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலை கழக கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan படிப்பில் சேரலாம்.

இந்த தேர்விற்க்கு தற்போது https://tancet.annauniv.edu/cet20/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 31 (31-01-2020)
விண்ணப்ப கட்டணம் : ரூ.600

தேர்வு நடைபெறும் தேதி :
MBA/ MCA நுழைவு தேர்வு  : 29.02.2020
M.E. /M.Tech. /M.Arch. / M.Plan நுழைவு தேர்வு  : 1.03.2020 

M.E/M.Tech படிக்க தகுதிகள் : 
B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc….) படித்தவர்கள். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBA படிக்க தகுதிகள் : 
ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MCA படிக்க தகுதிகள் : 
ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2-ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : 
B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்க்கான பாடதிட்டம் இந்த https://tancet.annauniv.edu/tancet/syllabus.pdf லின்கில் உள்ளது

TANCET தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் M.E/ M.Tech/ MBA/ MCA/M.Arch./ M.Plan சேரலாம்.

இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் https://tancet.annauniv.edu/tancet/Information.pdf  லின்கில் உள்ளது.

கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் Wisdom கல்வி வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

https://www.facebook.com/wisdomkalvi/posts/996951444011439

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi
#TANCET

No comments:

Post a Comment