Wednesday, July 8, 2020

B.Sc (Mathematics), B.Sc (Statistics) படிப்பிற்க்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ன ?

B.Sc (Mathematics), B.Sc (Statistics) படிப்பிற்க்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ன ?

பொறியியல் (Engineering) படிக்க விரும்பம் இல்லை, வேறு என்ன படிக்கலாம் என கேட்கும் மாணவர்கள் B.Sc (Mathematics), B.Sc (Statistics) படிக்கலாம். மாணவர்கள், மாணவிகள் என அனைவருக்கும் இந்த படிப்பு சிறந்ததாக இருக்கும். 

தொழில் நுட்ப துறையில் சாதிக்க, பொறியியல் படிப்பிற்க்கு அடுத்து இருப்பது B.Sc (Mathematics), B.Sc (Statistics) படிப்புகள் தான். 

பொறியியல் (Engineering) படிக்க பொருளாதார வசதி இல்லை, ஆனால் தொழில் நுட்ப துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ள மாணவர்கள் B.Sc (Mathematics), B.Sc (Statistics) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணம் சில ஆயிரம் ரூபாய்கள் தான் இருக்கும். எனவே பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் எதிர் காலத்தில் சாதிக்க இந்த படிப்புகள் உதவியாக இருக்கும்

B.Sc (Mathematics) படிப்பிற்க்கான எதிர்கால வாய்ப்புகள்

1. தற்போதைக்கு வளர்ந்து வரும் துறைகளான தகவல் அறிவியல் (Data Science), தகவல் பகுப்பாய்வு (Data Analytics),  Machine Learning, Quantum Computing  ஆகிய துறைகளின் நல்ல வேலை வாய்புகள் உள்ளன. 

2. ஆராய்ச்சி துறை (Research field) : மருத்துவம், பொறியியல் உட்பட பல துறைகளின் ஆராய்ச்சி பிரிவுகளின் B.Sc (Mathematics), B.Sc (Statistics) படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. இதற்க்கு கணிதத்தில் phd வரை படிக்க வேண்டும். (phd வரை படிக்க சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகும்)

3. கற்பித்தல் துறை (Teaching field) :  கணிதம் (Mathematics) படித்தவர்களுக்கு கல்வி துறையில் எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. பள்ளிகூடம், கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணிகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் டுயூஷன் சென்டர் நடத்தியும் மாணவர்களுக்கு கணிதம் கற்பித்து கொடுக்கலாம். 

4. இது போக BPO வேலைகள், அலுவலக வேலைகளில் (office work) B.Sc (Mathematics) படித்தவர்கள் வேலைவாய்ப்புகள் உள்ளன. 

மேற்படிப்பு (M.Sc) :

B.Sc (mathematics) படிக்கும் போது JAM என்ற நுழைவு தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் எடுத்தால்  IIT-ல் M.Sc (mathematics) படிக்கலாம், ஆராய்ச்சி படிப்பு மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் பெற இது உதவியாக இருக்கும். அண்ணா பல்கலை கழகம் நடத்தும் M.Sc-க்கான நுழைவு தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் எடுத்தால், அண்ணா பல்கலை கழக கல்லூரிகள் உட்பட தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில்  M.Sc (mathematics) படிக்கலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் B.Sc (Mathematics) படிக்க

1. உயர் கல்வி நிறுவனங்களில், முதன்மை கல்வி நிறுவனமான பெங்களூரில் உள்ள IIS-ல் நான்கு ஆண்டு B.S (Mathematics) படிக்கலாம், இதற்க்கு KVPY, தேர்வு, JEE தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் https://ug.iisc.ac.in/info_brochure.html லின்கில் உள்ளது

2. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான IIT-களில் ஒருங்கினைந்த 5 ஆண்டு M.Sc (Mathematics) படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றது. +2 படித்தவர்கள் இதில் சேரலாம். இதில் சேர JEE நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் https://www.iitk.ac.in/math/m-sc-integrated லின்கில் உள்ளது

3. கணித (Mathematics studies) படிப்பிற்க்கென்றே தனியாக செயல்படும் சென்னை கணித கழகத்தில் (Chennai Mathematical Institute) B.Sc (Honors) Mathematics படிப்பு படிக்கலாம், இதற்க்கு அவர்கள் நடத்தும் நுழைவு தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். +2 படித்த மாணவர்கள் தற்போது அதற்க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 18 . கூடுதல் விபரங்கள் https://www.cmi.ac.in/admissions/brochure/2020/cmi-brochure-2020.pdf லின்கில் உள்ளது

4. டெல்லி பல்கலை கழகத்திற்க்கு (DU) உட்பட்ட சிறந்த கல்லூரிகளில் B.Sc (mathematics) படிக்கலாம். இதற்க்கு நுழைவு தேர்வுகள் கிடையாது. நேரடியாக +2 மதிப்பெண்னை வைத்து விண்ணப்பிக்கலாம், இன்னும் சில வாரங்களில் இதற்க்கான அறிவிப்புகள் வரும். கூடுதல் விபரங்களுக்கு பல்கலை கழக இணைய தளத்தை பார்வையிடவும் http://www.du.ac.in/du/ 

B.Sc (mathematics), B.Sc (Statistics) படிக்க விரும்பும் மாணவர்களுக்கு!

இயன்ற வரை நுழைவு தேர்வுகள் எழுதி உயர் கல்வி நிறுவனங்களில் B.Sc (mathematics), B.Sc (Statistics) படிக்க முயற்சி செய்யுங்கள், அதற்க்கு முடியவில்லை என்றால் உங்கள் மதிப்பெண்ணிற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கல்லூரியில் சேருங்கள்.  

படிக்கும் காலத்தில் கணக்கீடு அறிவு (computing knowledge), கணித அறிவு (programing skill) , பயன்பாட்டு அறிவு (application knowledge), பகுப்பாய்வு அறிவு (Analytical skill) ஆகிய திறன்களை வளர்த்து கொண்டால் எதிர் காலத்தில் சாதிக்கலாம். கூடுதலாக ஆங்கில மொழி திறன், தொடர்பு திறன் (communication skill) போன்ற திறன்களையும் வளர்த்து கொள்ளுங்கள்.

படிப்பை (Degree) மட்டுமே அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge), திறமையையும் (Skill) அடிப்படையாக கொண்டே வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. வெரும் பட்ட படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை. பட்ட படிப்போடு சேர்த்து அறிவும், திறமையும் இருந்தால் தான் இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

வெரும் B.Sc (mathematics) படிப்பிற்க்கென்று தனியாக மதிப்பு கிடையாது. உங்கள் அறிவோடும், திறமையோடும் B.Sc (mathematics) படிப்பு சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது. இன்னும் விரிவாக அறிந்து கொள்ள “எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? என்ற தொடர் கட்டுரைகளின் நான்காம் பகுதி இது , இன்னும் பல தலைப்புகளில் வரும் நாள்களில் பல வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisodm கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வரவுள்ளது. அனைத்தையும் படித்து பயன் பெறுங்கள்.

B.Sc (mathematics), B.Sc (Statistics) படிப்புகள் பற்றி கூடுதல் விளக்கம் தேவைபட்டால் விஸ்டம் வழிகாட்டி பக்கத்தில் உள்ள இந்த பதிவின் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்
www.facebook.com/wisdomkalvi/posts/1066767737029809

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

#WisdomKalvi2020
#WisdomKalvi

No comments:

Post a Comment